Saturday, 9 April 2016

மோட்சம் எங்கே கிடைக்கும்?

மோட்சம் எங்கே கிடைக்கும்?
🌼மோட்சம் அல்லது முக்தி என்பது
எங்கேயோ இருப்பதாக
மனிதர்கள் எண்ணுகிறார்கள்.
🌼ஆனால் அது நமக்குள்ளேயே இருக்கிறது
என்பதுதான் ஞானிகள் கண்டு
நமக்கு அறிவித்த உண்மை.
🌼நாம் புலன்கள் வழியே
எப்போதும் வெளியே இன்பத்தை
தேடிக்கொண்டிருக்கிறோம்
அது தரும் இன்பங்கள்
நிலைத்து நிற்பதில்லை.
🌼இன்பத்தின் பின்னால்
துன்பம் நிற்ப்பதை நாம் அறிவதில்லை.
🌼அறியாமையைப் போக்கும்
ஹயக்ரீவன் தாளினை பற்றுவதில்லை
🌼ஆமையாக வடிவம் தாங்கி
மந்தர மலையை கடலில் மூழ்காமல்
காப்பாற்றிய கூர்மாவதார மூர்த்தியை
சிந்தை செய்வதில்லை.
🌼அன்று மந்தரமலையை
கடலில் மூழ்காமல் காப்பாற்றிய
அந்த கருணாமூர்த்தி
🌼கவலைகளும் பயங்களும்
நம்மனம் முழுவதும் ஆக்கிரமித்துக்கொண்டு
நம்மை துன்பக் கடலில் மூழ்கடிக்கும்
இந்த நேரத்தில் அவனை நினைத்து
வேண்டிக்கொண்டால் நம்மை
காப்பாற்றமலா விடுவான்?
🌼ஆனால் அகந்தை கொண்டு
அலையும் நாம் அவனை நம்பாமல்
நம்மால் அனைத்தையும்
சமாளித்துவிடலாம் என்று
அழுது பிதற்றி திரிகிறோம்.
🌼நம்மை கருணையோடு
காக்கும் தெய்வம் கண்ணன் இருக்கையிலே
அவனை நினைத்து வணங்காமல்
எங்கெங்கோ அலைந்து நம்முடைய
துன்பங்களை பன்மடங்கு
பெருக்கிக்கொள்வதுடன்
மீளா மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம்.
🌼ஞானிகளும் ஜீவன் முக்தர்களும்
காட்டிய எளிய வழியை
பின்பற்ற மறுக்கிறோம்.
🌼போலிகளிடம் சென்று
பாம்பில் வாயில் சிக்கிய
எலிகள்போல்
மெல்ல மெல்ல சாகிறோம்.
.
🌼காலம்முடியுமுன்
கால காலனை,
கண் கண்ட தெய்வமாம் கண்ணனின்
காலடியில் நம் அகந்தையை விட்டு
பக்தி செய்வோம்,
பரமானந்தம் பெறுவோம்.
🌼முக்திக்கு சமமான இன்ப நிலையை
இங்கேயே அடைந்து மகிழ்வோம்.

1 comment:

  1. அகந்தை கொண்டு அலையும் என்ற வார்த்தைக்கு ஒரு கதை.

    தன்னுடைய மகனை மிகவும் அதிகமாய் நேசித்தார் ஒரு தகப்பன். அவனோ ஒரு கீழ்ப்படியாத மகன். அந்த அப்பா மிகவும் வேதனை அடைந்தார். இருந்தாலும், அவன்மேல் வைத்த அதீத அன்பின் நிமித்தமாக, தன்னுடைய மனதை கல்லாக்கிக் கொண்டு, பொறுமையாய் அவனை மன்னித்து வந்தார். அவருடைய அன்பையும், மன்னிக்கும் குணத்தையும், சாதகமாக பயன்படுத்திய அந்த மகன், இன்னும் அதிகமாய் கேடான காரியங்களைச் செய்தான். ஒரு நாள் மகன், தன் மனதுக்கு பிடித்த வேலை ஒன்றையும், தன் மனதைக் கவர்ந்த துணையையும் அவன் தேடிக்கொண்டான். அந்த அன்பு நிறைந்த அப்பா அவனுக்காக தேடி, தேடி தெரிவு செய்து வைத்திருந்தும், அவனது எதிர்காலத்துக்கு, பொருத்த மானதுமான வேலையை அவன் உதறித் தள்ளினான். அதுபோலவே, அந்த மகனின் உள்ளத்துக்கேற்ற வகையில் அவர் பேசி வைத்திருந்த துணையையும் உதறினான். ஆகவே அவனது சுதந்தரத்
    தில் தகப்பன் தலையிடவில்லை. நாட்கள் கடந்தன, அவன் தேர்ந்தெடுத்த
    தொழில் கைவிட்டது. மனதார விரும்பியவளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தது. அப்போது தான் தன் அப்பாவை நினைத்தது மனது. கதவு தட்டும் ஓசை கேட்டது. வேண்டா வெறுப்பாய் கதவை திறந்தவன் கண்கள், அகல விரிந்தன. *நீரில் நீந்த தெரியாமல், தத்தளித்தவனுக்கு, மரக்கட்டை அகப்பட்டது போன்ற உணர்வு. ஆம். அவனை அவனுடைய அப்பா தேடி வந்திருந்தார். மகனைக் கட்டித் தழுவினார். இடையில் ஒன்றுமே நடக்காததுபோலவும், தன் மகன் தவறே செய்யவில்லை என்பது போலவும் அவனோடு பேசினார். தன் தவறை அப்பா மன்னித்துவிட, தயாராக இருப்பதை அவன் புரிந்து கொண்டான். அவரிடம் மன்னிப்புக் கேட்டு பெற்றுக் கொண்டான்.

    இதுபோன்று, நாமும் அடாத செயல் செய்து, நம்மைப் படைத்த ஈசனை, மறந்து போனாலும், அவர் நம்மை மறக்கமாட்டார். மாறாக அவர் நம்மை அணைக்கத் தயாராக இருக்கிறார். அவரிடம் மன்னிப்புக்கேட்டு, அவரிடம் சென்றால், இறைவன் நம்மை புறக்கணிக்கமாட்டார்..மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.

    ReplyDelete