Tuesday, 23 May 2017

உஞ்சவிருத்தி பிராமணர்!!!

உஞ்சவிருத்தி பிராமணர்!!!
---------------------------
இப்பொழுது உங்களுக்கு வயது 50 இருந்தால் "உஞ்சவிருத்தி பிராமணர்" என்னும் சொல் உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரையில் சில குடும்பங்கள் உஞ்சவிருத்தி செய்துதான் தங்கள் வாழ்கையை நடத்தினர்.
உஞ்சவிருத்தி என்றால் என்ன?
உஞ்சவிருத்தி இருவகைப்படும்.
1)யாரிடமும் யாசகம் கேட்காமல் அறுவடை முடிந்ததும் அங்கு சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை பொருகிவந்து அரிசியாக்கி ஜீவனம் நடத்தும் முறை ஒன்று.
2)மற்றொன்று, தலையில் தலைபாகை கட்டிக்கொண்டு தோளில் ஒரு பித்தளைசொம்பில் கயிறுகட்டி தொங்கியபடி,ஒருகையில் சப்பலாகட்டையும் மறுகையில் தம்புராவும் மீட்டியபடி "கிருஷ்ண ராமா கோவிந்தா, ஹரே! ராம கிருஷ்ணா கோவிந்தா" என்றபடி பஜனைசெய்துவரும் பிராமணரின் பாதங்களைக்கழுவி தத்தம் இல்லம்மும் அவரது உஞ்சவிருத்தி பாத்திரத்தில் அரிசிமணி இடுவர்.
இதுவே உஞ்சவிருத்தி என்னும் உன்னதமான முறை.உஞ்சவிருத்தி பிராமணர்கள் வேறு எந்த தொழிலோ,வைதீக,ப்ரோகித கர்மங்களிலோ ஈடுபடமாட்டார்கள்.யாரிடமும் பணம் யாசிக்கமாட்டர்கள்.தெருக்களில் எதேர்ச்சையாக நாமசங்கீர்த்தனம் செய்தவாறு செல்வர். விருப்பட்டவர்கள் அரிசிமணி இடுவர்.கொடு என்றும் அவர்கள் யாரிடமும் கேட்கமாட்டார்கள். அவர்களது பத்திரம் நிரம்பியதும் இல்லம் திரும்புவர்.அதிகமாகவும் பெறமாட்டார்கள்.அரசி கிடைக்கவில்லை என்றால் அன்றையநாள் முழுதும் குடும்பத்துடன் பட்டினி தான்.அவர்களுக்கு தெரிந்து பகவானும் பகவான் நாம சந்கீர்தனமும்தான்.
ஏன் அவர்கள் உழைத்து உனக்கூடாத?என்று கேட்கலாம்.
வேதம் பார்பனர்களுக்கு விதித்துள்ள தர்மம் உழைக்க அல்ல.வேதம் கற்கவும் கற்பிக்கவும்,யாசகம் செய்யவும் யாசகமாக பெற்ற பொருள் அதிகமாக இருந்தால் தானம் செய்யவுமே.ஆனால் இன்று உண்மையான பார்பனர்களை காண்பது பகீரத பிரயதனாமாக உள்ளது.
பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணிய பலனாகத்தான் ஒருவன் உஞ்சவிருத்தி பிராமணனாக உருவாக முடியும்.
இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் உஞ்சவிருத்தி செய்தேதான் தன் வாழ்வை பக்திபூர்வமாக நடத்தினார்.
உஞ்சவிருத்தி பிராமணர்களில் வாழ்கை:-
*தினமும் பிரம்மமுகூர்த்தத்தில் தூக்கம் விழித்து,நீராடி சந்தியாவந்தனம்,அக்னிஹோத்ரம் முதலிய நித்யகர்மங்களை செய்வர்.
*பூசை முடித்து உஞ்சவிருத்தி செய்ய செல்வர்.மதியம் திரும்பி கிடைத்த பொருட்களை சமைத்து இறைவனுக்கு படைத்தது உண்பர்.
*ஏகாதசி முழு பட்டினி இருப்பார்.
*அதிகமாக எப்பொருளையும் சேர்க்கமாட்டார்.
*தங்களுக்கென சொந்தமாக காணிநிலம் கூட வைதிக்கொள்ள மாட்டார்.ஊரால் தர்ம சிந்தனையுடன் தரும் வீட்டில் தங்கள் காலம் இருக்கும்வரை வசிப்பர்.
*பணமோ,பொருளோ யாரிடமும் யாசகம் பெறமாட்டார்.
*பொருள்,பணம் ஈட்டும் நோக்குடன் எச்செயலையும் செய்ய மாட்டார்.
*தாங்கள் வாழும் வாழ்க்கை இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்.

2 comments: