Tuesday, 23 May 2017

முக்தி என்றால் என்ன?

முக்தி என்றால் என்ன?
பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற
சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே
முக்தி எனப்படும். எண்ணிலடங்கா
முற்பிறவிகளில் செயல் செய்த
சேர்த்துவைத்திருக்கும் மிக அதிக அளவிலான
சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள்
ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை
எஞ்சியுள்ள ஆகாமி கர்மங்கள் மூலம்
அதிகரித்து வருகிறோம். எனவே கர்ம பலன்கள்
தீர்ந்து நாம் முக்தி அடைவது என்பது நமது
முயற்சியில்லாமல் தானாக நடை
பெறாது.
பரமனை தெரிந்து கொள்வதால்
மட்டுமே நாம் முக்தியடைய முடியும்.
எப்பொழுது ஞானம் அடைகிறோமோ
அப்பொழுது நாம் சேர்த்து வைத்துள்ள
மொத்த சஞ்சிதகர்மமும் ஆகாமி
கர்மமும் அழிந்து விடும் என்று வேதம் கூறுகிறது.
மேலும் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்தவுடன்
புதிதாக ஆகாமி கர்மம் சேராது.
எஞ்சியிருப்பது ப்ராரப்த கர்மம் மட்டுமே. எனவே
பரமன் யார் என்ற ஞானம் அடைந்தபின் நம்
வாழ்வு ப்ராரப்த கர்மத்தின்
கட்டுப்பாட்டின்படி நடந்து அது தீர்ந்தவுடன்
மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுவோம்.

1 comment:

  1. ஒரு மனிதன் மரித்து சொர்க்கத்திற்குச் சென்றான்.அங்கு சொர்க்க வாசலில் தேவர்கள் நிற்க கண்டான். வாசலில் நின்றவர் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். நீ செய்த எல்லா நன்மையான காரியங்களை குறித்தும் சொல். நான் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களை கொடுப்பேன். அப்படி மதிப்பெண்கள் போடப்பட்டு, 100 மதிப்பெண்கள் ஆனவுடன், நீ சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்று கூறினார்.
    அந்த மனிதர் தான் செய்த நன்மைகளைச் சொல்லத் தொடங்கினார்

    நான் ஒரே மனைவியை உடையவன், அவளோடு 50 வருடம் குடும்பம் நடத்தினேன், அவளுக்கு மனதளவில் கூட நான் துரோகம் செய்ததில்லை என்றார். *அதற்கு 3 மதிப்பெண்கள் என்றார். என்னது 3 மதிப்பெண் தானா? என்று கேட்டுவிட்டு,
    நான் ஒவ்வொரு நாளும் தவறாமல் கோவிலுக்குச் சென்றேன், பல தான தர்மங்கள் தவறாமல் கொடுத்து வந்தேன் என்றார். அதற்கு 1 மதிப்பெண் போடப்பட்டது. என்னது ஒரு மதிப்பெண் தானா? என்று மேலும் கூற ஆரம்பித்தார்.

    நான் வயதானவர்களுக்கென்று, முதியோர் இல்லம் வைத்து, அவர்களை இலவசமாக பராமரித்தேன் என்றார். சரி அதற்கு 2 மதிப்பெண்கள் என்றார். அந்த மனிதர் மிகவும் சத்தமிட்டு இதற்கும் 2 மதிப்பெண் தானா? நான் செய்த நன்மையான காரியங்களுக்கு, இவ்வளவு மதிப்பெண்கள் தான் கிடைக்கும் என்றால் நான் சொர்க்கத்திற்குச் செல்லவே முடியாது.
    அந்த பகவானின் (இறைவனின்) சித்தம் , அவருடைய அருள் இருந்தால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் என்று கூறினார். அதைக்கேட்ட வாசலில் நின்ற தேவர்கள் இப்போது நீ உள்ளே சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்று கூறினார்.

    ஒருவரும் தங்களுடைய நற்செய்கைகளினால் மட்டுமே, சொர்க்கத்தைச் சென்றடைய முடியாது.

    தான தர்மங்களும், இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் பொருத்தனை
    களும்,நம்மை ஒருநாளும் சொர்க்கத்
    திற்குக் கொண்டு சேர்க்காது.

    சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நாம் இறைவனைப் பற்றி அறியும் அறிவால் ஒருவன் உட்பிரவேசித்தால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும். அதாவது இறைவன் திருவருளால் முக்தி அடையலாம்.

    ReplyDelete