Tuesday 23 May 2017

ஆன்மீகத்திற்கும் உங்கள் மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை!!!

ஆன்மீகத்திற்கும் உங்கள் மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை!!!
--------------------------------------
ஆன்மிகம் என்றாலே அது எதோ ஒரு இந்து மத சம்பிரதாயம் என்ற தோற்றம் இன்றைய சூழலில் உள்ளது. ஆனால் நீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் உங்களின் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லவே இல்லை.
முதலில் ஆன்மிகம் என்றால் என்ன? என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ஆன்மா என்றால் “நான்” (அ) “தான்” என்று பொருள். அவ்வளவே. இதைத்தவிர்த்து வேறு எந்த திவ்விய பொருளும் ஆன்மா என்னும் வார்த்தைக்கு கிடையாது. “தன்னைக் குறிக்கும் சொல்லே ஆன்மா/ஆத்மா” ஆகும். தன்னை அறியும் கலையே ஆன்மிகம் ஆகும். ஆன்மிகம் என்பது உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு கலை. அளப்பரிய அக்கலையை எவ்வாறு ஒரு மத ஜாடியில் அடைப்பது??!!!
ஆன்மிகத்தின் நோக்கம் என்ன??
மனிதனை, தான் வாழும் வாழ்கையை சிறப்பாக, முழுமையாக, அமைதியாக வாழ உதவும் கலையே ஆன்மிகம் ஆகும். மனம் இறக்கும் கலையே ஆன்மிகம் ஆகும். மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும், பிரச்சனைகளுக்கும், துயரங்களுக்கும் அவனவன் மனமே காரணம். மனம் அற்றுப்போனால் அங்கு ஆனந்தம், அமைதி மட்டுமே எஞ்சி நிற்கும்.
ஆன்மிகம் என்பது காவி கட்டுவதோ, காட்டிற்கு ஓடுவதோ, பாலை வீணே கல்லிற்கு ஊற்றுவதோ, இறைவன் அளித்த அருமை பரிசாம் மனித உடலை வருத்தி யாத்திரை செய்வதோ, செப்பிடு வித்தை காட்டுவதோ, ஆண்டவரை வானத்தில் இருந்து இறக்குவதோ.................. அல்ல. இவைகளால் உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
பக்தியோ, ஞானமோ, யோகமோ, வேறு எதுவோ எந்த உக்தியை கையாளுவதால் உங்கள் மனம் அற்றுப்போகிறதோ, அதுவே ஆன்மிகம்!!!
மனம் இறக்கும் கலையே ஆன்மிகம். வேறு எதுவுமே அல்ல.

2 comments:

  1. Very very very good explanation.

    ReplyDelete
  2. எனக்கு சொன்னதுபோல் இருக்கிறது. தலைப்பு அருமை.

    ReplyDelete