Tuesday, 23 May 2017

மனம் அடங்க மூன்று வழி!!!

மனம் அடங்க மூன்று வழி!!!
(பக்தி, யோகம், ஞானம்)
---------------------------------------------
சனாதன தர்மமான நம் ஹிந்து மார்கம் ஏனோ தானோ என்று வடிவமைக்கப்பட்டது அன்று. மனிதனின் பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து, அணைத்து துன்பங்களுக்கும் "மனம்" ஒன்றே காரணம் என்று உணர்ந்த ரிஷிகள், மனதை நாசம் செய்ய நமக்கு தந்த எண்ணற்ற பயிற்சி முறைகளின் வாழ்வியல் நன்னெறியே ஹிந்து மார்கம் ஆகும்.
"மனம் என்னும் மாடடங்கில் தாண்டவகோனே,
முக்தி வாய்த்ததென்று என்னிடடா தாண்டவக்கோனே"
என்று பாடுகிறார் ஒரு சித்தர்.
மனதை கட்டுப்படுத்து. அதன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடு என்று எல்லோரும் கூறுகிறார்கள் சரி. அந்த பாழாய்ப்போன மனதைதான் கட்டுப்படுத்துவது எப்படி?
முதலில் மனம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்.
கடல் அலைகள் போல ஓயாது உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் பற்பல எழுகின்றன. அந்த எண்ணங்களின் கூட்டே மனம். மனம் என்றோர் பொருள் இல்லை. எண்ணங்களே மனம். எண்ணங்களை கட்டுப்படுத்துவேதே மனதை கட்டுப்படுத்துவது.
மனிதனின் மனோபாவத்திற்கு ஏற்ப நம் ரிஷிகள் எண்ணங்களை கட்டுப்படுத்த. நமக்கு முன்று மார்கங்களை வழங்கியுள்ளனர். அவை பக்தி, யோகம், ஞானம் என்பவையே.
*பக்தி மார்கம்:-
பக்தி என்பது இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுவது. பிறந்து சில மாதங்களே ஆன ஒரு சிசு எப்படி அனைத்திற்கும் தன் தாயையே எதிர்நோக்கி இருக்குமோ, இறைவனை மட்டுமே அனைத்திற்கும் ஒரே ஆதரவாக கொண்டு வாழ்வை நடத்துவதே பக்தி. அனைத்தையும் இறைவனாக பார்பதுவே பக்தி. அனைத்தும் இறைவன் ஆதலால், பக்தன் யார்மீதும் கோபப்படவோ பொறாமை கொள்ளவோ மாட்டான். மரணம் முதற்கொண்டு எதைக்கண்டும் அஞ்சமாட்டான். தன் வாழ்வை தீர்மானிப்பது இறைவன் ஆதலால், தன் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்கவோ, முடிவெடுக்கவோ மாட்டான். இவ்வாறு தன்னை முழுமையாக இறைவனுக்கே ஒப்புவிக்கும் பக்தனை "சரனாகதான்" என்பார்கள். இவ்வாறு சரணாகதி மூலம் இறைவனுடன் தன்னை ஐக்கியப்படுத்தினால் சின்தனைகள் ஒழிந்து, மனம் அழிந்து முக்தி பெறலாம்.
*யோகம்:-
"யோகம் என்பது இடைவிடாத முயற்சியின் மூலம் மனதின் எண்ணங்களை கட்டுப்படுத்துவது" என்று பதஞ்சலி மகரிஷி கூறுகிறார்.
இடைவிடா முயற்சியின் மூலம் சிந்தனை அலைகளை கட்டுப்படுத்த முனைவிர்களே யோகிகள். வாசி, குண்டலினி, க்ரியா,............... போன்ற எண்ணற்ற கடுமையான பயிற்சிகளால் பாடுபட்டு மனதின் எண்ணங்களை காடுப்படுதி மனதை வென்ற யோகிகளை "சமாதி நிஷ்டர்கள்" என்பார்கள். அவ்வாறு கடுமையான பல பயிற்சிகள் செய்து, யோகம் பயின்று, மனதை அடக்கி, சமாதி ஸ்திதியை அடைந்தாலும் முக்தி பெறலாம். (சமாதி என்பது மண்ணுக்குள் போட்டு உடலை புதைப்பது அல்ல. எண்ணங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து, மனம் சும்மா இருக்கும் நிலையே சமாதி நிலை ஆகும்)
*ஞானம்:-
கூர்ந்த அறிவால் பிரபஞ்சத்தை நோக்கி சத்தியம் ஏது? அசத்தியம் ஏது? என்று ஆராய்ந்து, இருப்பது அனைத்துமே பிரம்மம் தான். பிரம்மத்தை தவிர்த்து இரண்டாவது ஒன்று சிறிதும் இல்லை. என்று நன்கு தேர்ந்து, எக்கணமும் விழிப்பாக இருந்து மனம் சிந்திக்காதபடி கணத்திற்கு கணம் கவனமாக வாழ்ந்து மனதை அடக்கியவர்களை "ஞானிகள்" என்பார்கள். இவ்வாறு ஆழ்ந்த விசாரனயினாலும், கவனமாய் இருந்து மனம் சிந்திக்காமல் பார்துக்கொல்வதாலும் முக்தி அடையலாம்.
பக்தியின் மூலம் இறைவனுக்கு சரணாகதி செய்வதாலும், யோகம் பயின்று சமாதி நிலை அடைவதாலும், ஞானத்தினால் விழிப்பாய் இருப்பதாலும் மனதை நசித்து முக்தி அடையலாம்.
இளகிய மனம் உடையவருக்கு பக்தியும். விடாமுயற்சி உடைய மனம் கொண்டவருக்கு யோகமும், அறிவுக்கூர்மை உடையவருக்கு ஞான மார்க்கமும் பொருந்தும்.

1 comment: