Saturday, 29 April 2017

இல்லற தர்மம் :

இல்லற தர்மம் :
கட்டிய மனைவியை கடைசி வரை
கண் கலங்காமல் காப்பவன்
தவம் செய்ய தேவையில்லை.
இருபத்தியொரு வயது வரை அவனவன்
சொந்த ஆன்மா கர்ம செயலுக்கு வராது.
அந்த ஆன்மாவின் ஸ்தூலத்தை
தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும்.
96 தத்துவங்கள் முடிவு பெறுவது 21 வயதிலே
அதன் பிறகே அவன் சொந்த கர்மாவானது
கர்ம செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது
சக்தியோடு துணை சேர வேண்டும்.
த்யான மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
என சிரசு ஏற பல வழிகள் உள்ளது.
ஆனால் சிறந்த மூலம்
இல்லற தர்மம் ஒன்றே.
சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது.
சக்தி மாறி சிவம் சேர்ந்தால்
பிறவியே சிக்கலே.
உடல் பொருத்தம் பூமியில் ஜெயிப்பதில்லை
ஆன்ம பொருத்தமே பிறவியை ஜெயிக்கும்.
அப்பேற்பட்ட சக்தியோடு
சிவம் சேரும் போது
ஸர்வமும் ஸாந்தியாகும்.
சிவசக்தி சங்கமத்தில்
ஊடலும் கூடலும்
உற்சாகம்தானே.
ஆனால் சக்தியின்
கண்ணீர் துளிகளுக்கு
சிவன் காரணமானால்
அதை விட கொடிய
கர்மா உலகில் இல்லை.
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம்
வழிகள் தர்மத்தில் உள்ளது உண்மையே.
ஆனால் உறவுகளைக் கொண்டே
உலகம்தன்னை வெல்வதும்
பிறவிப்பிணி அறுக்கவும்
உலகம் அறியாத ஒரு வழி உள்ளது.
சொந்தம் என்பது பழைய பாக்கி என்பதை
அறிந்தவனுக்கு சொந்தம் ஒரு சுமை இல்லை.
நட்பு என்பது பழைய பாக்கி என்பதை
பண்போடு அறிந்தவனுக்கு பதற்றம் இல்லை.
எதிரி என்பவன் தன் கர்மாவின் தார்மீக கணக்கே
என தனித்தன்மையோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லை.
உனது எதிரியும் நீயே உனது செயலே கர்மாவாகி
அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும்.
ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கெதிராக
பயன்படுத்துகிறது என நீ உணரும் போது.
உன் எதிரி முகத்தில் உனது கர்மா
உன் கண்களுக்கு தெரியவந்தால்.
எதிரி உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவைப்படுவதில்லை.
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும்
உன்னோடு பிறக்கும் பழைய கணக்காய்.
பழைய கணக்கு புரிந்தால் பந்தபாசம்
சகோதரத்துவம் மீது பற்றற்ற பற்று வைத்து
பிறவி கடனை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால் உனக்கு
பக்கத்தில் சரிபாதி அமரும் மனைவி
யார் என்று உனக்கு புரியும்.
தாய் தந்தையரை அன்போடு பூஜிப்பவன்
தந்தை வழி தாயார் வழி ஏழேழு ஜென்ம
கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள்
பொருத்து உபகாரமாக உதவி வந்தால்.
எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்
உனது ஏழேழு ஜென்மத்து சமுதாய
கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
கோவில்கள் செல்வதாலோ குடந்தை சென்று
மகாமக திருக்குளத்தில் புண்ய நீராடுவதாலோ
உன் வாழ்க்கையில் ஒன்றும் மாறாது
சிறிது காலம் சிறு இன்பம் மட்டும் கிடைக்கும்.
ஆனால் ஒரேயொரு உறவை நீ பூஜித்தால்
பிறவிப்பிணி இன்னல் மொத்தமாய் தீரும்.
அது அந்த புனிதமான உறவு
உன் அன்பு மனைவியே.
உலகிலேயே மனைவியை மகிழ்ச்சியாக
வைப்பது சிரமம் மட்டும் அல்ல.
அதுதான் உலகிலேயே தலைசிறந்த தவம்
தவம் என்பது சாமான்யர்களுக்கு சிரமமே.
தாலி கட்டிய மனைவியையும் உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற
நேசித்து உன்னதமாக உனது வாழ்வை
ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே
உலகின் தலைசிறந்த தர்மம் சிறந்த தவம் ஆகும்.
தினமும் தன் தாய் தந்தையரை வணங்குபவன்
பித்ருதோஷம் நீங்க இராமேஸ்வரம் போக தேவையில்லை.
தன் உற்றார் உறவினர்களை மதிப்பவன்
கிரகதோஷம் நீங்க திருவண்ணாமலை சென்று
இடைக்காடரை தேட தேவையில்லை
நவக்கிரஹங்களையும் சுற்ற தேவையில்லை.
கட்டிய மனைவியை அவள்மூலம் பெற்றெடுத்த
குழந்தைகளை அன்போடு நேசிப்பவன்
அவர்களை ஒரு கஷ்டமும் இல்லாமல்
ஆனந்தமாக வைத்திருப்பவன்
கர்ம விமோசனம் தேடி பாபநாசம் சென்று
அகத்திய முனிவரை தேட தேவையில்லை.
இதற்காகத்தான் நமது முப்பாட்டன்
இல்லற வாழ்க்கை மூலம் அமைத்தான்
ஆதியோக வம்சம்.
மனைவி அழும் இல்லம் நரகம்
மனைவி சிரிக்கும் இல்லம் சொர்க்கம்.
உன் இல்லம் நரகமா சொர்க்கமா
என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும்.
சக்தியை உணர்ந்தாலே போதும் - அங்கு
சிவம் ஜோதியாக ஜொலிக்கும்.

