Sunday, 3 April 2016

"எப்சம் உப்பு'

மக்னீஸியம் சல்பேட் என்னும் உப்பைப் பேதியாவதற்குக் கொடுப்பர். அதற்கு, "எப்சம் சால்ட்' என்ற மறு பெயருண்டு. இந்த உப்பைக் கண்டுபிடித்ததே வியப்பான விஷயமாகும். எப்சம் என்பது ஒரு ஊரின் பெயர். இங்கிலாந்தில் உள்ளது இவ்வூர்.
அங்குள்ள ஒரு நீருற்று காய்ந்தபோது, அதிலிருந்து கிடைக்கும் ஒருவகை உப்பே "எப்ஸம்' என்றறியப்பட்டது.
1618-ம் ஆண்டு ஒரு விவசாயி தனது ஆடுமாடுகளை மேய்ந்துக் கொண்டிருந்தான். தாகம் மிகுந்திருந்த போதிலும், அவனது ஆடு, மாடுகள் அந்த நிரூற்றிலிருந்து தண்ணீர் குடிக்க மறுத்துவிட்டன. மேலும், அவை பல நாட்களுக்கு முன் அந்த தண்ணீரைக் குடித்திருந்தன.
விவசாயியின் பசுக்களுக்கு பேதியும் ஏற்பட்டு இருந்தது. ஆகவே, இதை விவசாயி மற்றவர்களுக்கு கூறவே அந்தத் தண்ணீர் ஆராயப்பட்டது. தண்ணீரில் பேதிக்கு உதவும் கசப்பான மக்னீஷிய உப்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டது.
அதன் பிறகு, மக்னீஷியம் சல்பேட் பொதுவாகப் பேதியாவதற்குக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் இன்றும், அது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரால் "எப்சம் உப்பு' என்றே அழைக்கப்படுகிறது. 

1 comment: