Saturday 4 June 2016

இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்

கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை
கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கற்பூரம் போல் அமைதி. இந்த *அமைதி* என்ற வார்த்தைக்கு ஒரு கதை.

    ஒரு முறை ஒரு இராஜா தன் நாட்டில் உள்ள ஓவியர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார். அதன்படி ஒரு அமைதியான, அந்த படத்தை பார்த்தவுடன், சமாதானம்
    வரத்தக்கதாக, அவர்கள் ஒரு ஓவியத்தை வரைந்து காட்ட வேண்டும். அநேகர் அந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். இறுதி
    யில் இரண்டு ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்
    பட்டது. அதில் ஒரு ஓவியத்தில் அமைதி
    யான ஒரு ஏரி, அதைச் சுற்றிலும் அழகான மரங்கள். அதற்குப் பின்னால் நீலநிற மலைகள், அவை கண்ணாடியைப் போல அந்த ஏரியில் பிரதிபலித்தன. மேலே நீல நிற வானில் தவழ்ந்து செல்லும் மேகங்கள் என மிகவும் அருமையாக, அழகாக அந்த சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. யார் அதை பார்த்தாலும்
    இதற்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று சொல்லும்படியாக இருந்தது.
    மற்ற ஓவியம், இதிலும் மலைகள் இருந்தன. ஆனால், அவை கரடுமுரடாக,
    ஒழுங்காக இல்லாமல் இருந்தது. வானத்திலிருந்து மழை கொட்டிக் கொண்டி
    ருந்தது. மின்னல்கள் வானத்தைக் கிழித்துக்கொண்டிருந்தன. மவையின் நடுவில் ஒரு நீர்வீழ்ச்சி. அதில் நீர் ஆக்ரோஷமாக பாயந்து கொண்டிருந்தது.
    இந்த படத்தில் அமைதி என்று சொல்வதற்கு இடமே இல்லை. அதை ராஜா பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த நீர் வீழ்ச்சியின் பக்கத்தில், *ஒரு பாறையின் இடுக்கில் ஒரு பறவை தன்
    கூட்டைக் கட்டியிருந்தது. அந்த நீர்வீழ்ச்சி
    யின் ஓசைகளுக்கும், பாய்ச்சலுக்கும், நடுவில் அந்த கூட்டைக் கட்டியிருந்த பறவை தன் குஞ்சுகளுடன் அமைதியாக அமர்ந்திருந்தது. இராஜா இரண்டாவது, படத்தையே, முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்
    தார். ஏன் தெரியுமா? அத்தனை இரைச்சல்
    களுக்கும் மத்தியில் அந்த பறவை தன் கூட்டை கட்டி அங்கு அமைதியாக அமர்ந்தி
    ருக்கிறதே அதுவே உண்மையான அமைதி
    யாகும் என முடிவெடுத்து அந்த படத்திற்கே
    இராஜா முதல் பரிசை கொடுத்தார்.

    என்னதான் கடல் கொந்தளிப்பு போன்று வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தாலும்,
    புயலின் மத்தியிலும் ஒரு அமைதி நமக்கு
    பகவான் அளிப்பார் என்ற நம்பிக்கையில்
    நாம் எதைக்குறித்தும் கவலைப்படாமல் இருப்போம். ஈசன் நம் வாழ்வை ஒளி வீசச் செய்வார்.

    ReplyDelete