Tuesday, 29 March 2016

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றால் என்ன ..

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றால் என்ன ..
நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் நன்மை, தீமைகளைச் செய்கிறோம். நல்லன செய்தால் புண்ணியமும், தீயன செய்தால் பாவமும் கிடைக்கிறது. இவை வங்கியில் செய்யப்படும் முதலீடு போன்றது. வினைப்பயனால் உண்டாகும் இன்ப, துன்பங்களை அனுபவித்து முடிக்கும்வரை பிறவி தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் "போன ஜன்மத்துப் புண்ணியம், அவர் வசதியாக இருக்கிறார்' என்கிறோம். ஒருவர் துன்பப்பட்டால் "போன ஜன்மத்துப் பாவம், பாடாய் படுகிறார்' என்கிறோம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்கிறது புறநானூறு கூறுகிறது. இந்த உண்மையை உணர்ந்து இனியாவது நல்லதைச் செய்வோம்.
நமக்குப் பல பிறவிகள் உண்டு. உயிர் என்றும் அழியாதது. நாம் ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வருவது போல நாமும் இப்பூமியில் பிறந்து, பிறந்து இறக்கிறோம். இதைத் தான் "புனரபி' என்கிறார் சங்கரர். புனரபி என்பதற்கு "மீண்டும் 'என்பது பொருளாகும். பூமியில் இருந்து எடுக்கப்படும் தங்கம் தீயில் இடப்பட்டு மாற்று அடிக்கப்பட்ட பிறகே பொன்னிறம் பெற்று ஜொலிக்கும். அதுபோல, உயிர்களையும் கடவுள் பலமுறை பூமியில் பிறப்பெடுக்கச் செய்து இன்பதுன்பம் என்னும் தீயிலிட்டு பக்குவப்படுத்துகிறார். இறுதியில் மோட்சத்தைத் தந்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்.

No comments:

Post a Comment