Tuesday 23 May 2017

வாழ்க்கை வாழ்வதற்கே!!!

வாழ்க்கை வாழ்வதற்கே!!!
-------------------------------
நாம் அனைவருமே எதிர்காலத்தை எதிர்நோக்கி, எதோ ஒரு இலக்கை முன்வைத்து வாழ்ந்துவருகிறோம். நம் கவனம் முழுவதும் அந்த இலக்கிலேயே உள்ளது. விழித்தாலும், உண்டாலும், உடுத்தினாலும், உறங்கினாலும்...... அந்த இலக்கிலேயே நம் முழுகவனமும் உள்ளது. இது சரியா??? சற்றே சிந்தியுங்கள்!!!
வாழ்க்கை என்றால் என்ன??
வாழ்க்கை என்பது மாண்டுபோன இறந்தகாலமும் அல்ல, கேள்விக்குறியான எதிர்காலமும் அல்ல.
இங்கு, இப்போது நம்மிடம் இருக்கும் நிகழ்கணமே "வாழ்க்கை" எனப்படுவது.
நாம் இக்கணத்திலிருந்து அடுத்த கணத்திற்கு செல்வோமோ இல்லையோ? ஆனால் நம் நிகழ்கணம் சத்தியம்!!!
கடந்தகால நினைவிற்கும் செல்லாமல், எதிர்கால கற்பனைக்கும் ஏங்காமல், நிகழ்கணத்தில் வாழ்வதே "வாழ்க்கை" எனப்படும்.
இப்பொழுது சொல்லுங்கள், நாம் வாழ்கிறோமா??
கட்டாயம் இல்லை. எப்பொழுது நம் மனம், கடந்தகால நினைவிற்கும் செல்லாமல், எதிர்கால கற்பனைக்கும் ஏங்காமல், நிகழ்கணத்தில் வாழத்துவங்குகிறதோ அக்கணமே நாம் வாழத்துவங்கி உள்ளோம் என்று பொருள்!!!

1 comment: