Tuesday, 8 March 2016

விருச்சிகத்தில் கூட்டணி அமைத்த செவ்வாய் - சனி .. என்ன பாதிப்பு? பரிகாரம் என்ன?

பெருமழையும், வெள்ளமும், நிலநடுக்கமும், பூகம்பமும் விபத்துகளும் நிகழ்வதில் கிரகங்களின் சேர்க்கை பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. யுத்த கிரகம் என்று கூறப்படும் செவ்வாயும் அதற்கு பகை கிரகமான சனியும் 27.02.2016-ல் இருந்து 09.09.2016வரை இணைந்து, விருச்சிக இராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் வாகன விபத்துகள் தீ விபத்துகள் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள். மழைக்கு காரணமான சுக்கிரன், 08.03.2016 அன்று, கும்ப இராசியில் சூரியனோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால், அன்றுமுதல் 14.03.2016வரை தமிழகத்தில் சில இடங்களில் பலத்த காற்றும் நல்ல மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, 27.02.2016 to 09.09.2016 வரை உலகத்திற்கு நன்மை தரக் கூடிய காலகட்டம் இல்லை. இத்துடன் நில நடுக்கம், நெருப்பு, வாகன விபத்துகளும் கலவரங்களும் சண்டை சச்சரவுகளும் பெரும் உயிர் இழப்புகளும் உண்டாகும் என்ன பரிகாரம் இப்படி செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்ய வேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் தோறும் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..செவ்வாய் ஓரையில் வழிபடுவது இன்னும் நல்லது. சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றலாம். காலை மாலை விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால் தீமை குறையும்
கோட்சாரப்படி இப்படி சேர்ந்து இருக்கும்போது மேற்சொன்ன பிரச்சினைகள் உலகிலும் நடக்கும்தானே. அதிக மக்கள் கூடும் இடங்களில் கலவரம்,தீவிரவாதிகளால் ஆபத்து,ரயில்,விமான விபத்துகள், நாடுகளுக்குள் சண்டைகள்,தீவிபத்துகளை இந்த சேர்க்கை குறிக்கிறது. மார்ச் மாதம் 25ம் தேதி முதல் சனி வக்ரமாகும் சமயம் இதன் தீவிரம் அதிகரிக்கும் நிலம் வீடு போன்றவற்றில் பிரச்சினை நெருப்பு மின்சாரம் போன்றவற்றல் விபத்து உடன் பிறப்புகளிடையே சச்சரவுகள் என்பவை எல்லோருக்கும் உள்ள பொதுவான பலன்களாகும்

மேஷம் ராசியினருக்கு 8ல் செவ்வாய்-சனி இருக்கிறது. அஷ்டம சனி போதாது என இப்போது ராசி அதிபதியும் மறைகிறார்.. அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். முன்கோபம் தவிர்க்க முடியாமல் அதனால் துன்பமே உண்டாகும்..ஆண்களுக்கு சிறு நீரக நோய் உண்டாகலாம் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை உண்டாகலாம் 



வாழ்நாள் முழுவதும் வணங்குங்கள் ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும். காலை மாலை விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால் தீமை குறையும், மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதால் நற்பலன்கள் அதிகரிக்கும்.     

நவகிரக சன்னதியில் வழிபாடு விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம்.சிவ ஆலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் செவ்வாய்-சனிக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிபட்டால் துன்பம் விலகும்
மீனம் ராசியினருக்கு 9-ல் செவ்வாய்-சனி இணைவதால் தந்தை - மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும்.சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் சிக்கல் இருக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும்.

கன்னி ராசியினருக்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. மாமனாருக்கு பாதிப்பு. அலைச்சல்,வாகனத்தால் பாதிப்பு,உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்யும்.



No comments:

Post a Comment