Wednesday, 11 May 2016

உறவுகள் மத்தியில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், மனித உறவில் மதிப்பு, இல்லறம், மெய் மகிழ்ச்சி போன்றவை பற்றி

தாய்மை என்பது குழந்தை பெற்றால் தான் என்பதல்ல, ஒருவர் மீது நீங்கள் முழுமையாக அன்பு செலுத்தி, அவர்களது வாழ்க்கைக்காக உங்களை முழுமையாக அற்பணிக்கும் போதும் நீங்கள் தாய்மையை உணர முடியும்.

ஒருவரை ஓங்கி அடித்துவிட்டால் கூட அந்த காயம் அல்லது மன சங்கடம் ஓரிரு நாட்களில் ஆறிவிடும். ஆனால், நாவினால் தகாக வார்த்தைகளில் பேசுவது வாழ்நாள் முழுக்க நாம் அவர்களை இழக்கும் நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.

இவ்வுலகில் மிகவும் விலை உயர்ந்தது, தங்கமோ, வீடோ, டைம் மெஷினோ அல்ல. அன்பான குடும்பம். உங்களை முழு மனதாக நேசிக்கும் மனிதர்கள். மனித அன்பினை விட விலை உயர்ந்த பொருள் உலகில் வேறேதும் இல்லை.

எளிமையான வாழ்க்கை தான் உங்களுக்கு மிகையான இன்பத்தை தரவல்லது. பணம் அதிகமாக சேர, சேர மனத்திலும், வாழ்விலும் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போகும். எனவே, எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் எளிமையை மறந்துவிட வேண்டாம்.

நம் உழைப்பை தவிர்த்து, பிறர் உழைப்பை திருட அல்லது அவர்களின் சமூக நிலை குறித்து பொறாமை படுவது. எந்த விதத்திலும் சரியானதல்ல. மேலும், இது உங்கள் நிலையை தான் கீழே கொண்டு செல்லும்.

ஒருவருக்கு தீங்கு நினைக்கும் போது ஒன்றை நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த தீங்கு பல மடங்கு அதிகமாக உங்கள் வாழ்வில் வெகு விரைவில் நடக்கும். அதை தாங்கிக் கொள்ளும் மன தைரியம் உங்களிடம் இருக்க வேண்டும். இது நல்லதுக்கும் பொருந்தும்.

அப்பா பெயர் தான் இனிஷியல் போட வேண்டும் என்றில்லை. அன்பையும், உயிரையும் தாய்ப்பாலாக ஊட்டி வளர்க்கும் அன்னையின் பெயரையும் கூட இனிஷியலாக போட்டுக் கொள்ளலாம்.

என்ன தான் பெரிய வேலையாக இருந்தாலும். உயர் பதவி, அந்தஸ்து என எதுவாக இருப்பினும். குழந்தைகளுடன் அந்தந்த பருவத்தில் நேரம் செலவழிக்க தவற கூடாது.

2 comments:

  1. அருமை அய்யா. திருக்குறள்: 71 also திருக்குறள்: 129ஐ, மிக அழகாக ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. மன தைரியம் என்ற வார்த்தைக்கு, ஒரு கதை.

    குரு பூனை ஓன்று இருந்தது. அதனிடம் பல சிஷ்யன் பூனைகள் பயின்று வந்தன. எல்லாப் பூனைகளும் தங்களுக்கு வருகிற சந்தேகங்களை, குருவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது வழக்கம்.

    ஒருநாள், ஒரு சிஷ்யன் பூனை, வேதனை
    யுடனும், குழப்பத்துடனும் காணப்பட்டது. குருபூனை அதைப் பரிவுடன் பார்த்து, அதன் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டது.

    சிஷ்யன் பூனை சொன்னது, குருவே! நான் எப்போதும் சாலைகளிலும், சுவர்களிலும் நடந்து போகிறேன். வழியில் எத்தனையோ வாகனங்கள், மிருகங்கள் எதிர்ப்படுகின்றன. நான் கவனமாக முன்னே சென்று விடுகிறேன். *ஆனால் இந்த வால்*? இது என் பின்னால் வந்து கொண்டுதான் இருக்கிறதா, இது எதிலாவது சிக்கிக் கொள்ளுமா? வேறு மிருகமோ, வாகனமொ சிதைத்துவிடுமா
    என்ற கவலையும், பயமும் என்னை வாட்டி
    வதைக்கின்றன குருவே! இந்த வாலைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டால், எந்தக் குழப்பமும் இல்லாமல் நடமாடுவேன்
    உதவி செய்ய முடியுமா குருவே? என்றது.

    குரு சொன்னது அடமூடனே! பூனை இனம் பிறந்தது முதற்கொண்டே, வாலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, பூனைகள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றன..வாலும் பின்னால் சென்று கொண்டேதான் இருக்கிறது. நீயும், எதையும் குறித்து குழப்பிக் கொள்ளாமல் மன தைரியத்துடன் போ..வால் உன் பின்னாலேயே தொடர்ந்து வரும் என்றது.
    தேவையற்ற குழப்பமும், பயமும் எதையுமே சாதிக்கப் போவதில்லை. உன் திராணிக்கு(சக்தி) மேலான எதுவுமே உனக்கு நேரப்போவதுமில்லை.

    *ஈசனிடம் நம்பிக்கை வைத்து, குழப்பமில்லாமல் உன் வழியில் ஒழுங்காய் நட. வால் பிரச்சனையில்லாமல் உன் பின்னாலேயே வரும்*.

    ReplyDelete