Saturday, 10 December 2016

உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்த்து கொள்ள ஒரு சுலபமான ஆன்மீக வழிமுறை

உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்த்து கொள்ள ஒரு சுலபமான ஆன்மீக வழிமுறை:
நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.
இனிமேல் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள்வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பதை கீழ்கண்ட பயிற்சியின் மூலம் நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு சனிக்கிழமையன்று ,குளித்து சுத்த மனதுடன் நூறு ஆண்டு ஆன வேப்பமரம் இருக்கும் இடம் செல்ல வேண்டும்.
வேப்ப மரத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுகொண்டு அதில் ஏறி கையினால் பெருவிரல் தடிமனாக உள்ள ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து எடுக்க வேண்டும்.
இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒடித்து எடுத்த குச்சி வளையாமல் கோணாமல் நேராக இருக்கும்படியானதாக இருக்க வேண்டும்.குச்சியின் நீளம் இரண்டு சாண் அளவு இருக்கவேண்டும்.
அந்த குச்சியை வீட்டிற்குக் கொண்டு வந்து இருபக்கமும் உள்ள பிசிறுகளை கல்லில் தேய்த்து வழுவழுப்பாக்கிக் கொள்ளவும்.பின் அதன்மேல் நயம் சந்தனம் பூசி காய வைத்து விடவும்.இப்போதுதெய்வீக
வேப்பங்குச்சி தயார்.
இதை மற்றவர்களுக்காகவும் நீங்கள் தயாரிக்கலாம்.
ஒரு அமாவாசை தினத்தில் மேற்படி குச்சியை எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.
படுக்கை விரித்துஅதில் சிறிய தலையணைமேல் ஒரு புது சிவப்புநிற டர்க்கிடவல் விரிக்கவும்.
அதன்மேல் மேற்படி குச்சியை வைக்கவும்.அதன்மேல் ஒரு சிவப்புத்துணி விரித்து குச்சியை மூட வேண்டும்.
இரவு 9 மணிக்குமேல் மூடிய குச்சிமேல் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
வடக்கே நோக்கி தலைவைத்துப் படுக்க வேண்டும். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஆதிபராசக்தியே நமஹ” என மனதால் ஜபித்துக் கொண்டே தூங்கிவிட வேண்டும்.
15 நாட்கள்தினமும் செய்ய சிறு நட்சத்திரங்கள் தோன்றும்.பின் அவை மறைந்து 30 நாட்களுக்குப்பின் ஒரு பிரகாசமான நட்சத்திரம் மட்டும் தோன்றும்.45 நாட்களுக்குப்பின் முழுநிலவு தோன்றும்.
60 நாட்களுக்குப்பின் உங்களது வருங்காலம் திரைப்படம்போல் தோன்றும்.
90 தினங்களுக்குள் இந்த பயிற்சி மூலம் தங்கள் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை உணர்ந்து கொள்ளமுடியும். வெற்றி உறுதி!!!
பின்பு தங்கள் புத்தியை உபயோகப்படுத்தி பல விதங்களில் தங்கள் எதிர்காலத்தை விருத்தி செய்து கொள்ளலாம்.

1 comment: