Friday, 11 March 2016

அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?
வான்வெளியில் உள்ள 27 நட்சத்திர கூட்டங்களை வைத்து அனைத்து வகையான் முகூர்த்தங்களும் குறிக்கப்படுகிறது.அபிஜித் என்ற நட்சத்திரகூட்டமும் வான்வெளியில் உண்டு.இதன் அமைப்பு நான்கு தெரு சந்திக்கும் இடம்போல் அமைய பெற்றியிருக்கும்.மொத்தம் 27 நட்சத்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.அபிஜித் என்ற நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக முன்னர் பயன்பாட்டில் இருந்துள்ளது.இந்த நட்சத்திர கூட்டம் முதல் நட்சத்திரமாக கொள்ளும் அளவுக்கு சக்தியில்லை என பயன்படுத்தவில்லை.
சூரியன் உச்சி வானில் இருக்கும் நேரமே அபிஜித் முகூர்த்தமாகும்.அதாவது நண்பகல் 11-30 லிருந்து 12-30 வரை உள்ள காலமாகும்.பிரம்ம முகூர்த்தம்,உதய காலம்,அஸ்தம காலம் போன்ற நேரங்களுக்கு எப்படி தோஷமில்லையோ அதேபோல் இந்த அபிஜித் காலத்திற்கு எந்தவிதமான தோசமும் கிடையாது.
முகூர்த்த நாளோ,நேரமோ இல்லாவிட்டாலும் கூட சரியாக பகல் 12 மணியை முகூர்த்தமாக பயன்படுத்திகொள்ளலாம்.அதேபோல் முகூர்த்த நேரத்தை தவறவிட்டவர்களும் இந்த நேரத்தை பயன்படுத்தலாம்.இந்த நேரம் வாழ்வில் வெற்றியைதரும்,முன்னேற்றத்தை கொடுக்கும்.தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும்,கிரகங்களின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் ஆகும்

No comments:

Post a Comment