Tuesday, 23 May 2017

இருபெருந் தெய்வம்

இருபெருந் தெய்வம்
பலராமன், திருமால்
பால்நிறத் தெய்வம் பலராமன், நீலநிறத் தெய்வம் திருமால் ஆகிய இருவரையும் இருபெருந் தெய்வங்கள் எனக் குறிப்பிட்டு சோழமன்னன் ஒருவனையும் பாண்டிய மன்னன் ஒருனையும் அந்த இருபெருந் தெய்வங்கள் போல விளங்கியதாக ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
சிவன், திருமால்
அந்தி வானமும் கடலும் சிவப்பும், நீல நிறமும் கொண்டு விளங்கியது இது சிவபெருமானும் திருமாலும் ஒருங்கு இருப்பது போல் தோற்றமளிப்பதாக ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[2]
அம்மையப்பர் தோற்றத்தை நற்றிணைப் பாடல் ஒன்று இருபெருந் தெய்வம் எனக் குறிப்பிடுகிறது.

5 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களே, பலராமனுக்கும், திருமாலுக்கும் நீங்கள் அளித்த விளக்கம் குறைவு என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. பலராமன் : பெருமாள் அவதாரங்களில், *எட்டாவது* அவதாரம்.
    *பலதேவன், பலபுத்திரன், கலாயுதன், சங்கர்ஷனர் என்ற பல பெயர்கள் பலராமனுக்கு உண்டு.

    *வாசுதேவருக்கும்,* அவரது முதல்மனைவி *ரோகிணி* தேவிக்கும் பிறந்த மகன் பலராமன். பலராமனின் மனைவி பெயர் *ரேவதி*. பலராமனின் தங்கை பெயர் *சுபத்திரை.*

    இந்தப் புராணக் கதை *ஶ்ரீமத்பாகவதத்தில் 9−வது ஸ்கந்தம் மூன்
    றாவது அத்தியாயத்தில் சொல்லப்படு
    கிறது.

    ReplyDelete
  3. திருமால் : சங்க காலத்தில், தமிழர்கள் வணங்கிய *மாயோன்* என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகும்.

    மாயோன் என்ற சொல்லுக்கு, *கருமை நிறம்* கொண்டவன் என்று பொருள்.

    *பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற மும்மூர்த்திகளில், (R) திருமூர்த்திகளில், *காத்தல்* தொழிலைச் செய்கிற கடவுள் இந்த திருமால் (R) பெருமாள்.

    *பரிபாடல்* என்னும் சங்க இலக்கிய நூலில் (பரிபாடல் புலவர்: *கடுவனிளவெயினார்*) திருமாலை மட்டுமே பாடிய *எட்டு* பாடல்கள் உள்ளன.

    ReplyDelete
  4. ஆழ்வார்கள், திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு, *நாலாயிரத்
    திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப் படுகிறது. இந்த நாலாயிரத் திவ்ய பிரபந்த நூலில் கூறப்படும் *108* பெருமாள் கோவில்கள், *திவ்ய தேசங்கள்* என்று அழைக்கப்படுகின்றன.

    திருமாலுக்கு *திருவோண நட்சத்திரத்தில்*
    விழா எடுத்து மகிழ்வார்கள்.

    ReplyDelete
  5. திருமாலைப் பற்றிய மதுரை காஞ்சி வரிகள்:−

    *கணங்கொள் அவுணர் கடந்த பொலத்தார்
    *மாயோன்* மேய ஒண நன்னாள்* என்பது.

    *பெரியாழ்வாரின் அமுத வரி*:−

    *ஆணொப் பார்இவன் நேரில்லைகாண் திருவோணத்தான்உல காளும் என்பார்களே* என்பது.

    ReplyDelete