Sunday, 6 March 2016

பிரதோஷ காலத்தில் செய்ய கூடாதவை

பிரதோஷ காலத்தில் செய்ய கூடாதவை
1.போசனம் உணவு உண்ணுதல்.
2. சயனம் தூங்குதல்
3. ஸ்நானம் குளித்தல் ...
4. எண்ணெய் தேய்த்தல்
5. வாகனம் ஏறல் இது வெளியூருக்குப் பயணித்தலைக் குறிக்கும்.
6. நூல் படித்தல்
7. மந்திர செபம் பலர் தவறுதலாக பிரதோஷ காலத்தில் பஞ்சாட்சர செபம் செய்கின்றனர். இது தவறு.
8. விஷ்ணு தரிசனம் விஷ்ணுவே பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்து விடுவதால் இக்காலத்தில் விஷ்ணு வழிபாடு இல்லை. பிரதோஷ காலத்தில் சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த விதிகள்.
பலர் இக்காலத்தில் சிவாலயத்துக்குச் செல்லாமல் தாமே பூஜை, அபிஷேகங்கள் செய்து வழிபடுதலும், மற்றவர்களையும் அதற்கு அழைத்தலும் தவறு.
-----------------------------------------------------------------------------------------------பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை
நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்த பின் அருகம்புல் பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது நமக்கு நன்மை தரும்.
உற்சவமூர்த்திக்கு பூஜையின் போது பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவற்றினைத் தரலாம். உற்சவ மூர்த்திக்கான பூஜையின் போது நமது அணிகலன்களை (நகைகளை) உற்சவமூர்த்திக்கு அணிவித்து தீபாராதனை முடிந்த பின்னர் நகையை அணிந்து கொண்டால் நன்மை பல நமக்கு கிட்டும்.
நந்திதேவரது தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு நடக்கும் தீபாராதனையை நந்தி தேவரது இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும். மூலவரது தீபாராதனை முடிந்த பின்பு நந்திகேஸ்வரது காதில் பிறர் கேட்காதவாறு நம்முடைய குறைகளையும், கோரிக்கைகளையும் அவரிடம் கூறுதல் வேண்டும்.
இவ்வாறு பன்னிரெண்டு பிரதோஷ காலங்கள் வரை கூறி வந்தால் நினைத்த காரியம் நடக்கும். நந்திகேஸ்வரருக்கு, நைவேத்தியமாக பச்சரியுடன் வெல்லம் கலந்து வைத்து வழிபாட்டிற்குப் பிறகு எல்லாருக்கும் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கொடுப்பதாலோ அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதாலோ நமது தோஷங்கள் தொலையும். நந்திதேவர் மற்றும் உற்சவர், மூலவர் ஆகியோருக்கு தீபாராதனை செய்யும் போது இறைவனின் திருநாமங்களையும், சிவபுராணப் பாடல்களையும் பாடுதல் வேண்டும், இவ்வாறு பக்தியுடன் பாடுவதால் தோஷம், பாவம், கஷ்டம் நீங்கி நன்மை பல பெறலாம்

No comments:

Post a Comment