Tuesday, 22 March 2016

அல்சரை தவிர்க்க.........!

அல்சரை தவிர்க்க.........!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!
ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....!
உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

3 comments:

  1. அல்சருக்கு நீங்கள் கூறிய கூற்று சரியல்ல. முதலில், அல்சர் எதனால் வருகிறது. நாம் சாப்பிடும் உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில், அவசரமின்றி, நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். பசித்துப் புசி. பசித்ததும் சாப்பிட வேண்டும், அந்த பசி அடங்கிய பின் சாப்பிடுவது, *அல்சர்*. மேலும், இன்று காலை, எந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்கிறோமோ, அதே நேரத்தில் காலம் தாழ்த்தாமல், தினசரி நாம் சாப்பிட்டால், அல்சர் வராது. அடுத்தாற்போல், ஆங்கில மாத்திரை
    களை, அதிகம் உபயோகிக்கக் கூடாது.
    இப்படி அல்சருக்கு பல காரணங்கள் இருக்கிறது. இதற்குண்டான மருத்துவம், எளிமையான முறையில், அதிகாலையில், பல்துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். நம் குடல் சுத்தமாகும். சாப்பாடு, திணற திணற சாப்பிடாமல், கால்வயிறு சாப்பாடு. இடையில் காப்பிக்குப் பதிலாக, உப்பு மட்டும் சேர்த்து மோர் அருந்துங்கள். மாலை சாப்பாட்டிற்கும், காப்பி நேரத்திற்கும் இடையில், மாதுளம் பழம் ஜூஸ் நீர் விடாமல் அருந்துங்கள். உணவில் காய்ந்த மிளகாய்(வற்றல்)க்குப் பதில்
    *நல்ல மிளகு* அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். எளிதில் ஜீரணிக்காத
    கொழுப்பு சத்து நிறைந்த மாமிசங்கள் அறவே சாப்பிடக்கூடாது. பிராய்லர் கறி, சூட்டை அதிகமாக்கி, குடல் புண்ணை அதிகமாக்கச் செய்யும்.

    அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, பசலைக்கீரை, நீலக்கலர் பொன்னாங்
    கன்னிக்கீரை மதிய உணவுக்கு மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சம்பழச்
    சாற்றில், உப்பு போட்டு அருந்தலாம். (இனிப்பு சேர்க்கக்கூடாது.)
    *அதலக்காய்* (பாகற்காய் போன்று சிறியதாக, அதிக விதையுடன் இருக்கும்) வாரம் ஒருமுறை சேர்த்தால்,
    அல்சர், மற்றும் சுகர்புண், காயம்பட்டால் ஆறாமல் இருக்கும் புண் என்று, அனைத்து புண்களையும், வெகு விரைவில் குணப்படுத்தக்கூடியது இந்த அதலக்காய். மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ, வெந்தயக்களி நம் வீட்டில் தயார் செய்து அதிகம் தேங்காய் சேர்க்காமல், சாப்பிடுங்கள். கொய்யாப்பழம் வயிற்றுப்புண் ஆற்றும் தன்மை உள்ளது. முக்கியமாக அல்சர் உள

    ReplyDelete
  2. முக்கியமாக அல்சர் உள்ளவர்கள், வயிறு நிரம்ப எந்த ஆகாரமும் சாப்பிடக் கூடாது.
    அதிக காரத்தன்மை சேர்க்கக்கூடாது.

    ReplyDelete
  3. தயிர் சாப்பிடுவது, கேன்ஸரை உருவாக்கும். ஆகவே, தயிரை மோராக்கி
    நீருக்குப் பதில் மோரை அருந்தலாம். அந்த மோரிலும், அதிக அளவு புளிப்புத் தன்மை இருக்கக்கூடாது. இரவு புளிக்கவைத்து, அதிகாலை அருந்தலாம். நல்ல அரிசியாக இருந்தால், சோறாக்கி, இரவு தண்ணீர் ஊற்றி, மறுநாள் அந்த நீரை, உப்பு போட்டு அருந்தலாம். மிகவும் நல்லது. சாத்துக்குடி ஆரஞ்சுப்பழம் ஜூஸ் இனிப்பைக் குறைத்து அருந்தலாம். அல்சர் உள்ளவர்கள், பெரிய சோறாக இல்லாமல், நொய் அரிசி, அதாவது குருணை அரிசியை உணவுக்கு பயன்படுத்தலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    ReplyDelete