Monday, 4 April 2016

7-ஆம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் சொல்லுவது ஏன் ?

7-ஆம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் சொல்லுவது ஏன் ?
----------------------------------------------------------------
7-ஆம் பாவம் என்பது களத்திர பாவம்.
எதிர் நபரை குறிக்கும் பாவம். இக்கனத்திற்கு 180 பாகையில் எதிர் வீடாக அமையும் .
1) 7-லில் சூரியன் இருந்தால் காலமெல்லாம் மனைவியின் சொல்லை கேட்டு நடந்தால் வாழ்க்கை சீராக போகும் இல்லை என்றால் நிம்மதி பறி போகும்.
சிலருக்கு காலம் கடந்த திருமணமாக அமைந்து விடுகிறது.
2) 7-லில் சந்திரன் இருந்தால் மனைவி ஜாதகரை ஒரு முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
சந்திரன் தாய் கிரகம் ஆகவே ஜாதகர் அம்மா பிள்ளையாக இருப்பார் ' பினக்கம் தான் ஏற்படும்
.
3) 7-லில் செவ்வாய் இருந்தால் தோசம் என அறிய படுகிறது
மன நிலை சற்று வேறு பட்டுதான் இருக்கும்.அகவே முரன் பட்ட மன நிலை தான் அமையும்.
சில ஜோதிடர்கள் இரத்த சம்பந்தமாக ஒத்து போகாது என சொல்லுகிறார்கள்.
4) 7-லில் புதன் இருந்தால் அமையும் மனைவி அதி புத்தி சாலியாக இருப்பார். பேசியே கொல்லும் மனைவியாக அமைந்து விடும். ஆகவே சரி பட்டு வராது.
5) 7லில் குரு இருந்தால் காமஸ்தனத்தில் குரு இரு ந்தால் ஆன்மீகமும் , பக்தியும் அதிகமானால் தம்பதியர் இடையே கலகம் தான் ஏற்படும்.
6) 7-லில் சுக்கிரன் இருந்தால் களஸ்திரக்காரகன் களஸ்திர ஸ்தானத்தில் இருந்தால் அந்த இடம் பாழ் .
வாழ்க்கை அவ்வளவாக ரசிக்காது.
7) 7-லில் சனி இருந்தால் இவர் மந்தமானவர் வயது, அழகு,உருவம்,எல்லாமே பொறுந்தாது.செயல் பாடுகளிலும் மந்தமான நிலையே.
8) 7-லில் ராகு/கேது இருந்தால் தோசம் என அறிய படுகிறது சிலருக்கு விரும்பதகாத வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.சில குறைபாடுகளும் ஏற்படும்,
இது பொது பலன் தான் லக்கனம், சுபர் பார்வை அமைப்பு எல்லாம் சீர் தூக்கி பார்த்து பலன் சொல்ல வெண்டும்

No comments:

Post a Comment