Monday 26 June 2017

கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழி

கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழிதான் உள்ளது. இருப்பதில், மிக மிக இலகுவானதிலும் இலகுவான வழி இவ்வழி ஒன்றே.
முதலில் இறைவனை அடைதல் என்றால் என்ன??
*இறைவன்:
முதலில் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியது இறைவன் என்பது எங்கோ இருக்கும் ஒரு பொருளோ, ஒரு நபரோ, ஆணோ, பெண்ணோ, அலியோ, அக்ரினையோ, உயர்தினையோ....... அல்ல. இறைவன் என்பது நம் அறிவால் விளங்கிக்கொள்ள வேண்டிய மாபெரும் சத்தியம்!!!
நம் உடல் என்பது ஒரு பொருளாக தோன்றினாலும், சற்றே சிந்தித்தால், பல எண்ணற்ற உயிரணுக்களின்/ செல்களின் ஒருங்கிணைப்பே நம் உடம்பு ஆகும். இதை யாராலும் மறுக்க முடியாது. பல அனந்தகோடி உயிரணுக்கள் ஒன்றிணைந்து உடம்பு என்னும் ஒருபொருள் ஆவது போல, சத்தியத்தில் உள்ள, சூரியன், சந்திரன், நீங்கள், நான், நாய், நரி, மீன், மான், கோள்கள், அண்டங்கள்............ இவை அனைத்தின் ஒருங்கிணைந்த ஒன்றிற்கு அளிக்கும் பெயரே பிரபஞ்சம், இறைவன்,......... என்றெல்லாம். இதை நாம் அறிவால்தான் விளங்கவேண்டும். இதைத்தான் இறைவன் அறிவுஸ்வரூபன் என்பது.
*இறைவனை அடைதல்:
இங்கு நம் அறியாமையை எண்ணி நாம் கட்டாயம் முட்டிக்கொள்ளதான் வேண்டும். இறைவனில் ஒரு பகுதியாக, இறைவனில் ஒரு அங்கமாக, ஏன் இறைவனாகவே இருக்கும் நாம், நம்மை தனி ஜீவன் என்று எண்ணுவது எத்துனை மடமை. நாம் உடலளவில் என்றுமே இறைவனை பிரிந்தது இல்லை. ஏனெனில், உடம்பு முழுமையே வடிவான இறைவனில் ஓரங்கம். ஆனால் நாம் இறைவனில் இருந்து பிரிவது மனத்தால், எண்ணத்தால்.
நான் வேறு, இறைவன் வேறு என்ற எண்ணம் ஒன்றே நம்மை இறைவனிடம் சேராமல் தடுக்கிறது. எண்ணங்கள் ஓய்ந்த நிலையே இறைநிலை ஆகும்.
அந்த எண்ணங்கள் ஓய இரண்டு அவசியம். ஒன்று ஞானம், மற்றொன்று பக்தி.
இவை இரண்டுமே பறவையின் இரண்டு இறகுகளைப்போன்று நமக்கு. ஞானம் என்பது முன்கூரினார் போல, இறைவன் யார்? அவனிடம் இருந்து நாம் எவ்வாறு பிரிகிறோம்? என்று "அறிதல்" (Theory), அறிந்தபடி, எண்ணங்கள் உதிக்காமல் வாழ்வதே பக்தி (Practical) இவை இரண்டில் எதில் தேர்ச்சி அடையாவிட்டாலும் தோல்வியே.
ஞானம் கண்களை போல - நடக்க சரியான பாதையை காட்டும்.
பக்தி கால்களைப்போல - சரியான பாதையில் நடக்கும்.
"பக்தி இல்லா ஞானி முடவன் ஆவான்.
ஞானம் இல்லா பக்தன் குருடன் ஆவான்"
ஆக அறிதலும், நடைமுறை படுத்துதலும் இரண்டும் அவசியம்.
இந்த நவீன யுகத்தில் மனதை கட்டுப்படுத்த எந்த உக்தியாலும் இயலாது. யாதாலும் பயன் இல்லை.
யோகம் பழகினாலும், யோகம் செய்யும் அந்த அரைமணிநேரம் மனம் சும்மா இருக்கும். பிறகு தன் வேலையை துவங்கிவிடும்.
பூஜையும், புனஸ்காரமும்,, தீர்த்த யாத்திரையும், புத்தகம் படித்தாலும்,.............................. அனைத்துமே அவ்வாறே.
ஆனால் மகான்கள் கண்ட எளிய ஒரே வழி "இறைவன் திருநாமத்தை சொல்வது" ஒன்றே.. தியானம் செய்ய, யோகம் பழக, பூசை செய்ய............ தனி நேரமும் இடமும் தேவை. ஆனால் இறைவனின் நாமத்தை கூற இடம் பொருள் ஏவல் ஏதும் இல்லை. எப்பொழுதும் எங்கும் கூறலாம்.
அனைத்தும் அவன் பெயர்களே. ஏதாவது ஒரு பெயரை திரும்பத்திரும்ப கூறுவதால் மனம் தானே நசிக்கும். சிந்தனைகள் தானே குறையும்.
எதைப்பற்றியும் கவலை வேண்டாம். இறைவன் நாமம் கட்டாயம் நம்மை காக்கும்.
இறைநாம ஜபம் ஒன்றே முக்திக்கு ஒரே வழி!!!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அய்யா... வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா... ஞானம் என்ற தலைப்பில்.. எனக்கு அளிக்க ஒரு அற்ப ஆசை. ஆகவே, எனது பதிவை அளிக்கிறேன் அய்யா.

    Tue. 6, Sep. 2022 at 10 42 pm.

    ஞானம்..... !

    ஞானம் என்பதற்கு.... உண்மையறிவு என்று பொருள். தமிழில்.... அது மெய்யுணர்வு எனறு பொருள்.

    உலகத்தின் உண்மை நிலையையும், ஆன்மாவாகிய தனது உண்மை நிலையையும், தலைவனாகிய இறைவனது உண்மை நிலையையும், உள்ளவாறு உணர்தலே.... ஞானம் ஆகும்.

    முப்பொருள்களின் உண்மையை உணர்தலாவது...

    உலகம்.... தனு, கரண, புவன, போகங்கள் என்னும் 4−கூறுகளை உடையதாய்... என்னோடு கூடியிருக் கிறது.

    இவையெல்லாம் நிலையில்லாத ஜடப்பொருள். ஆன்மாவாகிய நான்.... சித்துப் பொருள்.

    இவற்று்க்கெல்லாம் வேறானவன்; மேலானவன். ஆயினும் இவ்வுண்மையை உணராமல், இவற்றின் வயப்பட்டு அதாவது வசப்பட்டு இவையே நான் என்று மயங்கி, இவற்றிற்கு அடிமையாகிக் கிடக்கிறேன். இது எனது உண்மை இயல்பன்று.

    சித்தாகிய நான், சித்தாவாகிய இறைவனைச் சார்ந்து நிற்பதற்கு உரியவன்.

    அவன் அறிவிக்கவே.... எதனையும் அறிகின்றேன்.
    அவன் செய்விக்கவே....எதனையும் செய்கின்றேன்.

    அவனின்றி நான் ஏது ?
    அவனே ! என் வாழ்வுக்கு முதல்.

    துன்பத்தை விளைவிக்கும் இவ்வுலகச் சார்பினின்று விடுபட்டுப் பேரின்பப் பொருளாகிய ... அவனைத் தலைப்பட்டு என்றும் இன்புற்றிருத் தலே... எனது இயற்கை.

    இவ்வாறு.... உணர்ந்து தெளிதலே முப்பொருள் பற்றிய உண்மை ஞானம் ஆகும்.

    சரி... ஞானத்தை யார் தருவது ?

    நூல்களால் பெற முடியுமா ? அல்லது உலக ஆசிரியர் ஒருவர் வழியாகப் பெறக் கூடுமா ? என்றால்....
    உண்மை ஞானத்தை இவ்விரண்டின் வழியாகவும் நாம் பெற முடியாது.

    காரணம்.....!
    உலக அறிவை... நூல்களின் வழியாக நாம் பெறலாம்.

    ஆனால்... உண்மை ஞானம் என்பது.... இவ்வுலகியலை விட்டு நீங்கிப் பெற வேண்டிய ஞானம் ஆகும். இந்த ஞானத்தை உலக நூல்கள் எவ்வாறு தர இயலும்...?

    நூல்கள் என்பது... சொற்களின் கூட்டம். இந்த சொற்கள் எல்லாம் மாயையின் காரியங்கள்.

    மாயை என்பது.... பாசங்களில் ஒன்றாகும். ஆதலால் சொற்கள் மூலமாக வரும் ஞானம்.... பாச ஞானம் ஆகும். இப்பாச ஞானம் நிலையற்றது. அதாவது நீங்கக் கூடியது. அத்தகைய..நிலையற்ற பாச ஞானத்தால், நிலையற்ற பொருள்களை அறிய முடியுமேயன்றி, நிலைத்த மெய்ப்பொருளை அறிய இயலாது.

