Wednesday, 30 March 2016

எது சொர்க்கம்? எது நரகம்?

எது சொர்க்கம்? எது நரகம்?
ஒருவன் ஒரு ரிஷியிடம் ஐயா எனக்கு சொர்க்கம், நரகம் இரண்டையும் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது, உங்களால் அவற்றை எனக்கு காட்ட முடியுமா என்று கேட்க, அந்த ரிஷியும் அவனை முதலில் நரகத்திற்கு அழைத்து சென்றார். அது சாப்பாட்டு நேரம். அங்கிருந்தவர்கள் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். சாப்பாடும் பரிமாறப் பட்டது. நரகத்தில் இருந்தவர் களுக்கு தரப்பட்ட தண்டனை என்ன வெனில் அவர்களால் கையை மடக்க முடியாது. சாப்பாட்டைக் கையில் எடுத்தார்களே ஒழிய அதைச் சாப்பிட முடியவில்லை. ஏன் எனில் அவர்களால் கையை மடக்க முடியாது. கடைசி வரை போராடிவிட்டு சாப்பிடாமலே எழுந்து போனார்கள்.
பிறகு ரிஷி அவனை சொர்க்கத்திற்கு அழைத்துப் போனார். அங்கும் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்களாலும் கையை மடக்க முடியாது. ஆனால் சாப்பாட்டைக் கையில் எடுத்து ஒருவர் எதிரே இருந்தவருக்கு ஊட்டினான், எதிரே இருந்தவர் இவருக்கு ஊட்டினார். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாக எழுந்து போனார்கள்.
ஆகவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. அடுத்தவருக்கு கொடுக்க மனமில்லாமல் தானே சாப்பிட நினைப்பது நரகம். அடுத்தவருக்குக் கொடுத்துத் தானும் சாப்பிடுவது தான் சொர்க்கம் என்பதாகும் என்ற உண்மையை உணர்ந்து நாமும் இச்சமூகத்தில் பரஸ்பரம் பகிர்ந்து சாப்பிடுவோம்.

2 comments: