Saturday 13 February 2016

மாயை என்பது என்ன?

மாயை என்பது என்ன?
இந்த உலக வாழ்க்கையே ஒரு மாயை என்று அனைவரும் சொல்ல கேட்டிருக்கலாம்..அப்படி என்ன இந்த உலக வாழ்க்கை மாயை?கடவுள் அனைத்தையும் மகிழ்சிக்காக தானே படைத்திருக்கின்றார்..அப்புறம் என்ன மாயை? மாயை என்றால் இல்லாத ஒன்றை இருப்பதை போல மனதில் பிரமிப்பை ஏற்படுத்துவது.. இந்த மாயை நல்லது செய்கின்றதா?.. அல்லது மனித வாழ்க்கையில் தீமை செய்கின்றதா? உலகில் நன்மை என்று நினைப்பவர்களுக்கு எல்லாமே நன்மைதான்..தீமை என்று நினைத்தால் அப்படிதான்..இதுபோலதான் மாயையும்.. மாயைக்கு அடிமையானால் அது துன்பத்தை விளைவிக்கும்.. மாயையை தமக்கு அடிமை ஆக்கினால் அது இன்பத்தை விளைவிக்கும்..மாயை என்பது பெண் பால் பெயர்.. ராவணன் என்பது ஆண்பால் பெயர்..இவை பற்கள் முளைத்த பேய்.. பிசாசு..சாத்தான் அல்ல..மனித மனங்களில் வரக்கூடிய காமம்,கோபம்,பேராசை,பற்று, அகங்காரம்..இவற்றின் மொத்த ரூபமே மாயை..இந்த மாயை வென்றதால் 5 தலை நாகத்தின் மீது விஷ்ணு ஓய்வெடுப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.. இன்றைய மனிதன் டன்லப் மெத்தையில் உறங்கும் பொழுது 5 தலை பாம்பு மேல் படுத்து யாராவது நிம்மதியாக உறங்கமுடியுமா?என்ன..இந்த 5 தலை நாகம் ஜோதியான சிவபெருமானுடைய நினைவு சின்னமான லிங்கத்தின் மீது ஏன் காண்பிக்கப்பட்டுள்ளது..என்றால்..அதை வெல்வதற்க்கு உண்டான ஞானத்தை வழங்கியவர் ஈசன்..அந்த வழியின் படி நடந்து அதை வென்றவர் விஷ்ணு..இதனால் இருவருக்கும்.. மற்றும் ஈசனுடைய வழிப்படி நடந்து மாயை வென்ற ஒரு சில தெய்வங்களுக்கும் அடையாளமாக 5 தலை நாகம் காண்பிக்கப்பட்டுள்ளது.. இதையே மற்ற தர்மங்கள் தங்களுடைய புனித நூலான பைபிள்..குர்ஆன்..இவற்றில் இதை சாத்தான் என்கின்றனர்..இங்கே ராவணனை எரித்தால்.. அங்கே சாத்தான் மீது கல் எரிகின்றனர்.. ஆனால், ஆன்மாவை பலவீன படுத்தும் இந்த தீய குணங்களை விலக்கவேண்டும் என்று மனிதனுக்கு புரிவதில்லை..இந்த மாயை வெல்வதற்காக ஆன்மா என்ற அர்ஜுனனுக்கு பரமாத்மா என்ற ஜோதியான சிவபெருமான் கொடுத்ததே கீதை ஞானம்..இந்த தீய குணங்கள் விலகிய மனிதனே முக்தி பேறு அடைகின்றான்..மற்றபடி மாயை என்பது செல்வமல்ல.. பணம்..காசை..சிலர் மாயை என்கின்றனர்,பணம்..காசை..நல்ல வழியில் பயன்படுத்துங்கள் அது மாயை அல்ல..ஆனால், இந்த தீய குணங்களுக்கு அடிமையான மனிதன் தீய வழியில் செல்வத்தை செலவிடுவதால் அதையும் மாயை என்று சொல்லி விட்டான்..என்ன சொல்வது..எதுவும் நேர்மையாக நடந்தாலே நிலையான இன்பம்.. நேர்மை இல்லாவிட்டால் நிம்மதியில்லா துன்பம்..இந்த உலகில் எல்லா வகையிலும் நேர்மையாக நடப்பவர்களுக்கே இன்பத்தை வைத்தார் இறைவன்.. 

1 comment:

  1. முதலில் மாயை என்பது, ஒரு விரக்தி, மனப்பான்மையில் *எல்லாம் மாயையே* என்று சொல்லப்படும் ஒரு வார்த்தை.

    மானிட வாழ்வை நாம் இரு கோணங்
    களில் அவதானித்துப் பார்த்தால், இரு
    முக்கிய விஷயங்கள் நமக்குத் தருகிறது.

    1) சூரியனுக்குக் கீழான இவ்வுலக வாழ்வு இது மாயையானது.

    2) இறைவனுடனான(ஈசனுடனான) இவ்வுலக வாழ்வு மகிழ்ச்சிகரமானது.

    அதாவது, மாயை என்னும் வார்த்தை, சூரியனுக்கு கீழே எனும் சொற்பதம்,
    மானிட வாழ்வை, மானிட கோணத்தி
    லிருந்து அவதானித்து அறிவிப்பதையே
    குறிக்கின்றது. இது ஈசனை அறியாத, ஒரு மனிதனுடைய உலகநோக்கு எப்ப
    டிப்பட்டது என்பதை காண்பிக்கின்றது.
    ஆகவே, ஈசனை அறியாத,ஈசனுடனான தொடர்பு இல்லாமல், இவ்வுலகத்தினால்
    மட்டுப்படுத்தப்பட்ட மானிட வாழ்வு மாயையே.

    மறுபுறத்தில், ஈசனை அறிந்த, அல்லது ஈசனுடனான தொடர்பு இருக்கும்போது, ஒரு மனிதனின் வாழ்வு, மகிழ்ச்சிகர
    மானதாக இருப்பதனால், வாழ்வை அனுபவிக்கிறார்.

    சுருங்கக்கூறின்,

    *ஈசன் அற்ற வாழ்வு மாயை.*

    ஆகவே, இவ்வுலக வாழ்வை, எம்பெருமான் ஈசனோடு அனுபவிக்கும்
    படி (மகிழ்ச்சியாக) *மாயை* என்னும் எனும் சொல் நமக்கு அறிவுறுத்துகிறது.

    ReplyDelete