Sunday 8 May 2016

கிரகயுத்தம் என்றால் என்ன?

கிரகயுத்தம் என்றால் என்ன?
இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும். சூரியன், சந்திரன், ராகு & கேது ஆகிய கிரகங்களுக்கு இந்த விதி இல்லை! செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள். அதை மனதில் கொள்க! உதாரண கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் உள்ளன. அதில் சனியும், சுக்கிரனும் ஒரு பாகைக்கும் குறைவான நிலையில் உரசிக் கொண்டு கிரக யுத்தத்தில் உள்ளன. சூரியன் 177.16.55 புதன் - 161.43.09 சனி - 155.28.42 சுக்கிரன் - 155.05.38 சுக்கிரன் - சனி இருவரின் யுத்தத்தில், இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை, சுக்கிரன் வெற்றி பெறுவார்.

No comments:

Post a Comment