Saturday, 10 December 2016

ஆஞ்சநேயர் வழிபாடு

🌟 *ஆஞ்சநேயர் வழிபாடு:*🌿🎋🌿
🌿🌺 ஓ🌿🌺
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான். 🌿🌟
✦ வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். 🌿🎋
✦ அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும். 🌿🌟
✦ தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம். 🌿
✦ அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும். 🌿🎋
✦ அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம். 🌿🌿
✦ அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். 🌿🌟
✦ அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.🌟🌿
✦ திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும்.🌟🌿
✦ துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.🌿🌟🌿 🌿ஷங்கர்குரு🌿

2 comments:

  1. ஶ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ...என்பது தாரக மந்திரம்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete