Wednesday, 16 March 2016

உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கிறதா?

உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கிறதா?
சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும்
தண்ணி தினமும் 3- 4 லிட்டர் குடிங்க.
குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். நார்மல் நீரே போதும்
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக், குடித்தால் உட‌ல் சூடு த‌ணியு‌ம்.
மெகந்தி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும்
வெள்ளரியை அறுத்து கண்களில் வைங்க..
நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க..வாரத்திற்கு இரண்டு நாள் நல்லா நல்லெண்ணைய் தேய்த்து தலைக்கு குளிங்க.நிறைய மோர் குடிங்க.
வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்.
தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மாங்காய், மாம்பழம் சேர்க்க வேண்டாம்.
இளநீர் அதிகம் அருந்துங்கள்.
பாட்டில் பானங்கள் அருந்த வேண்டாம்
வாரத்தில் ஒரு நாள் வெந்தயக்களி சாப்பிடலாம்.
நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்......

1 comment:

  1. உடல் சூடு தணிய,அதிகாலை குளிக்குமுன், தலையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளியுங்கள். தினமும் இந்தப் பழக்கத்தைக் கடை பிடியுங்கள்.

    ReplyDelete