வெள்ளெருக்கு விநாயகர்
வெள்ளெருக்கு எருக்கஞ்ச்செடிகள்குடும்பத்தைச்சேர்ந்தது. நீல எருக்கு, ராம
எருக்கு என ஒன்பது வகை எருக்கு இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
எருக்கன் செடி 12 வருட காலம் மழை இல்லாவிட்டாலும், அதன் பருவ
காலங்களில் பூத்து, காய்த்து, வளர்ந்து வரும் இது சூரியனுடைய மூலிகை
சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை இது நுட்பமாக கிரகித்து வளரக்கூடியது .
இந்த விசேஷ அம்சம் உடையதுதான் வெள்ளெருக்கு.இந்த வெள்ளெருக்கு
செடியின் இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. தான்
நினைக்கும் போது இறக்கும் பாக்கியம் கிடைத்தும்கூட துரியோதனனின்
பாவசெயலை தடுக்க திராணியின்றி மவுனம் சாதித்த நிலையால் வரம்
சாபமாகிறது.அதிலிருந்து விடுபட தன் தந்தையை அழைத்து தன்னை எரிக்க
சூரியனை கொண்டு பிழிய சொல்கிறார். அது முடியாது வேண்டுமானால்
சூரியனின் ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த
எருக்கஞ்ச்செடி இலையை கொண்டு தகிக்கலாம் என்று வழி கூறுகிறார்.
அத்தனை சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி.
இதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும்
சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க
பயன்படுகிறது. வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு
திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு
வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம்.
ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும்
பண வரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. சைவ
உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக
நிலை விளக்கம்தான்.
வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை
தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண
கணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம்
ஆகர்ஷணம் ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில்
விற்பனை செய்கின்றார்கள். வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில்
விநாயகர் செய்துவிற்கின்றாகள்.
அதனால்அது விரைவில்உளுத்துப்போய்உதிர்ந்துவிடுகின்றது.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும்
வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை
உணரலாம்.
வெள்ளெருக்கு தலைப்புக்கு, இதோ படியுங்கள்.
ReplyDeleteவெள்ளெருக்கு. நல்வழியில் ஒளவையார் பாடிய 23−ஆம் பாடல்.
Portrayal: வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே−மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை.
Substance : நீதிமன்றத்தில் ஒருதலை பட்சமாக நீதி வழங்கியவர் வீட்டில் பேய் அடையும், வெள்ளை எருக்கு மலரும், பாதாளமூலிக் கொடிபடரும். மூதேவி குடிபுகுவாள், பாம்பு குடிபுகும். என்பதே.