Tuesday, 12 July 2016

மகாபாரதத்தில், ஐந்து பாண்டவர்களின் வெவ்வேறு தந்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

குரு அரசாட்சியை ஆண்டு வந்து பாண்டு மன்னனின் புதல்வர்களே பாண்டவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருடைய முதல் மனைவியான குந்தி தேவிக்கு பிறந்தவர்களே யுதிஷ்டர், பீமன் மற்றும் அர்ஜுனன். அவருடைய இரண்டாம் மனைவியான மாதுரிக்கு பிறந்த இரட்டையர்களே நகுலனும் சகாதேவனும். ஆனால் இது முழுதான உண்மை கிடையாது. உண்மையிலேயே பாண்டவர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தெய்வீக தந்தை இருந்தனர். அதற்கு காரணம், ஒரு சாபத்தினால் பிள்ளை பெறும் தகுதியை பாண்டு இழந்திருந்தார்.
அதனால் யுதிஷ்டரின் தந்தை எமதர்மன் ஆவார்; பீமனின் தந்தை வாயு தேவன் ஆவார்; அர்ஜுனனின் தந்தை இந்திரன் ஆவார்; இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவனின் தந்தை இறைதன்மையுள்ள அஷ்வினி இரட்டையர்கள். பாண்டவர்கள் எப்படி பிறந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
யுதிஷ்டரின் பிறப்பு
பாண்டுவின் இயலாமைக்கு பிறகு, இயல்பற்ற முறையிலேயே கருவுற்றவன் தான் யுதிஷ்டர். தேவர்களை வழிபட்டு வேண்டி கொள்ளும் சக்தியை தன்னுடைய பாலிய பருவத்தில் குந்தி தேவிக்கு வரமாக அளித்திருந்தார் துர்வாசர் ரிஷி. ஒவ்வொரு தேவரையும் அவர் வழிபட்டு வேண்டும் போதும் ஒரு குழந்தையை அருளி வழங்குவர். அவளின் இந்த வரத்தை பயன்படுத்துமாறு பாண்டு வலியுறுத்தியதால், தீர்ப்பின் கடவுளான எமதர்மனை வழிபட்டு வேண்டி, யுதிஷ்டரை பெற்றெடுத்தார் குந்தி.
பீமனின் பிறப்பு
அவளின் வரத்தை பயன்படுத்துமாறு பாண்டு வலியுறுத்தியதால், காற்றின் கடவுளான வாயு தேவனை வழிபட்டு வேண்டி, பீமனை பெற்றெடுத்தார் குந்தி. மற்ற பாண்டவ சகோதரர்களுடன் சேர்ந்து சமயம், அறிவியல், நிர்வாகம் மற்றும் ராணுவ கலைகளை கிருபாச்சாரியா மற்றும் துரோணாச்சாரியா ஆகியோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டான் பீமன். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தன் கதத்தை பயன்படுத்துவதில் அவன் வலியவனாக திகழ்ந்தான். இந்த காவியம் முழுவதும் பீமனின் பலமாக திகழ்ந்தது அவனின் உடல் பலமே.
அர்ஜுனனின் பிறப்பு
அர்ஜுனன் பிறந்த போது கடவுள்கள் பாடினார்கள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் இந்திரனின் மகன் என இந்த தகவல் சுட்டிக் காட்டுகிறது. சமயம், அறிவியல், நிர்வாகம் மற்றும் ராணுவ கலைகளை குரு மற்றும் துரோணாச்சாரியா (அர்ஜுனனை தன்னுடைய சிறந்த மாணவராக கருதியவர்) ஆகியோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டான் அர்ஜுனன்.
நகுலன் மற்றும் சகாதேவனின் பிறப்பு
அஷ்வின் இரட்டையர்களே நகுலன் மற்றும் சகாதேவனின் தந்தை என கூறப்படுகிறது. சரி, யாரிந்த அஷ்வின்? பலருக்கு இந்த கேள்விக்கு விடை தெரியாது. ரிக் வேதத்தின் படி, கங்கை நதியில் தங்களின் பூர்வீக வீட்டை கொண்டிருந்தனர் அஷ்வின். பீஷ்மரின் தாய் மற்றும் சட்யபதியின் தாயை போல் அவர்கள் கங்கேயா அல்லது மத்ஸ்யாவாக இருக்கலாம். பீஷ்மரின் அதே இரத்தத்தை கொண்டவர்கள் தான் நகுலனும் சகாதேவனும். ரிக் வேதத்தில் வரும் பாடலில் கூறுவதை போல் அஷ்வினுக்கும் கங்கைக்கும், கங்கைக்கும் பரத்வாஜா மற்றும் திவோதாசா தொடர்பு இருப்பதால், நகுலனும் சகாதேவனும் புருவம்சி ரிஷியின் மகன்களாகவும் இருக்கலாம். ஒரு முறை நகுலனை கறுத்த நிறத்துடையான் என திரௌபதி குறிப்பிட்டாள். அதனால் பூமி புத்திர ரிஷியும் கூட அவனின் தந்தையாக இருக்கலாம். உடல் நிறத்தை வைத்து பார்க்கையில், வஹிஷ்டர் கூட அவர்களுக்கு தந்தையாக இருக்கலாம்.
அர்ஜுனனின் சில பெயர்கள்…
அர்ஜுன் – வெள்ளியை போன்ற மங்காத புகழ் மற்றும் பளபளப்பு ஃபல்குனா – ஃபல்குனா நட்சத்திரத்தில் பிறந்தவன் ஜிஷ்ணு – எதிரிகளை வெல்பவன் கிர்டி – இந்திரனால் கொடுக்கப்பட்ட வான கிரீடத்தை அணிந்தவன் ஸ்வேதவாஹணன் – தன் தேரில் வெள்ளை குதிரைகளை பூட்டியவன்
பாண்டுவின் சாபம்
தன் மனைவிமார்கள் உட்பட பெண்களிடம் உடலுறவில் ஈடுபட முற்படும் போது இறந்து போவான் என பாண்டுவிற்கு ஒரு முனிவர் சாபமிட்டார். ஒரு முனிவர் அவர் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மான் என நினைத்து தவறாக அவர்களை கொலை செய்ததால் பாண்டுவிற்கு இந்த சாபம் அளிக்கப்பட்டது.
உடனே சாவான்…
இந்த மிகக் கொடிய செயல் ஒரு மன்னனுக்கு உகந்ததல்ல என்பதால் இறக்கும் தருவாயில் இருந்த அந்த முனிவர் பாண்டு மன்னனை சபித்தார். மிக மோசமான மனிதன் கூட உறவில் ஈடுபட்டிருக்கும் மிருகத்தை கொல்ல மாட்டான் என அந்த முனிவர் கூறினார். எந்த ஒரு காரணமும் இன்றி பாண்டு அவர்களை கொன்றான். அதனால் அவன் பெண்களிடம் உறவு கொல்லும் போது அவன் உடனே மரணிப்பான் என சபித்தார்.

இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள்

1. அசுவினி – கவர்ச்சி மிக்கவர்,காருண்யம் கொண்டவர், கனிவு உடையவர்,
பரிசுத்தமும், பாசமும் நிரம்பியவர், காமவேட்கை மிக்கவர், கடவுள்
பக்தி உடையவர்.
2. பரணி – பரிசுத்தம் அற்றவர், சண்டை, சச்சரவு, வஞ்சகம் மிக்கவர், திரைமறைவில்
தீமை புரிபவர், கொடியவர், குரோதம் புரிபவர்.
3. கிருத்திகை – கொள்கை பிடிப்பற்றவர், அழகும் அங்கலட்சணமும், பண்பும்
பரிசுத்தமும் கொண்டு பெரியோரை மதிப்பவர், அன்பும் ஆதரவும்
கொண்டமக்களால் புரிப்படைவர், தாம்பத்திய ஐக்கியத்தை காப்பவர்.
4. ரோகினி – நேர்மை, உண்மை, கடும் உழைப்பு, அன்பு உடையவர், கணவரோடு
அன்போடும் ஆதரவோடும் பழகுவார், இனிமையாக பேசுவர், தான
தர்மம் செய்வார், மிகுந்த செல்வம் உடையவராக, திகழ்வார்.
5. மிருகசீரிசம் – சுத்தம், சுகாதரமானவர், அழகும், அங்கலட்சணமும், மதிப்பும்,
மரியாதையும், ஆடை, ஆபரண யோகமும் பெற்றவர்,
அருசுவைப்பிரியர் செல்வமுடையவர்.
6. திருவாதிரை – குரோதகுணமும், நயவஞ்சகமும், ஆத்திரமும், பகைவரை
அழிக்கவல்ல வல்லமையும், குற்றம் புரிபவரும் தூய்மை
அற்றவரும் ஆவார்.
7. புனர்பூசம் – பண்பும், பரிசுத்தமும், அடக்கமும், தரும சிந்தனையும், செல்வாக்கும்,
கருணை மற்றும் காருண்யம் மிக்கவர்.
8. பூசம் – சுகபோக சுவையாளர், வீடு, நிலம், வாகனம் வளம் படைத்தவர்.
9. ஆயில்யம் – அலுத்து ஆர்ப்பரிக்கும், சுகாதாரமற்ற, ஆபாச வார்த்தைகளை
பிரயோகிக்கும், செய்யத்தகாத செயலை புரியும் விசுவாசம் அற்ற
மாதர்.
10. மகம் – ராஜயோகம், சுகபோகமும், தீயவர் தொடர்புடைய, உயர் வர்க்கத்திற்கு
மண்டியிடுபவர்.
11. பூரம் – சந்தோஷ, சல்லாபம் மிக்க, மக்கட்பேரால் பூரிப்படையும், செல்வமும்
,செல்வாக்கும் படைத்த, நீதி நெறியுடன் வாழும் பண்பும் பரிசுத்தமும்
காப்பவர்.
12. உத்திரம் – சரச சல்லாப பிரியர், மக்கப்பேறும், செல்வாக்கும் உடையவர்,
குடும்பத்தை பாதுகாப்பவர், உத்திரமாய் வாழ நினைப்பவர்.
13. அஸ்தம் – வனப்பும், வசீகரமும், அழகும், அங்கலட்சணமும் பொருந்திய,
நுண்கலையில் வல்ல சுகபோகி.
14. சித்திரை – அணியும், ஆபரணமும், வனப்பும், வசீகரமும், அழகும் பொருந்திய
சிறந்த மனிதர்.
15. சுவாதி – எதிர்ப்பை வெல்லுகிற, நல்லோர் இணக்கத்தால் நன்மை பெறும், பண்பும்
பரிசுத்தமும் மிக்க சுகபோகி, மக்கப்பேரால் பூரிப்படைவர்.
16. விசாகம் – சாஸ்திர சம்பிரதாயங்களோடு குலதர்மத்தைக்காப்பவர், அறிவாற்றல்,
பெச்சுத்திரன்மிக்க அழகும் அங்கலட்சணமும் பெற்றவர்,
தீர்த்தயாத்திரை பிரியர், கடவுள் சேவை செய்பவர்.
17. அனுஷம் – கணவனுக்கு ஏற்ற பதிவிரதை, தியாக குணமும், வனப்பும், வசீகரமும்,
பண்பும் பரிசுத்தமும், பாராளும் பாக்கியமும் பெற்றவர், பொது
நலசேவைவாதி, ஆடை, அணி, அலங்காரப்பொருள் மிக்கவர்,
மதக்கோட்பாடுகளை மதிப்பவர்.
18. கேட்டை – சத்திய நெறி காப்பவர், சகல சுக போகி, கணிவும், காருண்யமும்,
பண்பும் பாசமும் மிக்கவர், சுற்றம் விரும்பி.
19. மூலம் – கொடுமை நிறைந்தவர், வெறுப்பும் விகல்பமும் மிக்கவர், ஏழையால்
ஏங்கி, நலிவு உறுபவர், உறவைப் பகைப்பவர்.
20. பூராடம் – அழகும், ஆற்றலும், அங்கலட்சணமும், பண்பும், பரிசுத்தமும் உடையவர்,
நற்செயல் புரிபவர், குடும்பத்தில் சிறந்தவர், நேசம் உடையவர்கள்,
தானம் செய்பவர்கள், சுக துக்கம் எதுவானாலும் மனமுவந்து
அனுபவிப்பவர்கள்.
21. உத்திராடம் – பெறும், புகழும் பெருவாழ்வும், கனிவும், காருண்யமும் மிக்கவர்,
சந்தோஷ சல்லாபி, கணவனுக்கு ஏற்ற பதிவிரதை.
22. திருவோணம் – அழகு , அங்கலட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்திய,
தயாளகுணம், தார்மீக சிந்தனை, நம்பிக்கையும் நாணயமும்,
தியாகமும் மிக்கவர்.
23. அவிட்டம் – வீடு, நில வாகன லாபம், பெருந்தன்மை படைத்தவர், ஆடை, அணி,
ஆபரண, அறுசுவை பாக்கியம் பெற்றவர்.
24. சதயம் – நியாமமும், நீதியும், நேர்மையும், நேசமும் மிக்கவர், காமகுரோதங்களை
அடக்குபவர், மூத்தோரை மதிப்பவர்.
25. பூரட்டாதி – சமுதாய உயர் அந்தஸ்து உடைய பொன் பொருள் போகம் மிக்க,
தார்மீக சிந்தனையும், தரும குணமும் படைத்தவர், அறிவு ஆற்றல்
மிக்க அருளாளர்.
26. உத்திரட்டாதி – மாண்புமிக்க, பாசமுடைய பதிவிரதை, குலதர்மம் காக்கும் அறிவு
ஆற்றல் படைத்த சந்தோஷ சல்லாபி.
27. ரேவதி – சாஸ்திர, சமூகம், சம்பிரதாயம் மதிப்பவர், உயர் லட்சியம் உடைய
நேசபாசம் காப்பவர், அழகு, அங்க லட்சணம், வனப்பு, வசீகரம்
பொருந்தியவர், எதிரியை வெல்பவர், வாகன வளம் உடையவர்.

13 வகையான சாபங்கள் எவை தெரியுமா?

1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம்,  4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம்,  6) கோ சாபம்,  7) பூமி சாபம்,  8) கங்கா சாபம்,  9) விருட்ச சாபம்,  10) தேவ சாபம்  11) ரிஷி சாபம்  12) முனி சாபம்,  13) குலதெய்வ சாபம்
1) பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.  பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2) பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.  பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3) பிரம்ம சாபம்: நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,  இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.  பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
4) சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,  சர்ப்ப சாபம்  உண்டாகும்.  இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்: 
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.  பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
6) கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.  இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7) பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.  பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
8) கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.  கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9) விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.  விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10) தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
11) ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12) முனி சாபம்: எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.  முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13) குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.  குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.  ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.  ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல்  அழித்து விடும்.

கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது.
ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
 
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.
மேலும், கோயிலில் வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள்!

ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒருசிலர் மத்தியில் வேறுப்பட்டு கூட போகலாம். இதன் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு ராசிகளின் குணாதிசயங்கள் ஒன்றாக சேரும் போது அங்கு நன்மை, தீமை இரண்டும் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏறத்தாழ இது கணிதத்தை போல தான். ஒருசில தியரிகள் பொருந்தும், ஒருசில தியரிகள் பொருந்தாது. இந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஒருசில ராசிகள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பார்கள். இதில் இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள் எவையென இனிப் பார்க்கலாம்…
சிம்மம், கன்னி
இவர்களுக்கு மத்தியில் கவர்ச்சியின் பாலான ஈர்ப்பு தான் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் இவர்களது இல்லறம் மகிழ்ச்சியாக கழிந்தாலும் போக, போக சிம்மத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் உறவில் மனவுளைச்சல் அதிகரித்து பிரிந்துவிட நினைப்பார்கள்.
மேஷம், விருச்சிகம்
இருவருமே பலமிக்கவர்கள், கட்டுப்பாடுடன் இருக்கக் கூடியவர்கள், தலைமை வகிக்க விரும்புவார்கள். விருச்சிகம் பொதுவாகவே சற்று பொறாமைப்படும், மேஷம் ஏமாற்றும் குணம் கொண்டிருக்கும். இவர்களுக்குள் விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாவிட்டால் உறவில் விரிசல் அதிகரிக்கும்.
ரிஷபம், கும்பம்
இந்த இரண்டு ராசிகளுமே சுத்தமாக பொருந்தாதவை என கூறப்படுகிறது. ரிஷபம் காதல், அன்பு, அழகு, பொறுமை பண்புகள் கொண்டிருக்கும். கும்பம் எதிர்பாராத விஷயங்களை செய்யும் பண்பு கொண்டது. ரிஷபம் விட்டுக்கொடுத்து வந்தாலும் கும்பம் ஏற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்காது.
மிதுனம், கடகம்
இவர்கள் மிகவும் சாந்தமான வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்கள். இருவருக்குமே நகைச்சுவை குணம் அதிகமாக இருக்கும். மிதுனம் பொறுமையாக இருக்க வேண்டும், பாதுகாப்பளிக்க வேண்டும். கடகம் பதிலுக்கு காதலை மிகுதியாக அளித்தால் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது.
தனுசு, மகரம்
இவர்களுக்குள் தாம்பத்தியம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கும். இல்லறம் பற்றிய திட்டமிடுதலில் குழப்பங்கள் ஏற்படும். இந்த இரண்டையும் இவர்கள் சரி செய்துக் கொண்டால் இல்லறம் சிறக்கும்.
கன்னி, மிதுனம்
இந்த இராசிகளுக்குள் பணம் ஓர் பெரிய பிரச்சனையாக இருக்கும். மிதுனம் காதலை மட்டும் போதுமானது என முனையும். ஆனால், கன்னி நாளைக்கான சேமிப்பு அவசியம் என கருதும் குணம் கொண்டிருக்கும். இந்த காரணத்தினாலேயே உறவில் விரிசல் உண்டாகும்.
மீனம் மற்றும் சிம்மம்
ஆரம்பத்தில் இந்த ஜோடி மிகவும் காதலுடன் கொஞ்சிக் குலாவிக் கொள்ளும். ஆனால், நாள்ப்பட இவர்களது உறவில் மோகம் குறையும் போது பிரிவு அதிகரிக்க ஆரம்பிக்கும். சிம்மத்தின் பேரார்வத்தை மீனம் கண்டுக் கொள்ளாமல் போகும் தான் பிரச்சனை அதிகரிக்கும்.
மிதுனம், விருச்சிகம்
இருவருமே வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் மனம் விட்டு பேச நேரத்தை ஒதுக்காமல் இருக்கும் வரை உறவில் ஓர் பற்று இருக்காது. இதனால், இவர்கள் மத்தியிலான இடைவேளையும், மன வருத்தம் தான் அதிகரிக்கும்.
கும்பம், கடகம்
கும்பம் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை கடகம் தந்து தான் ஆகவேண்டும். இருவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். ஆனால், இவர்கள் மத்தியில் எழும் நம்பகத்தன்மை குறைபாடு தான் இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும்.
துலாம், மீனம்
இருவருக்குள் உண்டாகும் பிரச்சனையை கையாள தெரியாமல் பெரிதாக்கிவிடுவார்கள். இதுவே இவர்களது உறவை பாழாக்கிவிடும்.
சிம்மம், ரிஷபம்
இவர்கள் இருவரும் மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும். உடலளவில், மனதளவில் ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரியான நிலையை எதிர்பார்பார்கள். தங்கள் மீதே அதிக பெருமிதம் கொள்வார்கள், மற்றவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். இது மனதில் காயங்கள் ஏற்படுத்தும், நாள்பட உறவில் விரிசலை அதிகரிக்கும்.
மேஷம், கடகம்
இவர்கள் இருவரும் சிறந்த ஜோடியாக திகழ முடியும். உணர்ச்சி ரீதியாக இருவருமே சிறந்து விளங்கக் கூடியவர்கள். ஆனால், மேஷம் உலகம் சுற்ற விரும்பும், வெளியிடங்களுக்கு சென்று வர அலைபாயும். ஆனால், கடகம் வீட்டினுள்ளே சமைத்து சாப்பிட்டுவிட்டு உறங்க யோசிக்கும். சரியான அக்கறையின்மை, புரிதல் இல்லாமல் இருப்பது இவர்களது உறவில் விரிசலை அதிகப்படுத்தும்

12 ராசிக்காரர்களின் பலம் மற்றும் பலவீனம்

மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பது அவனது அல்லது அவளது குணமாக இருக்காது. முதலில் இருந்தே அனைத்தையும் பொறுப்பில் எடுத்து, தலைமை வகிக்க விரும்புவார்கள். இந்த அணுகுமுறை அவர்களை தைரியமுள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றும். அதனால் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை. புதுமை விரும்பியாக இருக்க விரும்பும் இவர்கள், அவர்கள் செய்யும் எதிலும் முதல் ஆளாக இருக்கவும் விரும்புவார்கள். நம்பிக்கை மிகுந்த குணம் உடையவர்கள் இவர்கள்.
ரிஷபம் :
அடக்கமானவர்களான ரிஷப ராசிக்காரர்கள் நம்பகத்தன்மையுள்ளவராக, திடமானவர்களாக, பொறுப்புடையவர்களாக, கடின உழைப்பாளியாக, உறுதியுள்ளவராக, பொறுமைசாலியாக மற்றும் உயர்ப்பண்புடையவராக இருப்பார்கள். காளையால் உருவமைப்படுத்தப்பட்டுள்ள ரிஷப ராசிக்கார்கள் அருமையான நண்பர்கள், காதலர்கள் மற்றும் உடல் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டிருப்பார்கள். ஆழமாக காலூன்றியவர்கள் என்பதால் இவர்கள் வாழ்க்கையை நடைமுறைக்குரிய யதார்த்தத்துடன் பார்ப்பார்கள். சிறந்த அறிவுரைகளை வழங்கும் இவர்கள் மற்றவர்கள் கூறுவதை எப்போதும் பொறுமையாக கேட்பார்கள். அதேப்போல் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு வந்து நிற்பார்கள். மற்றவர்களை எப்போதும் கைவிட மாட்டார்கள்.
மிதுனம் :
ராசிகளுக்கு மத்தியில் தூதராக செயல்படுவது மிதுன ராசி. அந்த குணத்திற்கு ஏற்ப தொடர்பாற்றல் என்றால் இவர்கள் மிகவும் விரும்புவார்கள். வார்த்தைகளை பயன்படுத்துவதில் அவர்களுக்கென ஒரு வழி இருக்கும். அதேப்போல் முக்கியமான விஷயங்களை எப்போதும் பெறுவார்கள். கூடுதலாக, நகைச்சுவை உணர்வுடன், ஆற்றல் திறன் மிக்கவராக, வாழ்க்கையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பார்கள். அதேப்போல் பெற்ற அறிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். புதிய ஆட்களை சந்திக்க அவர்கள் விரும்புவதால், இணங்கத்தக்க வகையில் இருப்பார்கள் அவர்கள். அனைவருடன் சுலபமாக பழகவும் செய்வார்கள்.
கடகம் :
கடக ராசிக்காரர்கள் தங்கள் மனதை கொண்டு யோசிப்பார்கள். அதனால் அவர்கள் விசுவாசமுள்ளவர்களாக, பாதுகாப்பளிப்பவர்களாக, அக்கறையுள்ளவர்களாக, வரவேற்கும் பண்புடையவர்களாக மற்றும் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடியவர்களாக இருப்பார்கள். உங்கள் பக்கம் கடக ராசி நண்பர் பக்கபலமாக இருந்தால், நீங்கள் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை. நீங்கள் சொகுசுடன் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள். இயற்கையாகவே ஊட்டமளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் கையில் எடுக்கும் எந்த ஒரு செயல் திட்டத்திற்கும் கடின உழைப்பையும், முயற்சியையும் போடுவார்கள். மேலும் தங்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதில் இருந்து அவர்கள் பின் வாங்க மாட்டார்கள்.
சிம்மம் :
காட்டின் ராஜாவான இவர்கள் மனதளவில் மென்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால் நம்பிக்கை, லட்சியம், நற்பண்பு, விசுவாசம் மற்றும் ஊக்குவிக்கும் பண்பு என சிலவற்றை சொல்லலாம். தங்கள் நண்பர்களுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை காப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் காரியத்தை சிறப்பாக செய்ய அனைவரையும் ஊக்கப்படுத்துவார்கள். ஆதரவளிக்கும் குணத்தை கொண்ட இவர்கள் இயற்கையாகவே புதிரானவர்கள்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்கள் முடிவெடுக்க முடியாதவர்கள் என்பதால் பல நேரங்களில் அவர்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றனர். ஆனால் பிரகாசமான பக்கத்தை பார்க்கும் போது, குறிப்பிட்ட சில விஷயத்தைப் பற்றி அவர்கள் சமாதானமாகாத உண்மையை வெளிக்காட்டுகிறது. பகுப்பாய்வுடன் இருக்கும் இவர்கள், ஒரு விஷயத்தின் ஆணி வேர் வரை செல்வார்கள். அவர்களின் கூர்நோக்குகள் மிக ஆழமாக இருப்பதால், அவர்கள் எப்போதுமே நம்பகமான தகவலையே அளிப்பார்கள்.
துலாம் :
அமைதியை விரும்பும் துலாம் ராசிக்காரர்கள், அனைவரும் சௌகரியமாக, நன்றாக ஒத்துப்போகிறார்களாக என்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள். அனைவரும் ஒன்றாக மகிழ்ந்திட வேண்டும் என விரும்பும் இவர்கள், அதற்காக உபசரணையுள்ள சூழ்நிலையை உருவாக்குவார்கள். இயற்கையாகவே இராஜதந்திரத்துடன் இருக்கும் இவர்கள், எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி, சுலபமாக ஒன்றி, நண்பர்களைப் பெற்று விடுவார்கள். உயர்ந்த கொள்கைகள், வாழ்க்கையில் லேசான விஷயங்களுக்கு கூட சிறந்த சுவையைக் கொண்டிருக்கும் இவர்கள் வசீகரமானவர்கள். அனைவரையும் கனிவுடன் வரவேற்பார்கள். கனிவுடன் நற்பண்புகளை கொண்டவர்கள் இவர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்கள் கூர்ந்து நோக்கக்கூடியவர்கள். மேலும் ஒருவரைப் புகழ்ந்து, மோசம் செய்து தகவலை பெறக்கூடிய வல்லமையை கொண்டவர்கள். ஆழமான உள்ளுணர்வுடன், எந்த ஒரு விளக்கமும் இன்றி, ஒரு சூழ்நிலை அல்லது பிரச்சனையை அவர்கள் சுலபமாக புரிந்து கொள்வார்கள். சமயோஜித புத்தியுள்ள இவர்கள் தங்கள் வேலையை எப்படியும் வாங்கி விடுவார்கள். கூர்ந்து கவனிப்பதால் அடுத்தவர்களை சரியாக மதிப்பிடுவார்கள். விசுவாசமான நண்பர்கள் மற்றும் சிறந்த காதலர்களை இவர்கள் பெறுவார்கள்.
தனுசு :
மிகுந்த நம்பிக்கை மிகுந்தவர்களான தனுசு ராசிக்காரர்கள், எப்போதுமே புதிய துணிகரமான செயல்களைத் தேடி செல்வார்கள். தங்களின் சுதந்திரம் மற்றும் சார்பற்ற தன்மையை அவர்கள் மதிப்பார்கள். அதேப்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இடம் தேவை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களின் நம்பிக்கை குணம், புதிய அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடச் செய்யும். இவர்களின் படைப்பாற்றல் பக்கம் தொற்று தன்மை மிக்கவை.
மகரம் :
கடின உழைப்பாளியான மகர ராசிக்காரர்கள், தங்களின் வேலை மண்டலத்தில் வைராக்கியம் மிக்கவர்களாகவும், தலைமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் செய்வதை திறம்பட செய்யும் அவர்கள், தோல்விகளுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள பயப்பட மாட்டார்கள். ஒரு பிரச்சனைக்கு பொறுப்பெடுத்து அதனை தீர்க்க முற்படுவார்கள். விடை கிடைக்கும் வரை இவர்களுக்கு ஓய்வு கிடையாது. இலட்சியவாதிகளாக இருந்தாலும் கூட பொறுமைசாலிகள் இவர்கள். தொழில் ரீதியான மைல்கற்களை தொழில் ரீதியான வழியிலேயே அடைவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள், இயற்கையாகவே சமயோஜித மற்றும் நடைமுறை புத்தியுள்ளவர்கள்.
கும்பம் :
பல்வேறு விஷயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு மகிழ்வதை விரும்புவார்கள் கும்ப ராசிக்காரர்கள். நீங்கள் ஏதேனும் புதிதாக பரிந்துரைத்தால், அதனை உடனடியாக எடுத்துக் கொள்வார்கள். நகைச்சுவை உணர்வு மற்றும் தகவமைப்பு பண்புடையவர்கள் இவர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை இவர்கள் வெறுப்பார்கள். அதை தான் இவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடமும் எதிர்ப்பார்ப்பார்கள். வாழ்க்கையை புத்திசாலித்தனமாக அணுகும் இவர்கள் இம்மைக்குரிய விஷயங்களை புதுமையுடன் அணுகுவார்கள்.
மீனம் :
மீன ராசிக்காரர்கள் அதிக உணர்சியுடையவர்கள். தங்களைச் சுற்றியுள்ள சந்தோஷம் மற்றும் சோகத்தை வைத்தே அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளை அனுதாபத்தோடு பார்ப்பார்கள். இவர்களின் நண்பர்கள் சோகமாக இருந்தால், இவர்களும் சோகமாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இரக்க குணமுள்ளவர்கள் இவர்கள். தாங்கள் விரும்பும் காரணம் மற்றும் நபர்களுக்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இவர்களின் கற்பனை உயர பறக்கும். அதனால் புத்திசாலித்தனமான விளைவுகளையும் அளிக்கும். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ப இவர்கள் நடப்பதால், அனைவரிடமும் சுலபமாக பழகுவார்கள்.

வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா?

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா?
அதற்கான விடை தான் இந்த கட்டுரை. நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை. அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது.
முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட. கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.
காரணம் #1
ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.
காரணம் #2
ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காரணம் #3
மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.
காரணம் #4
மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது. ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.
காரணம் #5
ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள். இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்
காரணம் #6
சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில். இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.
காரணம் #7
மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர். அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை. எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்.

ஓர் ஆணை, அவனை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யச் சொல்வதன் இரகசியம்

ஆணோ பெண்ணோ பருவம் அடைந்து விட்டாலும், ஆணுக்கு 23-ம் பெண்ணுக்கும் 18-ம் என, அரசாங்கம் நினைத்த‍ வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள‍லாம். தன்னைவிட வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம்செய்ய வேண்டும் என்று சட்டம் ஏதும் இல் லை.
ஆனால், அதன் சாதகபாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு, பின்னர் கவலைப்படக் கூடாது.
பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாத விடாய் நிற்கும் வரைதான். அதன் பின்னர், அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது.
ஆனால், ஆண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனை இல்லாத்தால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் எழுபது எண்பது வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும்.
25 வயது வாலிபன், 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப்பெண்ணை திருமணம் செய்தால் அப்பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடும் போது, அந்த ஆணுக்கு 45 அல்லது நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும். பெண்ணால் தாம்பத்தியசுகம் கொடுக்க முடியாததால், இவன் தவறான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்.
தேவை ஏற்பட்டால் கணவன் இன்னொரு திருமணம் செய்வதை அனுமதிக்கும் பெண்கள் அரபு நாடுகளில் உள்ளனர். ஆனால், இந்தியாவில் தன்னால் கணவனுக்கு சுகம் கொடுக்க முடியா விட்டாலும் அவன் இன்னொரு திருமணம் செய்வதை பெண்கள் ஒப்புக்கொள்வதில்லை.
இதனால், அவளை விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும். அல்லது கள்ளத்தனமான உறவுகள் மூலம் சுகம் அனுபவிக்கும் நிலை ஏற்படும். இதைப் பற்றியும் ஆலோசித்துக் கொண்டு மூத்த வயதுப்பெண்ணைத் திருமணம் செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.
இதைக்கவனத்தில் கொண்டுதான், ஆணைவிட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக இருக்கும் வகையில் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது.
பெண்கள் 15 முதல் 18 வயதுக்கு உள்ளேயும், ஆண்கள் 20 முதல் 25 வயதுக்கு உள்ளேயும் திருமணம் செய்தால் இருவருக்கும் சமகாலத்தில் தாம்பத்திய ஆசை குறைவதால் பிரச்சணைகள் வராமல் இருக்கும்.
மேலும், தள்ளாத வயதை அடைந்து விட்ட பெண்களுக்கு துணையாக கணவன் இல்லா விட்டாலும் பெண்களை, மற்ற பெண்கள் நல்லபடி கவனித்துக் கொள்வார்கள்.
ஆனால், மனைவியை இழந்த கணவன் தள்ளாத வயதை விட்டால் அவனை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஏனெனில், பெண்களிடம் தான் கவனித்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே உள்ள து. படுக்கையில் மல ஜலம் கழிக்கும் முதிய வயது ஆணை எந்த ஆணும் கவனிக்க மாட்டார்கள். பெண்களாலும் கவனிக்க இயலாமல் போகும். ஆனால், பெண்களின் நிலை இவ்வாறு இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எப்படியும் கவனித்துக் கொள்வார்கள்.
மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், முதுமை அடைந்து மரணிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில், வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், தள்ளாத வயதில் அவன் தனித்துவிடப்படும் நிலை ஏற்படும்.
ஆனால் தன்னைவிட குறைந்த வயதுப்பெண்ணைத் திருமணம் செய்தால் மனைவிக்கு முன்னர் கணவன் மரணிக்கும் வாய்ப்புகள் அதிகம். மனைவியின் கவனிப்பு இருக்கும் போது மரணிக்கும் வாய்ப்பு இருக்கும்.
இதுபோன்ற சாதக பாதகங்களையும் கவனத்தில்கொண்டு முடிவுசெய்வது நல்லது.

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.
2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.
3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே, வெற்றிலை போடும் முறை

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்

நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.
இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர், இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும், அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காது, அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள்.
ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இறந்தால், இறந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும், காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.
ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின் அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும், இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல் படுவான் அப்படிப்பட்டன் படும் வேதனையின் தாக்கம் மிகுந்த வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாக தாக்கும்.
பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம்.
தான் செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாக்கும் செயலையும், லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.
குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள்.
சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.
பசுக்களை போஷிக்க முடியாமற் போகும்.
நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து நல்ல நட்புகள் ஏற்டாமல் போகும்.
ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போகும்,
தந்தை தாயாரை இகல்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள் நடைபெறும்.
பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.
இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.
அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும்.
பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போகும்,
புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.
மேற்கண்ட கெடுதல் தரக்கூடிய செயல் உங்களுக்கு (உங்கள் இல்லத்தில்) அதிகம் நடைபெறுகிறதா, இவை எல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனால் ஏற்பட்ட விளைவுகளால் தான் என்பதை கருடப் புராணம் கூறுகிறது.
இதுபோன்ற பிரச்சனை தீரவேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள், பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருகளை திருப்தி படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம்.