Tuesday, 23 May 2017

கர்மவினை

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன்.

6 comments:

  1. சுருக்கமாகவும், தெளிவாகவும் கொடுத்துள்ளீர்கள். அருமை.
    ஆனாலும், இன்னும் கொஞ்சம் விளக்கம் அளித்திருக்கலாமோ, என நினைக்க வைத்தது என்னை.

    ReplyDelete
  2. கர்மா என்றால், *செயல்* என்று அர்த்தம்.
    *நான்கு* விதமாக இந்த செயல் நடக்கிறது.
    உடலின் செயல், மனதின் செயல், உணர்
    வின் செயல், சக்தியின் செயல் ஆகும்.
    இதை *இரண்டு* விதமாக பிரித்தால்,

    ஒருவன், தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக, இயற்றும் நல்ல செயல்கள் *கர்மா* எனப்படும்.

    தனக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை
    துஷ்பிரயோகம் செய்து, கீழான நிலைக்கு
    ஒருவனை இட்டுச் செல்லும் தீய செயல்கள் *விகர்மம்* எனப்படும்.

    இந்த கர்மங்களால் ஏற்படும் வினைகள், *கர்ம வினை (R) ஊழ்வினை* எனப்படும்.

    ReplyDelete
  3. *கர்ம வினை* மூன்று வகைப்படும்.

    1) நுகர்வினை (ஊழ்வினை) = *பிராரப்த கர்மம்* (வடமொழியில்)

    எல்லா முற்பிறவிகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் *மொத்த உருவம்* தான் *கருமம் R வினைப்பயன்.

    *விதி வலிது.* அதை மாற்ற *ஈசனாலும்* முடியாது.

    ReplyDelete
  4. *விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது என்று இராமன் இலக்குவனுக்குச்* சொல்வதாக *கம்பன்* சொல்வதும்,

    *ஊழிற்பெருவலி யாவுள* என்று *வள்ளுவர்* சொல்வதும் இந்த ஊழ்வினையைத்தான்.

    *2−வது, தொல்வினை = சஞ்சித கருமம்(வ.மொழி எழுத்து)

    மாற்றக்கூடிய விதி. *விதியை மதியால் வெல்லலாம்.* இத்தொல்வினையை புண்ணியத்தாலும், ஜெபத்தாலும் மாற்றலாம்.

    *3−வது, வரும்வினை = ஆகாமிய கருமம்.(வ.மொழி எழுத்து)

    இப்பிறவியி்ல், இனி செய்யப்போகும் செயல்கள் மனிதன் கையில் தான் இருக்கிறது.

    *திருப்பாவை வரிகளில், போய பிழையும், புகுதருவான் நி்ன்றனவும் தீயினில் தூசாகும்* என்று தொல்வினையையும், வரும்வினையையும் *ஆண்டாள்* கூறுகிறாள்.

    ReplyDelete
  5. *திருக்குறள்: 376, also 476.

    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.

    விளக்கம்: ஊழால், *தமக்கு உரியவை அல்லாத பொருட்கள்,* வருந்திக் காப்பாற்றினாலும், நில்லாமல் போகும்.

    *தமக்கு உரியவை* கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகாது.

    *செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானும் கெடும்.*

    விளக்கம்: ஒருவன் *செய்ய வேண்டாதவற்றை செய்வதும்* கேடாகும்.

    செய்ய வேண்டியவற்றை *செய்யாமல் விடுவதும்* கேடாகும்.

    குறிப்பு : ஊழ்வினை என்ற தலைப்பில், திருக்குறளில் தனி அதிகாரமே உள்ளது.

    ReplyDelete
  6. ஒரு பெரிய தவறு. திருக்குறள் 376 also 466 (476 அல்ல )என அறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete