Saturday, 10 December 2016

நடராஜர் உருவத்தை வீட்டில் வைக்கலாமா?

நடராஜர் உருவத்தை வீட்டில் வைக்கலாமா?
நடராஜரின் நடனம் உலக இயக்கத்திற்காகத்தான் என்று கூறுவார்கள். அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ, படமோ இருக்கும். ஆனால் ‘தாண்டவ நிருத்ய’ எனப்படும் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
எனவே ஒரு காலை தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் உருவத்தை வீட்டிற்கு வைப்பது நல்லதல்ல என்கின்றனர். சிலர் தங்கள் வீட்டில் மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள்.
இது போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியை குறிக்கும் படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

No comments:

Post a Comment