Saturday, 13 February 2016

அன்பை மழையாக பொழியுங்கள்...

அன்பை மழையாக பொழியுங்கள்...
வறண்டு கிடக்கும் வாழ்க்கையில் அன்பை பொழியுங்கள்..
வெறுத்திருக்கும் மனதில் அன்பை பொழியுங்கள்..
நம்பிக்கை இழந்திருப்போருக்கு அன்பை பொழியுங்கள்..
நிம்மதி இழந்திருப்போருக்கு அன்பை பொழியுங்கள்.. 
மனம் உடைந்திருப்போர் மீது அன்பை பொழியுங்கள்..
எதிர்காலத்தை நினைத்து கலங்கி நிற்போருக்கு அன்பு மழை பொழியுங்கள்..
துன்பத்தில் துவண்டிருப்போர் மீது அன்புமழை பொழியுங்கள்..
உங்களின் ஒரு துளி அன்பு அவர்களுக்குள் நம்பிக்கை விதையை விதைக்கும்..
நம்பிக்கை விதையிலிருந்து நிச்சயம் என்ற செடி முளைத்து..
வெற்றி எனும் மரமாகும்..
அனைவர் மீதும் அன்பை பொழியுங்கள்..
அன்பே சிவமாக உங்கள் முகம் ... அனைவருக்கும் தெரியும்..

1 comment: