Saturday, 27 February 2016

அரோகரா' என்றால் என்ன?

அரோகரா' என்றால் என்ன?
'அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா'
என்ற சொற்களின் சுறுக்கம். இதற்கான பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி
எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
... என்பதாகும்.
முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச்
சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை
பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்துகொண்டு
வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ' என்று களைப்பைக்
குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த
திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட
பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ
ஹரா'என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 'அர ஹரோ
ஹரா' என்றுச் சொல்வது வழக்கமாயிற்று. காலப்போக்கில் சைவர்கள்
இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள்
(முருகனடியார்கள்),
'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'.
... என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு
இணைந்துவிட்டன! பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா' என்றுச் சொல்வது,
'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள்
வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி,
நற்கதியை அருள்வாயாக'
... என்று உரிமையோடு முறையிடுவதாகும்.
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக்
கொண்டவர்கள் இனி,
'வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா'.

1 comment:

  1. முருகப்பெருமானின் சஷ்டி கவசம். 2017ல் திருச்செந்தூர் முருகனைப் பார்க்க பாதயாத்திரை சென்றேன்.
    ஆக,அவர் கவசம் இங்கே படிக்கிறேன்.

    துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
    பதிப்போர்க்கு செல்வம் பலித்துக்−
    கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
    சஷடி கவசந் தனை..
    அமரர்இடர் தீர அமரம் புரிந்த
    குமரன் அடி நெஞ்சே ...குறி
    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிக் சதங்கை
    கீதம் பாடக் கிண் கிணியாட
    மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்
    .... ....

    ReplyDelete