Monday, 28 March 2016

திருமண பொருத்தம் பார்க்கும் போது

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...இருவரும் காதலித்தால் ஜாதகம் எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போக வேண்டாம்..பொருத்தம் பார்க்க வேண்டாம்..இவையெல்லாம் மனப்பொருத்தம் அடிப்படையில் ராசி வசியம் அடிப்படையில் ராசிப்பொருத்தம் என வந்துவிடும். அதற்கு பொருத்தம் பார்க்க வேண்டாம்...

அந்நியத்தில் பார்த்தால் மட்டும் திருமண பொருத்தம் பார்த்தால் போதுமானது...ரோகிணி ,திருவாதிரை,பூசம்,மகம்,அஸ்தம்,திருவோணம்,இவை ஆறும் ஆண்,பெண்களுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம்....திருவாதிரை ஆணும் ரோகிணி பெண்ணும் வந்தால் பொருத்தம் வருமா என கேட்டால் வராது ..இருவரும் ரோகிணியாக இருந்தால் செய்யலாம்..

இருவரின் பிறந்த நட்சத்திரத்துக்குண்டான மிருகங்களை பாருங்கள் ..ரோகிணி நட்சத்திரம் ஆண்நாகம்..மகம் ஆண் எலி...எலியும் பாம்பும் பகை...எலியும், பாம்பும் ஒரு வீட்டில் இருக்க முடியுமா..? பாம்புக்கு எலி கட்டுப்பட்டது...

பொருத்தம் பார்க்கும்போது சந்திரனுக்கு 8ஆம் அதிபதி கெடக்கூடாது லக்னத்துக்கு 7ஆம் அதிபதி கெடக்கூடாது..இதுபோல சுக்கிரனுக்கும்,குருவுக்கும் பார்க்கலாம்..இருவரது ராசியும்,லக்னமும் ஒன்றுக்கொன்று மறையக்கூடாது...மறையாமல் இருந்தால் ஒற்றுமை,அன்பு நிலைத்திருக்கும்..ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கெடக்கூடாது..கெட்டால் குழந்தை பாக்ய பிரச்சினை உண்டாகும் பெண் ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்க வேண்டாம் இருவருக்கும் கெட்டிருந்தால் பிரச்சினை இல்லை..ஒருவருக்கு நன்றாக இருந்து ஒருவருக்கு கெட்டிருந்தால் அங்கு சந்தோசம் இருக்காது..

7ஆம் இடம் தாம்பத்யம்..12ஆம் இடம் இரவில் உண்டாகும் சந்தோசம்..12 கெட்டுப்போனால் இரவும் இல்லை உறவும் இல்லை...ஆணுக்கு 3ஆம் இடம் கெட்டுப்போனால் வீரியம் இல்லை..3ஆம் இடம் வலுத்த பெண்ணுக்கு 3 கெட்ட பையனை திருமணம் செய்து வைத்தால் தப்பாகிவிடும்...உறவு மாறிவிடும்..7ஆம் இடத்தில் இருக்கும் கிரகம்,7ஆம் இடத்தை பார்த்த கிரகம்,7ஆம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் எல்லாம் கணித்து திருமண பொருத்தம் பார்க்கும் முறை கடினமானது ஆனால் நம்பகமானது...வெறுமனே நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து 8 பொருத்தம் இருக்கு ஆஹா...அருமை என கிணற்றில் தள்ளிவிடாதீர்கள்..

ஒரு பையனை தேர்ந்தெடுக்கும்போது அவன் ஜாதகம் கொண்டு மனைவி ஸ்தானம் எப்படி,மாமனார் ஸ்தானம் எப்படி,மாமியார் ஸ்தானம் ,நங்கை ஸ்தானம் எல்லாம் கணிக்க ஜாதகத்தில் கிரக அமைப்புகள் ,கணக்குகள் உண்டு...ஏழரை சனி நடக்கும் பெண்ணையும் அஷ்டம சனி நடக்கும் பையனையும் கட்டி வைத்தால் ,இருவரும் ஒரே வண்டியில் சென்று விபத்தை சந்திப்பர்.

ஒரே திசை நடந்தால் அது இருவருக்கும் யோகமாக இருந்தால் பரவாயில்லை...அப்படி அமைவது கடினம்..இருவருக்கும் ஒரே திசை இல்லை என்று மட்டும் பார்க்காமல் அந்ததிசை என்ன காரகத்துவம் யார் யாருக்கு பாதிப்பு உண்டாக்கும்..யாருக்கு நன்மை தரும்..மனைவிக்கு யோகம் தருமா என ஆராய்வது சிறப்பு.

No comments:

Post a Comment