Monday, 26 June 2017

ஓரையை பயன்படுத்தி வெற்றிபெறும் ரகசியம்:

ஓரையை பயன்படுத்தி வெற்றிபெறும் ரகசியம்:
------------------------------------
ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும்நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அக்கிழமையின்ஓரையும் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக ,சனிக்கிழமை சூரியஉதயமானதும் காலை(6-7)&மதியம்(1-2)&இரவு(8-9)=சனி ஓரை.
ஞாயிற்றுக்கிழமை
காலை (6-7 )&(1-2)&(8-9) சூரியன்ஓரை.
திங்கள்கிழமை(6-7)&(1-2)&(8-9)சந்திரன்ஓரை...........கணக்கிடப்படுகின்றன..
ஒரு நல்ல காரியம் செய்ய "அசுப கிரக" ஆதிக்கம் பெற்ற ஓரைகளை தவிர்த்து , "சுப கிரக" ஓரைகளில் அக்காரியத்தை நம் முன்னோர் செய்து வந்தனர்.
பொண்ணு பார்க்க போனால்கூட "சுக்கிர ஓரையில்" போனால் நல்லது நடக்கும்...
ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போது,அந்த நேரம் ராகு காலமா? எமகண்டமா?குளிகை நேரமா?..அன்று என்ன கிழமை ,திதி என்ன,நட்சத்திரம்??? என ஜோதிடரிடம் ஆலோசிக்க வேண்டும்.
எந்த காரியத்துக்கு என்ன ஓரை என கணக்கு இருக்கிறது..
சனி,செவ்வாய்,சூரியன் ஓரைகள் "அசுபஓரை"யாக இருந்தாலும் முற்றிலும் தவிர்ப்பதில்லை.
அரசாங்க காரியம் நடக்க வேண்டும் எனில் "சூரிய" ஓரையில் முயற்சிக்கலாம்.
நெருப்பு,கோர்ட் ,வழக்கு,எதிரி சார்ந்த பிரச்சினைகள் , என்றால் "செவ்வாய்" ஓரையில் செய்யலாம்.
சுபகாரியம் செய்யும்போதும், முக்கியமான விசயம் ஒருவரிடம் பேச முயற்சிக்கும்போதும் ,இப்போது ராகு காலமா,எமகண்ட நேரமா,சுப கிரகத்தின் ஓரையா??? என ஒருமுறை காலண்டரில் கவனிப்பது நல்லது.
சுக்கிரன்,புதன்,குரு ஓரைகள் எல்லா "சுபகாரியங்களுக்கும்" சிறப்பு.
சிலர் மிதுன லக்னத்துக்கு யோகாதிபதி ,லக்னாதிபதி "புதன்"எனில்,"புதன் ஓரை"யையே பயன்படுத்தி வெற்றி பெறுவர்.இவ்வாறு நுணுக்கமாக எல்லோராலும் பார்க்க முடியாது.
அவர்கள் சுக்கிரன்,புதன்,குரு ஓரையை கவனித்தாலே போதுமானது.

1 comment: