Friday, 11 March 2016

வெவ்வேறு யுகங்களில் தர்மம் எவ்வாறு அழியப்பெற்றது?

வெவ்வேறு யுகங்களில் தர்மம் எவ்வாறு அழியப்பெற்றது?

வேதங்களிலும் புராணங்களிலும் நான்கு யுகங்கள் குறிப்பிடபடுகிறது. அவை முறையே, கிருத 
யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். சதுர்யுக துவக்கத்தில் தர்ம தேவதைக்கு 
நான்கு கால்கள் இருந்தன. அவை முறையே, தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை. இவை 
அழியப்படுவது முறையே தற்பெருமை, ஆசை, அகங்காரம், பொய் ஆகியவற்றால். கிருத யுக 
துவக்கத்தில் இவை அனைத்தும் இருந்தன. மக்கள் தவபலம் பெற்றவர்களாக இருந்தனர். தவ 
வலிமையால் வரம் பெற்ற அசுரர்கள், தற்பெருமையால் அதர்மத்தை செய்தனர், இதனால் 
அழிவை சந்தித்து தவத்தை இழந்தனர். இதை தான் தர்மதேவதை முதல் கால் இழந்ததாக 
சொல்லப்படுகிறது. அன்று நல்லதும் , கேட்டதும் வெவ்வேறு உலகத்தில் இருந்தது. அதாவது, 
தேவர்கள் தேவலோகத்திலும், அசுரர்கள் அசுர லோகத்திலும் வாழ்ந்ததாக சொல்கிறார்கள். 
பெரும்பாலும் அசுரர்களை கொடியவர்களாகவே சொல்லப்படுகிறது. இதற்க்கு விதிவிலக்கும் 
உண்டு. உதாரணம், மகாபலி சக்கிரவர்த்தி.


திரேதா யுகத்தில் நல்லதும், கெட்டதும் வெவ்வேறு தேசத்தில் ஆனால் ஒரே உலகத்தில் , 
இருந்தது. உதாரணத்துக்கு, பாரதம் - இலங்கை (இராம - இராவண கதைகள்). இங்கே இராவணன் 
சீதை மேல் ஆசை கொண்டு, நன்னடத்தையை இழந்தான். அதனால் அழிவுற்றான். இது ஒரு 
உதாரணம் மட்டுமே. ஆனால், இவ்வாறு திரேதா யுகத்தில் தர்ம தேவதை இரண்டாவது கால் 
இழந்ததாக சொல்லப்படுகிறது.

துவாபர யுகத்தில் நல்லதும் ,கெட்டதும் ஒரே குடும்பத்தில் இருந்தது. உதாரணத்துக்கு, 
பாண்டவர்கள் - கௌரவர்கள். இங்கே கௌரவர்கள் இரக்க குணம் இழந்தர்களாக இருந்தனர். 
காரணம் அவர்களது அகங்காரம். இவ்வாறு மக்களின் அகங்காரத்தால் தர்ம தேவதை மூன்றாவது 
காலையும் இழக்க நேரிட்டது.

கலியுகத்தில் இந்த தூரம் இனியும் குறைந்து; நல்லதும் , கெட்டதும் ஒரே மனிதனிடம் உள்ளது. 
உண்மையும் பொய்யும் ஒருவனிடமே இருக்கிறது. இதை தான் கலியுகத்தில் தர்ம தேவதை 
ஒற்றை காலில் தள்ளாடுவதாக சொல்லப்படுகிறது. கலியுகத்தில் தர்மதேவதை நான்கு காலும் 
இழக்கிறார் என்று சொல்லும் போது, தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை இவை அனைத்தும் 
தர்ம நெறியிலிருந்து மாறுப்பட்டிருக்கும் என்பது பொருள். இதனால் உலகம் அழிவை சந்தித்து 
கலியுகம் முற்றுபெறும்.
ke
Comment

No comments:

Post a Comment