Saturday, 10 December 2016

வருண முத்திரை

வருண முத்திரையுடன் வருணமந்திரம் ஜெபித்து மழையை வரவழைக்கும் ரகசியம்:
பருவ மழை பொய்த்து, விஞ்ஞான கணிப்புகள் தவறாகி,மழை மேகம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்படாத காலத்தில் மழையை வரவழைக்க
வருண முத்திரையை பிடித்து மேற்கு நோக்கி அமர்ந்து வருண மந்திர ஜெபத்தை நேரம் கிடைக்கும்போது அனைவரும் செய்து வந்தால் கட்டாயம் மழை பெய்யும் என்கிறது சாஸ்திரம்.
நம் பிரார்த்தனைக்கு சக்தி கூடினால் ஒரு வாரத்தில் வானிலையில் மாற்றம்தெரியும்.
தினமும் வீட்டில் இதை எல்லாரும் சொல்லுங்கள்.
வருண ஜெப மந்திரங்கள் (மழை ஜெப மந்திரங்கள்):
"ஓம் ஜல பிம்பாய வித்மஹே
நில புருஷாய தீமஹி
தந்நோஹ் வருண ப்ரசோதயாத் "
ஓம் வம் வருண தேவாய நமஹ
ஓம் யம் வாயு தேவாய நம
ஓம் ஹம் ஆகாஷ் தேவாய நம
ஓம் ரீங் வாயு தேவாய ஆகர்ஷயஆகர்ஷயக்குரு க்குரு ஸ்வாஹா
ஓம் ரீங் வருண தேவாய ஆகர்ஷயஆகர்ஷயக்குரு க்குரு ஸ்வாஹா
ஓம் ரீங் இந்திர தேவாய ஆகர்ஷயஆகர்ஷயக்குரு க்குரு ஸ்வாஹா
ஓம் ரீங் மேகான் ஆகர்ஷய ஆகர்ஷயக்குரு க்குரு ஸ்வாஹா
"சந்திர பிரபம் பங்கஜி ஸந்நிவிஷ்டம்
பாஸாங்குஸாபீதிவராந் ததானம்
முக்தா கலா பஞ்சித சர்வகாத்ரம்
த்யாயேத் பிரஸன்னம் வருணம் ஸுவ்ருஷ்ட்யை"
"த்வம் வை ஜலபதிர் பூத்வா
சர்வ ஸஸ்யாபி வ்ருத்தயே
நிமந்த்ரிதோ மஹேஸேந
பூர்வம் த்ரைலோக்ய ரக்ஷணே"
"ருஷ்ய ஸ்ருங்காய முநயே விபண்டக ஸூதாய ச
நம ஸாந்தாதி பதயே ஸ்த்யஸ் ஸத் வ்ருஷ்டி ஹேதவே"
"விபண்டக ஸுத ஸ்ரீமான் ஸாந்தா பதிர் அகல்மஷ :
ருஷ்ய ஸ்ருங்க இதி க்யாதோ மஹா வர்ஷம் ப்ரயச்சது"
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய மழை வேண்டல் பதிகம்:
வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீர் இலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்க மற்(று)எங்களை என்ன
ஒழி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
மந்திரம் சொல்ல முடியவில்லையா பரவாயில்லை.உங்கள் இரண்டு கைகளிலும் நீரைஅள்ளி வருண தேவனுக்கு சமர்ப்பணம்என்று சொல்லி கால்படாத இடத்தில் 3முறை நீரை விடுங்கள், வருணதேவன் திருப்தி அடைந்து நம்மை தேடி வருவார்.
வருண முத்திரை:
சுண்டுவிரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு மெதுவாக அழுத்திப் பிடிக்கவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இவ்வாறு கைவிரல்களை அழுத்திப் பிடிப்பதற்கு வருண முத்திரை என்று பெயர். வருண முத்திரை செய்பவர்களுக்கு, தோல் சம்பந்தமான நோய்கள் இருப்பின் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

1 comment: