Saturday 29 April 2017

தாம்பூலம் தரும் முறைகள்:

தாம்பூலம் தரும் முறைகள்:
தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால் வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமமாவது தர வேண்டும். வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான் நிச்சயதாம்பூலம் அன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும். எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம்.
அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, புடவை அல்லது ரவிக்கைத்துணி.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை பாக்கு கொடுப்பதன் அர்த்தத்தை பார்த்தோம்.
மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு கணவனின் ஆயுளை விருத்தி செய்கிறது.
வளையல் மனம் அமைதி பெற.
கண்ணாடி கணவனின் ஆரோக்கியம் காக்க.
தேங்காய் பாவம் நீங்க, (மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது. )
பழம் அன்னதானப் பலன் கிடைக்க.
பூ மகிழ்ச்சி பெருக.
மருதாணி நோய் வராதிருக்க.
கண்மை திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க.
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப்பலன் அடைய வழங்குகிறோம்.

2 comments:

  1. அய்யா.. வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.

    அய்யா.. தாம்பூலப் பொது விதி நாடிப் பயிற்சியின்படி பாடலுடன் அளிக்கிறேன்..

    வெத்திலைக்குமுன்னம் வெறும்பாக்கைவாயிலிட்டால்
    குற்றமுறுமுறவோர் கூட்டம்போம்−வெற்றிலையை
    முன்னிட்டுப்பாக்கறுந்து முதறிவோர்தம்மார்பில்
    மன்னிட்டுப்வாழும்பூ மாது.

    இது பாடல். இதன் விளக்கம்...

    தாம்பூலம் தரிக்குமிடத்து, முதலில் பாக்கை வாயிலிடு வது குற்றம். ஏனெனில், துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சை, புழு, உளுத்த தூள், பிசு பிசுப்பு இவை முதலிய துர்குணங்கள் அப்பாக்கி னுடைய சுபாவ குணமாகை யால், உடற்கு அபாயம் தருவது டன், பந்து விரோதமுண்டா மாதலின்... சுண்ணம் தடவாத புனிதமுள்ள ஓர் வெற்றிலையை வாய்விட்டு மென்று, அச்சாற்றை விழுங்கில், நெஞ்சு உலர்ந்திருந்தாலும், கபம் கட்டுதல் இருந்தாலும், பாக்கினது தோஷமும் நீங்கும். ஆதலால்...ஒரு வெற்றிலையை, மென்று விழுங்கிய பிறகு பாக்கறுந்துவாய்.

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

    ReplyDelete
  2. Wed. 17, Aug. 2022 at 10.29 pm.

    தாம்பூலம் :


    "தாம்பூலம் கால விதி" பாடல்களுடன் அளிக்கிறேன்..!

    "காலைப் பிளவதிகங் கட்டுச்சி நீரதிகம்
    மாலையி லதிக மாயருந்தில்− வேலைநிலக்
    காலை மலங்கழியுங் கட்டுச்சி தீபனமாம்
    மாலை மணங்குலவும் வாய்.

    என்பதே அப்பாடல்.

    இதற்கான விளக்கம் :

    தாம்பூலம் தரிப்பவர்கள்...

    * காலையில் பாக்கை அதிகமாக சேர்க்கில் அன்றாடம் சரியாய் மலங்கழியும்.

    * மத்தியானத்தில் சுண்ணத்தை அதிக மாக சேர்க்கில்.... நல்ல பசியை உண் டாக்கும்.

    * மாலையில் வெற்றிலையை அதிகப் படுத்தி அருந்தினால்... வாய் மணம் வீசும். மேலும், திரிதோஷமும் அணுகவொட்டாது .

    அடுத்து....

    தாம்பூலம் சார விதி :

    * பாக்கு , வெற்றிலை , சுண்ணம் மூன்றும் ஒன்றுபட மெல்லும் போது....

    * அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சு.
    * இரண்டாவது நீர் மிகு பயித்தியம்.
    * மூன்றாவது நீர் அமுர்தம்.
    * நான்காவது நீர் அதிக இனிப்பு.
    * ஐந்தும், ஆறாவதும் உள்ள நீர்கள் பித்ததோஷம் , அக்கினி மந்தம் , பாண்டு ரோகம் இவைகளை உண்டாக்கும்.

    வெற்றிலையின் விதி :

    நீற்றிலையின்மூக்கு நெடியநரம்புடனே
    தீற்றும்புரவுரியந் தின்றக்கால் − மாற்ற
    லரை
    வெல்லப்போர்செய்யும் விரநெடுமாலா −யிடினும்
    சொல்லப்போய்நிற்பாள் திரு.

    அதாவது வெற்றிலைத் தின்னும்போது சுண்ணந்தடவிய பின், காம்பு, நீண்ட நரம்பு பின்புறத்தோல், இவைகளை நீக்கீத் திண்ன வேண்டும்.

    அப்படி நீக்காத வெற்றிலையை யுகயுகந்தோரும் துஷ்ட நிக்கிரக?சிஷ்ட பரிபாலனம் செய்யும் பொருட்டு, அளவிறந்த அவதாரங்கள் செய்யும் வைகுண்ட வாசனாகிய லட்சுமி விலகி விடுவாள்.. அதாவது மஹா விஷ்ணுவே தின்ற போதிலும்.. என்ற கருத்து.

    அடுத்து.....

    கொட்டைப்பாக்கு :

    கொட்டைப் பாக்கு தின்பவர்களுக்கு... கோழை , மலம் , மலப்பையினது அடித் தட்டிலிருக்கும் கிருமி இவைகளை நீக்கும்.

    இது சுரநோய் உடையவர்களுக்கும், ஒளஷதம் சாப்பிட்டவர்களுக்கும் வாயில் போட்டுக் கொள்ள உதவும். அதிகமாகவும் தின்றக் கூடாது.

    சொத்தைப் பாக்கு குணம் :

    சொத்தைப்பிளவிடித்து தோயமதிலூர விட்டு
    சத்துவரநூறுவிசை தான்கழுவி− வைத்துலர்த்தி
    வாசமைத்துத்தின்ன மந்தமொடு − தோஷமறும்
    தேசுமழகாமதிதம் செப்பு.

    அதாவது... சொத்தைப் பாக்குகளை இடித்து, நல்ல ஜலத்தில் நூறுதரம் கழுவி, உலர்த்தி... அத்துடன் வால்மிளகு, ஏலம் முதலிய வாசனைத் திரவியங்களைக் கலந்து தாம்பூலந் தரித்தால்... அக்கினி மந்தமும், திரிதோஷங்களும் விலகி, ஒளிரும் முகதேஜஸ் உண்டாகும்.

    மேலும்....

    சுண்ண விதி :

    கற்சுண்ணத்தினால்... அன்னம் ஜீரண மாவதுடன், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், நெஞ்சுசிக்கு, வாதகிரிச்
    சனம் இவை நீங்கும்.

    மட்டுமின்றி...பற்கள் வலிவு தரும். சுக்கிலத்திற்கு பலம் தரும். நெருப்புப் பட்ட புண், சொறி , சிரங்கு , தினவு, காயங்களிலிருந்து ஒழுகுகின்ற இரத்தம் , மண்டைப் புற்று தலைநோய், சன்னி இவைகளுக்கும் கிரமப்படி உபயோகப்படுத்தலாம்.

    அடுத்ததாக....

    முத்துச் சுண்ணம் விதி ":

    முத்துச் சுண்ணத்தை உபயோகித்தால் நீடித்த பேதியை விலக்கும். வாத ரோகம் அணுகவொட்டாது...முகப் பளபளப்பும், தேஜஸும் உண்டாகும்.
    மலக்கிருமி, வயிற்றுநோய் இவைகளை நீக்கும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete