Wednesday 14 June 2017

சைவம்

சைவம்
1. சைவ சமயம் என்றால் என்ன ?
சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .(சிவ சம்பந்த முடையது சைவம்).
2. சிவபெருமான் எப்படிபட்டவர் ?
சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் .
3. சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ?
1.படைத்தல் –மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம் ,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.
2.காத்தல் –படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.
3.அழித்தல் – உயிர்களுக்குக் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவைகளை மீண்டும் மாயையில் ஒடுக்குதல்.
4.மறைத்தல் – உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக சிவபெருமான் தன்னை மறைத்து உலகத்தை காட்டல் .
5.அருளுதல் – பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அருளை வழங்கி தன் திருவடியில் சேர்த்தல்.
4.சிவபெருமான் ஐந்தொழில்களையும் எதைக் கொண்டு செய்கிறார் ?
தம் சக்தியாகிய உமாதேவியாரை கொண்டு செய்கிறார்.
5. சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை வகை ?
1.அருவம்- கண்ணுக்கு புலனாகமல் சக்திருபமாய் இருந்து அருளல்(மந்திர ஒலி).
2.அருவுருவம் – முகம் ,கை, கால் ,உறுப்புகள் இல்லாமல் தெரிவது(சிவலிங்கம்) .
3.உருவம் –முகம் முதலிய உறுப்புகளுடன் தெளிவாக தோன்றுவது (25 மகேசுவரவடிவங்கள்).
6.சைவ சமய சாதனங்கள் எவை ?
திருநீறு , திருவைந்தெழத்து , உருத்திராக்கம் .
7. திருவைந்தெழத்து எத்தனை வகைப்படும் ?
. திருவைந்தெழத்து மூன்று வகைப்படும் .
1.தூல திருவைந்தெழத்து –நமசிவாய .
2.சூக்கும திருவைந்தெழத்து – சிவாய நம .
3.காரணதிருவைந்தெழத்து – சிவயசிவ .
8. மணத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?
1.மானதசெபம் ,அகப்பூசை , திலாயம்
9.வாக்கால் செய்யு வழிப்பாடுகள் யாவை ?
திருமுறைகள் ஒதுதல், ஒதுவித்தல் , நாமவளிகூறல் ,வாசகசெபம்.
10.காயத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?
ஆலயம்வலம்வருதல் , திருப்பணிசெய்தல் , நந்தவனம்அமைத்தல் , மாலை தொடுத்தல் ,ஆலயத்தை கூட்டி மெழகிடுதல் முதலியன .
11.இறைவனை அடையும் மார்க்கங்கள் எவை?
1.தாச மார்கம் – இறைவனுக்கு அடிமை பூண்டியற்றும் நெறியான இம்மார்கம் சரியை எனவும் கூறப்பெறும்.
2.சற்புத்திர மார்கம் – மகன் மைநெறி எனக் கூறப்படும் இம்மார்க்கம் கிரியை நெறியாகும் .
3.சகமார்க்கம் – தோழமை நெறிஎனப் பெறும் இம்மார்க்கம் யோகநெறி பாற்பட்டதாகும் .
4.சன்மார்கம் – ஞானநெறி எனப் பெறும் இம்மார்கம் குருசிஷ்ய பாவத்தை உணர்த்துவது .
12.குரு , லிங்க , சங்கம வழிபாடு என்றால் என்ன ?
சிவபெருமான் திருவடி நீழலைச் சென்றடைவதற்குரிய பல மார்க்கங்களில் குரு லிங்க சங்கம வழிப்பாட்டு நெறிகளும் குறிப்பிடத்தக்கனவாகும் .
1.குரு வழிப்பாடு – குருவை தரிசித்தலும் , குருவின் திருநாமத்தைச் செப்புதலும் , உபதேசத்தை கேட்டலும் , அவர் தம் அறிவுரையை சிந்தித்தலும் ஆகும் .
2.இலிங் வழிப்பாடு – சிவபெருமானுடைய அருவுருவமாகிய சிவலிங்கத்தைவழிபடுதலாகும் .
3.சங்கம வழிப்பாடு – சிவனடியார்களை சிவமாகவே கருதி வணங்கி வழிப்படுதல்.
13.தீக்கை என்றால் என்ன ?
சைவகுருமார்களால் ஏனையோர்க்கு அளிக்கப் பெறும் சைவ சமய அங்கீகாரச் சடங்கே தீக்கை ஆகும் .
14. .தீக்கை எத்தனை வகைப்படும் ?’
சமயதீக்கை ,விசேசதீக்கை ,நிர்வாணதீக்கை ,ஆச்சார்யதீக்கை என நான்கு வகைப்படும்.
15.சைவ சமயத்தின் சிறந்த நூல்கள் யாவை?
தோத்திரமும் , சாத்திரமும் சைவத்தின் இரு கண்கள் போன்றது .
16. தோத்திரம் என்றால் என்ன ?
சிவபெருமானின் புகழைப் போற்றித்துதித்து நாயன்மார்களும் அடியார்களும் பாடியுள்ள பாடலகள் தோத்திரம் அல்லது திருமுறைகள் எனப்படும் .
17. திருமுறைகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
திருமுறைகள் பன்னிரன்டு வகைப்படும் , அவை முதலாம் திருமுறைமுதல் பன்னிரன்டாம் திருமுறைவரை பெயர் சொல்லி வ.ழங்கப்படும் .
18.திருஞானசம்பந்தர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
முதல் மூன்று திருமுறைகள்.
திருஞானசம்பந்தர்
19.திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள்.
திருநாவுக்கரசர்
20.சுந்தரர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
ஏழாம் திருமுறைஆகும் .
சுந்தரர்
21.எட்டாம் திருமுறை யாவது யாது ?
திருவாசகமும் , திருக்கோவையாரும் அருளியவர் மாணிக்கவாசகர் .
மாணிக்கவாசகர்
22.திருவாசகத்தின் பெருமை என்ன ?
மாணிகவாசகர் அருள சிவபெருமான் அதனைத்தன் திருக்கரங்களினால் எழதிக் கையொப்பமிட்டுவைத்தவை திருவாசகப்பாடல்கள் .
23.ஒன்பதாம் திருமுறை எதைக் குறிக்கும் ?
திருவிசைப்பா , திருப்பல்லாண்டைக்குறிக்கும் .
24. ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் யாவர் ?
திருமாளிகைத்தேவர் , சேர்ந்தனார் , கருவூர்தேவர் , பூந்துருத்திகாடவநம்பி , கண்டராதித்தர் ,வேணாட்டிகள் , திருவாலிஅமுதனார் , புருடோத்தமநம்பி ,சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் .
25. பத்தாம் திருமுறை யாவது யாது ?
திருமூலர் அருளிச் செய்துள்ள திருமந்திரம் .
26. பதினோராம் திருமுறையாவது யாது ?
சைவ சமயப் பிரபந்தத்திரட்டு என இருபத்திரண்டு வகைசிற்றிலக்கியங்களால் ஆனது .
27. பதினோராம் திருமுறையின் ஆசிரியர்கள் யாவர் ?
திருவாலவாயுடையார் , காரைகாலம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமான்நாயன்னார் , நக்கீரதேவர் , கல்லாடதேவர் , கபிலதேவர் , பரணதேவர் , இளம் பெருமானடிகள் , அதிராவடிகள் , பட்டினத்து அடிகள் , நம்பியாண்டார்நம்பிகள் .
காரைகாலம்மையார்
சேரமான் பெருமான்நாயன்னார்
28.பதினோரம் திருமுறையின் சிறப்பு என்ன ?
தமிழ்சங்கத் தலைமைப் புலவரான சோமசுந்தரக்கடவுள் பாணபத்திரக்காக சேரமன்னுக்கு வரைந்த திருமுகப்பாசுரம் இடம் பெற்றுள்ளது , திருமறைகள் பாடியவர்களில்ஒரேபெண்புலவரான காரைக்கால் அம்மையாரின் பதிகங்களைப் பெற்றது .
29.பன்னிரண்டாம் திருமுறையாவது யாது ? அதை பாடியவர் யார் ?
பன்னிரண்டாம் திருமுறை ‘பெரியபுராணம்’ ஆகும் . இதை பாடியவர் சேக்கிழார் .
சேக்கிழார்
30.சாத்திரங்கள் என்றால் என்ன ? அவை எத்தனை ?
சைவ சித்தாந்த முப்பெரும் உண்மைகளை கூறும் நூல்கள் சாத்திரங்களாகும் அவை பதிநான்கு .
31. பதிநான்கு . சாத்திர நூல்கள் எவை ? அதன் ஆசிரியர் யார் யார் ?
1.திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் .
2.திருக்களிற்றுப்பாடியார் – திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் .
3.ஞானபோதம் – மெய்கண்டார் .
4.சிவஞானசித்தியார் – அருணந்தி சிவாச்சாரியார் .
5.இருபாஇருபது - அருணந்தி சிவாச்சாரியார் .
6.உண்மை விளக்கம் – திருவதிகைமனவாசகம்கடந்தார்.
7.சிவப்பிரகாசம் - உமாபதிசிவம்
8.திருவருட்பயன் - உமாபதிசிவம்
9.வினாவெண்பா - உமாபதிசிவம்
10.போற்றிப்பஃறொடை - உமாபதிசிவம்
11.கொடிக்கவி - உமாபதிசிவம்
12.நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவம்
13.உண்மை நெறி விளக்கம் - உமாபதிசிவம்
14.சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவம்
32.சைவசமயத்தில் சிறந்து விளங்கிய அருளாளர்கள் யாவர் ?
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சைவத்தில் சிறந்த அருளாளர்களாக விளங்கினார்கள் .

46 comments:

  1. அய்யா...வெ.சாமி அவர்களே...!வாவ்...சூப்பர்..என் கண்ணுற்கு இதுவரை புலப்படாமலே இருந்திருக்கிறது...

    ReplyDelete
  2. Wed. 20, July, 2022 at 6.14 pm.

    சைவ சித்தாந்தம்....!

    1) திருமுகப் பாசுரம் - குறிப்பு வரைக ?

    திருமுகம் என்றால்..... கடிதம் என்று பொருள்.

    திருமுகப் பாசுரம் என்பது....

    11−ஆம் திருமுறையில்.... மதிமலி புரிசை மாடக் கூடல் என்று தொடங்கி... மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே... என்று முடியும் மடல் ஆகும்.

    திருமுறைகளில்.... திருப்பாசுரம், திருமுகப் பாசுரம் என்று 2 தலைப்பில் பாடல்கள் உள்ளன.

    திருப்பாசுரம் என்பது...திருஞானசம்பந் தர், மதுரையில் புனல்வாதம் செய்யும் பொழுது... "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்" என்ற பதிகத்தை பாடியருளினார்.

    திருமுகப் பாசுரம் என்பது.... ஆலவாய் அண்ணல் பானபத்திரன் பொருட்டு ... சேரமான்பெருமாள் நாயனாருக்கு வழங்கிய பரிந்துரை மடல் ஆகும்.

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


    2) திருவிசைப்பா − விளக்குக ?

    திருவிசைப்பா... 9−ஆம் திருமுறையில் உள்ள ஒரு பகுதி ஆகும்.

    திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்ற இரண்டும் சேர்ந்தது தான்...ஒன்பதாம் திருமுறை.

    திருவிசைப்பா... பாடல்கள் முழுமையும் இசைப்பாடல்களால் அமைந்தமையால் திருவிசைப்பா எனப் போற்றப் பெற்றது.

    தேவாரத்துள் அமைந்த பண்கள் தவிர, தனியாக சாளரபாணி என்னும் புதுப் பண்ணான...புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம் ஆகிய மூன்று பண்களில் நூற்றிரண்டு இசைப்பாடல்கள் அமைந்துள்ளன.

    குறிப்பு : பஞ்ச புராணம் பாடுபவர்கள்..இவ்விரண்டிலிருந்தும், இரண்டு பாடல்கள் ஓதுவார்கள்.

    *,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*


    3) திருப்பல்லாண்டு ?

    திருப்பல்லாண்டு...ஒன்பதாம் திருமுறையுள் ஒன்றாகச் சேர்க்கப்பட் டது.

    இதனை அருளியவர் ... "சேந்தனார்" என்னும் ஆசிரியர்.

    தில்லையம்பதியில் பாடப்பெற்ற... மன்னுக தில்லை வளர்க நம்பத்தர்கள் என்று தொடங்கும் பாடலோடு 13 −
    பாடல்கள் கொண்டது.

    பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே என முடிவு...பல்லாண்டு கூறுதுமே, பல்லாண்டு கூறுதுமே எனப் பல்லாண்டை மகுடமாகக் கொண்டமையால்... திருப்பல்லாண்டு எனப் பெயர் பெற்றது.

    *.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*


    4) திருமாளிகைத்தேவர் − விளக்கம் தருக ?

    திருவாவடுதுறையில் போகநாதர் என்னும் சித்தர்... ஞானயோக சாதனை செய்து மகிழ்ந்திருந்த காலத்தில்..
    இவருடைய சீடர்களில் ஒருவரான திருமாளிகைத் தேவர்....

    ஒருநாள் காவிரியில் நீராடி, பூசைக் குரிய நறுமலர்களை எடுத்துக் கொண்டு "திருமஞ்சனக் குடத்துடன்" தம் மடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

    எதிரில் பிணப் பறை முழங்க ஒருவரின் உடலைச் சுமந்து வந்தனர்.

    இதைக் கண்டு..திருமாளிகைத் தேவர்.. அனுசிதம் எனக் கருதி அருகில் உள்ள விநாயகரைத் தோத்தரித்துத் திருமஞ்சனக் குடத்தை வானத்தில் வீசி அது அங்கேயே நிற்கும்படிச் செய்தார்.

    விநாயகர் அருளாலும்....இவரது தவ வலிமையாலும்... இறந்தவர் உயிர் பெற்று நடந்து போனார்.

    இத்தகையப் பல அற்புதங்களைச் செய்த இவர் தில்லையம்பதியில் பாடிய 4 பதிகங்கள்... ஒன்பதாம் திருமுறையில் உள்ளது.

    குறிப்பு : போகருடைய சீடர்களில் ஒருவரான கருவூர்த் தேவர் இவரோடு உடனுறைந்தவர் ஆவர்.

    *'*'*'*'*'*'*'*'*'*'*'*'*'*'*'*'*'*


    5) கருவூர்த் தேவர் − குறிப்பு தருக ?

    அந்தணர் குலத்தில் தோன்றிய, யோக சித்தரான கருவூர்த் தேவர்... கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தார். எனவே...அவர் கருவூர்த்தேவர் என்று அழைக்கப்பட்டார்.

    போகமுனிவரிடம் உபதேசம் பெற்று, சித்திகள் பல கைவரப் பெற்ற கருவூர்த் தேவர்...உலகியல் வாழ்வில் புளியம் பழமும், அதன் ஓடும் போல ஒட்டாது வாழ்ந்தவர்.

    தென்பாண்டி நாட்டுத் திருப்புடை மருதூரில் இறைவனிடம் திருவடி தீட்சைப் பெற்றவர்.

    தஞ்சையில்...முதலாம் இராஜராஜன் கட்டத் தொடங்கிய "பெருவுடையார் கோயிலில்... அஷ்டபந்தன மருந்து சாத்தும் பொழுது...இறுகாமல் இருந்தமையால்... அதுகண்டு இவரின் குரு ஆணைப்படி... பொதிகை மலையிலிருந்து தஞ்சை வந்து அஷ்டபந்தன மருந்து இறுகும்படிச் செய்தார். அதனால் இவர் ஒருவகையில் இராஜராஜனுக்குக் குருவானார்.

    கருவூர்த்தேவர் பாடிய பதிகங்கள் பத்து (10) ஆகும்.

    *"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*

    ReplyDelete
  3. 6) ஐயடிகள் காடவர் கோன்-விளக்குக?
    ஐயடிகள் என்பது...ஐயன் அடிகள் என்பதன் மரூஉ ஆகும்.

    காடவர் என்பது... பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப் பெயர்.

    ஆகவே... ஐயடிகள் காடவர் கோன் என்னும் பெயர்... "ஐயன் அடிகளாகிய பல்லவ மன்னர்" என்று பொருள் தரும்.

    11−ஆம் திருமுறையில்... ஐந்நாவது(5) பிரபந்தமாகிய ஷேத்திரத் திருவெண்பா−வை அருளியவர்.

    சுந்தரரால் திருத்தொண்டத் தொகை யில்... "ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் " என்று போற்றப் பெறுகிறார்.

    *:*:*:*:**:*:*:*:*:*:*:*:*:*:*:*:*:*:*:

    7) நக்கீரர்- குறிப்பு வரைக ?

    நக்கீரர்...இவரின் பெயர் "கீரன்" என்பதே.

    11−ஆம் திருமுறையில் ..கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுக்கூற் றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம் போன்ற நூல்களை அருளியவர்.

    திருமுருகாற்றுப்படை நக்கீரர் வேறு.

    ந.. என்பது சிறப்புப் பொருள் தரும் அடைமொழி.

    நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று வாதம் புரிந்து... பின்னர் தன் குற்றம் உணர்ந்தவர்..இந்த நக்கீரர்.

    *!*!*!*!*!*!*!*!*!*!*!*!*!*!*!*!*!*!*

    8) தாதான்மிய சம்பந்தம் என்றால் என்ன ?

    முதற்பொருளாகிய இறைவன், உலக உயிர்களை நோக்காது நிற்கும் தனி நிலையில் "சிவம்" எனவும்....
    அதுவே அருளாய் விரிந்து உலக உயிர்களோடு இயைந்து, ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்கும் நிலையில் "சக்தி" எனவும்... இருநிலைகளில் கூறப்படுவது "தாதான்மிய சம்பந்தம்" ஆகும்.

    இவ்வாறு...ஒருமுதற் பொருளையே.. சிவமும் சக்தியும் என ஒருமையில் இருமையாகக் கண்டு வழிபடுவது... சைவத்தின் சிறப்பு.

    இந்நிலையே.... தாதான்மிய சம்பந்தம் ஆகும்.

    *!.*!.*!*!.*!.*!.*!.*!.*!.*!.*!.*!.*

    9) திருப்பதியம் விண்ணப்பம் ?

    இறைவன்... தேவாரத் திருமுறைகளைக் கேட்டு, மனம் மகிழும் இயல்பினன்.

    "நல்லிசை ஞானசம்பந்தனும், நாவினுக்கரையனும் பாடிய... "நற்றமிழ் மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை" எனச் "சுந்தரர்" கூறி அருளுவதைக் காணலாம்.

    தஞ்சைப் பெரிய கோயிலில்... இராச இராசச் சோழன்... பிடாரர்களை (ஓதுவார்களை) திருப்பதிகம் விண்ணப்பிக்கவும், துணைக்கருவி வாசிக்கவும் நியமித்தான் என்று அம்மன்னனது கல்வெட்டு கூறுகிறது.

    சோழ மன்னர்கள் காட்டிய அம்முறையே இன்று கோயில்கள் தோறும்... தேவாரம் பாடும் ஓதுவார்களை நியமிக்கக் காரணம் ஆயிற்று... எனலாம்.

    *.,*.,*.,*.,*.,*.,*.,*.,*.,*.,*.,*.,*.,*.,*

    10) திருநாவுக்கரசர் தேவாரத்தில் அமைந்துள்ள பண்கள் ?

    நான்காம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பண்கள் பத்து .

    அவை :

    1) கொல்லி −1, 22, 23−வது பதிகங்கள்.
    2) காந்தாரம − ் 2−7 பதிகங்கள்.
    3) பியந்தைக் காந்தாரம்− 8−வது பதிகம்.
    4) சாதாரி − 9−வது பதிகம்
    5) காந்தார பஞ்சமம் − 10−11 பதிகங்கள்.
    6) பழந்தக்கராகம் − 12−13 பதிகங்கள்
    7) பழம்பஞ்சுரம் − 14−15 பதிகங்கள்.
    8) இந்தளம் − 16 − 18 பதிகங்கள்.
    9) சீகாமரம் − 19−20 பதிகங்கள்
    10) குறிஞ்சி − 21வது பதிகம்
    ஆக... கொல்லிப் பண் முதல் குறிஞ்சிப் பண் ஈறாக உள்ள பத்துப் பண்கள்.

    5−ஆம் திருமுறை முழுவதும் "இந்தளப்பண்" வகையாக ஓதப் பெறு கிறது.

    6−ஆம் திருமுறை, திருத்தாண்டகம்...பொதுப் பண்.

    திருநாவுக்கரசரது தேவாரப் பாடல் களில் அமைந்துள்ள பண்கள் ...10 ஆகும். கிடைத்துள்ள பதிகங்கள்.. 312 கிடைத்துள்ள பாடல்கள்.... 3066.

    * 1 பாடல் கொண்ட பதிகம் = 2
    * 2 பாடல்கள் கொண்ட பதிகம் = 5
    * 3 பாடல்கள் கொண்ட பதிகம் = 2
    * 4 பாடல்கள் கொண்ட பதிகம் = 2
    * 5 பாடல்கள் கொண்ட பதிகம் = 1
    * 6 பாடல்கள் கொண்ட பதிகம் = 4
    * 7 பாடல்கள் கொண்ட பதிகம் = 5
    * 8 பாடல்கள் கொண்ட பதிகம் = 6
    * 9 பாடல்கள் கொண்ட பதிகம் =16
    *10 பாடல் கொண்ட பதிகம் = 207
    *11 பாடல்கள் கொண்ட பதிகம் = 56
    * 12 பாடல்கள் கொண்ட பதிகம் = 4
    * 20 பாடல்கள் கொண்ட பதிகம் = 1
    * 30 பாடல்கள் கொண்ட பதிகம் = 1
    ----------
    ஆக... மொத்தம் = 312
    --------------

    *",*",*",*",*",*",*",*",*",*",*",*",*",*",*

    ReplyDelete
  4. 11) இறைவன் மேற்கொள்ளும் மூவகைத் திருமேனிகள் குறித்து எழுதுக ?

    "அருவமும் உருவமும் ஆனாய் போற்றி(போற்றித் திருவகவல்−193) என்னும் திருவாசகப் பகுதி... உருவம், அருவம் என்னும் இரண்டினைக் கூறுகிறது. இவற்றோடு இடை நிற்பதாகிய அருவுருவத்தையும் கொள்ளுதல் வேண்டும்.

    இறைவன்.... உயிர்கள் மெய்யுணர்வு பெறும் பொருட்டு... உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொள்வான் எனவும்....

    மெய்யுணர்வு பெற்றார்க்கு அவன் அறிவே வடிவாய் நிற்பான் எனவும்...
    சைவ சித்தாந்தம் கூறுகிறது.

    உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
    புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ ....(திருப்பூவல்லி−6)
    என இம்மூன்று திருமேனிகளும் சுட்டப் பெறுதலைக் காணலாம்.

    *',*',*',*',*',*',*',*',*'*',*',*',*'*',*',*',*',*


    12) கண்டராதித்தர் ?

    இவர் முதற்பராந்தகச் சோழனுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்து, சோழ நாட்டை ஆண்டவர். இவர் சிறந்த சிவபக்தர். இவரது காலம்.. 10− ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதி. இவரின் மனைவி... செம்பியன்மாதேவி என்று குறிக்கப் பெறுகிறார்.

    தில்லைக்கு ஒரு திருவிசைப்பா பதிகம் பாடியுள்ளார்.

    *:.*:.*:.*:.*:.*:.*:.*:.*:.*:.*:.*:.*:.*:.*


    13) மந்திரம் - விளக்குக ?

    மந்திரம் என்பது... நினைப்பவரைக் காப்பது.

    மந்திரம் என்னும் சொல் தொல்காப்பியர் காலத்தேயே வழக்கிலிருந்தது.

    எது மந்திரம் என்பதை விளக்க வந்த தொல்காப்பியர்...
    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப..
    என்று இயம்பினார்.

    கண்ணால் காணும் அனைத்தையும் திருவருள் வண்ணமாகக் கண்டு,காட்டும் தகுதியுடையோரே.... நிறைமொழி மாந்தர் எனப் பெறுவார்.

    அவர் ஆணையாகச் சொல்லியிருக்
    கும் அருள்மொழிகள் அனைத்தும் மந்திரம் ஆகும்.

    ஐந்தெழுத்து நிலையில் ...
    * நமச்சிவாய என்பது பெருமானின் திருநாமம்.
    * சிவாயநம என்பது பெருமானை எண்ணுதற்குரிய "தியான மந்திரம்".
    * நமசிவாய என்பதை வெளிப்படை யாக ஓதலாம்.
    * சிவாயநம என்பதை மனதிற்குள் தியானித்து உபாசிக்க வேண்டும்.

    ஆகவே தான் மாணிக்க வாசகர்... "நமசிவாய வாழ்க" என்று ஓதக் கற்றுக் கொடுத்தார்.

    நானேயோ தவம் செய்தேன் "சிவாயநம" எனப் பெற்றேன் என்று எண்ணி அருளினார்.

    */:*:/*:/*',:/*:/*:/*/*:/*:/*:/*:/*


    14) கூன்பாண்டியன் பெற்ற இருவினையொப்பு குறித்து எழுதுக ?

    கூன்பாண்டியன் மன்னன்....சமண சமயம் சார்ந்திருந்த பொழுது... அவனை சைவத்திற்கு மீட்க அரசியார் முயன்ற நிலையில்..திருஞானசம்பந்த ரால்.... உடல் வெப்பம் நீங்கத் திருநீறு பூசியருளப் பெறும் பேறு பெற்றான். அந்நிலையில் அவன் இருவினை யொப்பு பெற்றான் என்று சேக்கிழார் குறிக்கின்றார்.

    தென்னவன் மாறன் தானுந் சிவபுரத் தலைவர் தீண்டிப்
    பொன்னவில் கொன்றை யார்தந் திருநீறு பூசப் பெற்று
    முன்னைவல் வினையும் நீங்கி முதல்வனை யறியுந் தன்மை
    துன்னினான் வினைகள் ஒத்துத் துலையென நிற்ற லாலே."


    *-:*-:*-:*-:*-:*-:*-:*-*-:*-:*-:*-:*-:*-:*


    15) பண் பாடும் காலம் குறித்து எழுதுக ?

    * தேவாரத் திருப்பதிகங்களில் காணப் படும் மொத்தப் பண்கள் ...24.

    இவை....3 பண்களாகப் பிரிக்கப் படுகிறது. அவை...
    பகற்பண் , இராப்பண் , பொதுப் பண் ஆகும்.

    பகற் பண் : 12.

    1) புறநீர்மை
    2) காந்தாரம்
    3) பியந்தைக் காந்தாரம்
    4) கெளசிகம்
    5) நட்ட பாடை
    6) நட்ட ராகம்
    7) பழம்பஞ்சுரம்
    8) இந்தளம்
    9) தக்கேசி
    10) காந்தாரப் பஞ்சமம்
    11) பஞ்சமம்
    12) சாதாரி

    இராப் பண் : 9

    1) தக்க ராகம்
    2) பழந்தக்கராகம்
    3) சீகாமரம்
    4) கொல்லி
    5) கொல்லிக் கெளவாணம்
    6) வியாழக் குறிஞ்சி
    7) மேகராகக் குறிஞ்சி
    8) அந்தாளிக் குறிஞ்சி
    9) குறிஞ்சி

    பொதுப் பண்கள் − 3

    1) செவ்வழி
    2) செந்துருத்தி
    3) திருத்தாண்டகம்

    இவையே பண் பாடும் காலம் ஆகும்.


    *~*~*~*~*~*~*~*~*~*~*~*

    ReplyDelete
  5. 16) மாணிக்கவாசகர் காலம் ?

    மாணிக்க வாசகரது காலம்... மூவருக்குப் பிற்பட்டவர் என்று திருமுறை ஆராய்ச்சிப் பேரறிஞர் ..வித்துவான் திரு.க. வெள்ளை வாரணனார் உறுதி செய்துள்ளார். அதற்கு..மணிவாசகர் அருளிய ... திருக்கோவையாரில் ஒரு பாடலைச் சான்று காட்டுகிறார்.

    அப்பாடல்....

    புரங்கடந் தான்அடி காண்பான்
    புவிவிண்டு புக்கறியா(து)
    இரங்கி(டு)எந் தாய்என்(று)
    இரப்பத்தன்
    ஈரடிக்(கு) என் இரண்டு
    கரங்கள்தந் தான்ஒன்று காட்டமற்(று)
    ஆங்கதும் காட்டிடென்று
    வரங்கிடந் தான்தில்லை அம்பல
    முன்றில்அம் மாயவனே.

    இதன் பொருள்....!

    முப்புரங்களை வெற்றி கொண்டவனு டைய திருவடிகளைக் காண்பதற்காக...
    பூமியைப் பிளந்து திருமால் சென்றார்.

    அகங்காரத்தோடு சென்றதால், அங்கு காண முடியவில்லை. அதனால்... தில்லைச் சிற்றம்பலத்தில் புகுந்து... நீயே இரக்கம் காட்ட வேண்டும் எந்தாய் என்று வேண்டிக் கொள்ளத் தன்னு டைய இரண்டு திருவடிகளையும், அவனுக்கு ஒரு திருவடியாகச் சிவபெருமான் காட்டி அருள, மற்றொரு திருவடியையும் காட்டி அருள வேண்டும் என்று திருமால் தில்லையம்பலத்தில் காத்துக் கிடந்தான்..என்பதே இதன் பொருள்.

    ஆனால்...இங்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருள்....

    தில்லை நடராஜர் கோயிலில்... கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி தொடக்கத்தில் இல்லை.

    மூவர் காலத்தில் அங்கு அப்பெருமாளின் கருவறை இல்லை.

    பின்னர்...திருச்சித்திரக்கூடம் என்னும் பெருமாள் சந்நிதியை... திருமங்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்த ... "நந்திவர்மப்பல்லவன்" அமைத்தான்.

    இவனது காலம் 8−ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகும்.

    மணிவாசகர்... மேற்கண்ட பாடல் இறுதி வரியில்
    தில்லைக் கோயிலில் விளங்கும் அம் மாயவனே என மாயோனைக் குறிப்பிடுவதால்... இவரது காலம் 8−ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்ததாகக் கொள்ள முடியாது என்று
    ஆராய்ச்சிப் பேரறிஞர் குறிக்கின்றார்.

    *=;*=;*=;*=;*=;*=;*=;*=;*=;*=;*=;*


    17) திருவாலிஅமுதனார் −குறிப்பு வரைக ?

    திருவாலியமுதனார் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில், சோழநாட்டில் சீகாழிப் பதிக்கு அருகிலுள்ள திருவாலி நாட்டின் தலைநகரான திருவாலி− யில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குரிய பெயரான திருவாலி அமுதனிடம்... இவரது பெற்றோர்கள் அளவிறந்த பக்தி பூண்டமையால் தம் திருமகனார்க்கு... திருவாலியமுதன் என்று பெயரிட்டு அழைத்தனர்.

    இவர் சிவபெருமானிடத்துப் பேரன்பு செலுத்தி அருள் நலம் பெற்று சிவனடி யாராகத் திகழ்ந்தார்.

    தில்லை நடராஜப் பெருமானையே தம் குல தெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

    பெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் தோறும் திருப்பதிகம் பாடிப் பரவி வந்தார்.

    இவர் பெரும்பாலும் சிதம்பரத்திலேயே வசித்து வந்தவர்.

    திருவாலியமுதனார் பாடிய ... "திருவிசைப்பா" பதிகங்கள் ..4 ஆகும்.

    அவை அனைத்துமே.... கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியனவே ஆகும்.

    *-,-*-,-*-,-*-,-*-,-*-,-*-,-*-,-*-,-*-,-*-,*-,-*


    18) திருக்கயிலாய ஞானஉலா விளக்குக ?

    திருக்கயிலாக ஞான உலா நூலை அருளிச் செய்தவர்.... சேரமான்பெருமாள் நாயனார்.

    இந்நூல்... திருக் கயிலாயத்தில் சிவபெருமானின் திருமுன்னிலையில் அரங்கேற்றமான சிறப்புடையது.

    இந்நூலில்...2 திருக்குறட்பாக்கள் பதிவாகி உள்ளன.


    இவ்வுலா...97 கண்ணிகளை உடையது.
    இனிய அழகிய இவ்வுலாவில் அறியத்தக்க செய்திகள் பல.

    அதில் சில... சிவலோகம், சிவபுரம் என்பன திருமுறைகளில் இடம் பெற்றிருக்கிறது.

    சிவலோகம் என்பது...இறைவன் இருந்தருளும் உலகாகும்.

    சிவபுரம் என்பது....இறைவன் அதனுள் எழுந்தருளியிருக்கும் கோயிலாகும்...என.... "சீரார் சிவலோகத் தன்னுட் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயிலுள்ளிருப்ப" என இந்நூலில் வரும் பகுதியால் அறிய இயலுகின்றது.

    *-~*-~*-~*-~*-~*-~*-~*-~*-~*-~


    19) கல்லாடர் − குறிப்பு வரைக ?

    கல்லாடர் பற்றி்...சங்க காலத்தவர், பிற்காலத்தவர் என இரு திறப்படுத்துவர்.

    இவர் "கண்ணப்பத்தேவர் திருமறம்" என்ற ஒரே நூல் அருளியுள்ளார். இது 38 அடிகளைக் கொண்டுள்ளது.

    நக்கீர தேவரும்... கண்ணப்பத் தேவர் திருமறம் அருளியுள்ளார். அவர் பாடல் நெடும் பாட்டு. 158 அடிகளை உடையது.

    "நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
    அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப"
    என்ற தொடர்கள் நக்கீரர் திருமறத்தி லேயே உள்ளன.

    *-",*-",-",*-",*-",*-",-",*-",*-",-",*-",*-"


    ReplyDelete
  6. 20) 11−ஆம் திருமுறையின் தனித்தன்மையை விளக்குக ?

    பதினோராம் திருமுறையில்"அமைந்த நூல்கள் ... 40.

    * பன்னிரு புலவர்கள் பாடிய நூலின் தொகுப்பே...11−ஆம் திருமுறை.
    இது பிரபந்தம் என அழைக்கப்படு கிறது.

    * மதுரை ஆலவாய்ச் சொக்கேசனே திருவாலவாயுடையார்(இறைவன்) ஆவர்.

    * இறைவனின் திருமுகப்பாசுரம் 11−ஆம் திருமுறையின் முதலில் நின்று திருமுறையைத் தொடங்கி வைப்பது இதன் சிறப்பாகும்.

    * ஏனைய திருமுறையில் ஆண் இனத்தவராகிய.. அடியவர் பெருமக்களின் திருவாக்குகளே இடம் பெற்றிருக்க...இத்திருமுறையில்.. தாயக்குலத்தவராகிய "காரைக்கால் அம்மையாரின்" திருவாக்குகள் இடம் பெற்றிருப்பது..குறிப்பிடத் தக்கதாகும்.

    * ஒன்பதாம் திருமுறையில் அருளாளர்
    கள் பலர் அருளிய பல "பதிகத் தொகுப் புகள்" இடம் பெற்றுள்ளன.. ஆனால்... இத்திருமுறையில்.... அருளாளர்கள் பலர் அருளிய... "நூல் தொகுப்புக்கள்" இடம் பெற்றுள்ளன.

    * ஏனைய திருமுறைகளில்... மூத்த பிள்ளையாரைப் பற்றி ஆங்காங்கு வருகிறது. ஆனால் இத்திருமுறை யில்.. விநாயகர் பெருமை பேசும் 3 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

    * ஏனையத் திருமுறையில் ஆங்காங்கும்...இத்திருமுறையில் திருவிடைக்கழித் திருப்பதிக முகமாக முருகன் இடம் பெற்றிருக்க...இத்திருமுறையில் முருகனைப் பற்றிய ஒரு நூலே(திருமுருகாற்றுப் படை) இடம் பெற்றுள்ளது.

    இதுவே...இத் திருமுறையின் தனிச் சிறப்பாகும்.

    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    21) கபிலர் குறித்து எழுதுக ?

    பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திருஅந்தாதி... ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர்.

    கடைச்சங்கப் புலவராகிய கபிலரும், இவருமௌ ஒருவரே எனக் கருதுவோரும் உளர்.

    கபிலர் பற்றிய ஒரு ஆய்வு....!

    விநாயகர் வழிபாடு தமிழகத்தில்
    கி.பி.7−ஆம் நூற்றாண்டின் தொடக்கத்
    தில் தான் பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர் கள் கருதுவதால்... மூத்த நாயனாரா
    கிய விநாயகர் மீது பிரபந்தம் அருளிய இவர் கி.பி.8−ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதே பொருந்தும்.

    மேலும்...;இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன. ஆதலினா லும், இவர் தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலால் இவரும்.. கி.பி.9−ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர்...
    திரு.க.வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

    `,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`,`


    22) தேவாரங்களைச் செப்பேடுகளில் எழுதிய வரலாற்றுச் செய்தியினை விளக்குக ?

    இராசஇராசசோழன் காலத்திலே... தேவாரங்களைக் கண்டெடுத்த போது, சில சுவடிகள் செல்லரித்துப் போய் இருந்தன.

    உடனே... கிடைத்தவைகளைக் கொண்டு... இராசஇராசனும், நம்பி யாண்டார் நம்பியும்.. மூவர் முதலி களின் தேவாரங்களை... ஏழு திருமுறைகளாகத் தொகுத்தனர்.

    இவைகளும் செல்லரித்துப் போகாமல் நிரந்தரமாக இருக்க வேண்டி...குலோத்துங்கனின் படைத் தளபதி யான நரலோகவீரன்− மூவரின் தேவாரங்களைச் செப்பேடுகளில் எழுதி.. தில்லையில் வைத்தனர். இது நடந்த காலம் கி.பி. 1100−ல் எனலாம்.

    =`.=`.=`.=`.=`.=`.=`.=`.=`.=`.=`.=`.=`.=


    23) 9−ஆம் திருமுறையில் மூவர் தேவாரம் பெறாத தலங்கள் எத்தனை?

    ஒன்பதாம் திருமுறையில் தேவாரம் பெற்ற தலங்களுள்.. கோயில்(தில்லை), திருவீழிமிழலை திருவாவடுதுறை, திருப்பூவணம், திருவிடைமருதூர், திருவாரூர் என்னும் ஆறும்.. தேவாரம் பெற்ற தலங்கள்.

    ஏனையது "திருவிசைப்பா" மட்டுமே...பெற்றவை.
    அவை... திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சுரம் திருக் கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத் தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சுரம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சுரம் என்பன.

    இவற்றுள் கோயில் பற்றிய திருவிசைப்பாக்களே பெரும்பாலன. திருப்பல்லாண்டும் கோயில் பற்றியதே.

    ^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^

    24) முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தொகுக்கப் பெற்ற திருமுறைகள் யாவை ?

    மூவர் முதலிகளின் திருப்பதிகங்கள் இராசஇராசசோழன் காலத்தில் கி.பி.1010 − 1014−க்குள் ஏழு(7) திருமுறை களாகத் தொகுக்கப்பட்டன. அவை.. "தேவாரம்" என்று அழைக்கப்பட்டன. இவற்றைத் தொகுத்தது.... நம்பியாண்டார் நம்பி.

    இராசஇராசனின் மறைவிற்குப் பின் அவனது மகனான... இராசேந்திர சோழன் காலத்தில்... 1035 − 1043−க் குள்... திருவாசகம், திருவிசைப்பா, திருமந்திரம் , திருமுகப்பாசுரம் ஆகிய நான்கையும்(4) சேர்த்துப் பதினொரு (11) திருமுறைகளாகத் தொகுத்தனர்.
    இவற்றையும் நம்பியாண்டார் நம்பியேத் தொகுத்தார்.

    '-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'-*'

    ReplyDelete
  7. 25) அநபாய சோழன் ?

    பெரியபுராணத்தில் சேக்கிழார்... சோழ மன்னனைக் குறிப்பிடுகின்றார்.

    தில்லை நடராஜப் பெருமானின்... திருப்பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தவன்.... இரண்டாம் குலோத்துங்கன். இவனுக்கு "அநபாயன்" என்ற பெயரும் உண்டு. அபயன் என ஆராய்ச்சியாளர் கூறுவர்.

    எவ்வாறெனில்....

    சண்டேசர் புராணம் எட்டாம் பாட்டில்...
    "சென்னி அபயன்"குலோத்துங்கச் சோழன் தில்லை திருஎல்லை பொன்னி மயமாக்கிய வளவர்.... புவி காக்கும் மன்னர் பெருமான் "அநபாயன்" என்று சேக்கிழார் கூறுவார்.

    ஆகவே.. அநபாயன் என்பவர் சேக்கிழார் காலத்து மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனே..ஆவார்.

    """""""""""""""""""""""""""""""""""""""""""


    26) தமிழ் இசை பற்றி எழுதுக ?

    தமிழ் இசை என்றாலே... இயல்− இசை− நாடகம் என மூன்று பிரிவுடையதாய் "முத்தமிழ்" எனப் போற்றப் பெறுகிறது.

    முத்தமிழில்... இயற்றமிழ் வளர்ச்சி போல, இசை, நாடகத் தமிழ் வளர்ச்சி பெறவில்லை.

    கி.பி. 7−ஆம் நூற்றாண்டில் தோன்றிய.திருஞானசம்பந்தர், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் பெரும் பணியைச் செய்து பண்டைய தமிழிசைக்குப் புத்துயிர் கொடுத்தார்.

    ஞானசம்பந்தரைத் தொடர்ந்து... அப்பரும் அவர்கள் இருவரைப் பின்பற்றிச் சுந்தரரும் இசைத் தமிழால் இறைவனைப் போற்றி வழிபட்டனர்.

    தேவாரம்... சைவசமய வளர்ச்சிக்கும், தமிழிசையின் மறுமலர்ச்சிக்கும் அடிப் படையாக விளங்கி நின்றது.

    *−,*−,*−,*−,*−,*−,*−,*−,*−,*


    27) சைவ சித்தாந்த முப்பொருள் இயல்பினை முதன் முதலில் விளக்கிய நூல் யாது ? குறிப்பு எழுதுக ?

    சங்க கால இலக்கியங்களிலும்....சங்கம் மருவிய கால இலக்கியங்களி லும்..... சிவபெருமான் வழிபாடும்... சிவபெருமானின் திருவுருவச் சிறப்புக்களும் கூறப்பட்டிருப்பினும்...
    தெளிவாகச் "சிவன்" எனும் சொல் "திருமந்திரத்தில்" தான் முதன்முதலாக ஆளப்பட்டுள்ளது.

    "சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை" என்பது திருமந்திரம்.

    மேலும்.... இறை, உயிர், தளை பற்றிய செய்திகள்... மேற் சொன்ன சங்க நூல்களில் காணப்படினும்....இவற்றை இணைத்துப் பதி, பசு, பாசம் என்னும் மூன்றும் அநாதி என்னும் கருத்தை
    முதன் முதலில் விளக்கிய நூல்.... "திருமந்திரமே" ஆகும்.

    "பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப் போல் பசுபாசம் அநாதி"
    என்பது திருமூலர் வாக்கு.

    ^¬^¬^¬^¬^¬^¬^¬^¬^¬^¬^¬^¬^¬^


    28) இறைவன் ஒன்றாய், வேறாய், உடனாய் இருக்கும் தன்மையைத் திருமந்திரத்தின் வழி விளக்குக ?

    இறைவன்... ஒன்றாய் , வேறாய், உடனாய் இருந்து அருளுவன் என்னும் கருத்தைத் திருமூலர் ஒரு பாடலில் சுருக்கமான சொற்களில் விளக்கு கின்றார்.

    பாடல்....!

    தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
    படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்
    கடந்து நின்றான் கமலம் மலர்மேலே
    உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே.

    இப் பாடலில்...

    * படர்ந்து நின்றான் என்பதில்.... இறைவன் ஒன்றாய் இருக்கும் தன்மையையும்....

    * கடந்து நின்றான் என்பதில்.... அவன் வேறாய் நிற்கும் தன்மையையும்....

    * உடந்திருந்தான்(புணர்ந்திருந்தான்) என்பதில்...அவன் உடனாய் இருக்கும் தன்மையையும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

    படர்ந்து − எங்கும் நிறைந்து.

    உடந்திருந்தான் − ஒன்றிக் கலந்திருந்தான்.(புணர்ந்திருந்தான்).
    இப்படி அமருபவன் திருவடி தொழுதல் பெரும் புண்ணியம் ஆகும்.. என்பதே இப்பாடலின் கருத்து.

    ::~::~::~::~::~::~::~::~::~::~::~::~::

    29) உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் ?

    உலகெலாம் என்று தில்லை ஶ்ரீமந் நடராஜப் பெருமான், சேக்கிழார் சுவாமிகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தார். அதனை முதலாகக் கொண்டு பாடப்பெற்ற நூல் தான் பெரிய புராணம்.

    உலகெ லாம் உணர்ந் தோதற்
    கரியவன்;
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்;
    அலகில் சோதியன்; அம்பலத் தாடுவான்;
    மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

    இப் பாடல்....

    இறைவனின் சொரூப லட்சணத்தை யும்.... தடத்த லட்சணத்தையும் விளக்கு கிறது.

    சொரூப நிலை என்பது.... இறைவனின் தனித்த நிலை.

    அதாவது...உலகைக் கடந்த நிலை.

    தடத்த லட்சணம் என்பது.... இறைவன் உலகிற்கு அருள் செய்ய வரும் நிலை. அது உலகத்தோடு கலந்த நிலை.

    இப்பாடலின் முதல் தொடரில்...

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று.... சொரூப நிலையை விளக்கினார்.

    அப்பெருமானே ! நம் பொருட்டுத் தில்லையில்... ஆடல் வல்லானாக இறங்கி வந்துள்ளான் என்று.... "தடத்த நிலையை" பின்னால் கூறுகின்றார்.


    <>

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  8. Tue. 26, July, 2022 at 2.43 pm.

    சைவ சித்தாந்தம் :

    1) முப்பெரும் புராணங்கள் − குறிப்பு வரைக ?

    முப்பெரும் புராணங்கள் :

    தமிழில்... மிகச் சிறப்பாகப் போற்றப் பெறும் புராணங்கள் ..மூன்று. அவை..
    திருவிளையாடற்புராணம் , கந்த புராணம், பெரிய புராணம்.

    இவை மூன்றையும்.. இறைவனின் மூன்று கண்களுக்கு ஒப்பாகக் கூறுவர்.

    எங்ஙனமெனில்....

    * திருவிளையாடல் புராணம் −இடது கண்− சந்திரனைப் போன்றது.

    * கந்த புராணம் − நெற்றிக்கண்− அக்கினியைப் போன்றது.

    * பெரிய புராணம்−வலது கண்− சூரியனைப் போன்றது.

    காரணம் என்னவெனில்...

    சந்திரன் மரபில் தோன்றிய பாண்டியர் கள் ஆட்சி செய்த மதுரையை இடமாகக் கொண்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களைக் கூறுவது... திருவிளையாடல் புராணம். ஆகவே..அது இடது கண். சந்திரனைப் போன்றது.

    * சூரியன் மரபில் உதித்த சோழர்கள் மரபில் தோன்றிய... அநபாயசோழ னின்... வேண்டுகோளுக்கு ஏற்ப எழுதப்பட்டது... பெரிய புராணம். ஆதலின்..அது வலக்கண். சூரியன் போன்றது.

    * நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய...கந்தனின் அருள் வரலாற்றைக் கூறுவது... கந்த புராணம். ஆகவே...அது நெற்றிக் கண். அக்னி போன்றது.

    இவையே முப்பெரும் புராணங்கள் ஆகும்.

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


    2) திருவிளையாடற் புராணம் ?

    திருவிளையாடல் :

    ஆலவாய்ப் பெருமான்...மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் மதுரையம் பதியில்.... ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுச் செய்தருளிய..அறுபத்து நான்கு(64) திருவிளையாடல்களையும்
    நன்கு விளக்கிக் காட்டுவதே... திருவிளையாடற் புராணம் ஆகும்.

    இப்புராணத்தை தமிழ் பாடிச் சிறப்பித் தவர்... "பரஞ்சோதி முனிவர்"ஆவர்.

    இது முருகப் பெருமானால்... அகத்தியருக்கு அருளப் பெற்று, பின்னர் அகத்தியரால்..பிற முனிவர் களும் அறிந்து...ஶ்ரீசொக்கலிங்கப் பெருமானை வழிபட்டுப் பூசித்துப் பேறு பெற்றமையைக் கூறுவதாகும்.

    இதுவே திருவிளையாடற் புராணம் ஆகும்.

    < < < < < < < < < < < < < < < < < <


    3) திருவிளையாடல் புராணம் கட்டமைப்பினை விளக்குக ?

    திருவிளையாடல் புராணக் கட்டமைப்பு :

    சிவபெருமான் நிகழ்த்திய திருவிளை யாடல்கள் − 64 ஆகும்.

    அதாவது... இந்திரன் பழிதீர்த்த படலம் தொடங்கி... வன்னியும், கிணறும், இலிங்கமும் அழைத்த படலம் வரை... 64 -படலங்கள் உள்ளன.

    படலங்கள் என்பது...தனித்தனிப் பிரிவான அமைப்பினைக் கொண்டது.

    படலங்கள் பல சேர்ந்தது....காண்டம் எனப் பெயர் பெறும்.

    மதுரையின்... மூன்று பெயர்களை வைத்து.... மதுரைக் காண்டம், கூடற்காண்டம், ஆலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது....இந்நூல்.

    இதுவே... திருவிளையாடற்புராணம் கட்டமைப்பாகும்.

    > > > > > > > > > > > > > > > > > >


    ReplyDelete
  9. 4) கல்லாலின் புடையமர்ந்து எனத் தொடங்கும் பாடல் எந்த நூலில் உள்ளது ? இதன் கருத்தை சுருக்கி வரைக...?

    கல்லாவின் புடையமர்ந்து பாடல் :

    கல்லாலின் புடையமர்ந்து எனத் தொடங்கும் பாடல்.... தட்சினாமூர்த்தியின் துதி ஆகும்.

    இறைவன்...கல்லாலின் கீழ் இருந்து நான்கு முனிவர்களுக்கும் உபதேசம் செய்தமையைக் கூறுவது.

    அவர்கள் நால்வரும்... நான்மறைகளி லும், ஆறு அங்கங்களிலும் நன்கு தேர்ந்தவர்கள்.

    அவர்களுக்கு உபதேசம் செய்யும் போது... தன் சந்நிதானத்தில், இருந்த தன்னை இருந்தபடிக் காட்டியருளி
    னார். அங்கு மெளனமே உபதேசமாக விளங்கியது. அத்தகையக் கல்விக் கூடம் அது. இதைத்தான் அவர் சொல்லாமல் சொல்கிறார்.

    பாடல்.....

    "கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
    ஆறுஅங்கமுதற் கற்றகேள்வி
    வல்லார்கள் நால்வருக்கம் வாக்கிறந்த
    பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
    எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
    இருந்தபடி இருந்து காட்டிச்
    சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
    நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்"

    இதன் பொருள்....

    அவரை நினையாமல் நினைந்து என்றால்...அவன் அருளாலே அவன்தாள் வணங்குதல்,...

    பவத்தொடக்கை வெல்வாம் என்றால்...
    பிறவிப் பிணியை வெல்வோம் என்பது பொருள்.

    இப்பாடலைக் கேட்ட நால்வர்... சனகர்,சனந்தரர், சனாதரர், சனற்குமாரர் என்போர் ஆவர்.

    இதுவே... கல்லாலின் புடையமர்ந்து எனத் தொடங்கும் பாடலின் கருத்து ஆகும்.

    \,\,\,\,\,\,\,\,\,\\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,


    5) மெய்ப்போத இன்பம் ?

    மெய்போத இன்பம் :

    பரமசிவம் என்பது... மேலான பரம்பொருள் ஆகும்.

    இவரின் சந்நிதானத்தில் தான்.. மூவர்களாகிய... பிர்மா, திருமால், ருத்திரன்...ஆகியோர் முத்தொழில் புரிகின்றார்கள்.

    இப்பெருமானின் திருவிளையாடல் களை எண்ணிப் போற்றி, நம் வினையை வெல்வோம் என்று ஆசிரியர் கூறுகின்றார்.

    ஒரு அற்புதமான விளக்கத்தையும் தருகிறார். இப்பெருமான்... உண்மை,அறிவு, ஆனந்தம் என்னும் மூன்றுமாக இருப்பவர்.

    எவ்வாறெனில்....

    சத்து + சித்து + ஆனந்தம் = சச்சிதானந்தம் என்று கூறுவர்.

    இதைத் தான் இவ்வாசிரியர்... மெய், போதம், இன்பம் என்று கூறுகின்றார்.

    மெய் என்றால் உண்மை.
    போதம் என்றால் அறிவு.
    இன்பம் என்றால் ஆனந்தம்
    என்கிறார்.

    இந்நிலை... பூ , வண்ணம் , பூவின் மணம் போல அமைந்துள்ளது.

    பூவையும், பூவின் வண்ணத்தையும், பூவின் வாசனையையும்... பிரிக்க முடியாதது போல... மெய்ப்போத இன்பத்தைப் பிரிக்க முடியாது என்கிறார்.

    இப்பாடல்....

    "பூவண்ணம் பூவின்மணம் போலமெய்ப் போதஇன்பம்
    ஆவண்ணம் மெய்கொண்டவன் தனவலி ஆணைதாங்கி
    மூவண்ணல் தன்சந்நிதி முத்தொழில் செய்ய வாளா
    மேவண்ணல்அன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்"

    இவ்வாறாக....மெய்ப்போத இன்பம் தொடரின் விளக்கத்தை நூலாசிரியர் விளக்குகிறார்.

    ௦>௦>௦>௦>௦>௦>௦>௦>௦>௦>௦>௦>௦


    6) இந்திரன் பழி தீர்த்த படலம் ?

    இந்திரன் பழி தீர்த்த படலம் :

    முன்னொரு காலத்தில்... தேவேந்திரன் சொர்க்கலோகத்தில்... அரியணையின் மேல் அமர்ந்திருந்தான்.

    அப்பொழுது தேவமகளீர்கள்.. ஆடல், பாடல் புரிந்தனர்.

    அம்மையலில் மயங்கி இருந்த பொழுது... குருவாகிய வியாழ பகவான் அங்கே வந்தார்.

    இவன் அவரைக் கண்டு, இருக்கையை விட்டு எழுந்திருக்காமல், அவர் திருவடியில்...வழிபடாமல் வாளா இருந் தான்.

    அது கண்ட அவர் மெளனமாக வெளியேறி விட்டார்.

    அதுவே அவனுக்குத் தீராத பழியாயிற்று.

    இதுவே... இந்திரன் பழி தீர்த்த படலத்தில்... இந்திரன் செய்த குற்றம் ஆகும்.

    <¢>¢>¢>¢>¢>¢>¢>¢>¢>¢>¢>¢>

    ReplyDelete
  10. 11) மதுரை, நான்மாடக் கூடலானது விளக்குக ?

    மதுரை நான்மாடக் கூடல் :

    "வன்றில் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
    மின்திகழ் சடையினின்று நீங்கிய மேக நான்குங்
    குன்றுபோல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
    அன்றுநான் மாடக்கூடல் ஆனதால் மதுரை மூதூர்"

    இப்பாடலின் விளக்கம்....

    அபிடேகப் பாண்டிய மன்னன் ஆட்சியில்... வருணன் மதுரையை அழிப்பதற்காகக் கடலை ஏவினான்.

    சிவபெருமான் திருவருளால் கடல் வற்றியது. அதனால் கோபம் கொண்ட வருணன், மேகங்களை ஏவி, மதுரையை அழிக்கத் தூண்டினான்.

    அப்பொழுது, மதுரையை ஆண்ட அபிடேகப் பாண்டியன்...பெருமானிடம் சென்று, எங்களைக் காக்க வேண்டும் என்று முறையிட்டான்.

    பெருமான் நான்கு மேகங்களையும் ஏவி நீங்கள் இம்மதுரைப் பதியின் நான்கு எல்லைகளையும் சூழ்ந்து,, நான்கு மாடங்களாகிக் காத்து வருக என்று ஆணையிட்டார்.

    அதனால் வருணன் ஏவிய மேகங்கள், மழை பொழிந்தாலும், மதுரை அழியாமல் காக்கப்பட்டது.

    அன்றிலிருந்து... மதுரை நான்மாடக் கூடல் என்னும் பெயர் பெற்றது.

    இதுவே...நான்மாடக் கூடலின் விளக்கம் ஆகும்.

    <,<<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,


    12) எல்லாம் வல்ல சித்தர் - குறிப்பு வரைக ?

    எல்லாம் வல்ல சித்தர் :

    அபிடேகப் பாண்டியனும், பாண்டிய நாட்டில் உள்ளவர்களும், இம்மை மறுமைக்குரிய எல்லா நலன்களையும் அடையும் பொருட்டு, மதுரை அண்ணல் எல்லாம், வல்ல சித்தராகத் திருவேடம் கொண்டருளினார்.

    நெற்றியில் திருநீரும், திலகமும் தரித்திருந்தார். திருச்செவிகளில் குண்டலங்கள் அணிந்திருந்தார். படிகமாலை திருமிடற்றிலும், திருமார்பில் பூணூலும் அணிந்திருந்தார். புலித்தோல் ஆடையும், வேதமாகிய கிங்கிணியும், சிலம்பும் தரித்திருந்தார்.

    ஞானானந்தமாகிய புன்முறுவலோடு காட்சி தந்தார். இவர் பல சித்து வேலைகளைச் செய்தார். நான்கு திசைகளிலும் திடீரென்று தோன்றி மறைவார். இன்னும் பல புரிவார்.

    மதுரை திருக்கோயிலில் இன்றும் சித்தர் சந்நிதி உள்ளது.

    இதுவே எல்லாம் வல்ல சித்தரின் குறிப்பாகும்.

    ௨௨௨௨௨௨௨௨௨௨௨௨௨௨


    13) இராஜசேகர பாண்டிய மன்னன் − குறிப்பு வரைக ?

    இராசசேகர பாண்டிய மன்னன் :

    இராசசேகர பாண்டிய மன்னன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த காலத்தில், 63−கலைகளையும் கற்றுத் தேர்ந்து இருந்தான்.

    ஆனால்... பரதக் கலையை மட்டும் பயிலாது இருந்தான்.

    காரணம்.... வெள்ளியம்பலத்தில் ஆடல்வல்லான் ஆடி அருள்வதால்... அப்பரதக் கலையைக் கற்க வேண்டாம் என்று பக்தியுடன் இருந்தான்.

    அப்பொழுது, சோழ நாட்டைக் கரிகால் பெருவளத்தான் ஆண்டு வந்தான். அவன் 64 கலைகளிலும் தேர்ந்தவன்.

    ஒருமுறை சோழ நாட்டிலிருந்து வந்த புலவன் ஒருவன்...எங்கள் மன்னனுக்கு 64 கலைகளும் வரும், உங்களுக்கு ஒரு கலை வராதோ என்று கேட்டான்.

    அதனைக் கேட்ட இராஜசேகரப் பாண்டி யன் வருந்தாது... இதுவும் எம்பெருமான் திருவருள் என்றும் பரதக் கலையைக் கற்க... இறைவன் இவர்மூலம் என்னைத் தூண்டுகிறான் என்றும், பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டான்.

    அப்புலவருக்குப் பரிசுப் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து அனுப்பி விட்டுப் பரதக்கலையை கற்கத் தொடங்கினான்.

    இவன் பொருட்டுத் தான் இறைவன் கால் மாறி ஆடினார்.

    இதுவே... இராசசேகர பாண்டிய மன்னனைப் பற்றியதான குறிப்பாகும்.

    &&&&&&&&&&&&&&&&&&&&


    14) அங்கம் வெட்டின படலம் சுருக்கி வரைக ?

    அங்கம் வெட்டின படலம் :

    குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், வாட்பயிற்சியைக் கற்பித்து வந்த ஒருவன், சிறந்த புகழோடும், இறைவனை வணங்கும் பக்தியோடும் வாழ்ந்து வந்தான்.

    அவனிடம் பல இளைஞர்கள் வாள்வித்தை பயின்றனர். அம்மாணவர்களுள் ஒருவன் "சித்தன்" என்பவன். ஆகூழால் வாள்வித்தை யில் சிறந்து விளங்கினான். அதனால் அவன் நன்கு மதிக்கப்பட்டான்.

    அவ்வுணர்வில் ஆசிரியருக்கு எதிராக ஒரு வித்தைக் கூடம் அமைத்துப் பலருக்கும் வித்தை பயிற்றுவித்தான்.

    இந்நிலையில்...தான் ஒருவனே இவ்வூரில் இருந்தால்... தனக்கு வருமா னம் கூடுமே என்று கருதி...ஆசிரியரை அவ்வூரில் இருந்து வெளியேற்ற எண்ணினான்.

    ஆகவே...ஆசிரியரிடம் பயிலும் மாணவர்களைத் தன்னிடம் வருமாறு அழைத்தான். ஆசிரியருக்கு பெரிதும் இடையூறு செய்தான். ஆசிரியரின் மனைவியைக் கெடுக்க எண்ணினான். அவள் தன் கணவனுக்குத் தெரிவிக் காமல், "சோமசுந்தரக் கடவுளிடம் உள்ளுக்குள் முறையிட்டு அழுதாள்.

    சோமசுந்தரக் கடவுள் வாள் வீரராக வந்து, சித்தனைப் போருக்கு அழைத்து அவன் கைகளை வெட்டி, ஒவ்வொரு அங்கமாக வெட்டித், தலையையும் வெட்டி அருளினார்.

    இதுவே... அங்கம் வெட்டின படலம் ஆகும்.

    <*> <*> <*> <*> <*> <*> <*>


    ReplyDelete
  11. 15) மாயப் பசுவை வதைத்த படலம் குறிப்பு வரைக ?

    மாயப் பசுவை வதைத்த படலம் :

    அனந்த குணபாண்டியன் ஆட்சியில், சமணர்கள் தங்களால் பல நிலைகளில் வெற்றி பெற முடிய வில்லை என்று கருதி, ஒருங்கு கூடி.. நாம் ஒரு பசுவை உண்டு பண்ணு
    வோம். அவர்கள் அப்பசுவிற்குத் தீங்கு செய்ய மாட்டார்கள்; அப்பசுவைக் கொண்டு அவர்களை அழிப்போம் என்ற முடிவு எடுத்தார்கள்.

    பாவிகளாகிய அவர்கள் கொடிய வேள்வி ஒன்று செய்து...மாயப்பசு வடிவில் ஓர் அவுணனைத் தோற்றுவித்தனர்.

    அம்மாயப்பசு மதுரையை அழிக்க ஓடி வந்தது. பாண்டியனும், மக்களும் இறைவனை வேண்டினர்.

    அப்பொழுது இறைவன் ரிஷப நந்தியை அழைத்து, நீ சென்று அக்கொடிய பசுவை வென்று வருவாயாக என்று ஆணையிட்டார்.

    நந்தி பசுவிடம் சென்று பல போர் புரிந்து, கடைசியில் தன் அழகிய தோற்றத்தைக் காட்டப் பசு அதில் மயங்கி, வலிமை இழந்து வீழ்ந்தது.

    அது மலை வடிவாயிற்று. அதுவே மதுரைக்கு அருகில் உள்ள பசுமலை என்று, இன்றும் திகழ்கின்றது.

    ¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢


    16) உலவாக்கிழி − விளக்கம் தருக ?

    உலவாக்கிழி விளக்கம் :

    குலபூஷண பாண்டியன், சோமவார விரதம், அஷ்டமி, சதுர்த்தசி முதலான விரதங்களை வழுவாது அனுஷ்டித்து வந்தான்.

    அச்செருக்கினால் தன் நாட்டிலுள்ள மறையவர்களை அவமதித்தான். அதனாலே மழை வளம் குன்றியது. விளைவும் குன்றியது. அந்தணர்கள் வறுமையில் உழன்று வேதம் ஓதுதலை இழந்தனர். வேள்வி செய்வதைக் கை விட்டனர். வேற்று நாடுகளுக்குச் சென்றனர். மக்களும் பசியால் வருந்தினர்.

    இதுகண்ட மன்னன், சுவாமியிடம் முறையிட்டான். சுவாமி இவன் குற்றத்தை மனதில் கொண்டு வாளா இருந்தார். அந்நிலையில் பாண்டியன் செய்வதறியாது அரண்மனைக்குச் சென்று,சிவபெருமானைச் சிந்தித்த வண்ணம் தரையிலே படுத்து உறங்கினான்.

    இறைவன் மனம் இரங்கி வேதமே நமது ஆசனம். வேதமே நமது பாதுகை.
    வேதமே நமது ஊர்தி முதலான பல கருத்துக்களை அருளி, நீ அந்தணர்களை மதிக்க மறந்ததால் மழைவளம் குன்றியது. அவர்களைப் போற்றி வேள்வி செய்ய உதவுக என்று கூறியருளிப் "பொற்கிழி" ஒன்றைத் தருகின்றோம் அதனை எடுத்து வறுமையை போக்கிக் கொள்க என்று அருளினார். இதுவே எடுக்க எடுக்கக் குறையாத உலவாக்கிழி ஆகும்.

    உலவாக்கிழி என்றால்.. எடுக்க எடுக்க் குறையாதது..என்று பொருள்.


    <, <, <, <, <, <, <, <, <, <, <, <, <, <, <,


    17) குழந்தைக்குச் செய்யும் பருவ ரீதியான சடங்குகளைப் பரஞ்சோதி யார் வழி நின்று விளக்கு ?

    பருவ ரீதியான சடங்குகள் :

    குழந்தை வளரும் தோறும் ஒவ்வொரு பருவ வளர்ச்சிக்கு எனச் சடங்குகள் உள்ளன.

    சந்தி மிதித்தல் , குழந்தையைக் கோயிலுக்கு முதல் முதலாகத் தூக்கி செல்லுதல் ( பிரவாசக் கிரியை), உணவு ஊட்டும் கிரியை (அன்னமங் கலம்) , கேசவினை (முடி இறக்கும் கிரியை) இவை குறித்த விளக்கங்கள் உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலத்துள் உள்ளன.

    இவ்வாறு... குழந்தைக்குச் செய்யும் பருவ ரீதியான சடங்குகளை பரஞ்சோதியார் விளக்குகிறார்.

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

    ReplyDelete
  12. 18) அடியார்க்கு நல்லான் என்பவனின் இயல்பை எழுதுக ?

    அடியார்க்கு நல்லானின் இயல்பு :

    மதுரையம்பதியில் வேளாளர் குலத்தில் அடியார்க்கு நல்லான் என்னும் பெயரில் ஒருவன் வாழ்ந் தான். அவன் சிவனடியார்களுக்கு இனிய தொண்டுகள் புரிந்து வந்தான். அதனால் இக்காரணப் பெயர் பெற்றான்.

    அடியார்க்கு நல்லார் என்பது... இறைவனின் திருப்பெயர் ஆகும்.

    கருவூரார் ஆனிலை அண்ணலார் அடியவர்க்கு நல்லதே என்பது திருஞானசம்பந்தர் தேவாரம் ஆகும்.

    இவனுடைய மனைவியின் திருப்பெயர் தருமசிலை என்பதாகும்.

    இருவரும் மனம் ஒப்பி அடியார்களுக் குத் தொண்டு புரிந்து வந்தனர். வறுமை வந்தபோது .... பெருமான் திருவருளால் உலவாக்கோட்டை பெற்றனர்.

    உலவாக்கோட்டை என்பது.... எடுக்க எடுக்கக் குறையாத.... "அரிசிக் கோட்டையாகும்".

    இதுவே.... அடியார்க்கு நல்லான் என்பவனின் இயல்பாகும்.


    <©<©<©<©<©<©<©<©<©<©>


    19) பாண்டிய மன்னன் இறைவனை பிரம்பால் அடித்தான்− அவனே இதனைக் கூறி வருந்தும் நிலையை விளக்குக ?

    பாண்டிய மன்னன் இறைவனை பிரம்பால் அடித்ததை நினைத்து வருந்தும் நிலை :


    "அடையாளம் பட ஒருவன் அடித்த கொடுஞ் சிலைத்தழும்புந்
    தொடையாக ஒரு தொண்டன் தொடுத்தெறிந்த கல்லும் போல்
    கடையானேன் வெகுண்டடித்த கைப்பிரம்பும் உலகம்எல்லாம்
    உடையானே ! பொறுத்ததோ உன் அருமைத் திருமேனி."

    அதாவது.. அர்ச்சுனன் வில்லால் அடித் ததும், சாக்கியநாயனார் கல்லால் அடித்ததும்போல... நான் பிரம்பால் அடித்தலையும், தங்களின் திருமேனி பொறுத்துக் கொண்டதோ ? என்று பாண்டியன் வருந்தினான்.

    இதுவே... பாண்டிய மன்னன் கூறி வருந்தும் நிலை ஆகும்.


    ¢<¢<¢<¢<¢<¢<¢<¢<¢<¢<¢<¢<¢<¢


    20) கரிக்குருவிக்கு உபதேசித்த படலம்?

    கரிக்குருவிக்கு உபதேசித்த படலம் :

    சுகுண பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நாடு செழித்து இருந்தது. வலிமை மிக்க ஒருவன்.. முற்பிறவியில் நல்லறமே செய்து... சிறிது பாவம் செய்தமையால்..இப்பிறவியில் கரிக்குருவியாகப் பிறந்தான்.

    அவன் நாட்டிற்குள் இருந்தபொழுது காகம் போன்ற பிற பறவைகள் அக் குருவியைத் துன்புறுத்தின. அதனால் பயந்த அக்குருவி காட்டிற்கு ஓடிச் சென்று, ஒரு மரத்தில் அமர்ந்தது.

    அங்கு ஒரு முனிவர்.....மூர்த்தி என்றால் சோமசுந்தரக் கடவுள்; தீர்த்தம் என்றால் பொற்றாமரை; தலம் என்றால் மதுரை...இத்தகைய மூன்றும் அமைந்த சிறப்பு இத்தலமாகும்..இவற்றை வழிபட்டால் எல்லாத் துன்பங்களும் நீங்கும் என்று கூறிக் கொண்டு இருந்தார்.

    அதனைக் கேட்டுக் கொண்டிருந்த கரிக்குருவி, ஓடிச் சென்று தலத்தை அடைந்து, தீர்த்தத்தில் மூழ்கா கடவுளை வணங்கியது.

    சோமசுந்தரக் கடவுள் மார்க்கண்டே யனைக் காப்பாற்றிய... ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார்.

    கரிக்குருவியைப் பார்த்து.... உனக்கு
    என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    கரிக்குருவி உடனே.... எல்லாப் பறவைகளையும் விட நான் வலியவனாக விளங்க வேண்டும் என்றும்... இம்மந்திரத்தை எல்லாப் பறவைகளும் கேட்டு உய்தல் வேண்டும் என்றும் கேட்டது.

    அன்று முதல் கரிக்குருவி பறவைகளுக்கு எல்லாம் வலியவனாகி வலியான் என்னும் பெயர் பெற்றுச் சில ஆண்டுகள் வாழந்து, இறைவன் திருவடி அடைந்தது.

    இதுவே... கரிக்குருவிக்கு உபதேசித்த படலம்...ஆகும்.


    <,£<£,<£,<£,<£,<£,<£,<£,<£,<£,<£,>


    21) பலகை இட்ட படலம் ?

    பலகை இட்ட படலம் :

    பாணபத்திரன் சோமசுந்தரக் கடவுள் மீது பேரன்பு கொண்டு, அர்த்த யாமத்திலும் சென்று வணங்கி ரிஷப தேவருக்குப் பின்புறத்தில் நின்று கொண்டு பாடிவரும் நியமம் கொண்டார்.

    அவர் கொண்டுள்ள பெரும் பக்தியை உலகிற்குக் காட்டப் பெருமான்...இரவில் பெரும் மழையைப் பெய்வித்தார்.

    ஆனாலும்கூட பாணபத்திரன் மழையிலும் நனைந்து கொண்டு பாடும் பணியைத் தொடர்ந்தார்.

    இறைவன், அவர் மீது கருணை கொண்டு, நவமணிகள் இழைத்த பொற்பலகை ஒன்றையிட்டு, அதன் மேல் நின்று பாடுக என்று ஆணையிட்டு அருளினார்.

    பாணபத்திரன்...பெருமான் ஆணையை மறுத்தற்கு அஞ்சி அதன் மேல் ஏறி நின்று பாடினார்.

    விடிந்ததும் , நாட்டை ஆண்ட வரகுண பாண்டியன் இச்செய்தியைக் கேட்டு, பாணபத்திரரை அழைத்து அப்பலகையில் அமர வைத்து, வேண்டும் பரிசுப் பொருள்களை வழங்கி.... "இவரே எங்கள் நாயகன்" என்று போற்றி மகிழ்ந்தான்.

    இதுவே, பலகை இட்ட படலம்...ஆகும்.


    %*%*%*%*%*%*%*%*%*%*%*%*%*%

    ReplyDelete
  13. 22) பிராட்டியார் திருமணத்தில் இறைவனும் இறைவியும் இருந்தது அத்துவிதத் தன்மையைக் காட்டுவது− என்பதை விளக்கு ?

    அத்துவிதத் தன்மை :

    பண்ணும் இன்சுவையும் நீரும் தணமையும் பாலும் பாலில்
    நண்ணும் இன்சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அங்கேழ்
    வண்ணமும் வேறுவேறு வடிவு கொண்டிருந்தால் ஒத்த(து)
    அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்த(து) அம்மா"


    அத்துவிதம் என்றால் இரண்டற்றது. என்று பொருள்.

    துவிதம் என்றால் இரண்டு. அத்துவிதம் − இரண்டற்றது. தனித்தனியே , ஒன்றும் ஆகாது...இரண்டும் ஆகாது.

    அதாவது.. அத்துவிதம் என்றால்....

    இரண்டற்ற நிலையில் சுவாமியும், அம்பாளும் விளங்கினார்கள் என்று ஆசிரியர் பரஞ்சோதியார் விளக்குகின்றார்.

    உதாரணமாக ....

    பண்ணும் அதன் இசையும்...
    நீரும் அதன் குளிர்ச்சியும்....
    பாலும் அதன் சுவையும் .....
    பூவும் அதன் வாசனையும்...;
    மணியும் அதன் நிறமும்....
    வேறுவேறாகப் பிரிக்க முடியாது. காரணம், "இவை ஒரு பொருளின் இரண்டு தன்மைகள்".

    அதுபோல.... இறைவனும் இறைவியும், இருவேறு பொருள்கள் இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் இருவேறு வடிவம் கொண்டு மணவறையில் அமர்ந்திருந்த காட்சி.... பண்ணும் அது தருகிற ஓசையும் இரு வேறு வடிவம் கொண்டு இருந்தது போல் அமைந்தது என்று அத்துவிதத் தன்மையை பரஞ்சோதியார் எடுத்துரைக்கிறார்.

    <\~<\~<\~<\~<\~<\~<\~<\~<\~>


    23) விறகு விற்ற படலம சுருக்கி வரைக் ?

    வரகுணபாண்டியன் ஆட்சிக் காலத்தில், வடநாட்டில் இருந்து ஏமநாதன் என்னும் ஒரு பாணன் வந்தான். அவன் இசையில் பெரிய மேதையாக விளங்கினான். அவன் பாடிய இசையைக் கேட்ட மன்னன்...நிறையப் பரிசுப் பொருட்களை வழங்கினான்.

    அதனால்... செருக்குண்ட அப்பாணன், என்னை எதிர்த்துப் பாட ...இங்கு யாரும் இல்லையோ என்று கேட்டான்.

    அரசன், பாணபத்திரனை அழைத்து... நாளைக்கு அவனோடு பாடுக என்று ஆணையிட்டான்.

    பாணபத்திரன் கவலை கொண்டு இறைவனிடம் முறையிட்டான்.

    சோமசுந்தரக் கடவுள்...விறகு விற்கும் ஆளாக வந்து, யாழினை இசைத்துப் பாடினார். அதுகேட்ட ஏமநாதன் வியந்து... பாணபத்திரனின் சீடனே இப்படி என்றால்... அவனோடு பாட முடியாது என்று அஞ்சித் தன்னிடம் பயிலும் மாணவர்களோடு... ஊரை விட்டு ஓடினான்.

    இங்ஙனம் பாணபத்திரன் பொருட்டு இறைவன் விறகு விற்கும் ஆளாக வந்து பாண்டிய நாட்டின் பெருமையைக் காத்தருளினார்.

    இதுவே.... விறகு விற்ற படலம் ஆகும்.


    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*



    24) பரஞ்சோதி முனிவர் ?

    பரஞ்சோதி முனிவர் வரலாறு ...!

    இவர் வேதாரண்யத்தில் மீனாட்சி சுந்தர தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் நன்கு கலை பல தெரிந்தவர். இவர் மதுரைக்குச் சென்று, அம்மையப்பரை வழிபட்டார்.

    ஒருநாள், சற்குரு ஒருவர் எதிர்பட, அவரை வணங்கி, உபதேசம் பெற்றுச் சந்நியாசி ஆனார். "ஆலாசியமான்மி யம்" என்னும் வடமொழி நூலைத் தமிழில் பாடித்தரும்படி அன்பர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

    இவர் அந்த எண்ணத்தில் இருக்க...ஒரு நாள் நித்திரையில், மீனாட்சியம்மை தோன்றினாள்.

    அன்பனே ...! நம் பெருமான் திருவிளையாடலைப் பாடுக ! என்று ஆணையிட்டாள்.

    இவர் விழித்தெழுந்து, "சக்தியாய்" ...என்று தொடங்கித் திருவிளையாடற் புராணத்தைப் பாடியருளினார். இவரின் காலம்... 17−ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.

    இதுவே...பரஞ்சோதி முனிவரின் வரலாறாகும்.

    ,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,


    ReplyDelete
  14. 25) ஞானப்பால் வழங்கிய இறைவன், பன்றிக் குட்டிகளுக்கும் பால் கொடுத் தான் என்னும் நிகழ்ச்சியைச் சுருக்கி வரைக ?

    இறைவன், பன்றிக் குட்டிகளுக்கு ஞானப்பால் கொடுத்தான் என்னும் நிகழ்ச்சி....!


    மதுரையில்... வைகையாற்றின் தெற்கே...."குருவிருந்த துறை" என்னும் பெயர் கொண்ட ஓர் பெரிய ஊர் உள்ளது. இது இன்று குருவித் துறை என்று வழங்கபடுகிறது.

    அவ்வூரில் தேவ குருவாகிய பிரஹஸ்பதி இருந்து... சிவனை நோக்கித் தவம் புரிந்தார். சிவபெருமான்...வவர்கட்குப் பல வரங்களைக் கொடுத்து, குருநாதர் என்னும் சிறப்பினையும் அளித்தார்.

    அவ்வூரில்... சுகலன் என்னும் வேளாளன் வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சுகலை என்னும் மனைவி இருந்தாள். அவனுக்கு 12 பிள்ளைகள் இருந்தனர்.

    செல்வச் செருக்குடன் வாழ்ந்த பிள்ளைகளைப் பெற்றோர்கள் திருத்தவில்லை. ஒரு சமயத்தில் பெற்றோர்கள் இறந்து விட்டனர்.

    பிள்ளைகள் வேடர்களோடு சேர்ந்து கொண்டு காட்டில் வாழ்ந்தனர்.

    ஒரு நாள்... பிரஹஸ்பதியாகிய குரு...புதருக்குள் இருந்து தவம் புரிந்து வந்தார். இப்பிள்ளைகள் அவரைக் கண்டு, கேலி பேசி, கற்களை விட்டு எறிந்து அவரின் தவத்தைக் கலைத்தனர்.

    குருநாதர்... உடனே, இப்பாவத்திற்கு... நீங்கள் அடுத்த பிறவியில்.. பன்றிக் குட்டிகளாகப் பிறக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார்.

    அடுத்த பிறவியில்...இவர்கள் பன்றிக் குட்டிகளாகப் பிறக்க.. அவர்களும் பெற்றோர்களாகப் பிறந்து இறந்து விடுகின்றனர்.

    இப்பன்றிக் குட்டிகளுக்கு இறைவனே தாய்ப் பன்றியாக வந்து பாலூட்டி மகிழ்வித்தார்.

    இப்பன்றிக் குட்டிகளுக்கு முகம் மட்டும் பன்றி முகமாக விளங்க, மனித உருக் கொண்ட அவர்களை மந்திரிகளாக் கினான் பாண்டிய மன்னன். பின்னர்,அவர்கள் சிவபதம் பெற்றார்கள்.

    இதுவே இறைவன் பன்றிக் குட்டிகளுக்கு ஞானப்பால் வழங்கிய நிகழ்ச்சி ஆகும்.


    ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



    26) எந்த உயிருக்குள்ளும் இறைவன் இருந்து அருளுவான் ?

    எந்த உயிருக்குள்ளும் இறைவன் இருந்து அருளுவான்....!

    மதுரையில் தடாகம் ஒன்றில்... பல்வேறு வளமான மரங்கள் சூழ்ந்து இருக்க, "அச்சோ தீர்த்தம" ் என்னும் பெயரில் அத்தடாகம் போற்றப்பட்டு விளங்கியது.

    அத்தடாகத்தில் ...துறவிகள் பலர் மூழ்கி மூழ்கி எழுந்தனர். அவர்கள் ஜடா முடியில் இருந்து சிறு சிறு மீன்கள் விழுந்தன.

    அதனை ஒரு நாரைப் பார்த்துக் கொண்டு இருந்தன.

    துறவிகளின் திருமேனியைத் தீண்டி வாழும் புண்ணியம் பெற்றுள்ள அந்த மீன்களை இனி உண்ணுதல் கூடாது என்று நாரை முடிவெடுத்தது.

    உடனே,சோமசுந்தரக் கடவுளின் திருக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, அவரின் திருக்கண் நோக்கம் பெற்று அவரைத் தியானித்திருந்தது.

    இவ்வாறு... 15 நாட்கள் வரை , அந்த நாரை தியானத்தில் இருந்தது. 16− ஆம் நாள், பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடப் புகுந்த போது..அங்குள்ள மீன்களைக் கண்டு உண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

    உடனே நாரை இது மிகப்பெரிய பாவம் அல்லவா என்றெண்ணித் தன்னை மாற்றிக் கொண்டது.

    சிவபெருமான்....அந்நாரையின் தகுதி அறிந்து, அந்நாரைக்கு முக்தி கொடுத்து அருளினார்..

    இதன் மூலம் ...எந்த உயிருக்குள்ளும் இறைவன் இருந்து அருளுவான் என்னும் கூற்று விளங்குகிறது.

    இதுவே நாரைக்கு முக்தி கொடுத்த வரலாறு ஆகும்.

    :−:−:−:−:−:−:−:−:−:−:−:−:−:−:−:−:−:


    27) மதுரையின் வேறு பெயர்கள் ?

    மதுரையின் வேறு பெயர்கள் .....

    கடம்பவனம், சிவனகரம், சீவன் முத்திபுரம், கன்னிபுரம், திருஆலவாய், மதுரை, பூலோக சிவலோகம், சமட்டி விச்சாபுரம், நான்மாடக்கூடல், துவாத சாந்தத்தலம்.

    சமட்டி விச்சாபுரம் : சிவஞானம் முதலிய எல்லா ஞானங்களையும் தருதலால் இப்பெயர்.

    துவாத சாந்தத்தலம் : விராட் புருடனுக்கு உச்சிமேல் பன்னிரண்டங்குல முடியிலுள்ள இடமாக இருத்தலால்... இப்பெயர்.

    :×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×:×


    ReplyDelete
  15. 28) சங்கத்தார் கலகத்தினை சிவபெருமான் தீர்த்து அருளிய நிகழ்ச்சியை எழுதுக ?

    சங்கத்தார் கலகத்தினை சிவபெருமான் தீர்த்து அருளிய நிகழ்ச்சி.....!

    சங்கப் புலவர்கள் 48 பேரும், பல பாக்கள் எழுதித் தங்களுக்குள் செருக்குற்று வாழ்ந்தனர்.

    பின்னர்...முதல் நூல் ஆசிரியராகிய சோமசுந்தரக் கடவுளின் திருமுன்பு சென்று, தங்களைச் சீர்தூக்கி எங்களின் பெருமை, சிறுமைகளை எடுத்துக் காட்டி, எங்களுக்குள் எழுந்த இறுமாப்பினைப் போக்கி அருள்க என்று விண்ணப்பம் செய்தனர்.

    இறைவன் ஒரு புலவராகத் தோன்றி, புலவர்காள் இந்நகரில்... தனபதி, குணசாலினி என்போருக்கு, ஒரு குழந்தை பிறந்துள்ளான்.

    உருத்திரசன்மன் என்னும் பெயர் உடையவன். அவன் முருகக் கடவுளின் அவதாரம். மன்மதனை ஒத்தவன். ஆனால்....ஊமையன். அவனிடம் சென்று உங்கள் பாடல்களைக் கூறுங்கள். அவன் உங்களுக்குத் தீர்ப்பு தருவான் என்றும்... அங்ஙனமே புலவர்கள் சென்றனர்.

    எல்லோரும் பாடினர். நக்கீரன், கபிலன், பரணர் என்னும் மூவரின் பாடல்களைக் கேட்டு, உடல் பூரித்து, கண்ணீர் பொழிந்து, தலையசைத்துப் பாராட்டினான்.

    இங்ஙனம் மெளனமாகத் தெரிவித்துக் கொண்டான். அதனால் அவர்களின் கலகம் தீர்ந்தது.

    *~*~*~*~*~*~*~*~*~*~*~*


    29) இடைக்காடனின் பிணக்கு தீர்த்தருளிய நிகழ்ச்சி ?

    இடைக்காடனின் பிணக்கு தீர்த்தருளிய நிகழ்ச்சி....!

    குலேச பாண்டியன் என்பான் ஆட்சியில்.. அவன் எத்தகைய பெரும் நூலையும், இனிது அறிந்திருந்த சிறந்த புலவனாக விளங்கினான்.

    அதனால்...முத்தமிழ்ப் புலவர் இருக்கும் சங்கப் பலகை, அவனுக்கு ஏற இடம் கொடுத்தது.

    அப்பொழுது, குலேச பாண்டியனின் முன்பு, கபிலரின் நண்பனாகிய இடைக்காட் டுப் புலவன் ஒரு தமிழ்ப் பிரபந்தம் பாடிச் சென்று காட்டினான்.

    குலேச பாண்டியன்... இப்புலவன் மீது பொறாமை கொண்டு அதனை மதிக்
    காமலும், பாராட்டாமலும் இருந்தான்.

    இதுகண்டு வருந்திய இடைக்காடன், சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டான். நான் இந்நகரை விட்டு வெளியேறுகிறேன் என்றும் கூறினான்.

    இறைவன் தம்முடைய லிங்க வடிவத்தை மறைத்து, உமையம்மையோடு இடைக்காடன் பின்னே போனார். அதனால் கருவறையில் அருவுருவம் (லிங்கம்) மறைந்தது.

    ஆகவே...பாண்டிய நாடு பொலிவு இழந்தது. அடியார்கள் அரசனிடம் முறையிட்டார்கள். குலேச பாண்டியன் தன் தவற்றையுணர்ந்து, இறைவனைத் தேடி அலைந்தான்.

    இறைவன் , அம்மன்னனுக்கு உண்மையை உணர்த்தி இடைக்காடன் நூலினைப் பாராட்டுக என்று ஆணையிட்டார்.

    பாண்டியனும் அங்ஙனமே செய்தான். இடைக்காடன் வருத்தம் நீங்கினான்.

    இறைவனும் இங்கு வந்து எழுந்து அருளினார்.

    இதுவே...இடைக்காடனின் பிணக்குத் தீர்த்தருளிய நிகழ்ச்சி ஆகும்.

    *-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*


    30) அம்மையார் பரதவர் குலத்தில் பிறந்தருளிய அருள் வரலாற்றை விளக்குக ?

    அம்மையார் பரதவர் குலத்தில் பிறந்தருளிய அருள் வரலாறு ...!

    சோமசுந்தரக் கடவுள்....மீனாட்சி அம்மைக்குத் தனி இடத்தில் வேதத் தின் உட்பொருளை உபதேசித்து அருளினார்.

    அம்பிகை யாது காரணத்தாலோ... சிறிது கவனக் குறைவாகக் கேட்டாள்.

    இறைவன், பிராட்டியை நோக்கி, பெண்ணே ! நீயும் பிற பெண்களைப் போன்று வேதப் பொருளை விருப்பம் இன்றிக் கேட்டாய்.

    இக்குற்றத்தினால்... மீன் பிடித்து வாழும் பரதவர் குலத்து மகளாகக் கடவாய் என்று அருளினார்.

    உடனே தேவியார் தங்களைப் பிரிய வல்லளோ என்று வருந்தினாள். இறைவன் திருவுள்ளம் இரங்கி, நீ அங்கு வாழும் காலத்தில், யாம் வந்து மணம் செய்து கொள்வோம் என்று அருளினார்.

    இதுவே, அம்மையார் பரதவர் குலத்தில் பிறந்தருளிய அருள் வரலாறு...ஆகும்.

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


    * திருச்சிற்றம்பலம் *

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  16. Tue. 2, Aug. 2022, at 9.15 pm.

    1) அகளம் , சகளம் − விளக்குக ?

    அகளம் என்றால்.... வடிவம் இல்லாதது.இயல்பாகவே... மலங்கள் நீங்கிய பரம்பொருள் ஆகும். அது திருமால், பிரமா ஆகியோராலும் காண முடியாதது. இது இறைவனின் "சொரூப நிலை" ஆகும்..

    சகளம் என்றால்...இறைவன் உயிர்களின் தகுதிக்கேற்ப மேற்கொள்ளும் திருவுருவம். குருவாக வரும் நிலையும் இதுதான். அதாவது... அம்பிகையாக வருவது. இது இறைவனின் "தடத்த நிலை" ஆகும்.

    :-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-


    2) ஓசை − ஒலி வேறுபாடு தருக ?

    தமிழ் மொழியில் ஓசை என்றும், ஒலி என்றும் இரண்டு சொற்கள் உள்ளன.
    "ஓசை என்பது தனித்த பொருள் அற்றது. சப்தம் மட்டுமே ஆகும்."

    ஒலி என்பது தனித்தப் பொருள் உடையது. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே− அப்பர் பெருமான்.

    தாம்பாளம் கீழே விழுவது ஓசை...
    இங்கே வா என்று அழைப்பது ஒலி.

    ஆனால்... பொருள் தரும் உலகியல் உறவு வார்த்தைகளை விடுத்து...
    இறைவனின் சிலம்பின் ஓசை (ஒலி) வழியே சென்று "ஆடவல்லானை வழிபடுக என்கிறார்... "திருவுந்தியார்".


    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


    3) மருளும்−தெருளும் மறக்கும் அவன் விளக்குக ?

    மருளும் என்றால்... இறைவன் திருமுன்னிலையில் ஆன்மா நேர்படக் கும்பிடும்போது.... அறியாமையும், அறிவும் நீங்க வேண்டும்.

    இங்ஙனம் நீங்கிய நிலையில் ...அவ் ஆன்மாவிடத்து அருட்பதிவு நிகழும்.
    அதனில் ஒன்றி இரு என்கிறார்..ஆசிரியர்.

    இதைத்தான்... மருளும் தெருளும் மறக்கும் அவன்கண் அருளை மறவாதே உந்தீபற என்றார் ஆசிரியர்.

    இக்கருத்தில் தான் சித்தியார் ஆசிரியர்... "அறியாமை அறிவகற்றி" என்று தொடங்கும் பாடலைப் பாடினார்.

    ,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,


    4) இரவு , பகல் இல்லா இன்பவெளி − குறிப்பு வரைக ?

    இரவு பகல் இல்லா இன்பவெளி என்பது.... ஆணவம் , மாயை என்னும் இரண்டும் அற்ற இடம் ஆகும்.

    இரவு என்பது... ஆணவம்.
    பகல் என்பது.... மாயை.

    ஓர் ஆன்மாவானது...பேரின்ப வடிவ மான இறைவனோடு கூடி வாழும் காலத்தில்...அங்கு இரவும் இல்லை... பகலும் இல்லை.

    ,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,_,


    5) எட்டுக் கொண்டார் தமைத் தொட்டுக் கொண்டார் விளக்குக ?

    எட்டுக் கொண்டார் என்பது....விண் , மண், நீர், தீ , காற்று , சூரியன் , சந்திரன் , ஆன்மா என்னும் எட்டினையுமே...திருமேனியாகக் கொண்டவன் இறைவன் என்றும்.....

    தமைத் தொட்டுக் கொண்டார் என்பது..அவனை இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பவர்களே... தொட்டுக் கொண்டிருப்பவர் ஆவர் என்றும்...அவர்களுக்கு உலகியற் சூழல் என்றுமே தோன்றாது என்றும் கூறுகின்றார்.

    எட்டுக் கொண்டார் தமைத்தொட்டுக் கொண்டே நின்றார்
    விட்டார் உலகம் என்று உந்தீபற வீடே வீடாகும் என்று உந்தீபற.
    என்பது அக்கருந்து அமைந்த பாடல்.

    :_:_:_:_:_:_:_:_:_:_:_:_:_:_:_:_:_:_:_

    ReplyDelete
  17. 11) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை − குறிப்பு வரைக ?

    திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் ... திருக்குறள் கருத்துக்களைமட்டும் இல்லாமல், திருக்குறளையே பொன்போல் போற்றிப் பதிவு செய்துள் ளார். அவற்றுள் ஒன்று ....
    "வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை" என்று தொடங்கும் திருக்குறள் ஆகும். இறைவனிடம் வேண்டும்பொழுது பிறவாமையை வேண்டிடுக என்றும்...அது எப்பொழுது கிடைக்கும் என்றால்.... எந்த உலகியல் பொருளும் எனக்கு வேண்டவே வேண் டாம் என்று எண்ணிப் பிரார்த்திக்கும் போது தான் ..என்றும் வள்ளுவர் கூறுகின்றார். அதை அப்படியே இந்த சித்தாந்த ஆசிரியர் முகந்து, விளக்கி மகிழ்ந்துள்ளார்.

    இதுவே... வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை ஆகும்.

    !.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.


    12) சேந்தனார் செய்த செயல் குறித்து விளக்குக ?

    சேந்தனார் செய்த செயல் :

    சேந்தனார்...விரிந்த துணியிலிருந்தும் பக்குவம் செய்யப்பெற்ற உணவை நெகிழ்ந்த மனத்தோடும் உண்பிக்க,அது சிவபெருமானுக்கு இன்னமுதம் ஆயிற்று.

    சேந்தனார்... தில்லையில் விறகு விற்று, அதனால் கிடைக்கும் ஊதியத் தைக் கொண்டு, அடியார்க்கு உணவளித்தார். ஒரு நாள் பெரும் மழை பெய்ததன் காரணத்தால், பசியும், வறுமையும் தோன்றியது. அப்பொழுது விறகு விற்றுக் கிடைத்த மாவினைக் களியாக்கி அதனை அடி யார்க்குக் கொடுத்து, மீதியைத் தான் உண்ண விரும்பி இருந்தார். அந்நிலையில் கூத்தப் பெருமான் அடியாராக வந்து, அக்களியினை உண்டு அடுத்த வேளைக்கும் வேண்டும் எனத் தம் கந்தைத் துணியில் எடுத்துச் சென்றார்.

    இதனால்.. சேந்தனார் அன்பு புலன் ஆகிறது.

    =−=−=−=−=−=−=−=−=−=−=−=−=−=−


    13) தென்புகலி வேந்தன் செயல்கள் யாவை ?

    தென்புகலி வேந்தன் செயல்கள் :

    தென்புகலி வேந்தன் என்பது... திருஞானசம்பந்தரைக் குறிக்கும்.
    இவர்,திருக்கொள்ளம்பூதூரில் ஓடத்தைச் செலுத்தினார். முத்துச் சிவிகையை இறைவன் அருளால் பெற்றார்.

    தந்தையார் வேள்வி செய்தல் பொருட்டுத் திருவாவடுதுறையில் பொற்கிழி வளங்கினார். திருமறைக் காட்டில் , மறைக்கதவம் அடைக்கப் பாடினார். இவை போன்று, ஆண் பனை, பெண் பனை ஆனதும், பாலை நெய்தல் ஆனதும், வைகையில் ஏடு எதிர்த்துப் போனதும், மைலாபூரில் எலும்பு பெண்ணானதும்... ஞானசம்பந்தரின் அற்புதச் செயல்கள் என்று திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் போற்றுகின்றார்.

    ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ"ஃ


    14) திருவாமூராளி செயல்கள் எவை ?

    திருவாமூராளி செயல்கள் :

    திருவாமூர் ஆளி என்பது அப்பரடி களைக் குறிப்பது. திருவாமூரில் அவதரித்தவராதலின் திருவாமூர் சிங்கம் எனப் போற்றப் பெற்றார்.

    இவர், யானையினின்றும், நீற்றறையினின்றும், நஞ்சினின்றும் திருவருளால் தப்பினார்.

    மேலும், கல்லையே புணையாகக் கொண்டு கடலை நீந்திக் கரையேறிய தும், தூய சிவமணம் கமழும் திருமறைக் காட்டில் திருக்கதவு திறப்பித்ததும்... அவர் செய்த அற்புதச் செயல்களாகும்.

    இவற்றையே... திருவாமூர் ஆளி செயல் என்று திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    *=*=*=*=*=*=*=*=*=*=*=*=*


    15) வன் தொண்டன் தொண்டு எனத் திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் கூறுவது யாது ?

    வன் தொண்டன் தொண்டு :

    மோகம் அறுத்தவருக்கே முத்தி கொடுப்பது என்று இறைவன் திருவுள்ளம் பற்றியிருக்கின்றார். இதனை ஆகமத்தில் வெளிப்படுத்தி
    உள்ளார். அப்படிப்பட்ட இறைவனைப் பரவையாரின் ஊடலை நீக்குவதற்காக இரண்டு முறை தூது அனுப்பினார் சுந்தரர்.

    அதேபோல... சங்கிலியாரிடமும் இரவில் கனவில், இரண்டு முறை தூது அனுப்பினார் சுந்தரர். இங்ஙனம் செய்த சுந்தரரின் அருட் செயல்களை... இறைவனே ஏற்றுக்கொண்டு செய்த செயல்களை எவ்வண்ணம் சொல்லு வேன் என்கின்றார் ஆசிரியர்.

    ?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?

    ReplyDelete
  18. 16) திருவாதவூராளும்தேன் − விளக்குக ?

    திருவாதவூராளும்தேன் விளக்கம் :

    இறைவன் வாதவூர் அடிகளின் பொருட்டு... நரியைக் குதிரைப் பரியாக்கி அருளியமையால் பாய்பரியேன் என்றார். அவன் வழங்கியருளிய மேலான இன்பப் பயனையே அடிகள் தம் தூய திருவாக் கால்... திருவாசகமாக அருளினார்.

    அத்திருவாசகம்....

    "தொல்லை இரும் பிறவிச் சூழும் தளைநீக்கி
    அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கும் அருமையது.

    திருவாசகம் ஓதுதலால் வரும் பயன் வீடுபேறாகும்.

    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்அடிக்கீழ் என்று தொடக்கத்து வரும் திருவாக்குகளால் இவ்வுண்மை அறியப்படும்.

    திருவாசகத்தைத்... தேன் என்றல் போல, ஈண்டு அதனை அருளிய அடிகளையும் தேன் என்றார்.

    தேனானது.... "உபபானம்" என்று குறிக்கப் பெறும். குழந்தைகளுக்கு கசப்பான மருந்தினைக் கொடுக்கும் பொழுது தேனில் குழைத்துத் தருவார்கள். மருந்தின் வீரியத்தைக் குறைக்காமலும், இனிப்பைச் சேர்த்தும் தருவதற்காகத் தேனைக் குழைத்துத் தந்தார்கள்.

    அதேபோல.... திருவாசகம் பிறவிப் பிணிக்கு மருந்தாகவும், பக்திச் சுவை யுடன் இருப்பதாலும்... இதனையும் தேன் என்று கூறினார்கள்.

    ×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×


    17) சிவயோகம், அவயோகம் குறிப்பு வரைக ?

    சிவயோகம், அவயோகம் :

    சிவயோகம் என்பது, .. சிவப் பரம்பொருளை உணர்ந்து, அதனோடு ஒன்றுபட்டு இருக்கும் யோகத்தால், அடியவர்கள் இம்மையிலும் மறுமையிலும் உள்வாகும் அச்சத்தினின்றும் நீங்கி எக்காலத்தி லும், எவ்விடத்திலும் செல்லும் பேராற்றலைப் பெற்றிருப்பர். இவ்வாறு அடியவர்கள் மேற்கொண் டிருக்கும் யோகமே...உண்மைச் சிவயோகம் ஆகும்.

    அவயோகம் என்பது.... இதுவன்றி பிறவாற்றான் செய்யும் யோகம், பிறவிப் பிணியை நீக்குவதற்கு ஆகாது. மலையே வந்து வீழினும், மனிதர்காள் நிலையில் நின்று கலங்கன்மின் என்னும் திருவாக்குகள் அடியவர்கள் அச்சமின்றி வாழ்ந்ததைக் காட்டுவனவாம்..இவையே அவயோகம் ஆகும்.

    *.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.


    18) நங்கை − திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் வழி விளக்கம் தருக ?

    நங்கை :

    "நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
    நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும்−நங்கையினும்
    நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறும் இதுகாண்
    எம்பெரு மானார்தம் இயல்பு."

    நம்முடைய கையினால் நாம் அனைத் துச் செயல்களையும் செய்தல்போல, இறைவனும் உலகனைத்தையும் தன் திருவருள் சத்தியினால் படைத்து, அழித்து அருளுவன்.

    இதுவே எம் தலைவனாகிய சிவபெரு மானின் இயல்பாம்.

    நங்கையினால் என வருவனவற்றுள் முன்னையது... நம் + கை எனப் பிரித்துப் பொருள் காண்பதற்குரியது.

    பின்னையது நங்கை என ஒரு சொல்லாக வைத்துப் பொருள் காண்பதற்குரியது.

    *,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,-*,


    19 கொடிக்கவி தோன்றிய சூழலை விளக்குக ?

    கொடிக்கவி மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் பதினோராவது நூல். இது உமாபதி சிவாச்சாரியாரால் ஆக்கப்பட்டது. தில்லையில் ஏறாமல் தடைப்பட்டக் கொடியை உமாபதிசிவம் நான்கு பாடல்கள் பாடித்..... தானே ஏறும்படிச் செய்ததால்... கொடிக்கவி எனப் பெயர் பெற்றது.

    %&%&%&%&%&%&%&%&%&%&%


    20) ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ... எங்ஙனம் விளக்குக ?

    ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் :

    ஒளி உள்ள போது இருள் தெரிவ தில்லை; ஒளி இல்லாத போது இருள் புலப்படும். இந்த அனுபவத்தைக் கொண்டு, சாமான்ய மக்கள்... ஒளியும் இருளும் ஒரே இடத்தில் இருக்க மாட்டா என்று கூறுவார்கள்.

    ஒளியும் இருளும் சூக்குமப் பொருள் கள். எனவே, அவை இரண்டும் ஒரே இடத்தில் இருக்க முடியும் என்பதை ஆழ்ந்த அநுபவ ஞானமுடையவர்கள் அறிவார்கள்.

    திருவருள், உயிருக்கு அறிவு விளக்கம் செய்வதால், திருவருளை ஒளி என்ற சொல்லாலும், ஆணவம் உயிரின் அறிவை மறைப்பதால்... ஆணவத்தை இருள் என்ற சொல்லாலும், சித்தாந்தி கள் கூறுவார்கள்.

    திருவருளாகிய ஒளிக்கும், ஆணவமா கிய இருளுக்கும் இருப்பிடம் ஒன்றே தான். அந்த ஒன்று உயிர்தான் என்கிறார் உமாபதிசிவம். இது கொடிக்கவி என்னும் நூலில் உள்ளது.

    இதுவே... ஒளிக்கும், இருளுக்கும் ஒன்றே இடம்..என்ற விளக்கமாகும்.

    *%*%*%*%*%*%*%*%*%*%*%*

    ReplyDelete
  19. 21) பராசக்தி எத்தனை வடிவில் பேசப் படுகிறாள் ?

    பராசக்தி :

    பராசத்தியாகிய ஒருத்தியே பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை என்று ஐந்து நிலைகளில் பேசப்படுகிறாள். அவளே ஆன்மாக்களுக்குப் பரயோகத்தையும், ரூபத்தையும் தருகிற கருணை வடிவினள். சுத்த, அசுத்த மாயைகளின் தனுவாதிகளைத் தாங்கிக் கொள்கிற... விந்து, மோகினி, மான் என்னும் முதல் காரணங்களில் கூட இருப்பவள்.

    மாயை ஒன்று தான்; பயன்பாட்டு நிலையில்... மூன்றாகிறது.

    சுத்த மாயை − விந்து
    அசுத்த மாயை − மோகினி
    பிரகிருதி மாயை − மான் என்று குறிக்கப் பெறும்.

    இவள் இப்படிப் பலவகைப் பட்டாலும்.. பொருட்டன்மையில் ஒருத்தியே. மலம் அற்றவள். இந்தப் பராசத்தியே... சிற்றம்பலத்தில் கூத்தாடுகிற கூத்தனின் கூத்தைக் காண்கிறாள்.

    அதாவது... ஆன்மாக்களின் பிறவித் துயர் நீங்குவதற்காகக் காண்கிறாள்.

    அவளே... சிவகாமியம்மை. அந்த அன்னையின் திருவடி மலர்களைத்"தலைமேல் வைத்துத் துதிக்கிறேன் என்கிறார் ஆனியர்.

    ~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-


    22) பதமுத்திகள், பரமுத்தி− இவற்றை விளக்குக ?

    பதமுத்திகள், பரமுத்தி :

    பதமுத்திகள் :

    சரியே, கிரியை, யோகம் என்னும் நெறிகளில் நின்றவர்க்கு முறையே.. சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும் பதமுத்திகள் கிட்டும். இம்மூன்றிற்கும் மேலோனது ஞானநெறி.

    அது இரண்டு வகைப்படும்.

    அவற்றுள் ஒன்று...மலம் நீங்கும் பொருட்டு, ஆன்மாக்களை விட்டு நீங்காத திருவருள் ஞானமாகும்.

    மற்றொன்று... அத்திருவருள் ஞானத்தைத் தெளிவாக ஓதுகின்ற சிவாகமங்கள் ஆகும்.

    ஞான நெறியில் நின்றவர்க்கு... சாயுச்சியம் என்னும் பரமுத்தி கிட்டும்.

    பதமுத்திகள் பெற்றவர்கள்...ஒரோவழிப் பிறக்க நேரிடலாம்.

    பரமுத்தியாகிய சாயுச்சியம் பெற்றவர்கள் பிறவா நெறி அடைவார்கள்.

    இதுவே... பரமுத்திகள், பரமுத்தி என்பதன் விளக்கம் ஆகும்.

    ^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^,^


    23) சிவப்பிரகாசம் ஒரு சார்பு நூல் − விளக்குக ?

    முதல் குருவான மெய்கண்ட தேவர்... சிவஞான போதத்தை அருளினார். (இது முதல் நூல்)

    பிறகு அவரது மாணாக்கரான... அருணந்திதேவர் சிவஞான சித்தியாரை விரித்துரைத்தார். (இது வழிநூல்)

    இவ்விருவர் செய்த நூல்களையும் ஆராய்ந்து... அடியேனது அறிவில் உறையும், திருவருளையும் இறைவன் அளித்த சிவாகமங்களையும் கூட்டி... நூறு விருத்தப்பாக்களால் சிவப்பிரகாசம் என்னும் பெயரில்... சார்புநூலைச் செய்கிறேன். இது பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என இரு அதிகாரங்களாகப் பகுக்கப் படும். இவ்வாறு உமாபதிசிவம் கூறுகிறார்.

    ~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~

    24) சிவப்பிரகாசத்தின் அவையடக்கச் செய்யுள் கூறும் கருத்து யாது ?

    பழமையானவை என்ற எல்லா நூல்களும் நல்லன ஆகா. தற்காலத்தில் தோன்றியவை என்ற எல்லா நூல்களும் தீயவையாகா.

    உத்தமர்கள் இரத்தினத்தில் உள்ள களங்கத்தைப பெரிதாகப் பாராட் டாமல்.. அம்மணியில் உளதான சிறப்பை அறிந்து விரும்புவார்கள்.

    அதுபோல... இந்நூலில் உள்ள குற்றங்களைப் பெரிதாகக் கருதாமல்.. இதிலுள்ள சிறப்பை அறிந்து உத்தமர்கள் விரும்புவர்.

    நடுநிலையாளர் மணியின் பழமைச் சிறப்பறிந்து சூடுவார்கள். அதுபோல..
    முந்து நூல்களின் பழமைக் கருத்துக்கள்... இந்நூலில் இருப்பதால், இதனைக் கொண்டாடுவர்.

    ஒரு பொருளின் குற்றம், குணம் என்பவற்றின் மிகுதி அறியாதவர்.
    அப்பொருளைப் பலர் பாராட்டினால் தாமும் பாராட்டுவர். பிறர் இகழ்ந்தால் தாமும் இகழ்வர். அப்பமிப்பட்டவர் தமக்கென ஸ்திரப்புத்தி இல்லாதவர்கள், அவர்கள் இந்நூலை இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் எனக்கு எவ்வித சலனமும் உண்டாகாது.

    இவையே... சிவப்பிரகாசத்தின் அவையடக்கச் செய்யுள் கூறும் கருத்தாகும்.


    /−/−/−/−/−/−/−/−/−/−/−/−/−/


    25) பாவங்கள் பிராயச் சித்தத்தால் தீருமா− விளக்குக ?

    பாவங்கள் பிராயச் சித்தத்தால் தீருமா என்பதற்கான விளக்கம் :

    மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் தொழில்களான .... நினைப்பு, பேச்சு, செய்கை என்பனவற்றால் இருவினைகள் உண்டாகின்றன. இங்ஙனம் உண்டாகும் நல்வினை, தீவினை என்பன ஒன்று ஒன்றால் அழியாது. அதாவது, நல்வினையால் தீவினையும், தீவினையால் நல்வினை யும் அழியமாட்டா.

    வினையின் நுகர்ச்சி தவறாது வரும். ஆயினும்...இருவினைகளில் ஒன்றாகிய பாவத்துக்கு நல்வினை யாகிய பிராயச்சித்தம் செய்தால்... பாவம் நீங்கும் என்று வைதீக சைவநூல்கள் கூறும்.

    அம்முறைப்படி... பிராயச் சித்தமாகச் சாந்தி செய்து கொள்ள முடியாதவர் கள், பிறரைக் கொண்டு பணம் கொடுத்துச் செய்யும் சாந்தி முறையும் உண்டு. ஆனால், பிரோயச் சித்தம் செய்யாமலும், பாவத்தைப் போக்கும் வழியும் உண்டு.

    முன்சொன்ன நூல்களில் கூறப்பட்ட, சரியை முதலிய நெறிகளில், ஒழுகி வந்தால் பாவம் பெரும்பான்மையும் நீங்கும்.

    நீங்காது நின்ற வினைப்பகுதி பிந்திய பிறவிகளில் தொடரும்.... என்பது இதற்கான விளக்கம் ஆகும்.

    /~/~/~/~/~/~/~/~/~/~/~/~/

    ReplyDelete
  20. 26) வித்யா தத்துவங்கள் எவை ?

    வித்தியா தத்துவம் :

    வித்தியா தத்துவம்.... இந்திரியங் களின் வழி வரும் விடயத்தைப் புத்தி தத்துவம் தன்னிடம் கொடுக்க, தான் ஆன்மாவுக்கும், புத்திக்கும் இடையே நின்று ஆன்மாவை விடய ஞானம் பொருந்தும்படிச் செய்யும். அராக தத்துவம்...உயிர்களின் கன்மத்துக்குத் தக்கவாறு போகங்களில் விருப்பத் தைத் தோற்றுவிக்கும்.

    நியதி தத்துவம் அதாவது, அரசனின் ஆணை மக்கள் செய்த செயலுக்கு ஏற்பப் பயனை அனுபவிக்க வைப்பது போல... உயிரின் கன்மத்துக்கு ஏற்ற பலன்களை அந்தந்த உயிரே அனுபவிக்கும்படி நிச்சயம் பண்ணி நிறுத்தும்.

    இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற கால தத்துவம், இறந்த காலத்தின் எல்லை யையும், நிகழ்காலத்துப் பயனையும், எதிர்காலத்துப் புதுமையையும் உண் டாக்கும். கலை, வித்தை அராகம், காலம், நியதி என்னும் ஐந்து தத்துவங்களால் பந்திக்கப்பட்டு, மெய் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தா லும் வருகிற பயனை அனுபவிக்க வரும் சமயத்தில்...அந்த ஆன்மா, புருட தத்துவம் என்று கூறப்படும்.

    கலை முதலிய ஐந்தையும், பஞ்சகஞ்சு கமாகப் பெற்ற ஆன்மா, புருட தத்து வம். இதை ஒரு தத்துவமாகக் கூறியது உபசார வழக்கு.

    இதுவே... வித்தியா தத்துவத்தின் விளக்கம் ஆகும்.

    ######################



    27) சிவசமவாதி குறிப்பு வரைக ?

    சிவசமவாதி :

    தனக்கென குணமும், செயலும் உண் டென்று புகல முடியாத அளவுக்குச் சத்தி குறைந்தவரைப் பிடித்துக் கொண்ட பேயானது, தனது குணத்தையும், செயலையும் பிடிபட்டவரிடம் நிகழ்விக்கும்.

    அதுபோல.... எல்லாவற்றையும் ஒருசேர உணரும் சிவனது திருவருள் ஆன்மாவிடத்துப் பொருந்துவதால், சிவனுக்குரிய எண் குணங்களும், ஐந்தொழில்களும்...ஆன்மாவிடத்திலே நிகழ வேண்டுமென்று சிவ சமவாதி கள் கூறுவது.... இறைவன் செய்த நன்றியைக் கொன்ற செயலாக முடியும்.

    தற்சமயம்... பார்வையையும், பேச்சையும், நடையையும் இழந்த ஒரு வரிடம்.... பார்வையும், பேச்சும், நடையும் பேய்"பற்றினால், பற்றப்பட்ட வரிடம் பேயின் பார்வை முதலியன நிகழ முடியாது.

    அதுபோல.... முத்தி பெற்ற ஆன்மா விடம் பொருந்திய திருவருளால், ஆன்மாவின் அறிவிச்சைச் செயல்கள் விளக்கம் பெறுமேயன்றித் திருவரு ளுக்குரிய ஐந்தொழில் நிகழ முடியாது. சிவன் தனக்கெனத் திருமேனியைத் தானே கொண்டு ஐந்தொழில் நடத்து வான். ஆனால், தனக்கெனத் தானே திருமேனி கொள்ள முடியாத படியால், ஆன்மாவால் ஐந்தொழில் ஆற்ற முடி யாது.

    இது சிவமவாதியின் கருத்துக்கு மறுப்பு.

    ^`^`^^`^`^`^`^`^`^`^`^`^`^`^`^`^`^`^`^`^`^


    28) ஆன்மலாபம் குறிப்பு வரைக ?

    ஆன்ம லாபமானது...பேரின்பப் பேறு. இதைப் பெறுவதற்கு வழி ஞானநெறி.

    முற்பிறப்பில் செய்த சரியை முதலியவற்றின் முதிர்ச்சியாலும், சிவனோடு ஒன்றுபட்டு நிற்றலும், அனுபவ ஞானமுடையவராகிய தேசிகர் உபதேசித்த மொழிகளைக் கேட்டலும்... அங்ஙனம் கேட்டவற்றைச் சிந்தித்தலும்... கேட்டதன் உண்மையை, ஐயம் திரிபறத் தெளிதலும்... தத் + துவம் + அசி; சிவம் நீ ஆகிறாய் என்ற அத்துவித நிலை பொருந்தும்படிப் பிரிவின்றி நிற்றலாகிய நிட்டை கூடலும் என்று ஞானம் நான்கு வகைப்படும்.

    இதுவே...ஆன்ம லாபம் ஆகும்.

    >,>,>,>,>,>,>>,>,>,>,>,>,>,>,>,>,>,>


    29) உபாய நிட்டை விளக்குக ?

    உபாய நிட்டை :

    சிவனது திருவருளாகிய பதி ஞானத்தைப் பொருந்தி, ஒளி உள்ள பதி ஞானத்தால்...முந்திய ஆன்ம போதகமாகிய சிற்றறிவு நீங்கிப் பதி ஞானத்துக்கு மேம்பட்ட சிவனிடத்தில் பேரன்பு செய்து, சிவனருளைக் கூடி அனுபவிப்பதே. அதாவது,...திருவருளில் அங்கு அழுந்தப் பற்றி நிற்பதே ) ஞான நிட்டை ஆகும். ஞான நிட்டை கை கூடாவிட்டால், உபாய நிட்டையைப் பின்பற்ற வேண்டும். ஆன்மா திருவருளோடு கூடி நின்று அறிந்து, அந்த அத்துவித நிலையை மறவாமல் கடைப் பிடித்து இறைவன் திருவடியையே விரும்பி நிற்றலே... உபாய நிட்டையாகும். அந்த உபாய நிட் டையில் பொருந்தி வந்தால்.... ஞானநிட்டை கை கூடும்.

    உபாய நிட்டையாவது.... திருவடிப் பேற்றைப் பெறுவதற்காக, உலகப் பொருள்களை அனுபவிக்கும் பொழுதே... இவை அனைத்தும் திருவருளாலேயே நமக்குக் கிடைத்தன என்ற சிந்தனையோடு சிவனருளை இடைவிடாது நினைந்திருத்தல் ஆகும்.

    <> <<<<<<< <> <<<<<<< <> <<<<<>


    ReplyDelete
  21. 30) சூட்சும பஞ்சாட்சரம் விளக்கி வரைக ?

    சூட்சும பஞ்சாட்சரம் :

    சிவாயநம − சூக்கும பஞ்சாக்கரம்.

    சி − சிவம்
    வா − திருவருட்சத்தி
    ய − ஆன்மா
    ந − திரோதான சத்தி (மறைப்பாற்றல்)
    ம − மலம் (ஆணவம், கன்மம், மாயை)

    ஆணவ மலமும், மறைப்பாற்றலும்
    (ந, ம என்பது) தொடக்கத்தில் அமையாமல் நீங்கிச் சிகார வகரங்கள் முதலில் அமையும்படி வைத்துச்... *சிவாயநம* என்ற சூக்கும பஞ்சாக்கரத்தை ஓதி வர வேண்டும்.

    அப்படி ஓதி வந்தால்... நகாரமான திரோதாயி, மகாரமான மலத்தை ஒழித்து... வகாரமான அருட்சத்தியாக மாறும்.

    அருட்சத்தியான வகரம், சிகரமாகிய சிவத்தை, ஆன்மாவுக்குக் காட்டி, அச்சிவத்தை அடையச் செய்யும்.

    மலமறைப்பு ஒழிந்த ஆன்மா, திருவருட் சத்தியைப் பற்றுக் கோடாகக் கொண்டு, அவ்வருளில் அடங்கி இருக்கும்.

    பின்பு... திருவருள் துணையால், இறை வனது திருவடியில் அத்துவிதக் கலப்பு உறும்.

    இதுவே திருவைந்தெழுத்தின் பெருமை ஆகும். அதாவது... சூட்சும பஞ்சாட்சரத்தின் விளக்கம் ஆகும்.

    << திருச்சிற்றம்பலம் >>

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  22. Wed. 3, Aug. 2022 at 8.11 pm.

    1) வான்மீகியின் வழியில் கம்பன் காவியம் பாடினான்− இக்கூற்றை விளக்கு ?

    வான்மீகின் வழியில் கம்பன் காவியம் பாடியது.....!

    " வாங்கரும் பாத நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
    தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச் செய்தான்
    ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி
    மூங்கையான் பேசலுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்".

    கம்பன் நாட்டுப் படலத்துள்... வான்மிகி பற்றிய செய்திகளைக் குறிக்கின்றான்.
    வான்மீகி தந்த தீங்கவிகளை யான் அன்பெனும் கள்ளை உண்டு ஊமையனைப் போன்று மொழியலுற்றேன் என்று அடக்கமாகக் கூறிக் கொள்கின்றான்.

    இதுவே.... வான்மீகியின் வழியில் கமபன் காவியம் பாடினான்.

    *,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*

    2) கோசல நாடு, அயோத்திமா நகரம் -பெயர்காரணம் தருக ?

    கோசல நாடு, அயோத்திமா நகரம் பெயர்வரக் காரணம் ....!

    கோசல நாடு என்பது.... மிகுதியான மயில்களைக் கொண்டது என்னும் பொருள் உடையது. எனவே, மயில்கள் மிகுந்த நாடு... "கோசல நாடு" ஆகும்.

    கோசல நாடு...சரயு நதியினால் வளம் பெற்றது. இந்நாட்டின் தலைநகரம் "அயோத்தி" ஆகும். யுத்தமே இல்லாத நகரம். ஆதலின் இது அயோத்தி எனப் பெயர் பெற்றது.

    மனு குலத்தில் வந்த அஜன் என்ற அரசனுக்கும், இந்துமதி என்னும் பெண்ணுக்கும் பிறந்தவர் தசரதர்.

    *' *' *' *' *' *' *' *' *' *' *' *' *' *' *' *'

    3) இராமாயணம் −பெயரை விளக்கி எழுதுக ?

    இராமாயணம் :

    இராமன் + அயணம் = இராமாயாணம்.

    அயணம் என்றால் வழி. எனவே இராமன் நடந்த வழியில் நடக்க வேண் டும் என்பது பொருள்.

    கிருஷ்ணன் சொன்னதைக் கேட்க வேண்டும், இராமன் நடந்ததைப் பின்பற்ற வேண்டும் என்பதே இராமாயாணம் என்ற பெயரின் விளக்கம் ஆகும்.

    *'- *'- *'- *'- *'- *'- *'- *'- *'- *'- *'- *'-*

    4) தசரதன் − விளக்கி எழுதுக ?

    "தாயொக்கும் அன்பில் தவம் ஒக்கும் நலம்பயப்பில்
    சேயொக்கும் முன்னின் றொருசெல்கதி உய்க்கும் நீரால்
    நோயொக்கும் என்னில் மருந்தொக்கும் நுணங்கிய கேள்வி
    ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான்"

    என்னும் பாடலால்...கம்பர் கீழ்க்கண்ட வாறு விளக்குகின்றார்....

    தசம் + ரதம் = தசரதன். தசம் என்றால் பத்து. ஆகவே... பத்து ரதங்களை நிறுத்தியவன். ஆதலால் தசரதன் என்னும் பெயர் பெற்றான்.

    கிழக்கு , மேற்கு , தெற்கு , வடக்கு ,ஈசானம் , அக்னி , நிருதி , வாயு , ஆகாயம் , பாதாளம் என்ற 10 திசைகளில் இருந்து வந்த... 10 ரதங்களை வென்றவர் என்பது பொருளாகும் .

    இவ்வாறு...தசரதனின் பெருமையை கம்பர் பாடலால் விளக்குகின்றார்.

    *-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*-,*

    5) கம்ப இராமாயணத்தின் கட்டமைப்பு விளக்குக ?

    கம்பராமாயணத்தின் கட்டமைப்பு :

    கம்பராமாயணம்... ஆறு காண்டங்களைக் கொண்டது.

    * பாலகாண்டம்
    * அயோத்தியா காண்டம்
    * ஆரண்ய காண்டம்
    * கிட்கிந்தைக் காண்டம்
    * சுந்தர காண்டம்
    * யுத்த காண்டம்.

    * பாலகண்டத்தில்... இராமன் முதலான பிள்ளைகள்...பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, திருமணம் முதலானவை கூறப்படுகின்றன.

    * அயோத்தியா காண்டத்தில்.... மந்தரையின் சூழ்ச்சி, கைகேயி வரம் கேட்டல் , இராமன் முதலான மூவர் காட்டுக்குப் புறப்படல், குகன் சந்திப்பு ஆகியன கூறப் பெறுகின்றன.

    * ஆரண்ய காண்டத்தில்....சூர்ப்பணகை வருதல் , மாரீசன் வதை ,ஜடாயு உயிர் நீத்தல் ஆகியன கூறப் பெறுகின்றன.

    * கிட்கிந்தை காண்டத்தில்... அனுமன் காட்சி , சுக்ரீவன் சந்திப்பு, வாலிவதம் முதலானவை கூறப் பெறுகின்றன.

    * சுந்தர காண்டத்தில்... சுந்தரன் என்னும் அனுமன் இலங்கை செல்லுதல் , சீதை சந்திப்பு ,இலங்கை எரியூட்டுதல் ஆகியன கூறப்படு கின்றன.

    * யுத்த காண்டத்தில்... விபீடணன் சந்திப்பு , கும்பகர்ணன், இராவணன் வதம், சீதையை மீட்டல், இராமனுக்குத் திருமுடி சூட்டல் ஆகியன கூறப்பெறுகின்றன.

    காண்டங்களின் உட்பிரிவுகள்.... படலங்களாக அமைக்கப் பெற்றுள்ளன.

    இதுவே... கம்பராமாயணத்தின் கட்டமைப்பாகும்.

    !~,~,~,~,~,~,~,~,~,~,~:~:~,~,~,~,~!

    ReplyDelete
  23. 6) இராமன், பரதன், இலட்சுமணன்,சத்ருக்கனன் இவர்கள் சகோதரர்களா ? ஆய்க.

    சகோதரர்கள் என்றால்... சக உதரத்தில் பிறந்தவர்கள் எனப் பொருள்.

    உதரம் என்றால் வயிறு. எனவே ஒரே வயிற்றில் பிறந்தவர்களைத் தான் சக உதரர்கள்...அதாவது சகோதரர்கள் என்று கூறுதல் வேண்டும்.

    ஆகவே இங்கு...

    இராமன் ... கோசலை வயிற்றிலும்...
    பரதன் .... கையேயி வயிற்றிலும்....
    இலட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய இருவரும் சுமத்திரை வயிற்றிலும் பிறந்தவர்கள்...ஆதலின் இவர்கள் ஒரு வகையில் அண்ணன், தம்பிகள் என்று குறிக்கப் பெறுவர்.

    -'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'

    7) இராமனுடன் சேர்ந்த குகன், சுக்ரீவன் , வீடணன் மூவருமே தம்பிகளா− விளக்குக ?

    இராமன், இலக்குவன்... சீதையோடு காட்டிற்குப் போன போது, குகன்,சுக்ரீவன், வீடணன் ஆகிய மூன்று பேரையும் சந்திக்கின்றான்.

    அப்பொழுது அம்மூவரையும், உடன் பிறவாத தம்பிகளாகப் பாவிக்கின்
    றான் என்று பலரும் கூறுவர். ஆனால், சுக்ரீவனையும், வீடணணையும் தம்பி யாகத்தான் பாவிக்கின்றான். குகனை மட்டும் அண்ணனாக எண்ணுகின்
    றான்.
    *இக்குறிப்பு கம்பராமாயணத்தில் உள்ளது.*

    குகனிடம் சீதையையும், இலட்சுமணனையும் அறிமுகப்படுத்
    தும் போது... இராமன் கூறியதாக ஒரு பாடல் உள்ளது.

    "ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
    ஏழை வேடனுக்கு எம்பிநின் தம்பிநீ
    தோழன், மங்கை கொழுந்தி எனச்சொன்ன
    வாழி நண்பினை உன்னி மயங்குவாள்

    இப்பாடல்... அசோகவனத்தில் சீதை இருந்தபொழுது, வருந்திய நிலையில் எண்ணியதாக அமைந்துள்ளது.

    என் தம்பி இவட்சுமணன் உன் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், மங்கை சீதை உனக்குக் கொழுந்தி என்றும் அறிமுகப்படுத்தியதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    கொழுந்தி எனும் சொல்...தம்பியின் மனைவியைக் குறிக்கும் சொல் குகனுக்கு இராமன் தம்பி என்னும் நிலையில்... சீதை கொழுந்தி ஆகிறாள்.

    இதன் மூலம், இராமனுக்குக் குகன் அண்ணன் ஆகிறான்.

    −,−,−,−,−,−,−,−,−,−,−,−,−,−,−,−,−,−,−,−

    8) இராமன் , மைதிலி , ஜானகி , கைகேயி இவர்களின் பெயர் விளக்கங்களை வரைக ?

    இராமன், மைதிலி, ஜானகி, கைகேயி இவர்களின் பெயர் விளக்கம் :

    இராமன் :

    இராமன் என்னும் சொல்லிற்கு... மிகுந்த அழகுடையவன் என்பது பொருள். இராமன், ராமி என்பதைப் பார்க்க வேண்டும். ராமி என்றால்... அழகுடையவள் என்பது பொருள். அபிராமி என்றால்... மிகுந்த அழகுடை யவள் என்பது பொருள்.

    மைதிலி :

    மைதிலி என்பது .... மிதிலை நாட்டுப் பெண் என்பது பொருள்.

    ஜானகி :

    ஜானகி என்றால்.... ஜனகனின் மகள் என்பது பொருள்.

    கைகேயி :

    கைகேயி என்றால்.... கேகயனின் மகள் என்பது பொருள்.

    −.−.−.−.−.−.−.−.−.−.−.−.−.−.−.−.−.−.−

    9) சடையப்ப வள்ளல்−குறிப்பு வரைக?

    சடையப்ப வள்ளல் :

    சடையப்ப வள்ளல், திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்தவர். சடையப்ப வள்ளலாரின் உதவியால் தான், கம்பன் மிகப் பெரிய கவிஞனாக.... வாழவும், வளரவும் முடிந்தது.

    சேக்கிழாருக்கு அநபாயனைப் போல...
    கபிலருக்குப் பாரியைப் போல....இவரைக் கூறலாம்.

    சடையப்ப வள்ளலின் மீது காட்டும் நன்றியினைக் கம்பன் பல இடங்களில் நிரூபித்துள்ளான்.

    இராமாயணத்தின் நிறைவில், இராமனுக்கு முடிசூட்டும் பொழுது, அம்மகுடத்தை வெண்ணெய் நல்லூர்ச் சடையன் மரபிலோர் எடுத்துக் கொடுக்க வசிஷ்டனே புனைந்தான் மெளலி என்று பாடுகின்றான் கம்பன்.

    அப்பாடல்....

    "அரியணை அனுமன் தாங்க
    அங்கதன் உடைவாள் ஏந்தப்
    பரதன் வெண்குடை கவிக்க,
    இருவரும் கவரி வீச
    விரிகடல் உலகம் ஏத்தும்
    வெண்ணெய்நல்லூர் சடையன் வண்மை
    மரபுளோர் கொடுக்க, வாங்கி
    வசிட்டனே புனைந்தான் மெளலி"

    என்பதே அப்பாடல்.

    ",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",","


    ReplyDelete
  24. 10) மன்னன் மக்களுக்கு உடம்பா, உயிரா விளக்குக ?

    மன்னன் மக்களுக்கு உடம்பா, உயிரா விளக்கம் :

    ஒரு நாட்டைக் காக்கும் மன்னன் அந்நாட்டு மக்களுக்கு உயிர் எனப் போற்றப் பெறுவான் என்கிறது சங்க இலக்கியம்.

    "நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்பது புறநானூறு. இதனைப் பாடியவர்...."மோசிகீரனார்" என்னும் புலவர்.
    ஆனால்.... கம்பன் மக்களை உயிர் என்றும், மன்னனை உடம்பு என்றும் கூறுகின்றான்.

    "வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்
    உயிரெலாம் நன்னுயிர் ஐப்ப ஓம்பலால்
    செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்
    உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்"

    என்பது அப்பாடல்.

    சேக்கிழார் சுவாமிகள்... "கண்ணும் ஆவுயுமாம் காவலன்" என்று அரசனைக் குறிப்பிடுகின்றார். பாரதியார் மன்னனை நாட்டைக் காக்கும் காவல்காரன் என்கிறார். பாஞ்சாலி சபதத்தில், தருமன் நாட்டை வைத்துச் சூதாடிய நிகழ்ச்சியைக் கண் டிக்கும் வகையில் பாரதியார்... கோயில் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலவும்...
    வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலவும்... இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது....என்று கண்டிக்கின்றார்.

    எனவே.... மன்னன் ஒவ்வொரு நிலையில், ஒவ்வொரு தன்மையில் விளங்குகின்றான் என்பதே நாம் அறிய் வேண்டுவது.

    "."."."."."."."."."."."."."."."."."."."."."."."."."."."."

    11) சபரி −தொண்டினை வரைக ?

    சபரியின் தொண்டு :

    திருவிளையாடல் புராணத்தில் காணப்பெறும் வந்தியைப் போல, சபரியைக் கூறலாம். இவள் கவந்தன் என்னும் ஒருவனால் அடையாளம் காட்டப் பெறுகின்றாள். இராமருக்கும், இலட்சுமணருக்கும் கவந்தன் சில யோசனைகளைக் கூறுகின்றான். வழிநடைப் பயணம் செல்வோர்க்கு வழிகாட்ட உதவுவோரே பெரும் துணை யாகக் கருதப் பெறுவார் என்றும், அத்த கைய துணையாக உங்களுக்குச் சபரி என்பாளும்... சுக்கிரீவனும் அமைவார் கள் என்றும் நல்ல யோசனை கூறுகின் றான்.

    "ஆயது செய்கை என்பது அறத்துறை நெறியின் எண்ணி
    தீயவர் சேர்கிலாது செவ்வியோர்ச் சேர்ந்து செய்தல்
    தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு அன்னாள்
    ஏயதோர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி"

    என்பது அக்கருத்து அமைந்த பாடல்.

    இரவையின் குன்றம் என்பது... மானின் முகம் போன்ற மலை என்று பொருள்படும். அது ருஷியமூகப் பருவதம் என்பதாகும். அதில் தான் சுக்ரீவன் மறைந்து வாழ்கின்றான். இராமர், இலட்சுமணர்கள், சபரியைக் கண்டு அவள் தந்த விருந்தினை உண்டு மகிழ்ந்தார்கள்.

    "ஆண்டவள் அன்பின் ஏத்தி அமுதிழி அருவிக் கண்ணாள்
    மாண்டதென் மாயப்பாசம்; வந்தது வரம்பில் காலம்
    பூண்டமா தவத்தின் செல்வம்; போயது பிறவி என்பாள்
    வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை"

    என்பது அப்பாடல். இங்ஙனமாக இராமர், இலட்சுமணருக்கு விருந்து படைத்த அவள் அவர்கள் அருளால் பெரும்பேறு பெற்றாள்.

    ;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;.;

    12) தாரை − பெண்மையின் ஏற்றத்தை விளக்குக ?

    தாரை பெண்மையின் ஏற்றம் :

    தாரை என்பவள் வாலியின் மனைவி ஆவாள். வாலி கிட்கிந்தை நகருக்கு அரசனாக விளங்குபவன். இவன் தன்னுடைய தம்பி சுக்ரீவன் மனைவி ருமையைப் பெண்டாண்டு கொண்டான். இதனை அறிந்த இராமன் சினம் கொண்டு, சுக்ரீவனை நோக்கி, நீ உன் அண்ணனைப் போருக்கு அழைப்பாயாக என்று ஆணையிட்டான். சுக்ரீவன் தன் அண்ணன் வாலியைப் போருக்கு அழைத்தான். அப்பொழுது அவன் மனைவி தாரை தடுத்தாள். வாலி ஏன் என்று கேட்டான். உங்கள் தம்பிக்குத் துணையாக இராமன் என்பவன் வந்திருப்பதாக அறிகிறேன்; அதனால் செல்ல வேண்டாம் என்று தடுத்தாள். வாலிக்கும் தெரியாத அரசியல் இரகசியத்தை, கணவன் நலம் நோக்கித் தெரிந்து வைத்திருந்தாள். கணவன் தன்னைவிட்டு ருமையை விரும்பியிருக்கிறான் என்று அறிந்தும் கணவனைக் காக்க முயலுகின்றாள். ஆனாலும் வாலி கேட்கவில்லை. தன் கணவன் எப்படியிருந்தாலும், தான் அவனுக்குரிய மனைவியாக வாழ் வதில் இம்மியும் குறை வைக்கக் கூடாது என்று வாழ்ந்தாள் அந்த உத்தமி. அதுவே தாரையின் பெண்மைக்கு ஏற்றமாக அமைந்தது.
    ;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;;,;,;,;,;,;,;,;,;

    ReplyDelete
  25. 13) சுந்தரகாண்டத்தின் கதை நாயகன் யார் ? விளக்குக .

    சுந்தர காண்டத்தின் கதை நாயகன் :

    இராமாயாணத்தில்... 5−வது காண்டமாக விளங்குவது... சுந்தர காண்டமாகும். இக்காண்டம் முழுமை யும்... அனுமனின் அற்புதங்களே பேசப் படுகின்றன.

    சுந்தரன் எனும் சொல் அனுமனைத் தான் குறிக்கும். சுந்தரம் என்றால் அழகு என்பது பொருள். இங்கு அனுமனின் அக அழகாகிய பணிவு, உண்மை, துணிவு, கனிவு, சாதுர்யம், சொல்லின் செல்வனாம் தன்மை, தொண்டு, தியாகம், தன்துயர்க் காணாத் தகைமை, தற்புகழ்ச்சி இன்மை, நைஷ்டிக பிரமச்சரியம் ஆகிய அனைத்தும் இக்காண்டத்தில் விளக்கம் பெறுவதால்...இது அனுமன் பெயரிலே...சுந்தரகாண்டம் என்னும் பெயர் பெற்றது.

    ;";";";";";";";";";";";";";";";";";";";";";";";";";

    14) புத்திர காமேஷ்டி யாகம்
    விளக்குக ?

    புத்திர காமேஷ்டி யாகம் :

    தசரதன் பல ஆண்டுகள் ஆட்சி புரிந் தும் கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகியோரை மனைவியர்களாகப் பெற்றும் மக்கட் பேறு இன்றி இருந்தான். அதனால் வருந்தினான். அப்பொழுது வசிஷ்ட முனிவர் தம் மனக் கண்ணால் உள்நோக்கி உணர்ந்து சில விவரங்களைக் கூறினார். திருமால் தேவர்களின் துன்பங்களை நோக்கி, அதாவது... இராவணனால் அவர்கள் படும் துன்பங்களை நோக்கிக் கூறுகின்றார்.

    இராவணன் பிரமதேவரிடம் "வரம்" பெற்றவன். அப்பொழுது மானுடரை யும், வானரங்களையும் சிற்றுயிர்கள் என்று எண்ணி அவர்களை நீக்கி வரம் பெற்றுள்ளான். ஆதலால் அவனை அழிக்கத் தேவர்களே நீங்கள் வானரங் களாகப் பிறப்பீர்களாக. நான் மனிதனாக அவதரிக்கின்றேன். மனுகுலத்தில் தசரதனுக்கு மகனாக நான் அவதரிப்பேன்.

    சங்கும், சக்கரமும், ஆதிசேடனும் எனக் குத் தம்பிகளாகப் பிறப்பார்கள் என்று கூறினார். உடனே இந்திரன், நான் வாலியாகப் பிறப்பேன் என்றான். சூரியன், சுக்ரீவனாகப் பிறப்பேன் என்றான். அக்கினி தேவன், நான் நீலனாகப் பிறப்பேன் என்றான். வாயு தேவன் அனுமனாகப் பிறப்பேன் என்றான்.

