Tuesday, 9 May 2017

விமானிகா சாஸ்திரம்

விமானிகா சாஸ்திரம் 🚀
👑 நமது முன்னோர்கள் பறந்துள்ளனரா....?
🌻--- புறநானுற்றில் உள்ள " வலவன் ஏவா வானூர்தி "
🌻--- சிந்தாமணியில் உள்ள " மயிற்பொறி "
🌻--- திருவிளையாடல் புராணத்தில் சோமவார விரதத்தை கடைபிடித்ததால் " சேர, சோழ, பாண்டியர்கள் இந்திரலோகம் சென்ற விமானம் "
🌻--- அழகர் கோவிலின் மேல் பறக்க முடியாமல் இறங்கிய " மலையத்துவஜ பாண்டியனின் விமானம் "
🌻--- ரிக் வேதத்தில் வந்த " அஸ்வினி தேவர்களின் விமானம் "
🌻--- மற்றும் காற்றடைத்த பல அடுக்குகள் கொண்ட " பறக்கும் பைகள் "
🌻--- திரிபுராசுரர்களின் " மூன்று பறக்கும் கோட்டைகள் "
🌻--- காலகேயர்களின் பறக்கும் கோட்டையான " ஹிரண்யபுரம் "
🌻--- பாகவதத்தில் வரும் " சால்வனின் விமானம் "
🌻--- இராமாயணத்தில் வரும் " இராவணனின் புஷ்பரக விமானம் "
🌻--- மஹாபாரதத்தில் அர்ஜுனன் "இந்திரலோகம் செல்லும் விமானம் " (மேலும் இந்திரலோகத்தில் பல விமானங்கள் இருக்கும் இடத்தில் தான் அர்ஜுனன் இறங்குகிறான்)
🌻--- மேலும் பற்பல வீரர்களின் ரதமும் பறக்கும் தன்மை கொண்டதாய் இருந்தது ( மும்மூர்த்திகளின் ரதம், பலிச்சக்ரவர்த்தி, இந்திரன் முதலிய தேவர்களின் ரதங்கள், இராவணன், மேகநாதன், கிருஷ்ணர், அர்ஜுனன், கடோற்கசன் ஆகியோரின் ரதங்கள் பறக்கும் தன்மை கொண்டதாய் இருந்தன எனக்குறிப்புகள் உள்ளன)
👑 பல புண்ணியவான்களை தேவரதமே கீழ் வந்து நேரடியாக அழைத்து சென்றதற்கான குறிப்புகள் உள்ளன
🌼 இவ்வாறு எண்ணிலடங்கா தகவல்கள் விமானங்கள் பற்றி இருக்கின்றன நமது இதிகாச புராணங்களில்
🌼 இத்தனை விஷயங்களுமே கற்பனை என ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது ஏனெனில் இராமாயண மகாபாரதம் உண்மையில் நடந்தற்கான ஆதாரங்கள் உள்ளன
🌼 எனில் பறந்தார்கள் என்பது உண்மையானால் அவ்வளவு தொழிட்நுட்பம் வாய்ந்த நமது அறிவியல் எங்கு சென்றது
🌼 காலத்தால் அவை அழிந்து விட்டாலும் விமானம் பற்றிய அறிவை அவர்கள் புத்தகங்களை தொகுத்து வைத்தனர்
🌼 பலவற்றை அவர்கள் விட்டு சென்றாலும் வெளியே வந்தது ஒன்று தான்
👑 ஆம் அது தான் மகரிஷி பரத்வாஜர் எழுதிய "" விமானிகா சாஸ்திரம் ""
🌼 விமானிகா சாஸ்திரம் நமது இக்கால அறிவியலையும் தாண்டியது என படித்தாலே உணரலாம்
🌻---இந்த புத்தகத்தில் வானில் பறக்கும், நீரினுள் மூழ்கி செல்லும் மற்றும் நீருக்கு அடியில் செல்லும் வாகனங்களை பற்றி கூட கூறப்பட்டுள்ளது
🌻--- விமானம் என்பது காற்றின் வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்வது ஆகும்
🌻--- விமானி அறிய வேண்டிய 32 அதிமுக்கிய சூட்சமங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன
🌻--- விமானம் அமைக்க தேவையான 31 முக்கிய பொருட்கள் நம் உடலின் பாகங்களை ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது
🌻--- அடிப்படையாக 5 விமான வகைகள் வேகம் மற்றும் செல்ல வேண்டிய தொலைவை கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன
🌻--- விமானிகள் எந்த காலத்திற்கு மற்றும் செல்லும் இடத்திற்கு தகுந்தவாறு உடைகள் மற்றும் எந்தந்த உணவுகளை உண்ண வேண்டும் எனத்தெளிவாக கூறப்பட்டுள்ளது
🌻--- எந்தந்த உணவு மூலம் என்ன தகாத விளைவு வரும் என முக்கியமான 25 விளைவுகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார் மேலும் விமானிகள் ஒரு நாளைக்கு ஐந்து முறை அதுவும் எந்த நேரத்தில் உணவு உண்ண வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்
🌻--- விமானி வைட்டமின் முதலிய சத்துக்கள் அடங்கிய உணவு உருண்டைகளை அதிகமாக சாப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
🌻--- மூன்று வகையான முக்கிய உலோகங்களையும் அவைகளை வெவ்வேறு விகிதத்தில் கொண்டு செய்யப்படும் 16 வகையான உலோகங்கள் விமானம் செய்ய ஏற்றவை
🌻--- அந்த மூன்று உலோகங்கள் எப்படி கிடைக்கும் மற்றும் எவ்வாறு அவைகளை சுத்தம் செய்து (தூசுகளுடன் சேர்ந்து இருப்பதை தனியாக பிரித்து) பயன்படுத்த வேண்டும்
🌻--- உலோகத்தை உருக்கி வேண்டியவாறு செய்ய 532 வகை உலைகள் (Furnace) இருக்கின்றன இவை மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன இவற்றில் ஏழாவது பிரிவில் ஒன்பதாவது உலையான கூர்ம வடிவிலான உலை விமானம் செய்ய உகந்ததாக கூறப்படுகிறது
🌻--- 7 அடிப்படை சக்திகளை கொண்டு இயங்குகின்றன இந்த வானூர்திகள் (நீர், நெருப்பு, சூரியன், வானம் முதலியவைகள்)
🌻--- 12 இயக்கங்களை கொண்டு அற்புத விமானமாக இருந்தது (முன், பின் பக்கவாட்டில் மற்றும் ஒரே இடத்தில் நின்ற படி பறக்கும் திறன் முதலியவை)
🌻--- 32 மின்சாரத்தையை ( மின்சாரத்தை அகஸ்தியர் மித்ரவர்ண சக்தி என கூறியுள்ளார் ) உருவாக்கும் வழிகளை அகஸ்தியர் கூறியுள்ளார் இவைகளை கொண்டு விமானத்தின் பாகங்கள் இயக்கப்படுகின்றன
🌻--- ஒலி மூலம் இரு விமானங்களில் உள்ள கருவிகளை கொண்டு தகவல் பரிமாற படுகிறது
🌻--- 7 வகையான ஆடிகள் (அதாவது லென்ஸ்) கூறப்பட்டுள்ளன
🌻--- விமானத்தின் அனைத்தும் பக்கங்களிலும் நடப்பதை விமானி ஒரே இடத்தில் காணும் திறன் இந்த ஆடிகள் மூலம் சாத்தியம்
🌻--- இந்த ஆடிகள் காற்று, சூரிய ஒளி மற்றும் வெப்பம் மூலம் வரும் 122 விளைவுகளை கட்டுப்படுத்த கூடியதாக இருக்க வேண்டும்
🌻--- இரண்டு வகையான முக்கிய ஆடிகள் சேரும்போது உலோகத்தை உருக்கும் சக்தி கொண்ட ஒளிக்கதிர் (Laser) உருவாகும்
🌻--- சூரிய ஒளியின் சக்தியை கொண்டு
எதிரியின் கண்ணை குருடாக்கும் ஆடிகள்
🌻--- புகையை கொண்டு தன்னை மறைத்து கொள்ளும் திறன் கொண்டவை மேலும் 27 வடிவங்களில் எதிரியை குழப்பும் படி மாறும்
🌻--- எதிரி விமானத்தை கண்டுபிடிக்க மட்டுமல்ல அந்த விமானத்தில் பேசுவதை கூட இவர்களால் ரகசியமாக கேட்க முடியும்
🌻--- மேகங்களுக்கிடையே இருக்கும் மின்னூட்டத்தை ( இவைகளே மின்னல்களுக்கு காரணம் )பயன்படுத்தி எதிரியை தாக்கி அழிக்கும் திறன்
🌻--- எதிரியின் விமானத்தை தானாகவே அறிந்து அவ்விமானத்தை தாக்கி அழிக்கும் கருவிகள்
👑 இவையனைத்தும் மகரிஷி பரத்வாஜரின் விமானிகா சாஸ்திரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன மேலே கூறப்பட்டவை மிகவும் குறைவு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
👑 விமானிகா சாஸ்திரம் மட்டும் இல்லாது ரிக் வேதத்தில் இருந்து நாரதர் எழுதிய புத்தகங்கள் வரை பற்பல அரிய புத்தகங்கள் வரை அனைத்திலுமே விமானம் பற்றிய தகவல்கள் உள்ளன
👑 இவையணைத்தையும் கற்பனை என்று கூறி ஒதுக்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பம் வாய்ந்ததாய் உள்ளன
👑 சண்டையிடவும் விமானம் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பதை மேலே இருக்கும் கருவிகளை கொண்டு அறியலாம்
👑 மேலும் தேவாசுரயுத்தம், சந்திரனின் யுத்தம், இராம - இராவண யுத்தம் மற்றும் அர்ஜுனன் நிவாத கவசர்களோடு செய்த யுத்தம் என பல யுத்தங்கள் இவ்வாறே நடந்துள்ளன
😢 ஆனால் தற்காலத்தில் அந்த விமானங்கள் இல்லை
😞 காலத்தின் சுழற்சியால் டைனோசர்கள் போல இவைகளும் அழிந்தன ஆனால் இத்தனை குறிப்புகள் இன்னும் மிச்சம் இருந்தும் அவை வெளிவராதது வருத்தத்தை அளிக்கிறது
👑 இத்தனை தகவல்களால் நமது முன்னோர்கள் விண்ணில் பறந்தது உண்மையே என உறுதியாகிறது

No automatic alt text available.

2 comments:

  1. அய்யா!"வெ.சாமி அவர்களிடம், சோமவாரத்தைப் பற்றிக் கேட்டிருந்தேன். முன்பெல்லாம் நான் திங்கட்கிழமை, சோமவாரம் விரதம் கடைபிடிப்பேன். தற்போது அதை விட்டு விட்டேன். சோமவார விரதம் விளக்கம் கொடுங்களேன்.

    ReplyDelete
  2. சோமவார விரதம் தங்களின் ஒரு பதிவில் அதற்கான விளக்கத்தைத் தெரிந்து கொண்டேன். அய்யா! வெ.சாமி.அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete