Thursday, 14 April 2016

பதவி உயர்வு கிடைக்க , வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக – மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு!

வாழ்வில் நல்ல நிலையை அடைய யார் தான் விரும்ப மாட்டார்கள்? உங்கள் குடும்பத்தில் , என்றும் மங்கலம் பொங்க, லக்ஷ்மி கடாட்சம் பெருக , கடன் , வறுமை, தரித்திரம் முற்றிலும் நீங்கி – ஒரு நல்ல முன்னேற்றம் அடைய சொல்ல வேண்டிய மந்திரங்கள் , தியானம், வழிபாட்டு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.நம் வாசக அன்பர்கள் அனைவரும் பயன் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.மந்திரம்

1:சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்மந்திரம் 

2:அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது,லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும்.இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.மகாலட்சுமி குறித்து தேவர்களால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.

No comments:

Post a Comment