Thursday, 19 January 2017

அழுகிய_தேங்காய் அபசகுனமா?

அழுகிய_தேங்காய் அபசகுனமா?
பகவானால் படைக்கப்பட்ட முக்கியப் பொருள் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே
ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும்,
இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும்,
மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.
தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் & ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வாா்கள்
ஒரு சிலா் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவா்களையும் பயமுறுத்துவாா்கள்
ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி. அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி. ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை, துா்சொப்னங்கள், கண்திருஷ்டி, ரோகம், ஆகியவை அனைத்தும் பிராா்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.
முழு கொப்பரையாக இருந்தால்
சுபகாரியம் உண்டாகும்
புத்திர பாக்யம் உண்டாகும்
பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
பூ இருந்தால்
ரோக நாஸ்தி
எதிர்பாராத வரவு
சொர்ண லாபம்.
நீங்கள் உங்களையோ அல்லது இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடி சுபமாகவே நடக்கும்.

1 comment:

  1. தேங்காய்க்கு ஒரு கதை:

    என்னை ஒரு *கன்னிப்பெண்* தான் கொல்ல முடியும் என வரம்வாங்கிய
    வன் *பாணாசுரன் என்ற அரக்கன்*.
    வரம் தந்த ஆணவத்தில், அவன் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் *மலையத்துவஜன் மன்னனின் மகளாக
    *பார்வதி தேவி* அவதரித்தார்.
    அம்பாளின் அவதார நோக்கமே பாணாசுரனை வதம் செய்வது தான்.
    பார்வதி தேவி வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.
    *சிவபெருமான்* அம்பாளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு, மலையத்துவஜன் மன்னனிடம் பெண் கேட்டு வந்தார். தம்மை மணக்க தேவி
    ஈஸ்வரனிடம்(சிவனிடம்) ஒரு கோரிக்கை வைத்தார்.
    *சூரிய உதயத்துக்கு முன்னர், 3 பொருட்களை, கன்னியாகுமரிக்கு கொண்டு வரவேண்டும் என்பது கோரிக்கை. அவை :
    *கண்ணில்லாத தேங்காய், காம்பில்லா வெற்றிலை, கணு இல்லாத கரும்பு.*
    இறைவனாயிற்றே! அனைத்தையும் கண்டுவிட்டார். *சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு, கன்னியாகுமரிக்கு* அவற்றோடு வந்தார். *வழுக்கம்பாறை* என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது, *நாரதமுனிவர்* சேவல் கோழியாக உருமாறி கூவினார்.
    ஏனென்றால், ஒரு கன்னிப் பெண்ணால் மட்டுமே, பாணாசுரனை வதம் செய்ய இயலும். இறைவனோடு திருமணம் நிகழ்ந்துவிட்டால், தேவியின் அவதார நோக்கம் நிறைவேறாது என்பதால் அப்படிச் செய்தார் *நாரதர்.* ஆகவே சேவல் கூவியதால், *சூரிய உதயம்* நிகழ்ந்து விட்டது. இனி இம் மூன்றுப் பொருட்களைக் கொண்டு போய்ப் பயனில்லை எனக் கருதி சுசீந்திரம் திரும்பி விட்டார்.
    நவராத்திரியின் நிறைவு நாளான *விஜயதசமி*அன்று தேவி பாணாசுரனை வதம் செய்த பின்னர்* சிவபெருமானை நோக்கி, கையில் ஜெபமாலையுடன், *தவக் கோலத்தில்* காட்சி தருகிறார் என்பதே.

    ReplyDelete