Saturday, 10 December 2016

சிவபுராணம் கூறும் வில்வ மகிமை

சிவபுராணம் கூறும் வில்வ மகிமை
வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.
அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.

1 comment:

  1. சிவபுராணம்: மாணிக்க வாசகர் திருவாசகம்.
    காலையிலும், மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்தால் மனக்கவலைகள் நீங்கி ஈசன் அருளால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமமாகி நின்றண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க.
    என காலையிலும், மாலையிலும் கடமைக்காகச் சொல்லாமல், பக்தியுடன் சொன்னால், எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    சிவபெருமானை விழுந்து, விழுந்து தரிசித்ததினால், கிடைத்த அனுபவம்ங்கோ.

    ReplyDelete