Saturday, 29 April 2017

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?அறிவியல் பூர்வமான விளக்கம்.

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?அறிவியல் பூர்வமான விளக்கம்.
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.
அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

1 comment:

  1. இதற்கு முன்னாலும், இந்த தகவல் வந்துள்ளன. இப்போதும் அதே பதில் தான். எல்லாரும் இறைவன் சந்நிதிக்குள் நுழையும்போது, படியைத் தொட்டுக் கும்பிடுவார்கள். நானும், ஆரம்பத்தில் எதற்கென்று தெரியாமல் வணங்கிக் கொள்வேன். அதன்பின், தெரிந்து கொண்டவை, படியைத் தொட்டு வணங்கியதும், அதுவரை நம் மனதில் உள்ள எண்ணங்கள் எதுவுமே இல்லாமல், மனம் வெறுமையாக, அந்த ஆண்டவன் முகம், மட்டுமே நம் கண்ணிலும், மனதிலும் இருக்கும். வேறு எந்த சிந்தனைகளுமே இருக்காது என்பதை அனுபவித்தில் அறிந்தேன். மற்ற காரணங்கள் உங்கள் முகநூலில் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete