Saturday, 13 February 2016

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?
நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம்.
பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும்.
பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது.மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.
பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவே தான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.
ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது

1 comment:

  1. என்ன குளிச்சிட்டுப்போனாலும், கறி சாப்பிட்ட வாய் நாறாமலா போய்விடும். கோவிலுக்கு போகணும்னு நினைக்கிறவன், ஏன் கறி சாப்பிடு
    கிறான். ஆலயத்துக்குள்"செல்லும்போது, மனமும், உடம்பும் தூய்மையாக இருத்தல், மிக மிக அவசியம்.

    ReplyDelete