Sunday, 8 May 2016

பரசுராம அவதாரம்…(ஆன்மீக ரகசியம்)

பரசுராம அவதாரம்…(ஆன்மீக ரகசியம்)
ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகா கங்கையில் தண்ணீர் எடுக்க செல்ல…தண்ணீரில் தெரிந்த கந்தர்வனின் உருவம்
கண்டு ரேணுகா சஞ்சலமடைய…தன் மனைவியின் தலையை கொய்து வருமாறு மகன்களுக்கு கட்டளையிட 4 மகன்களும் மறுக்க ஐந்தாவதாக பிறந்த பரசுராமர் தந்தையின் கட்டளையை சிரமேற்கொண்டு
தாயின் தலையை துண்டித்துக் கொண்டு 
வந்து தந்தையை வணங்கி நின்றார் பரசுராமர்..மகிழ்ந்த ஜமத்கனி முனிவர் வேண்டிய வரத்தை கேள் என்றார்.. தன்னுடைய தாய் திரும்ப உயிர் பெறவும்.. தந்தையின் கட்டளையை மீறிய தன் சகோதரர்கள் சாபம் நீங்க வரம் கேட்டார் பரசுராமர்..வரத்தை பெற்றுக்கொண்ட பரசுராமர்..தன் தாயின் உடலை காணாமல்
வேறொரு உடலில் பொருத்தி தந்தையின் முன்னால் அழைத்து வர "மாரி" என பெயரிட்டார்…இவர்தான் பின்னாளில் மாரியம்மன் என அழைக்கபட்டார்..ஜமத்கனி 
முனிவரின் ஆசிரமத்துக்கு வேட்டைக்கு வந்த கார்த்தவீரியன் என்ற அரசன் பசி போக்க வேண்ட..ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை 
அழைத்து மன்னனின் பசியாற்றினார் ஜமத்கனி..மன்னனுக்கு காமதேனுவை அபகரிக்கவேண்டும் என்ற எண்ணம் வர.. 
ஜமத்கனி முனிவரை கொன்று அபகரித்து சென்றான் கார்த்தவீரியன்..நீராட சென்றிருந்த பரசுராமர்..தன் தாய் 21 முறை 
நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பதை கண்டு..நீதி..நெறி..
தவறிய மன்னர்களை 21 பிறவி தலைமுறைக்கு அழிப்பேன் என உறுதி ஏற்று.. 
நீதி தவறிய மன்னர்களை அழித்து தனது சக்திகளை ஸ்ரீ ராமருக்கு கொடுத்து தனது 
கடமை முடிந்தது என பரசுராமர் தனது அவதாரத்தை நிறைவேற்றிகொண்டார்..இதை 
புராணங்களின் வாயிலாக நாம் அறிய முடிகின்றது..இதன் உண்மை ஞான ரகசியத்தை பார்ப்போம்...
உண்மையில் பரசு என்பது சிவபெருமானிடம் 
பெற்ற ஞானமே ஆயுதமாக காண்பிக்க பட்டுள்ளது..இந்த ஞானம் பெற்றவர்கள் தாய்,
தந்தையின் கட்டளையை மீறாதவர்கள் ஆகவும்..தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று இறை தந்தையின் கட்டளைப்படி நடப்பவர்களும் ஆவார்கள்..பற்றற்று இருப்பவர்கள் பந்த பாசத்துக்கு கட்டுப்படாதவர்கள்..ஆனால்,நீதி நெறி தவறாமல் நடப்பவர்கள்.அதனால்தான் முதலில் தந்தையின் கட்டளையை நிறைவேற்றிய பரசுராமர்..பிறகு தாய் பிழைத்து வர வரமும் கேட்டார்..இறைவன் ஈசனிடம் ஞானம் பெற்ற ஒருவர் எப்பொழுதும் ஸ்ரீமத் என்ற உயர்ந்த வழிப்படி நடப்பவராக இருப்பார்..தாயின் தலையை துண்டிக்க சொன்னபொழுது ஆன்மா அழிவற்றது உடலே அழியக்கூடியது என்ற உயர்ந்த ஞானம் அவரிடம் இருந்திருக்கவேண்டும்..மேலும் தன்னுடைய தந்தையின் ஆற்றலை பற்றி அறிந்த புத்திசாலியாகவும் பரசுராமர் இருந்துள்ளார்..எப்பொழுது தலையை துண்டித்து இன்னொரு உடலுடன் ஒட்டவைத்தாரோ அப்பொழுது உடல் வேறு ஆன்மா வேறு என்ற மாற்றம் ஆன்மாவிற்கு 
ஏற்ப்படுகின்றது இதையே மாரி என்றழைக்கின்றோம்..இந்த ஞானத்தை ஈசனிடம் பெற்றதால் எல்லா இடங்களிலும் ஆன்மா ஞான மழை பொழிய ஆன்மா தகுதி 
அடைகின்றது..இதையே மாரி என்றால் மழை 
என்றும் அழைத்தார்கள்..பரசுராமர் கடைசி மகனாக இருப்பது பிறவியின் இறுதியை குறிக்கின்றது..மேலும், அவர் தன் தந்தையிடம் 
சகோதர சாபத்தை நீக்க சொல்வது.. சிருஷ்டியின் இறுதியில் வந்திருக்கும் பரமாத்மாவிடம் தன் ஆன்ம சகோதரர்களுக்கு 
சாபத்தை நீக்கும் சக்தியுடைய சேவை புரிந்த 
நிலையை குறிப்பதாகும்..21 பிறவி நீதி நெறி 
தவறிய மன்னர்களை அழிப்பேன் என்பது கலியுக அதர்மம் அழிந்த பிறகு பூமியில் இறைவனால் படைக்கப்படும் சுவர்க்கத்தில் 21
பிறவிக்கு மகிழ்ச்சியான நீதி.நெறி..நிறைந்த 
வாழ்க்கையை குறிப்பதாகும்..இறுதியில் ராமரிடம் சக்திகளை கொடுப்பது..தனது உடல், 
மனம்,செல்வம் அனைத்தும் கலியுக அதர்மத்தை அழித்து தர்மத்தை படைக்க வந்திருக்கும் ராமன் என்ற ஜோதியான தந்தை சிவபெருமான் ஒருவருக்கே சொந்தம் என்று 
பரசுராமரின் அவதாரம் முக்தியில் சென்று.. ஜீவன்முக்தியில் வந்து நிறைவடைந்தது 

No comments:

Post a Comment