Saturday, 29 April 2017

குளிக்கும் போது முதல்ல எங்க தண்ணிய ஊத்துவீங்கன்னு சொல்லுங்க... உங்கள பத்தி நாங்க சொல்றோம்...

சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங்களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்கவழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வெளிக்காட்டும். குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்போம். இந்த செயலும் ஒருவரது குணாதிசயங்களைக் கூறும். இக்கட்டுரையில் அதுக்குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மார்பு
மார்பு இப்பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்களாக இருப்பர். ஒரு வேலையில் மும்மரமாக இருக்கும் போது வேறு எந்த விஷயத்திலும் நாட்டம் போகாது. நீங்கள் போகும் வழி சரியென்று சொல்பவரை தான் நீங்கள் விரும்புவீர்கள்.
முகம்
முகம் முகத்தில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்பவர்களுக்கு எப்பொழுதும் பணம் தான் முக்கியமாக இருக்கும். அந்தப் பணத்தை சம்பாதிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். நேர்மை, கண்ணியம் போன்றவற்றில் இவர்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. சுயநலமானவர்களாவும், பிறர் புரிந்துக் கொள்ள கடினமானவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்
அக்குள்
அக்குள் இந்தப் பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்தால், அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும் இருப்பர். இவர்கள் மிகவும் பிரபலமானராகத் தான் இருப்பர். உதவும் மனப்பான்மை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆனால், இவர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பமாட்டார்கள்
தலைமுடி
தலைமுடி இவர்களுக்கு எப்பொழுதும் இவர்களது இலக்கு தான் முக்கியமானதாக இருக்கும். ஒரு இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். பணம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பகல் கனவு காண்பவர்கள் இவர்கள்.
அந்தரங்க பகுதி
அந்தரங்க பகுதி இந்த பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்பவர்கள் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு தன்னம்பிக்கை மிகக்குறைவு தான். நண்பர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள். விடாமுயற்சி தான் இவர்களது பலவீனம்

2 comments: