வாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்?
காய்கறிகளில் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன.
வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில்
சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என கொரிய
விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளளது.
எனவே காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்,
இதயம் காக்கும் நூற்கோல்
நூற்கோல் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த நூற்கோல்
இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய ஒரு வேர்க் காய்கறி. இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள்
அதிகமான அளவில் அடங்கியுள்ளன.
நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் வெங்காயம்
வெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம்
நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங் (Zinc)
உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
இருமல் போக்கும் இஞ்சி
இஞ்சியில் செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு
மிகவும் சிறந்தது.
குறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல
நிவாரணத்தைக் கொடுக்கும்.
சருமம் காக்கும் கேரட்
கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தைத்
தரும் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை நாள்தோறும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக
இருக்கும்.
சர்க்கரை நோய் போக்கும் முள்ளங்கி
நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக்
இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில்
நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும்.
நரம்புப் பிரச்சனை தீர்க்கும் சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் விட்டமின் – பி
காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக
இருக்கும்.
ஆற்றல் அதிகரிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு
உருளைக்கிழங்கைவிடக் குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி
காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பைச் சீராக வைக்கும்.
No comments:
Post a Comment