2 comments:

  1. ஆன்மா என்ற வார்த்தைக்கு ஒரு கதை.


    ஒருவனுக்கு 4 மனைவிகள் இருந்தார்கள். அதில் தனது 4−வது மனைவியைமட்டும் மிகவும் நேசித்தான்.
    அந்த மனைவியின் அனைத்து ஆசை
    களையும் நிறைவேற்றினான்.

    அவன் தனது 3−வது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்
    ளப் பயந்தான்.

    அவன் தனது 2− வது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சி
    னைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

    ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை, நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும், அவள் கவனித்துக் கொண்டாள்.

    ஒரு நாள் அவன் மரணப் படுக்கை
    யில் விழுந்தான். தான் இறக்கப் போவதை உணர்ந்து, இறந்த பின் தன்னுடன் இருக்க, தன்னுடன் சாக
    யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

    ஆகவே, தான் அதிகம் நேசித்த 4 வது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தன் 3 வது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப் போகிறாய், நான் வேறு ஒருவருடன் போகப் பொகிறேன் என்று கூறிவிட்டாள். பிறகு தனது 2 வது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி, என்னால் உன் கல்லறை
    வரைக்கும் கூட வர முடியும், கடைசி
    வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

    ReplyDelete
  2. நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
    உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாதது தான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும்போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்க வேண்டும் தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலே மரித்தும் போனான்.

    உண்மையில், நம் அனைவருக்குமே இந்த *4* மனைவியர் உண்டு.

    4−வது மனைவி நமது *உடம்பு.* நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும், கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும், அதுவும் அழிந்து போகிறது.

    3−வது மனைவி நமது *சொத்து சுகம்* தான். நாம் மறைந்ததும் வேறு யாருடனோ சென்று விடுகிறது.

    2−வதுமனைவி,நமது*குடும்பம் &நண்பர்கள்
    அவர்கள் நமது சுடுகாடு வரையில் தான் நம்முடன் கைகோப்பார்கள். அதற்கு மேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

    நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி
    *ஆன்மா*. நாம் நன்றாக இருக்கும்போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து, சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதிவரை கூடவரப்போவது நமது *ஆன்மா* தான்.

    மனுஷன் உலகம் முழுவதையும், ஆதாயப்
    படுத்திக் கொண்டாலும், தன் ஆன்மாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

    நம்மைப் படைத்த பகவானுக்கு பயப்படுங்கள். அவர் நமக்கு நல்அருள் புரிவார்

    வாழ்க என்றும் வளமுடன்.

    ReplyDelete