    நூல்கள்.... அவை ஞான நூல்களேயா யினும், உறுதியான அறிவுத் தெளிவைத் தரமாட்டாது.... பல தரப்பட்ட ஐய உணர்வுகளையே தருவனவாகும்.

    ஒருவன் கடல் நீரை நேரடியாகப் பருகின் அது தாகத்தைத் தணிக்குமா?
    அதுபோல.... ஞான நூல்களை நேரே பயின்றால், அது ஐயங்களைப் பல வகையில் எழுப்புமேயன்றி நமது ஐயங்களைத் தீர்க்காது.

    ஒருவனுக்கு பக்குவம் வந்த காலத்தில், ஞான நூலைப் பயின்றால் கூட... அப்பொழுதும் அவர்க்கு ஞானத்தைத் தராது...!

    ஏனென்றால்....ஒரு மாணவனை... பள்ளியில் சேர்ப்பதற்கும்... படிப்புச் சொல்லித் தருவதற்கும் ஏற்ற பருவம் வந்துவிட்டதாயினும்...படிப்பறிவை மாணவன் தானாகப் பெற்று விட முடியாது. அதுபோல.....
    பக்குவம் வந்தாலும் ஒருவர் தாமாக ஞானத்தைத் பெற்று விட முடியாது...

    அப்போ.... உலக ஆசிரியர் ஒருவர் மூலமாக ஞானத்தைப் பெறலாமோ... எனில் , அவர் அதனைத் தருவதற்கு உரியர் அல்லர்.

    ஏனென்றால்.... ஞானத்தைப் பக்குவம் வராத போது உணர்த்துவதும் குற்றம்... பக்குவம் வந்தவுடன் உணர்த்தாதிருப் பதும் குற்றம் என்று சொல்வர்.

    பக்குவம் வராதபோது.... ஒருவர்க்கு ஞானத்தை உணர்த்துவது வீண். அதனால் யாதொரு பயனும் விளையாது.

    தகுதி பெறாத ஒருவர்க்கு ஞானத்தைத் தருவது.... வயது நிரம்பாத சிறு குழந்தையின் கையில்... பொற் கிண்ணத்தை அளிப்பது போலாகும். காரணம்... குழந்தை, அதன் அருமை தெரியாமல் தூர வீசி எறிந்து விடும்.

    அதுபோலப் பக்குவம் இல்லாதவரும், தாம் கேட்ட ஞானப் பொருளை, ஒரு செவியில் வாங்கி, மறு செவி வழியாக விட்டுவிடுவர்.

    ReplyDelete
  3. சரி... இனிப் பக்குவம் வந்தவர்க்கு ஞானத்தை உணர்த்தாவிடின், பாசத்தி னின்று விடுபட, அவர்க்கு விருப்பம் இருந்தும்... விடுபட மாட்டாதவராய் அவர் மீண்டும் உலக பந்தத்திற்குள் உட்படுவதற்கு ஏதுவாகிடும்.

    பக்குவம் என்பது.... ஆன்மாவின் அறிவில் நிகழ்வது. அது புறத்தே புல்படுவது இல்லை. ,ஒருவர்க்குப் பக்குவம் வந்துள்ளது என்பதையும், பக்குவம் இன்னும் வரவில்லை என்பதையும் நம்மால் அறிய இயலாது.

    ஆசிரியர், அதனை அறியும் வல்லமை உடையவரல்லர், ஆதலால்.... அவர் பக்குவம் வருவதற்கு முன்னேயே... ஞானத்தை உணர்த்தப் புகும் குற்றத்திற்குள்ளாக நேரிடும்.

    அதுபோல.... ஞானம் வந்த பின்னும், அதனைத் தராது இருந்தாலும், அக்குற்றத்திற்கு்ள்ளாக நேரிடும்.

    அதுபற்றியே... உலக ஆசிரியர்மார் ஞானத்தைத் தருவதற்கு உரியரல்லர் என்று சித்தாந்தம் வலியுறுத்துகிறது.

    அப்படியானால்.... ஞானத்தை வேறு எவ்வகையில்...பெறுவது ? எனில்....
    உயிரில் நிகழும் பக்குவத்தை, உயிர்க்குயிராய் உள்ள "இறைவன் ஒருவனே அறிய வல்லன்." அவனே... அப்பக்குவத்தைப் பார்த்தருளி, ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து, ஞானத்தை நல்குவான் என்று சித்தாந்தம் உறுதிபடக் கூறுகிறது.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete