Saturday, 10 December 2016

அரிசி மாவின் மகத்துவம்!

அரிசி மாவின் மகத்துவம்! பண்ணிய ஏழு தலைமுறை பாவங்களை தீர்க்கும் அதிசயம்!!
எந்த தலைமுறையில் செய்த பாவம் என்றாலும் அது விடாமல் நம்மை திரும்ப தாக்கும் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது. அப்படி தெரிந்து, தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும் அதிசயம் அரிசி மாவில் இருப்பதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு பிடி கையில் அள்ளி, நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் விநாயகரை மூன்று சுற்று சுற்றி, பச்சரிசி மாவினை விநாயகரை சுற்றி போடவேண்டும். அந்த அரிசி மாவினை எறும்புகள் தூக்கிச்சென்று, மழைக்காலத்தில் சாப்பிடுவதற்காக சேமித்து வைத்துக்கொள்கின்றன.
எறும்பின் எச்சில் பட்டதும் அரிசியின் கெடும் தன்மை நீங்கிவிடும். அரிசியை சாப்பிட எறும்புகள் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்பதால், அது வரை அந்த அரிசி கெடாமல் இருக்கும். இப்படி எறும்புகள் சாப்பிடுவதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும் என்பதால் இப்படி அடிக்கடி எறும்புகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மை அண்டாது எனக்கூறப்படுகிறது

No comments:

Post a Comment