Wednesday, 4 January 2017

சொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன?

சொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன?
அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி
பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
அது அன்று தொடங்கி இன்று வரையும் குறைவின்றி நடைபெற்று வருகின்றது.

2 comments:

  1. வைகுண்ட ஏகாதசி :

    நார, அயன என்னும் இரு சொற்கள் கூடி, *நாராயண* என்னும் ஒரு சொல் உண்டாயிற்று.
    நாரம் = உயிர்த்தொகுதி.
    அயனம் = இடம்.
    உயிரினங்களுக்கு இடமானவன் *நாராயணன்.* ஏகாதசிக்கு *ஹரிதனம்*(நாராயணனுடைய நாள்)
    என்று பெயர்.
    ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே *வைணவம்.*
    வயதுக்கு மேல், 80 வயது வரை ஏகாதசியன்று உபவாசம்(விரதம்) இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    *முரன்* என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட *இந்திராதியர்* சிவனை அணுகி அபயம் கேட்டனர்.
    நாராயணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாராயணன். உடனை முரன் கிளர்ந்தெழுந்தான். அமரர் சிதறினர்.
    இறைவனும், ஆற்றலில் குறையுடையவன் போல் பயந்தோடி,
    *வதரி மலையிலுள்ள சிம்ஹவதி* என்
    னும் குகையில் போய் *களைப்புத் தீர
    கண்ணுறங்கினான்.* முரன் பின் தொடர்ந்து, வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம்,
    *இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி* வெளிப்பட்டு போரிட முரனுக்கு முன்னின்றாள். *முரன் முடிந்தான்.*
    கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி *இறைவனுக்கே* வியப்பளிக்கிறது.
    என் பகைவனை முடித்தது யார்? என்று
    பரமன் கேட்கிறான்.
    அக்கன்னி, உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள்.
    பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி
    கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். *ஏகாதசி* என்று பெயர்
    கொண்ட அவ்வனிதை நின்அன்புக்கு
    உரியவளாக நான் ஆக வேண்டும்.
    திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்
    நாளில் உபவாசம் இருப்போர், *சித்திகள்* அனைத்தும் பெற வேண்டும் என்று, வரங்களை வேண்டிக் கொண்டாள்.

    இப்படித்தான் *ஏகாதசி* தோன்றியது.

    மார்கழிமாத கிருஷ்ணபட்ச ஏகாதசி *உத்பத்தி ஏகாதசி* என்றும்,

    மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி,
    *மோட்ச ஏகாதசி* என்றும் வழங்கப் படுகிறது. இதுவே *விமோசனம்.*

    இந்த ஏகாதசி விரதத்தை ஒருவன் கைக்கொண்டால், இன்னல்களிலிருந்து
    விடுதலைப் பெறுவதோடு, தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது *சாஸ்திரம்.*

    ReplyDelete
  2. 8 வயதுக்கு மேல் 80 வயது வரை, என்று அறியவும்.

    ReplyDelete