    இதை மனக் கண்ணால் கண்ட வசிஷ்டர், தசரதனைப் பார்த்து... கலைக்கோட்டு முனிவரைக் கொண்டு, நீ புத்திர காமேஷ்டி யாகம் செய்க என்றார். அங்ஙனமே.. தசரதன் செய்ய, யாகத்தில் கிடைத்த பாயாசத் தின் ஒரு பகுதி கோசலை உண்ண, பிறிதொரு பகுதி கைகேயி ஊண்ண, எஞ்சிய 2 பகுதிகளைச் சுமத்திரை உண்ண, முறையே... இராமன், பரதன், இலக்குமணன், சத்ருக்கனன் பிறந்தார்கள்.

    ",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",",","

    15) விசுவாமித்திர முனிவர்− குறிப்பு வரைக ?

    விசுவாமித்திர முனிவர் :

    விசுவாமித்திர முனிவர் என்பார்... ஒருவகையில் தசரதனால் வணங்கப் பெற்றவர். இவர்தான் தன் யாகத்தை காத்தல் பொருட்டு... இராமன், இலட்சுமணர்களை அழைத்துச் சென்று தாடகையைக் கொல்லச் செய்தவர். தொடர்ந்து மிதிலை நாட் டிற்குச் செல்லும் பொழுது, கல்லாகக் கிடந்த அகலிகை பெண் உருவம் பெற்ற வரலாற்றைக் கூறியவர்.

    இராமன் கால் தூசுப் பட்டு... அகலிகை பெண் உருவம் பெற்றாள். ஆதலினால்
    இம்முனிவர், இராமனைப் பார்த்து...
    "தாடகை வதத்தில் உன் கை வண்ணம் கண்டேன். இங்கு உன் கால் வண்ணம் கண்டேன் என்றார்.
    மேலும்... இவர்களை அழைத்துக் கொண்டு, மிதிலை நகர் சென்று இராமர் சிவதனுசை முறிக்கும்படிச் செய்து, சீதை திருமணத்தை நடத்தி வைத்தவர்.
    ,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.

    16) சிவதனுசு − விளக்கம் தருக ?

    சிலதனுசு விளக்கம் :

    சிவதனுசு என்னும் வில் சிவபெருமான் உடையது. தட்ச யாகத்தில்.. சிவமூர்த்தி யின் திருக்கரத்தில் இது இருந்தது. தட்சனின் வேள்வி அழிந்த பின்.. இந்த வில்லை, மிதிலையை ஆண்ட தேவராதன் கையில் கொடுத்து அருளினார்.

    இக்குலத்து முதல்வனாகிய "நிமி" என்ற மன்னனுக்கு... வசிஷ்டர் தந்த சாபத்தால்... தேகம் இல்லாமல் போய் விட்டது. எனவே, அம்மன்னன் "விதேகன்" எனப் பெயர் பெற்றான். அதனால் இந்த நாடு விதேக நாடு எனப் பெயர் பெற்றது.

    இக்குலத்தார்கள் வழிவழியாக இந்த சிவதனுசை வழிபாடு செய்து கொண்டு வருகிறார்கள். இப்பொழுது விதேக நாட்டை ஆளுகின்ற ஜனகர் நெடுங்காலம் மக்கட்பேறின்றி வருந்தினார். ஆகவே, புத்திரக் காமேஷ்டி யாகம் செய்யும் பொருட்டு, நிலத்தை உழுகின்ற பொழுது, நிலத்தி லிருந்து, திருமகளே சீதையாகத் தோன்றினாள்.

    சீதை தன் உறவுப் பெண்களுடன் விளையாடும்போது, பந்து ஒன்று இந்த வில்லின் கீழ் சிக்கியது. சீதை, அந்த வில்லை அநாயாசமாக எடுத்து மூலையில் வைத்து விட்டாள்.

    இதனை அறிந்த ஜனகர், சீதையின் பேராற்றலைக் கண்டு, இந்த வில்லை வளைப்பவனுக்கே, என் மகளைத் தருவேன் என்று அறிவித்து விட்டார்.
    ;
    இவையே...சிவதனுசுவின் விளக்கம் ஆகும்.
    ,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.

    ReplyDelete
  26. 17) ருசியமூகப் பருவதம் − குறிப்பு வரைக ?

    ருசியமூகப் பருவதம் :

    இரலையின் குன்றம் − மானின் முகம் போன்று காணப்படும் மலை, ருசியமூகப் பருவதம்.

    வாலி.... தன் தம்பியாகிய சுக்ரீவனை நியாயம் இன்றி அடித்து இடர்ப்படுத்தினான். எட்டுத் திசைகளிலும் ஓட ஓட இரத்தம் சிந்த இரக்கமின்றி , இவனைக் குத்திக் கொல்ல முயன்றான். சுக்ரீவன்... இங்கு ருசியமூகப் பர்வதத்தில் வந்து தங்கி உய்வு பெற்றான்.

    ருசியமூகப் பர்வதம் .... மதங்க முனிவருடைய தவக் குன்றம், இங்கு ஒருமுறை வாலி வந்து, ஆரவாரம் செய்தான். ஓர் அவுணனைக் கொன்று தூக்கி எறிந்தான். அவ்வுடல் இங்கு விழுந்தது. முனிவர்.... இனி நீ இங்கு வந்தால், உன் தலை வெடித்து விடக் கடவது என்று வாலிக்குச் சாபம் கொடுத்தார். அதனால் வாலி இம்மலைக்கு வருவதில்லை. இச்சாபம் இல்லையேல்... சுக்ரீவன் என்றோ மடிந்திருப்பான்.

    இவையே... ருசியமூகப் பர்தத்தின் விளக்கம் ஆகும்.

    !,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,!,

    18) சம்பாதி − விளக்குக ?

    சம்பாதி விளக்கம் :

    சூரியனுடைய தேர்ப்பாகன் அருணன். காசிப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்தவன் அருணன். அருணனுடைய
    புதல்வர்கள்... சம்பாதி, சடாயு என்பவர் கள். இவர்கள் இருவரும் சூரியன் உலகத்தில் புக எண்ணினார்கள்.

    சூரியனின் வெம்மை தாங்காது...தம்பி சடாயு தவித்தான்; அப்பொழுது அண்ணன் சம்பாதி, தன் சிறகுகளால் தம்பியைக் காத்தான். அதனால் சம்பாதியின் சிறகுகள் எரிந்தன. அப்பொழுது சூரியன், இராம தூதுவர்களால், உன் சிறகுகள் மீண் டும் முளைக்கும் என்று வரம் அருளினான். அதன்படி, இராமனு டைய தூதுவர்களாகிய வானரங்கள் இலங்கையை நோக்கி வந்தபொழுது, சம்பாதியைச் சந்தித்தார்கள். சடாயு வீரமரணம் எய்தி விட்டார் என்பதை அறிந்த சம்பாதி அழுதது. அப்பொழுது என்பொருட்டு நீங்கள் இராமநாமத் தைச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டது. அவர்களும் அவ்வண்ண மேச் செய்தார்கள்.

    சம்பாதிக்குச் சிறகுகள் முளைத்தன. சம்பாதி இலங்கையில், இராவணன் சீதையைச் சிறை வைத்துள்ளான் என்ற செய்தியை முதன் முதல் கூறினார். பின்னர், தம்பி சடாயு இறந்து விட்டதனால், என் கழுகுக் கூட் டங்கள் தலைவன் இன்றித் தவிக்கும்; நான் அங்கேச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றது.

    திருஞானசம்பந்தர்..புள்ளிருக்கு− வேளூர் தேவாரத்தில், சடாயு, சம்பாதியைப் பற்றிக் குறிப்பிடு கின்றார். இன்றும் இத்தலத்தில் ... "சடாயு குண்டம்" என்ற ஒரு பகுதி இருக்கிறது.

    இதுவே சம்பாதி விளக்கம்.

    ,=,=,=,=,=,=,=,=,=,=,=,=,=,=,=,=,=,=,

    19) மண்டோதரியின் மாண்பினை வரைக ?

    மண்டோதரியின் மாண்பு :

    மண்டோதரி என்பவள்.... இராவண னின் மனைவி. மகனான.. இந்திரஜித், இரணியன்,அதிகாயன் என்பவர்களின் தாய். மயனின் மகள்.

    மண்டோதரி என்றால்.... சிற்றிடையாள் என்றும் பொருள். மிகுந்த அழகும், கற்புத் திறனும் உடையவள்.சீதையைப் போன்ற தோற்றம் உடையவளாக மண்டோதரி விளங்கினாள். இதனை விளக்குமுகமாகக் கம்பன் அனுமன் கூற்றில் வைத்துப் பேசுகிறான் என்பது சிறப்பாகும்.

    "அன்னள் ஆகிய சானகி இவளென
    அயிர்த்து அகத்து எழுவெந்தீ
    துன்னும் ஆருயி ருடலொடு சுடுவதோர்
    துயருழந்து இவை சொன்னான்"

    என்னும் பாடல் பகுதியில் அக்கருத்து விளங்குகிறது.

    ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் இராமனுக்குச் சீதை அற்புத மனையி யாக வாழ்ந்ததில் வியப்பில்லை. ஆனால்... தன் முன்னிலையிலேயே, தன் கணவன் மற்றொரு மனைவியை விரும்பியதைக் சகித்துக் கொண்டது தான் இவளின் கற்பு..இவளின் மாண் பாகும்.

    நல்லவனுக்கு நல்லவளாக வாழ்ந்து விடலாம். தீயவனுக்குத் தன்நிலையில் தாழாமல் நல்ல மனைவியாக வாழ்வது தான் பெரும் கற்புடைமை.

    அங்ஙனம்... வாழ்ந்தவள் மண்டோதரி.

    ;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;-;


    ReplyDelete
  27. 20) இந்திரஜித் − குறிப்பு வரைக ?

    இந்திரஜித் :

    இந்திரஜித் என்பவன்.. இராவணனின் மகன். சிறந்த போர் வீரன். இந்திரனை ஜெயித்தமையால் இவன் இந்திரஜித் என்னும் பெயர் பெற்றான். தன் தந்தை தகாத உணர்வில், இராமனின் மனைவி சீதையை விரும்பியது குற்றம் என்று இடித்துப் பேசினான்.


    "ஆதலால், அஞ்சி னேன் என்று
    அருளலை; ஆசை தான்அச்
    சீதைபால் விடுதி யாயின்
    அனையவர் சீற்றம் தீர்வர்;
    போதனும் புரிவர்; செய்த
    தீமையும் பொறுப்பர்; உன்மேல்
    காதலால் ஊரைத்தேன் என்றான்
    உலகெலாம் கலக்கி வென்றான்"

    இக்கருத்தைக் கேட்ட இராவணன் மிகுந்த சினம் கொண்டு, தன் மகனைப் பார்த்து, அட போடா ! நான் போர் செய்து கொள்கிறேன்... தேரைக் கொண்டு வா என்று சினந்து எழுந்தான். இதனைக் கண்ட உத்தம மகன் இந்திரஜித் , தன் தந்தையின் காமத்திற்குத்...தன் உயிரைக் கொடுப் பது என்று முடிவு செய்து விட்டான். இந்த அளவிற்குத் தாழ்ந்தவன் இராவணன்.

    "எழுந்தவன் தன்னை நோக்கி
    இணையடி இறைஞ்சி, எந்தாய் !
    ஒழிந்தருள் சீற்றம்; சொன்ன
    உறுதியைப் பொறுத்தி; யான்போய்க்
    கழிந்தனன் என்ற பின்னர்
    நல்லவாக் காண்டி என்னா
    மொழிந்தனன் ! தெய்வத் தேர்மேல்
    ஏறினான், முடியலுற்றான்"

    என்பது அப்பாடல். இந்திரனை ஜெயித்தவனாகிய இந்திரஜித்தை இந்திரியங்களை வென்றவனாகிய இலட்சுமணன்... ஜெயித்தான் என்பது வாரியார் குறிப்பு.

    "!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!


    21) ஜடாயு − பாத்திரத் தன்மையை விளக்குக ?

    ஜடாயு என்பார்.... கழுகு இனங்களுக்கு அரசராக விளங்கினார். இவர் சம்பாதி யின் தம்பி. சம்பாதியும், சடாயுவும்... கதிரவனின் சாரதியாக விளங்கிய அருணனின் புதல்வர்கள். ஜடாயு, தசரதனுக்கு நண்பராக விளங்கினார்.
    தசரதனின் மகன்களாகிய... இராமர், இலட்சுமணர்களைக் கண்டு, தசரதன் இறந்துவிட்ட செய்தி அறிந்து, தானும் உயிர் துறக்க முனைகின்றார்.

    "மருவினிய குணத்தவரை இருசிறகால்
    உறத்தழுவி மக்காள் நீரே
    உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்
    உடலிரண்டுக் குயிரான் உயிர்ஒன்றானான்
    பிரியவும் தான் பிரியாதே இனிதிருக்கும்
    உடல் பொறையாம் பீழை பாரா
    தெரியதனில் இன்றேபுக்கு இறவே னேல்
    இத்துயரம் மறவேன் என்றான்"

    என்று ஜடயு கூற...இராமர் தடுத்து விடுகின்றார். பிறகு சீதையை, இராவணன் தூக்கிச் செல்லும் போது, தடுத்துப் போரிடுகின்றார். இராவணன், சங்கரன் கொடுத்த வாளால், ஜடாயுவின் சிறகுகளை வெட்டி விடுகின்றான்.

    ஜடாயு...இராமர், லட்சுமணர்கள் பின்னே சீதையைத் தேடி வந்த பொழுது இச் செய்தியைச் சொல்லி விட்டு இறந்து விடுகின்றார்.

    இதுவே... ஜடாயுவின் பாத்திரத் தன்மை ஆகும்.

    "?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"?"


    22) பாதுகா பட்டாபிஷேகம்− விளக்கம் தருக ?

    கைகேயியின் இரண்டு வரங்களினால், இராமர் காடு போக...பரதன் நாடாள வேண்டிய நெருக்கடி வந்தது. ஆனால் பரதர் ஒத்துக் கொள்ளவில்லை. நாட்டு மக்களையும், தாயாரையும் அழைத்துக் கொண்டு, இராமரைக் காண காட்டுக்கு வருகிறார். இராமரைக் கண்டு கண்ணீர் விட்டு அழுகிறார். நீங்கள் மீண்டும் வர வேண்டும் என்று இராமரிடம் பணிந்து கேட்கிறார். ஆனால் இராமர், தந்தை யின் ஆணையை மீற முடியாது தம்பி ! ஆதலால் நீயே நாடாளுக ! என்று ஆணையிட்டுக் கூறினார்.

    அங்ஙனமானால்..நான் 14 ஆண்டுகள்.நீங்கள் வரும் வரை தவம் செய்து கொண்டு இருப்பேன். 14− ஆண்டுகள் முடிவில்... நீங்கள் வரவில்லையானால் எரிமூட்டி இறப்பேன்... இது சத்தியம் என்று கூறினான். மேலும், "இராமரை வணங்கித் தங்கள் பாதுகையைத் தாருங்கள்; நான் அவற்றிற்கு முடிசூட்டி.அந்தியும், பகலும் வணங்கி வாழ்ந்து வருகிறேன்" என்று அழுது கொண்டே கூறினான்.

    "ஆமெனில் ஏழிரண் டாண்டில் ஐயநீ
    நாமநீர் நெருநகர் நண்ணி நானிலம்
    கோமுறை புரிகிலை யென்னில் கூரெரிச்
    சாமிது சரதம்நின் ஆணை சாற்றினேன் "

    "விம்மினன் பரதனும் வேறு செய்வதுஒன்று
    இன்மையின் அரிதென எண்ணி ஏங்குவான்
    செம்மையின் திருவடி தலம் தந்து ஈகென
    எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்"

    பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன்...தலையில் சுமந்து சென்று நந்தியம்பதியில் வைத்து முடிசூட்டி 14 ஆண்டுகள் தவம் இருந்தான். நந்தியம்பதி கோசல நாட்டின் வெளியே இருப்பது, தன் தாய் வாங்கித் தந்த நாட்டு ஆட்சியினைப் பெறாதது மட்டும் அல்லாமல், அந்த நாட்டிற்குள்ளேயே செல்லாமல் இருந்து தவம் செய்தான்.

    இதுவே பாதுகா பட்டாபிஷேகம் ஆகும்.

    *−*−*−*−*−*−*−*−*−*−*−*−*−*

    ReplyDelete
  28. 23) கல்லாப் புல்லர்க்கு சொன்ன பொருள் எனப் போயிற்றன்றே− உவமையை விளக்குக ?

    இராமனும், இலட்சுமணனும்... விசுவா மித்திரருடன், தாடகையை வதம் செய்யச் சென்றனர். தாடகை... மலைகள் பின்னே உருண்டு வர ஓடி வந்தாள். அவளைப் பார்த்த இராமன், இவள் ஒரு பெண் என்று எண்ணிப் போர் செய்யத் தயங்கினான். விசுவா மித்திரர், இராமா ! இவள் உடம்பால் தான் பெண். உள்ளத்தால் பெரிய அரக்கி. எல்லாத் தீமைகளையும் செய்து, இக்காட்டில் எல்லோரையும் கொன்று விட்டாள். அப்படியானால், நீங்கள் மட்டும் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் என்று பார்வையால் கேட்கிறாய் ? அவள், நான்"முனிவன். ஆதலின் உடம்பில் தசை இல்லாத கோது போன்று இருக்கிறேன் என்று விட்டு விட்டாள். எனவே, போடு அம்பை என்று ஆணையிட்டார்.

    "தீதென்று உள்ளவை யாவையும் செய்துஎமைக்
    கோதென்று உண்டிலள் இத்த னையே; குறையாது
    என்று எண்ணுவது இக்கொடியா ளையும்
    மாதென்று எண்ணுதியோ ! மணிப் பூணினாய் !

    என்பது அப்பாடல். இராமன் குரு வார்த்தைக்கு மறுவார்த்தை இல்லை என்று எண்ணி, அம்பினை எய்தான்.
    அந்த அம்பு, தாடகை மார்பில் தைத்துப் பின்புறமாகப் போய்விட்டது.

    இதனை விளக்க வந்த கம்பன்... படிக் காமலும், பண்புமில்லாமலும் இருப் போர்க்கு... நல்லவர்கள் சொல்லும் அறிவுரைகள்.... ஒருபக்கம் நுழைந்து மறுபக்கம் போய்விடுவது போல.. இராமன் எய்த அம்பு போய்விட்டது என்கிறார்.

    "சொல் ஒக்கும் கடியவேகச் சுடுசரம் கரிய செம்மல்
    அல்ஒக்கும் நிறத்தினாள் மேல்விடு தலும் வயிரக் குன்றக்
    கல்ஒக்கும் நெஞ்சில் தங்காது அப் புறம் கழன்று கல்லாப்
    புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்றன்றே"

    என்பது அப்பாடல்.

    இவையே... கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்எனப் போயிற்றன்றேயின் உவமை ஆகும்.

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

    24) உலோப முத்திரை− குறிப்பு எழுதுக ?

    உலோப முத்திரை :

    கம்பராமாயணப் பிரசங்கம் நடைபெறும் இடத்தில், சிற்சில கேள்விகளை எழுப்புவர்.
    அவற்றுள் ஒன்று.... சீதை காட்டுக்கு புறப்பட்ட போது, மரஉரி தரித்துத் தானே வந்தாள். அவளை இராவணன் தூக்கிச் சென்றபோது, நகைகளைக் கழற்றி, ஒரு துணியில் வைத்துக் கீழே போட்டு விட்டாள் என்றும்... அதனை எடுத்த வானரங்கள் மாறி மாறி அணிந்து கொண்டன என்றும் விளக்குவர்.

    இவ்விடத்தில்... மரஉரி தரித்து வந்த வளுக்கு, ஏது அணிகலன்கள் என்பதே வினா ?

    இதற்குரிய விடை :

    இராமரும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் போய்க் கொண்டிருக்கும் போது, வழியில்...அகத்தியரைச் சந்திக்கின்றனர். அகத்தியரின் மனைவி உலோபமுத்திரை... சீதை
    யைக் கண்டு, பெண்கள் அணிகலன் கள் இல்லாமல் இருக்கக் கூடாது, என்று கூறித் தம்மிடம் இருந்த அணிகலன்கள் பலவற்றைத் தந்து அணிந்து கொள்ளச் செய்தாள்.

    அந்த அணிகலன்களையே பின்னே சீதை, இராவணன் தூக்கிச் செல்லும் பொழுது, கழட்டிப் போட்டாள்.

    இதுவே... உலோபமுத்திரை ஆகும்.

    *-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*

    25) சூர்ப்பணகையின் பாத்திரத் தன்மையை எழுதுக ?

    சூர்ப்பணகையின் பாத்திரத் தன்மை :

    சூர்ப்பம் என்றால் முறம் என்பது பொருள். முறம் போன்ற நகங்களை உடையவள்; ஆதலின் இப்பெயர் பெற் றாள்.

    இவள் இராவணனுடைய தங்கை. இவ ளுடைய கணவன் வித்யுத்ஜினுவா.
    இவன், சகல கலைகளும் கற்றவன்.
    இவனிடம் பொறாமை கொண்ட இராவணன், மைத்துனன் என்றும் கருதாமல் கொன்று விட்டான். கணவன் இறந்தவுடன்... சூர்ப்பணகை மகிழ்ச்சி அடைந்தாளாம். இராமாயண மாகிய இதிகாசத்தை மிகவும் பெரிதாக வளர்த்து விட்டவர்கள்..இரண்டு அற்பப் பெண்கள். ஒருத்தி கூனி. மற்றொருத்தி சூர்ப்பணகை.

    கூனியில்லையானால் அப்பொழுதே முடிசூட்டுவிழா நடந்து கதை முற்றுப் பெற்றிருக்கும். சூர்ப்பணகை இல்லையானால்... வனவாசம் இனிது முடிந்திருக்கும். இராமருடைய வன வாசம் 13−ஆண்டுகளும், 2−மாதங்க
    ளும் முற்றுப் பெற்றன. இவளால்... நேர்ந்த பத்து மாதக் கதை தான் 3 காண்டங்கள்.

    இந்தச் சூர்ப்பணகை தான்...பஞ்சவடி யில், இராமர், இலட்சுமணன், சீதை மூவரும் தங்கி இருந்த பொழுது, இராம ரிடம் வம்பு பேசி இலட்சுமணனால் துன்பத்திற்கு உள்ளானாள். இவள் இலங்கைக்குச் சென்று, அண்ணனிடம் அழுது, சீதையைப் பற்றிக் கூறி, இராவணனுடைய மனதில் காமத்தை விளைத்தாள். உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பார்கள்..இவள் உடன் பிறந்தே. இராவணனைக் கொன்றாள். இவள் நடந்து வந்த வருணனையைப் பற்றிக் கம்பன் கூறும் சந்தப்பாடல் யாவரும் அறிந்ததே...!

    "பஞ்சு ஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
    செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியளாகி
    அஞ்சொல் இளமஞ்ஞையென அன்னமென மின்னும்
    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்".

    இவையே... சூர்ப்பணகையின் பாத்திரத் தன்மை ஆகும்.

    %௦%௦%௦%௦%௦%௦%௦%௦%௦%௦%௦%

    ReplyDelete
  29. 26) ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ இங்கு இவ்வண்ணம் குறிக்கப் பெறுபவர் யார் ? − விளக்குக


    ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...

    இங்ஙனம் குகனால் குறிக்கப் பெற்றவன்.... "பரதன்" ஆவான்.

    குகன் ஆயிரம் நாவாய்க்குச் சொந்தக்காரன். இராமனும், இலட்சு மணனும், சீதையும்... கங்கையைக் கடக்க உதவியவன்..இந்த குகன்.

    பரதன் மக்களை அழைத்துக் கொண்டு கூட்டமாக இராமரைச் சந்திக்கக் காட் டுக்கு வந்த பொழுது, முதலில் பரதனைத் தவறாகக் கருதி, அவன் தான் இராமனுக்கு துரோகம் செய்த வன் என்று எண்ணிச் சினம் கொண்டான். ஆனால், பரதன் நெருங்கி வர வர இவனின் தோற்றத் தைக் கண்டு, மிகப் பெரிய தவறு செய்து விட்டோமே என்று வருந்தினான் குகன். இவன் எவ்வகையிலும் குற்றவாளி இல்லை என்று தெளிந்தான்.

    "வற்கலையின் உடையானை
    மாசடைந்த மெய்யானை
    நற்கலை யின்மதிஎன்ன
    நகை இழந்த முகத்தானை
    கற்கனியக் கனிகின்ற
    துயரானைக் கண்ணுற்றான்
    விற்கையின் நின்று இடைவீழ,
    விம்முற்று நின்றொழிந்தான்"

    என்பது கம்பன் காட்டிய ஓவியம். மேலும் பரதனைக் கட்டித் தழுவி, இத்தகைய உணர்வோடு வந்த நீ மிகச் சிறந்தவன். ஆயிரம் இராமர் உனக்கு ஒப்பாவாரோ என்று பரதனைப் பாராட்டுகிறான் குகன்.

    "தாயுரைக் கொண்டு தாதை
    உதவிய தரணி தன்னைத்
    தீவினை என்ன நீத்துச்
    சிந்தனை முகத்தில் தேக்கிப்
    போயினை என்ற போழ்து
    புகழினோய் ! தன்மை கண்டால்
    ஆயிரம் ராமர் நின்கேழ்
    ஆவரோ தெரியின் அம்மா !"

    இப்பாடலில் பரதனைப் பலவாறு போற்றுகின்றான் குகன். தாய் உரையினால்... தந்தை உதவிய ஆட் சியைப் பாவம் என்று துறந்து, சிந்தனை முகத்தில் தேக்கிக் கொண்டு, இராமரைத் தேடி வந்திருக்கிறாயே பரதா ! உனக்கு ஆயிரம் இராமர் கூட ஒப்பாக மாட்டார்கள் என்று குகன் துணிவாகக் கூறுகின்றான்.

    ஏனெனில்... காட்டுக்குப் போ என்ற தால்... இராமன் காட்டுக்கு வந்தான். ஆட்சியைப் பெற்றுக் கொள்க என்பதைக்கூட ஏற்காமல் காட்டிற்கு வந்த இவன், இராமனை விட உயர்ந்தவன், என்று குகன் கூறுகின்றான்.

    இப்பாடலில்... கேழ் என்னும் சொல், ஒப்பு என்னு பொருளில் வருகிறது. இந்த சொல்லாட்சியை ...மாணிக்க வாசகர், தம் திருவாசகத்துள் பயன் படுத்தி உள்ளார்.

    திருவெம்பாவையில்... "கோழி சிலம்பச் சிலம்பும் குறுகு எங்கும்" என்று தொடங்கும் 8−வது பாடலில், கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை, கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ..என்னும் வரிகளில் கேழ் என்னும் சொல் அமைந்துள்ளது.

    இறைவன் நிகரில்லாத பெருங் கருணையுடையவன் என்னும் பொருள் அமைந்துள்ளது.

    இதுவே... ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...என்பதன் விளக்கம் ஆகும்.

    *-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"*-"


    27) கோதாவரியின் வருணனையைக் கம்பர் வழி நின்று விளக்கு ?

    கோதாவரி வருணனை :

    கோதாவரி என்னும் நதியை, இராமன் முதலான மூவரும் காண்கின்றார்கள். அப்பொழுது கம்பர் கோதாவரி என்னும் நதியினை மிக அழகாக வர்ணித்துக் கூறுகின்றார்.

    எவ்வாறெனில்....

    புவியினுக்கு அணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி,
    அவி அகத்துறையுள் தாங்கி
    ஐந்தினை நெறி அளாவிச்
    சவிஉறத் தெளிந்து தண்என்று
    ஒழுக்கம் தழுவிச் சான்றோர்
    கவிஎனக் கிடந்த கோதா
    வரியினை வீரர் கண்டார்."

    என்று இம்மண்ணிற்கு அணியாய்,ஆழமானப் பல பொருள்கள் கொண்டு, பல்வேறு துறைகளில் படிந்து,ஐந்திணை நிலப்பரப்பில் தவழ்ந்து, குற்றமறத் தெளிந்து, குளிர்ச்சியான தன்மை கொண்டு விளங்கும் சான்றோர் கவிதை எனக் கிடந்த கோதாவரியைக் கண்டார்கள் என்கின்றான் கம்பன்.

    மேற்கண்ட விளக்கம் நதிக்கும் பொருந்துகிறது.... நற்றமிழ் புலவர் கவிக்கும் பொருந்துகிறது.

    இவ்வாறு...கம்பர், கோதாவரியை வர்ணிக்கிறார்.

    "-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"

    ReplyDelete
  30. Sat. 6, Aug. 2022 at 7.45 pm.

    சைவ சித்தாந்தம் :

    1) பட்டினத்தார் வரலாற்றை விளக்கி எழுதுக ?

    11−ஆம் திருமுறையில்...கோயில் நான் மணி மாலை முதலான 5 பிரபந்தங் களை அருளியவர் பட்டினத்து அடிகள் ஆவார்.

    திருவெண்காடர், திருவெண்காட்டு அடிகள், பட்டினத்துப் பிள்ளையார் எனவும் இவர் பெயர் வழங்கப் பெறும்.

    காவிரிப்பூம்பட்டினத்திலே, வேளாள மரபிலே செல்வச் செழுங்குடியில் தோன்றி... மனைத்தக்க மாண்புடைய மனைவியை மணந்து இல்லறம் இயற்றி வந்த இவர்... பிறவி நோய்க்குக் காரணமான ஆசையை அறவே விட்டொழித்து துறவறம் பூண்டு உயர்ந்தவர்.

    வரலாறு :

    காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் அவதரித்த இவருக்கு ..பெற்றோர் சூட்டிய பெயர் "திருவெண்காடர்" ஆகும். இவர் வாணிபத்தில் பெரும் பொருள் ஈட்டிச் சிவபக்தியில் சிறந்தவராய்... சிவனடியார்களுக்கு வேண்டுவன அளித்த பண்பினராய் விளங்கினார்.
    நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்த இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.

    சிவசருமர் :

    திருவிடைமருதூரில் சிவனடித் தொண்டு பூண்டொழுகிய... சிவசருமர் என்னும் அந்தணர் வறுமையால் துயருறுவதைக் கண்டு மனம் பொறாத "மகாலிங்கப் பெருமான் மருதவாணர்" என்னும் திருப்பெயரோடு அவர் முன் தோன்றி... காவிரிப்பூம்பட்டினத்தில்..
    மகப்பேறின்றி வருந்தும் திருவெண்கா
    டரிடம் தன்னை விற்றுப் பொருள் பெற்று வறுமை நீங்குக.... என்று கூறி அருளினார்.

    சிவசருமர் இறைவன் கட்டளைப்படி மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காரரிடம் மருதவாணரை அளித்துப் பொருள் பெற்றுத் திருவிடைமருதூர் மீண்டு வறுமை நீங்கி இன்புற்றார்.

    கடல் வாணிகம் :

    திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார்.

    வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டித் திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார்.

    அவ்வாறு... கடல் வாணிபம் செய்து
    வரும்போது... ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர்... அங்கிருந்து..எருமூட்டைகளையும், தவிட்டையுமே வாங்கித்"தம் மரக்கலத்தில் நிரப்பிக் கொண்டு ஊர் திரும்பினார்.

    வழியில் அனைவரின் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள், உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எருமூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.

    வரட்டியும்...தவிடும் :

    வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காரரிடம்.. மருதவாணர் பித்தராய் வீணே பொருளைச் செல
    விட்டுத் தவிடும், வரட்டியுமே வாங்கி வந்துள்ளார் என்று புகார் கூறினர்.

    திருவெண்காடர், மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்த போது அவற்றுள் "மாணிக்கக் கற்கள்" இருத்தலையும், தவிட்டைச் சோதித்த போது, அதனுள் தங்கப் பொடி மறைத்து வைக்கப் பட்டிருந்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளை யர்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே...இவ்வாறு செய்துள்ளான் என வியந்து, அதனை வணிகர்களிடம் கூறி மகிழ்ந்தார். அதனை அறிந்த வணிகர்கள் தாங்கள் கடனாகப் பெற்றி ருந்த எரு மூட்டைகளின் விலை மதிப்பை எண்ணி மனம் வருந்தினர்.

    காதற்ற ஊசி :

    சில நாட்கள் சென்ற பின் அனைத்து வரட்டிகளையும், தவிட்டையும் சோதித்த போது, அவற்றுள் ஒன்றும் இல்லா
    திருத்தலைக் கண்டு, தன் மகன் மீது, சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத்துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து, வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார்.

    மருதவாணர் தாயார் அவரைக் காண அறைக்குச் சென்ற போது... சிவபிரான் முருகனோடும், உமையம்மையோடும் அங்கிருத்தலைக் கண்டு, தன் கணவருக்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார்.

    மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற் பொருளை அவருக்கு உபதேசம் செய்தார்.

    எனினும்.... பெருஞ்செல்வராகிய அவருக்கு, உலகப்பற்று ஒழியாமைக் கண்டு... காதற்ற ஊசி ஒன்றையும், நூலையும் ... "காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே" என்று எழுதிய ஓலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி... வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப் பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

    ReplyDelete
  31. திருவெண்காடர், மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்த போது... காதற்ற ஊசி, நூல் ஆகியனவும், அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக் கண்டு,அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து, இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய, தூய நெறியை மேற்கொண்டு... ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார்.

    திருவெண்காடர்...துறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி, நீர் துறவறம் பூண்டதால் அடைந்த பயன் யாது ? என வினவிய போது....
    "நீ நிற்கவும், யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது" என மறுமொழி புகன்றார்.

    எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.

    சிவசமாதி :

    திருவெண்காட்டு அடிகள்... திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தி னார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும்... அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு... சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்த போது, அடிகள் "சிவலிங்கமாக" வெளிப்பட்டருளினார்...!

    பட்டினத்தார் வரலாற்றில் இரண்டு செய்திகள் முக்கியமானவை...

    1) தன் தாயார் மறைந்த போது, வாழைத்தண்டை வைத்து எரியூட்டி னார்.
    2) பத்திரகிரியார் என்ற மன்னரின் விசாரணைக்கு உட்பட்டுப் பின்னர் அவரே இவருக்குச் சிஷ்யரானார்.


    இதுவே... பட்டினத்தாரின் வரலாறுகள் ஆகும்.

    <,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,<,


    2) திருமுறைகள் வகுத்த காலம் குறித்து அறிஞர்... என். சேதுராமன் விளக்கியுள்ள கருத்துக்களைச் சுருக்கி வரைக ?

    இராசஇராசன் காலத்தில்... இளமை நிலையிலே இருந்த "நம்பியாண்டார் நம்பிகள்" , இராசேந்திரன் காலத்தில்..
    வயது முதிர்ந்து "சிவானுபூதியில்" ... திளைத்திருந்தவராவர்.

    அந்நிலையில்... அவர் அவனது வேண்டுகோளின்படி...
    திருவாசகத்தை... எட்டாம் திருமுறை யாகவும்....
    திருவிசைப்பாக்கள்.... ஒன்பதாம் திருமுறையாகவும்....
    திருமந்திரத்தை..... பத்தாம் திருமுறையாகவும்.....
    திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம், காரைக்காலம்மையார் திருப்பாடல்கள் முதலியவற்றோடு...இறுதியில் தமது பாடல்களையும் தொகுத்து..... பதினொன்றாம் திருமுறையாகவும் தொகுத்தருளினார்.

    இங்ஙனம்.... திருமுறைகளை தொகுப் பித்த அரசர் இருவராயினும், வகுத்த ஆசிரியர் ஒருவரேயாதலின் ....
    ஒன்று முதல்.... பதினொன்று முடிய உள்ள திருமுறைகள் பதினொன்றும்... ஒரே சமயத்தில் வகுக்கப்பட்டதாகத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது.

    இராசேந்திர சோழனின்... 23−ஆம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில்..."கங்கைகொண்ட சோழீச்சுரமுடையார்ஆலயம் ...
    கி.பி.1035 −க்கு முன் கட்டி முடிக்கப்பட்
    டது" என்ற செய்தி உணர்த்தப்படு கிறது.

    கருவூர்த்தேவர், தஞ்சைப் பெருவுடை யார் கோயிலைப் பற்றிப் பாடியிருக் கும் பாடல்களும் கங்கைகொண்ட சோழிச்சுரர் மீது பாடியிருக்கும் பாடல் களும் ...9−ஆம் திருமுறையில் இடம் பெறுகின்றன.

    எனவே... கருவூர்த்தேவர், இராச இராசன் காலத்திலும் வாழ்ந்தவர் என்பது நன்கு புலப்படுகிறது.

    அடுத்து...கால அடிப்படையில் தொகுத்து நோக்கினால்...8 முதல் 11 வரை உள்ள நான்கு திருமுறைகளும், இராசேந்திர சோழர் காலத்தில் வகுக்கப்பட்டன என்று அறியலாம்.

    கங்கைகொண்டசோழீச்சுரர் கோயில் கி.பி.1035க்கு முன் கட்டப்பட்டது.

    இராசேந்திரன் ... கி.பி.1043−ல் மறைந்தனன்.

    எனவே....இந்நான்கு திருமுறைகளும் கி.பி. 1035 -கி.பி. 1043−க்குள் வகுக்கப்பட்டன எனப் புலனாகிறது.

    கி.பி. 1100−ல் குலோத்துங்க சோழன் காலத்தில்... மூவர் முதலிகளின் தேவாரங்கள்... செப்பேட்டில் எழுதப்பட்டு... தில்லை நடராசர் கோயிலில் வைக்கப்பட்டன.

    இத்திருப்பணியைச் செய்தவன்.... "நாலோக வீரனாவன்".

    அடுத்ததாக.... பன்னிரண்டாம் திருமுறைக் குறித்து காண்போம்....!

    பெரியபுராணம் எழுதப்பட்ட காலம் :

    விக்கிரமசோழன் கி.பி. 1118-ல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தான்.

    கி.பி.1133−ல், தனது மகன் இரண்டாம் குலோத்துங்கனுக்கு முடி சூட்டினான்.

    கி.பி. 1135−ல் விக்கிரம சோழன் மறைய... இரண்டாம் குலோத்துங்கன் சோழப் பேரரசன் ஆனான்.

    அச்சமயம் மன்னனின் முதலமைச்ச ராகப் பணிபுரிந்தவர்.. குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் ஆவார்.

    சேக்கிழார் .... பெரியபுராணம் எந்த சூழ்நிலையிலிருந்து .... இவ்வரும் பணியைச் செவ்வனே செய்து முடித்தாரெனில்.... இதற்கான பதில்கள்... பெரியபுராணத்திலும், உமாபதி சிவத்தின் சேக்கிழார் நாயனார் புராணத்திலும், குலோத்துங்கன் கல்வெட்டுகளிலும் நாம் காணலாம்.

    ReplyDelete
  32. சேக்கிழார் பெரிய புராணம் எழுதத் தொடங்கிய காலம் :

    சேக்கிழார் கி.பி.1135−ல் பெரிய புராணம் எழுதத் தொடங்கினார்.
    4253− பாடல்கள் கொண்ட பெரிய புராணத்தை நான்கு வருடத்தில் எழுதி முடித்தார்.

    கி.பி.1139−ல் சித்திரை திருவாதிரை நாளில்.... தில்லை நடராசர் ஆலயத் தில், ஏப்ரல் மாதம் 6−ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய புராணம் அரங்கேற்றம் செய்யப் பெற்றது.

    அடுத்த ஆண்டான...கி.பி.1140−ல் சித்திரை திருவாதிரை நாளில், ஏப்ரல் மாதம் 22−ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பெரியபுராணம் அரங்கேற்றம் நிறைவு பெற்றது.

    இதுவே....என். சேதுராமன் விளக்கியுள்ள திருமுறைகள் வகுத்த காலம் குறித்ததான கருத்துக்களாகும்.

    ^<~^<~^<~^<~^<~<^<~^<~^<~^<~^


    3) முதலாம் இராசராசசோழன் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் நிகழ்ந்த திருமுறைத் தாக்கம் குறித்து எழுதுக ?


    முதலாம் இராசராசன் காலத்தில் தான்....திருமுறைகள் தொகுக்கப் பட்டன.

    முதல் மூன்று...சம்பந்தர் பாடல்களா லும் ..
    அடுத்த மூன்று...அப்பர் பாடல்களா லும்...
    ஏழாம் திருமுறை... சுந்தரர் பாடல்களா
    லும்... நிறைவு செய்யப்பட்டன.

    இத்திருமுறைத் தொகுப்பு...வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வாகும்.

    எங்கெங்கோ கோயில்களில் சிதறிக் கிடந்த பாடல்களைத் தொகுப்பது என்பது... எளிதில் இயலக்கூடிய செயலல்ல...! யாரோ ... பெயர் தெரியாத பெருமகனார் ஒருவர் இவற்றைச் சேகரித்துத் தில்லையில் வைக்க...

    அதை நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராசன் காலத்தில், அப்பெருவேந்தனின் தளரா முயற்சியால் திருமுறைகளாகத் தொகுத்தார்..

    இத்தொகுப்பு... ஏற்கெனவே... சமுதாயத்தில் இருந்த விழிப்புணர்வை மேலும் பெருக்கியது. சமய உணர்வு களைச் செழிக்கச் செய்தது.

    சோழர் காலத்து கல்வெட்டுக்கள் நூற்றுக்கணக்கில் தேவாரப் புகழ் பாடுகின்றன.

    முதலாம் இராசராசன், தஞ்சைப் பெருங்கோயிலில்... தேவாரப் பதிகங்களைப் பாடி.. இறைவனையும், மக்களையும் மகிழ்விக்கும் நோக்கில்.. பிடாரர்கள்(ஓதுவர்கள்) நாற்பத்தெண்மரை அமர்த்தினான் என்று... கல்வெட்டுக்களால் அறிகிறோம்.

    விழியொளி..அதாவது கண்பார்வை யற்றவர்கள் கூட... தேவாரப் பதிகங்
    கள் பாடுவதில் ஆர்வம் காட்டியதுடன்..
    அப்பணிக்கென அமர்த்தப்பட்டதை....
    திருஆமாத்தூர்க் கோயில்... கல்வெட்டு ஒன்று எடுத்துரைக்கிறது.

    இவ்வாறு....அதிக அளவில் கோயில் நடைமுறைகள் மீது, மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதைச் சோழர்களின் பல்நூறு கல்வெட்டுக்கள் தெளிவாய் எடுத்துரைக்கின்றன.

    மேலும்.... கோயில்களில், பலவகை
    யான விளக்குகள் எரிப்பதற்கும்....

    கோயில்களின், அன்றாட வழிபாடு, படையல் முதலான... பலவகைச் செலவுகளுக்கும்....

    அங்குப் பணியாற்றும், நிவந்தக்காரர் களின் வாழ்க்கை வசதிகட்கும்....

    ஊதிய வகைகட்கும்...

    இறைத் திருமேனிகளை நிறுவவும்....

    நிறுவிய திருமேனிகளை, தொடர்ந்து ,காப்பாற்றவும்....

    திருக்கோயில் மண்டபங்களில் சொற்பொழிவுகள் மற்றும் பாடங்கள் நிகழ்த்தவும் .....

    பயணிகள், அபூர்விகள், துறவிகள் , புதியவர்கள் போன்றோர்க்கு, உண
    விட்டுக் காக்கவும்....

    எளிய மக்களிலிருந்து... பேரரசர்கள் வரை, தத்தம் சக்திக்கேற்ப அறக்கொடைகளை நிறுவி மகிழ்ந்தனர்.

    இவ்வாறு இறையடியார்களின் செப்புத் திருமேனிகளும்... சிற்ப வடிவங்களும் திருக்கோயில்களில் இடம் பெறத் தொடங்கின.

    மட்டுமின்றி...மக்களில் ஒருவர் என்ற நிலைமாறி கடவுளின் அடியார்களாய்.. அவர்கள் தொழுது வணங்கப்பட்டனர்.

    முதலாம் இராசராசன் காலத்தில்... நம்பி ஆரூரர் , நங்கைப் பரவையார் , திருநாவுக்கரசர் , சம்பந்தர் முதலியோரின் உருவப் படிமங்கள்..
    பெருங்கோயிலுக்குத் தென்னவன் மூவேந்தன் வேளாளனால் செய்து அளிக்கப்பட்டன.

    மேலும்... முதலாம் இராசராசன் காலத்தில் திருமுறைகள் தமிழகத்தில் மலர்வித்திருந்த மாறுதல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.... "தஞ்சைக் கோயிலின்..விமான உட்சுவர்களில் காணப்படும் சுந்தரர் வாழ்வு விளக்க ஓவியம்" ஆகும்.

    இத்திருமுறைகள்.... மக்கள் நெஞ்சை அதிகம் கலர்ந்தமையால் தான்...முதலாம் இராசேந்திரன் காலத்தில் கோயில்களில் தேவாரப் பயிற்சிக்கு வழிவகுக்கவும் "தேவார நாயகம்" என்ற பொறுப்பில் தேவார அறிஞர்கள் அமர்த்தப்பட்டனர்.

    "மானம்பாடி நாகநாதசாமி கோயில் கல்வெட்டு ஒன்று... நாங்கூரைச் சேர்ந்த... மாறைக்கடன் பதஞ்சலி பிடாரர்" என்பவர் இப்பொறுப்பை வகித்ததாகக் குறிப்பிடுகிறது.

    இராசேந்திர சோழனின் பல கல்வெட் டுக்கள்...தேவாரம் பாடியவர்க்கு அளிக்கப்பட்ட பல்வேறு நிவந்தங்களையும், திருக்கோயில் களில் நிறுவப்பட்ட திருத்தொண்டர் களின் திருமேனிகளையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

    இத்திருமுறைகளின்... சமுதாயத் தாக்கத்தில்.... மற்றொரு குறிப்பிடத் தக்க செய்தி யாதெனில்...
    திருமடங்களின் தோற்றமும், வளர்ச்சி
    யும், எண்ணிக்கைப் பெருக்கமுமாகும். பிற்பட்ட பல்லவர் காலத்தில் தோன்றிய இவ்வளர்ச்சி... சோழர்கள் காலத்தில் பல்கிப் பெருகிற்று.

    ReplyDelete
  33. நூற்றுக் கணக்கான மடங்களைப் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின் றன.

    அவை....இறைவன் பெயர்களைத் தாங்கியும், அடியார் பெயர்களைத் தாங்கியும் , வேறு பல பெயர்களைத் தாங்கியும் , அரசர், சிற்றரசர் பெயர் களைத் தாங்கியும் விளக்கமுற்றிருந் தன.

    பின்னும்...விளங்கக் கூறுமிடத்து.. திருவீலவிடங்கன் மடம், கூத்தாடு நாயனார் மடம் , அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் மடம் , அருண்மொழித்தேவன் மடம் , இராசேந்திர சோழன் மடம் , தில்லைவாழ் அந்தணர் மடம் , சம்பந்தர் திருமடம், திருநாவுக்கரசர் மடம் , எழுநூற்றுவன் மடம் , நாலாயிரவன் திருமடம் .... எனப் பல பெயர்களில் மடங்கள் தொண்டாற்றின

    அண்மையில்... திருச்சிக்கு அருகில் உள்ள... அழுந்தியூரில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டொன்றில்... "பிச்சியார் மடம்" என்ற குறிப்பு காணப் படுகிறது.

    இதுவே... முதலாம் இராசராசசோழன் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் நிகழ்ந்த திருமுறைத் தாக்கம் ஆகும்.

    ^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^;^

    ReplyDelete
  34. 4) திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்பெறும் பதி இயல்புகள் குறித்து ஒரு கட்டுரை வரைக ?


    திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்பெறும் பதி இயல்புகளாவன...

    இறைவன்... உலகக்காரணன்.

    உலகக் காரணன் என்பது... இறைவன் தன்னிடத்தில் இருந்து உலகம் தோன்றவும், ஒடுங்கவும் காரணமாய் உள்ளவன் எனப் பொருள்.

    "தாங்கரும் காலம் தவிர வந்திருவர்
    தம்மொடுங் கூடினார் அங்கம்
    பாங்கினால் தரிசித்துப் பண்டுபோல் எல்லாம்
    பண்ணிய கண்ணுதல் பரமர்" (3:377:4)

    என்ற பாடலில்.... திருமால், பிரமன் இவர்களது வாழ்நாள் முடிந்த பின், இறந்த அன்னாரது எலும்பினைத்...தான் அணிந்து, அழிந்த உலகங்களை முன்போல் மீளவும், படைத்தளிக்க வல்லவன்.. சிவன் எனத் திருஞான சம்பந்தர் கூறுவது...இறைவன் உலககாரணன் என்பதை விளக்குகிறது.

    ReplyDelete
  35. 4) திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்பெறும் பதி இயல்புகள் குறித்து ஒரு கட்டுரை வரைக ?


    திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்பெறும் பதி இயல்புகளாவன...

    இறைவன்... உலகக்காரணன்.

    உலகக் காரணன் என்பது... இறைவன் தன்னிடத்தில் இருந்து உலகம் தோன்றவும், ஒடுங்கவும் காரணமாய் உள்ளவன் எனப் பொருள்.

    "தாங்கரும் காலம் தவிர வந்திருவர்
    தம்மொடுங் கூடினார் அங்கம்
    பாங்கினால் தரிசித்துப் பண்டுபோல் எல்லாம்
    பண்ணிய கண்ணுதல் பரமர்" (3:377:4)

    என்ற பாடலில்.... திருமால், பிரமன் இவர்களது வாழ்நாள் முடிந்த பின், இறந்த அன்னாரது எலும்பினைத்...தான் அணிந்து, அழிந்த உலகங்களை முன்போல் மீளவும், படைத்தளிக்க வல்லவன்.. சிவன் எனத் திருஞான சம்பந்தர் கூறுவது...இறைவன் உலககாரணன் என்பதை விளக்கு கிறது.

    இறைவன் பஞ்ச பூதங்களிலும், அவற்றோடு... சூரியன், சந்திரன், உயிர் இம்மூன்றையும் சேர்த்து ... எட்டுப் பொருட்களிலும் நிறைந்து நிற்பதாகக் கூறுவது அதாவது அட்ட மூர்த்தம், அவன் உலகரூபி என்பதனை உணர்த்தும்.

    இறைவன் உலகிற்கும், உயிர்களுக்கும் உயிராக உள்ளான் எனக் கூறும் கருத்து, அவன்... உலகாந்தர்யாமி என்பதனை உணர்த்தும்.

    ReplyDelete
  36. திருவீழிமிழலைப் பதிகப் பாடலில்...

    "ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண் குணமூன்றாய்
    மாறாமறை நான்காய் வருபூதம் அவையைந்தாய்
    ஆறார்சுவை யேழோசையொடு எட்டுத் திசைதானாய்
    வேறாய் உடனானான் இடம் வீழிம்மிழ லையே" (1:11:2)

    எண்ணல் அலங்கார முறையில் இறைவனுடைய பல இயல்புகளைக் கூறி, அவர் உயிர்களோடு.. ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்பதையும் கூறுகிறார்.

    ஈறாய் என்பது.... உலகத்து உயிர்கள் எல்லாம் அவனிடத்து ஒடுங்க... அவனே இறுதிவரை இருக்கின்றான் என்பதை உணர்த்துவதால்... இஃது இறைவன் "சங்கார காரணன்" என்பதை உணர்த்தும்.

    இறுதியாக நிற்பவனே.. ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றக் காரணனாய் இருத்தலினால்...முதல் ஒன்றாய் என்றார்.

    ஈறாய் முதல் ஒன்றாய் என்பது...
    சிவஞானம் முதல் சூத்திரம் கூறும் அந்தம்..ஆதி என்பதற்கு ஒப்பாக உள்ளது.

    இரு பெண் ஆண்(பாடலில்.பெண்ணாண்) என்பது...
    ஒன்றாகிய இறைவன் சிவம், சக்தி என இரண்டாக எல்லா உயிர்களிடத்தும் விளங்குதலை உணர்த்தும்.

    மேலும்... இறைவன் நான்கு வேதப் பொருளாகவும் இருப்பதனால்... மறைநான்காய் என்றார்.

    முக்குணம், ஐம்பூதம், அறுசுவை, ஏழ்இசை, எட்டுத் திசை...முதலியன வாக இறைவன் உள்ளான் என்பது..தத்துவங்கள் எல்லாம் அவனிடமிருந்து தோன்றுகின்றன என்ற கருத்தையும், அவன் உலகரூபி என்ற கருத்தையும் உணர்த்தும்.

    தானாய், வேறாய், உடனாய் என்ற தொடர்கள்.... இறைவன் உலக உயிர்களோடு கலப்பினால் ஒன்றாக வும், பொருள் தன்மையால் வேறாகவும், உள்ளிருந்து இயக்கும் தன்மையால் ... உடனாகவும் விளங்குதலை உணர்த்தும்.

    இதுவே... திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்பெறும்..பதி இயல்புகளாகும்.

    :::::::::

    ReplyDelete
  37. 5) ஆளுடைய பிள்ளையார் தேவாரத் தில் விளக்கப் பெறும் கன்மத்தின் வகைகள் பற்றி விளக்குக ?

    ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தில் உள்ள கன்மத்தின் வகைகள் :

    சைவ சித்தாந்த நூல்களில்...பாசம் மூன்றாகவும், ஐந்தாகவும் கூறப்படும்.

    "மலமாயின தானறுமே" எனத் திருஞானசம்பந்தரும்... பன்மையில் வழங்குகின்றார்.

    "விளையாததோர் பரிசில் வரு பசுபாச வேதனையொண்தளையாயின" என்ற திருஞானசம்பந்தர் பாடல்.. தொடர் மூவகை மலங்களை உணர்த்துவதாகக் கூறுவர்.

    பசு வேதனை என்பது... உயிரைத் தொடர்ந்து வரும் பசுத்துவம் எனப் படும்... ஆணவ மலத் துன்பத்தைக் குறிக்கின்றது.

    பாச வேதனை என்பது.... நல்வினை, தீவினையினால் உண்டாகும் துன்பத்தைக் குறிக்கின்றது.

    ஒண்தளை என்பது....உயிர்கட்குச் சிறிது அறிவு விளக்கத்தைத் தருவதாய்... உயிரைத் தளைத்துள்ள.. மாயையைக் குறிக்கின்றது என்பர்.

    ஆணவம் உயிரின் குற்றம் :

    ஆணவம், கன்மம், மாயை மூன்றுமே மலம் என்றச் சொல்லால் குறிப்பிடப் பட்டாலும், திருஞானசம்பந்தர் தேவாரத்திலும், சித்தாந்த நூல்களிலும்... "மலம்" என்ற சொல், சிறப்பாக ஆணவத்தையே குறித்து நிற்கிறது.

    அருளை...உயிர்கள் சாராமல் மலம் மறைக்கும் என சிவப்பிரகாசம்,செ.37ல் கூறப்பட்டுள்ளது.

    "ஞானத்தின் கண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால்" என்று போற்றிப் பஃறொடை, கண்ணி.10−ல் ஆணவத்தின் இயல்பு பற்றி சித்தாந்த நூல்களில் கூறப்படுகின்றது.

    ஆணவத்தின் இந்த மறைத்தல் சக்தி காரணமாக .... அஃது இருள் எனப்படு கின்றது.

    ஆணவம்.... ஆன்மாவின் குணமன்று... குற்றமே என உமாபதிசிவம் திருவருட் பயன், 27−ல் விளக்குகிறார்.

    திருஞானசம்பந்தரும்... ஆணவத்தை இருள் என்ற பெயரால்... "ஊனம் என்ற அடைமொழி சேர்ந்து... "ஊனத்திருள் 1:38:3 −ல் கூறுகின்றார்.

    ஊனம் என்பது... குறைபாட்டை, குற்றத்தைக் குறிக்கும்.

    ReplyDelete
  38. 6) அப்பர் அருளும் இறை இயல்புகள் குறித்து ஒரு கட்டுரை வரைக ?

    இறைவனது சொரூப இலக்கணம் :
    --------------------

    விரிகதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத
    விதியல்லர்; விண்ணும் நிலனும்
    திரிதரு வாயு அல்லர்; செறிதீயும் அல்லர்;
    தெளிநீரும் அல்லர்; தெரியில்
    அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக
    அருள் காரணத்தில் வருவார்
    எரிஅரவு ஆர மார்பர்; இமையாரும் அல்லர்;
    இமைப்பாரும் அல்லர் இவரே. (4:8:2)


    இதன் பொருள் :

    நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால்... இறைவன் விரிந்த கிரணங்களை யுடைய கதிரோன் அல்லன்; சந்திரனும் அல்லன்; அறிவு நூல்கள் ஆகிய வேதங்களில் கூறப்பட்டுள்ள நியமமும் அல்லன் ; வானிலும், நிலத்திலும் திரிகின்ற காற்றும் அல்லன்; நெருங்கி எரிகின்ற நெருப்பும் அல்லன்; தெளிந்த தண்ணீரும் அல்லன்; அவ்வாறாயின் அவன் யார் ? செவ்வரி பரந்த கண் களை உடைய உமாதேவியை, உயிர் களுக்கு அருள் செய்யும் பொருட்டுத் தன் இடப்பாகத்தில் வைத்திருப்பவன்; சினம் கொள்ளும் பாம்பைத் தன் மார்பில் மாலையாக அணிந்திருப்ப வன்; உயிர்களுக்கு விளங்காது இருப் பவனும் அல்லன்; விளங்குபவனும் அல்லன்.

    உயிர்களுக்கு இந்த அரிய உடலைத் தந்தவன் இறைவனே :
    -------------------

    "கால்கொடுத்து இருகை ஏற்றிக்
    கழிநிறைத்து, இறைச்சி மேய்ந்து
    தோல் பருத்து, உதிர நீரால்
    சுவர் எடுத்து, இரண்டு வாசல்
    ஏல உடைத்தாக அமைத்து, அங்கு
    ஏழு சாலோகம் பண்ணி,
    மால் கொடுத்து, ஆவி வைத்தார்,
    மாமறைக் காடனாரே." ( 4:33:4)

    இதன் பொருள்.....

    பெருமைக்குரிய திருமறைக்காட்டில் திருமேனி கொண்டருளியிருக்கும் சிவபெருமானே, உயிருக்கு இந்த அரிய உடலைத் தந்து, இந்த நிலையான பொருள் எனக்கருதும் மயக்கத்துடன் இந்த உலகில் வாழும் படிச் செய்தருளியினான்.

    இந்த உடலை இறைவன் எப்படி அமைத்தருளியுள்ளான் என கீழ்க் காணுமாறு அப்பரடிகள் இந்த தேவாரத்தில் கூறியுள்ளார்.

    கீழே இரண்டு கால்களை நிறுத்தி, மேலே இரண்டு தோள்களுடன் இரண்டு கைகளைச் சேர்த்து வைத்து,
    எலும்புகளால் ஆகிய பல கம்புகளை, இரண்டு கால்களுக்கும், இரண்டு கைகளுக்கும் ஊடே உள்ள எல்லா உடலுறுப்புகளிலும் ஒழுங்காகக் கொழுவி வைத்துள்ளான். பிறகு எலும் புகளுக்கு ஊடே அவை உரசாமல் இருப்பதற்காகத் தசைகளை நிறைத்து வைத்திருக்கிறான்; பின்பு செந்நீர் ஆகிய இரத்தத்துடன் தசைகளைப் பிசைந்து, முன்னும் பின்னும் பக்கச் சுவர்களை எழுப்பியுள்ளான். அதன் பிறகு இவைகளையெல்லாம் தோல் என்னும் போர்வையால் பொதிந்து மூடியுள்ளான். வாயிலிருந்து உண்டது சீரணமாகிக் கழியும் குதம் வரை ஒரே குழாயை அமைத்து, உள்ளே செலுத்த ஒரு வாசலும், வெளியே அனுப்ப ஒரு வாசலும் ஆக இரண்டு வாயில்களை, அந்தந்த உடலுக்கு ஏற்ப அமைத்துள் ளான்.

    இவ்வாறு.... அழகுற அமைத்து, உடலில் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசிகள் இரண்டு ஆக ஆறு துளைகளும், பிறப்புறுப்பில் ஒரு துளையும் ஆக மொத்தம் ஏழு பல கணிகள் அதாவது சன்னல்கள் வைத் துள்ளான்.

    இவையே... அப்பர் அருளும் இறை இயல்புகள் ஆகும்.

    88888888888888888888888888

    ReplyDelete
  39. 7) திருநாவுக்கரசர் வழங்கியுள்ள கருத்துக்கள் சிவஞான போதத்திற்கு அடித்தளமாக விளங்கியுள்ளன என்பார் கூற்றை ஆய்க ?

    கதிரவன், தீக்கடவுள் முதலியோ ரையோ, பிற கடவுளரையோ பதியாகக் கொண்டு வழிபடும் பல தெய்வக் கொள்கை அப்பருக்கு உடன்பாடன்று; சிவபெருமானே பதி. அவன் ஒருவனே முழுமுதற்பொருள் என்பதே அவரின் கோட்பாடு;

    "அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
    அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ" என்றும்,


    "எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது
    உரு வருக்கமானது உணர்கிலார்"

    என்றும் அப்பர் உரைத்தருளும் பகுதி கள் சிந்தித்தற்குரியவை.

    இலிங்க புராணத் திருக்குறுந்தொகை ,
    தொழற்பாலதே என்ற குறுந்தொகை− ஆகியவற்றில் தம் கோட்பாட்டை மிகத் தெளிவாக அப்பர் அருளுயுள்ளார். மற்றெல்லாரையும் விடுத்தும்...தியானிக்கப்படத்தக்கவன் சிவன் ஒருவனே என்ற அதர்வசிசோபநிஷதத் கருத்தே அவரின் திருவுள்ளத்து இவ்விடத்தே அமைந்தது என்று அறிஞர் கருதுவர்.

    எல்லாச் சமயங்களிலும் கூறப்பெறும் பதி, இச்சிவபிரானே என்ற ஒருமை உணர்வு அப்பருக்கு இருந்தது.

    "மிக்க சமயங்கள் ஆறின் உருவாகி நின்ற தழலோன், சமயமேலாறும் ஆகித்தானொருசயம்புவாகி, ஆறு சமயத்தவரவரைத் தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந் தகையன" என்பன முதலாக வரும் அப்பரின் தேவாரப் பகுதிகளை இவ்வகையிற் பொருள் உணர்ந்து கொள்ளலாம்.

    "ஆறொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
    அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்"

    என்று அப்பர் அருளும் பகுதி அக்கோட் பாட்டினை இனிது விளங்கிக் கொள்ளுதற் கேற்ற முடிமணியானது என்று கொள்ளல் பொருந்துவதாகும்.

    மெய்கண்டார்...

    "ஒன்றென்றது ஒன்றேகாண ஒன்றே
    பதி பசுவாம்
    ஒன்றென்ற நீபாசத்தோ டுளைகாண்−
    ஒன்றன்றால்
    அக்கரங்கள் இன்றால் அகரவுயிர்
    இன்றேல்
    இக்கிரமத் தென்னும் இருக்கு."
    (சிவஞான போதம்−2ஆம் சூத்திரம் 1ஆம் அதிகரணம்) என்ற வெண்பாவுள்
    "ஒன்றே பதி" என்ற உரைத்தமைக் குரிய வித்து அருளாளர் அருளிய திரு முறைகளில் அமைந்துள்ளமை உணரத் தகுந்தது. விண்ணும்் மண்ணும் தோற்றுவிக்கும் தேவன் ஒருவனே; ஒருவனே உருத்திரன்; இரண்டாம் முதற்கடவுள் இல்லை, பிரமப் பொருள் ஒன்றே என்றெல்லாம் வரும் உபநிடதப் பொருண்மையும் ஒப்பிட்டுணரத் தகுந்தது.

    பதிப்பொருள் உயிர்களோடும், உலகத் தோடும் வேறறக் கலந்து நிற்றலை அப்பர் அருளுவர்; அத்துவித சம்பந்தம் என்று சித்தாந்த சாத்திரங்கள் இந்நிலையைக் குறிப்பிடும். ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்றல் என்று மூவகைப்பட....மொழியும் அத்துவிதத் தொடர்பு அப்பரால் ஆங்காங்கு சிறப்புற மொழியப்பட்டுள்ளது.

    "நின்ற திருத்தாண்டகம்" முழுவதும் ஒன்றாய் நிற்கும் நிலை பற்றியது. "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி,இயமானனாய் எறியும் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி, ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி என வரும் அட்டமூர்த்தப் பகுதியில் காணலாம். அப்பரின் இக்கோட் பாட்டின் விளக்கமாகவே மெய்கண்டார் அருளும் அத்துவித விளக்கம் அமை யும்.

    "பண்ணையும் ஓசையும் போலப்
    பழமதுவும்
    எண்ணும் சுவையும்போல் எங்குமாம்
    − அண்ணல்தாள்
    அத்துவித மாதல் அருமறைகள்
    ஒன்றென்னாது
    அத்துவிதம் என்றறையும் ஆங்கு."
    (சிவஞானபொதம்−2ஆம் சூத்திரம் 1−ஆம் அதிகரணம்)

    வேறாம்நிலை,"விரிகதிர்"ஞாயிறல்லர், மண்ணல்லை விண்ணில்லை" முதலிய திருப்பதிகப் பகுதிகளில் கூறப் பெறும்.

    ~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~,~


    8) சுந்தரர் யோக நிலையில் வாழ்ந்தவர் என்னும் கருத்தினைச் சான்றுகளுடன் விளக்குக ?

    அருள் முகிழ் நிலை :

    நிஷ்களமாய், நிர்க்குணமாய், அகண்டமாய் இருந்தவன் இந்த அவனிக்கு ஏன் வந்தான் ? எப்படி வந்தான் ?

    "அகளமாய் யாரும் அறிவரிது அப்
    பொருள்
    சகளமாய் வந்ததென்று உந்திபற
    தானாகத் தந்ததென்று உந்திபற" (திருவுந்−1)

    தானாக வந்தான் − ஈடேற்றத்திற்கென வந்தான் என்பார் திருவியலூர் ஆசிரியர்.

    "தன்னை என்னை நினைக்கத
    தருவானை
    நினையா திருந்தாலும் வேறா
    வந்தென்
    உள்ளம் புகவல்ல மெய்ப் பொருளே"

    என்ற சுந்தரரின் வாக்குகள் ஈண்டு எண்ணற் கினியன.

    உயிரியல்பு :
    -------------------------

    உயிரின் தலையாய குணம் இரக்கம். அது இல்லாத மக்கள் விலங்கு. விலங்கு இந்நிலை பெற்று மனிதனா வதும் உண்டு. ஆக... வடிவத்தால் அடையாளம் காணுவது பிழைபடும் என்பார் திருஞானசம்பந்தர்.
    "தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாமிருவர்" (1−79−1) என்னும் போது விலங்கென்று தள்ளத் தகாத உயிர்− அது என்பதாகத் தள்ளா−ய−சம்பாதி,
    சடாயு என்று குறிக்கிறார். ய− உயிர், பெறற்கரும் பேரு பெற்றது இவ்வுயிர் தான்.

    தணுகரண புவன போகங்களுடன் கூடும்போது சிறிய அறிவையும், திருவருளோடு திருவருளால் கூடும் போது பேரறிவையும் பெறுகிறது.

    "

    ReplyDelete
  40. 9) இறைவன் முக்குணங்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதைத் திருவாசகம் கொண்டு விளக்குக ?

    முக்குணம் இல்லான் :

    மாயையின் காரியமாகிய முக்குணங் கள்... சாத்துவிகம் , இராசதம் , தாமதம் என்பன. உலகப் பொருளனைத்தும் இம்முக்குண வடிவாய் உள்ளவை.

    இறைவன் மாயையைக் கடந்தவனாத லின் மாயா குணங்களாகிய முக்குணங்களுள் ஒன்றும் இல்லாத வனாவான். இதுபற்றியே அவனை "நிர்க்குணன்" என்று சைவ நூல்கள் கூறும். நிர்க்குணன் என்பதற்கு ... இம்முக்குணங்களும் இல்லாதவன் என்பதுதான் பொருளேயன்றி, ஒருகுணமும் இல்லாதவன் என்று அதற்குப்"பொருள் கூறுவது பொருந்தாது.

    "இறைவன் அருட்குணங்களாகிய எண் குணங்களை இயல்பாக உடையவன்.
    நிர்க்குணன் என்பது ஒரு குணமுமில் லான் என்று உரைப்பின் அது தன்வயத் தனாதல் முதலிய எண்குணங்களை இயல்பாகவுடைய முதல்வனுக்கு ஏலாமையின் மாயாவாதி முதலியோர் கூற்றாய் முடியும் என்றொழிக" எனச் சிவஞான முனிவர் தமது பேருரையில் குறித்திருப்பது அறியத் தக்கது.

    இறைவன் மாயா குணங்களாகிய முக்குணங்கள் இல்லான் என்ற பொருளில்... "குணமிலி" (நீத்தல்.46) எனவும்..... "குணங்கள் தாம் இல்லா இன்பமே" (கோயில்.4) எனவும்...
    அருட்குணங்கள் உடையான் என்ற பொருளில்... "குணமாம் பெருந்துறைக் கொண்டலே" (திருக்கழுக்குன்றம்.5) எனவும் திருவாசகம் குறிப்பிடும்.

    அவ்வருட்குணங்களை.."எல்லையிலாதன எண்குணமானவை (திருப்படையாட்சி .7) என்றும் சுட்டும்.

    இறைவன் தன்னடியார்களுக்கு மெய் யுணர்வு தந்து தனது எண்குணங்களை யும் அடையச் செய்தான் என்றும் கூறும். (திருக்கழுக்குன்றம்.7)

    மும்மூர்த்திகளின் வேறானவன் :

    படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிற்கு உரியவராய்ப் பிரமன், மால்,உருத்திரன் என்னும் மும்மூர்த்தி கள் கூறப்படுவர். இவர்கள் முக்குணங் களை உடையவர். தத்தம் தொழில் அளவில் முதன்மைபெற்று நிற்பவர். சிவபெருமான் இம்மூவரின் வேறான வன்; முக்குணங்களைக் கடந்தவன்; எல்லாத் தொழிலும் செய்ய வல்லவன்; எல்லா முதன்மையும் உடைய முழுமுதற் கடவுளானவன். இதனை...

    "இறைவனாவான் ஞான மெல்லாம்
    எல்லா
    முதன்மை அணுக் கிரகமெல்லாம்
    இயல்புடையான்" (சித்தியார், 8:17)

    என்று சிவஞானசித்தியார் கூறும் ஏனையோர் முதன்மைகள் இம்முழு முதல் தன்மையின் ஒவ்வொரு கூறாய் நிற்பனவேயாகும். இதுபற்றியே..
    சிவபெருமானை, "வானத்து அவரவர் ஏறு" (திருச்சதகம்.67) என்று திருவாசகம் குறிக்கும்.

    சிவபெருமான் மூவருக்கும் மேலாய முழுமுதன்மை உடையன் என்பதையும்,அவர்களைத் தனது வடிவமாக உடையவன் என்பதையும் பின்வரும் திருவாசகப் பகுதி தெளிவுறுத்தும்.

    "தேவர்கோ அறியாத தேவ தேவன்
    செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
    மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி." (திருச்சதகம்.30)

    இவ்வாறு... இறைவன் முக்குணங் களுக்கும், மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்டவன் ஆவார்.

    ௨௨௨௨௨௨௨௨௨௨௨

    ReplyDelete
  41. 13) திருமந்திரம் முதன் முதல் சித்தாந்தம் என்னும் சொல்லாட்சியை வழங்கியது என்பார் கூற்றை விளக்குக ?

    திருமுறைகளின் வரிசையில்... பத்தாவதாக விளங்குவது திருமந்திரம்.
    தோத்திரம், சாத்திரம் எனப்பெறும் இரண்டனுள் இது தோத்திர வரிசையில் இருப்பினும்... தோத்திரமாயும், சாத்திரமாயும் விளங்கும் சிறப்பு இதற்குண்டு. திருமந்திரம் தமிழாகமுமாக விளங்கக் கூடியது என்பதை ஆசிரியர் பாயிரத்தில் இயம்பியுள்ளார்.

    பாடல் :

    "அந்திமதிபுனை அரனடி நாள்தொறும்
    சிந்தை செய்து ஆகமம் செப்பலுற் றேனே" என்றும்,

    "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே."

    என்றும் கூறியுள்ளார். இதனை ஏற்றுச் சேக்கிழார் பெருமான்...
    "தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப் பொருளை மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப" என்று எடுத்தியம்புகின்றார். இவற்றால் திருமந்திரம், தமிழ் ஆகமம் எனப் பெறுவதை உணரலாம்.

    பொது, சிறப்பு :

    வடமொழியில் வேதம் பொது நூலாயும், ஆகமம் சிறப்பு நூலாயும் விளங்குவது போன்று தமிழில் திருக்குறள் பொது நூலாகவும், திருமந்திரம் சிறப்பு நூலாகவும் விளங்குகின்றன... எனலாம்.

    திருக்குறள்... அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் விரிவாகவும், வீடு பற்றிக் குறிப்பாகவும் கூறுகிறது. திருமந்திரம் வீடு பற்றி விரிவாகவும்.. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் குறிப்பாகவும் விளக்குகிறது.

    முதன்மை நூல் :

    இந்நூல் தோன்றியக் காலம் பற்றியக் கருத்து வேறுபாடு உண்டு . எனினும்
    ஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பே இது உருவானது என்பதில் யாருக்கும் வேறுபாடு இல்லை. எனவே சைவ சமய நூல்களில் காலத்தால் முந்திய நூல் இது. காலத்தால் முந்தியது மட்டு மின்றிக் கருத்தாலும் இது முந்தியதாக இருக்கிறது.

    சங்க கால இலக்கியங்களிலும், சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் , சிவபெருமான் வழிபாடும், சிவபெருமானின் திருவுருவச் சிறப்புக்களும் கூறப்பட்டிருப்பினும் தெளிவாகச் சிவன் எனும் சொல் திருமந்திரத்தில் தான் முதன்முதல் ஆளப்பட்டுள்ளது என்பது முன்னரே சிந்திக்கப் பெற்றது.

    "சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை"

    என்பது திருமந்திரம். மேலும், இறை, உயிர், தளை பற்றிய செய்திகள் பரவலாக மேற்சொன்ன நூல்களிவ் காணப்படினும் இவற்றை இணைத்துப் பதி, பசு, பாசம் என்னும் மூன்றும்..அநாதி என்னும் கருத்தை முதன் முதலில் விளக்கிய நூல் திருமந்திரமே ஆகும். இதுவும் முன்னரே சிந்திக்கப் பெற்றது.

    "பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப் போல் பசுபாசம் அநாதி"

    என்பது திருமூலர் வாக்கு. மேலும் சித்தாந்தம் என்னும் சொல்லாட்சியும், அதன் விளக்கமும் இந்நூலின்கண் முதலாவதாக அமைந்துள்ளன.

    பாடல் :

    "உடலான ஐந்தையும் ஒராறும் ஐந்தும்
    மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
    படலான கேவல பாசம் துடைத்துத்
    திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே"

    என்பது திருமந்திரம். கடுஞ்சுத்த சைவம் என்னும் தலைப்பில், ஆசிரியர் சித்தாந்தச் செந்நெறியைக் குறித்துள்ளார். தத்துவங்களை நீக்கின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவத்தைக் கழுவ இயலும். அப்பொழுது உயிர் தனது ஞான நிலையை எய்தும். சிவவியாபகத்தில் இருத்தலை உணர்ந்து இன்புறுதலே சித்தாந்தச் செந்நெறியாகும். இதனை இப்பாடல் கூறுகிறது.

    """""""""""""""""""""""""""""""""""""""""

    ReplyDelete
  42. 14) திருமந்திரத்துள் 5−ஆம் தந்திரம் விளக்கியுள்ள செய்தி ?

    இது 154 − பாடல்களை உடையது. சைவத்தின் பொது மரபுகளைக் கூறுகிறது. சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடும் சுத்த சைவம் என்னும் சைவத்தின் வேறுபாடுகளும்.... சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளும், நால்வகை மார்க்கங்
    களும், நால்வகை முத்தி நிலைகளும், நால்வகை சத்திநிபாதங்களும், பிறவும் விளக்கப் பெற்றுள்ளன.

    இவற்றுள் யோகம், ஞானம் பற்றி மட்டும் இங்கு காண்போம்...!

    யோகம் :

    இறைவன் அகக் காட்சியில் ஒளிவடிவாய்த் தோன்றும் நிலை... யோக நெறியாளர்கட்குரியது. அவ்வுருவத் திருமேனியைக் காணும் முறையில், கண்டு, அதில் அழுந்தி ஒன்றுபடுதல் யோகத்தின் பயனாகும்.
    இதனைப் பத்து மந்திரங்களால் உணர்த்துகிறார். யோகத்திற்குப் படி நிலைகள் 8− உண்டு.

    அவை....

    1) இமயம் 2) நியமம் 3) ஆசனம்
    4) பிராணாயாமம் 5) பிரத்தியாகாரம்
    6) தாரணை 7) தியானம் 8) சமாதி எனப்படும். இவை அட்டாங்க யோகம் எனப்பெறும். இவற்றுள் பிராணாயா மத்தை யோகத்தின்,அடிப்படை யோகமாகத் திருமூலர் பல பாடல் களில் உணர்த்தியுள்ளார்.

    "வளிநிலை" எனப்படும் பிராணாயாம முறைப்படி மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும், உணர்வாய் ஏறிச் சென்று இறுதியில் சிவனது அருவத் திருமேனியில் நிலைத்து நின்று, தம் உடலை நேராக நிமிர்த்தி அதனைப் பிறர் கீறினாலும், தாக்கினாலும் அவரை நோக்காது தியானப் பொருள் ஐன்றையே உணர்ந்திருக்க வல்ல சிவயோகிகளுக்கே சிவனை அடைதல் கூடும் என்னும் பின்வரும் பாடலில் காணலாம்.

    நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
    தறியிருந்தார்போலத் தம்மை இருத்திச்
    சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
    கூறியறி வாளர்க்குக் கூடலு மாமே."
    (திருமூலர் 5−ஆம் தந்திரம் 7. யோகம் :பாடல் எண் :1457).
    ( ஐந்தாம் தந்திரம்..1−ல் இருந்து... 39−வது பாடலாக அமைகிறது.

    ஞானம் :

    உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூன்றையும் கடந்து அறிவே வடிவமாய் விளங்கும், இறைவனது உண்மை இயல்பை அறிந்து அன்பு செய்யும் அறிவு வழிபாடே ஞானம் எனப் பெறும்.
    இதனை ஆசிரியர் வாயிலாகக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்ற நிலையில் பெறுதல் வேண்டும். நாயனார் ஞானம் பற்றிப் பத்துத் திருமந்திரங்களில் உணர்த்தியருள்கிறார்.

    ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
    ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
    ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
    ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே. (திருமூலர். 5−ஆம் தந்திரம், 8− ஞானம். பாடல் எண் : 1467.

    (5−ஆம் தந்திரம் 1−ல் இருந்து 49−வது பாடலாக அமைகிறது.)

    என உணர்த்தியருள்கிறார். ஞானத்தில் சிறந்தவர்களே மக்களுள் சிறந்தவராவர் என இப்பாடலால் தெரிவித்தருள்கிறார்.

    அறநெறி − தன்மார்க்கம்
    அறவழி − தரும நெறி
    நரர் − மனிதர்.
    முக்தி − பேரின்பம்.

    -------------------------------------------------------

    ReplyDelete
  43. 17) இறைவன் காணும் உபகாரத் தையும், காட்டும் உபகாரத்தையும் செய்கி்ன்றான் என்பதனைக் காரைக்கால் அம்மையார் பாடல் கொண்டு விளக்குக ?

    "அறிவானுந்தானே அறிவிப்பான் தானே
    அறிவாய் அறிகின்றான் தானே − அறிகின்ற
    மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
    அப்பொருளுந் தானே அவன்" (அற்புதத் திருவந்தாதி .20)

    இங்கு இறைவனே அறிவு என்றும், அறி கின்றவன் என்றும், அறிவிப்பவன் என்றும் அம்மையார் குறிப்பிடுகின் றார்.

    இதேக் கருத்துத் தான் காணும் உபகாரம் என்றும் காட்டும் உபகாரம் என்றும்... பதினோராம் சூத்திரத்தில் அமைகின்றது.

    "காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
    காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
    அயரா அன்பின் அரன்கழல் செலுமே" (சிவஞானபோதம். சூ.11)

    இச்சூத்திரத்திற்கு விளக்கவுரை எழுத வரும் சிவஞானமுனிவர்...

    *இவ்வியல்பு நோக்கியன்றே அறிவானுந்தானே, அறிவிப்பான் தானே என்றோதிய அம்மை, அறிவாய் அறிகின்றான் தானே எனவும் ஓதியதூஉம் என்க" எனக் காரைக்கால் அம்மையாரின் மேற்காணும் பாடலை எடுத்தாளுகின்றார்.

    காணும் உபகாரம், காட்டும் உபகாரம் இவற்றை இங்கு நாம் சிந்திக்க வேண்டும். சூரிய ஒளியினால் நாம் அனைத்தையும் காணுகின்றோம். அச்சூரியனையும் அவன் ஒளீயாலேயே காணுகின்றோம். அப்படியானால் அச்சூரியன் காணப்படும் பொருளா யும், காண்பதற்கு உதவும் பொருளா யும் இருக்கின்றன அல்லவா ? அதுபோலவே இறைவன், காணும் பொருளாயும், காண உதவுகின்ற பொருளாயும் விளங்குகின்றான்.

    அவன் அருளாலே அவன்தாள் வணங்குதல் அதுதான். "காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே" என்று அப்பர் அருளுவதும் இக்கருத் தில் தான் என்று உணர்க.

    இதுவே... காணும் உபகாரமும், காட்டும் உபகாரமும் செய்கின்றான் விளக்கம் ஆகும்.

    """"""""""""""""""""""""""""""""""""""""""

    ReplyDelete
  44. Fri. 12, Aug. 2022 at 8.15 pm.

    சைவ சித்தாந்தப் பொதுச் செய்திகள் :


    1) மெய்கண்டார் அவதரித்த ஊர்
    எது ?
    +*திருப்பெண்ணாகடம்.*

    2) மெய்கண்டார் வாழ்ந்த ஊர் எது ?
    *திருவெண்ணெய் நல்லூர்.*

    3) மெய்கண்டார் சித்தி பெற்ற ஊர்
    எது ? *திருவெண்ணெய் நல்லூர்.*

    4) மெய்கண்டார் செய்த நூல் யாது ?
    *சிவஞானபோதம்.*

    5) மெய்கண்டாரின் மாணாக்கர் யார்?
    *அருணந்தி சிவம், மனவாசங்கடந்தார்.முதலிய 49−பேர்.*

    6) சிவஞான போதத்தை அருளியவர் யார் ?
    *மெய்கண்டார்.*

    7) சிவஞான போதத்தின் வழிநூல்
    எது ?
    *சிவஞானசித்தியார்.*

    8) சிவஞானபோதத்தின் சார்பு நூல் எது ?
    *சிவப்பிரகாசம்.*

    9) புறச்சந்தானச்சாரியார் நால்வரில் ஒருவர் யார் ?
    *மெய்கண்டார்.*

    10) மெய்கண்டார்க்கு முற்பட்ட சித்தாந்த சாத்திரங்கள் யாவை ?
    *திருவுந்தியார், திருக்களிற்றுப்படி
    யார், ஞானாமிர்தம்.*

    11) மெய்கண்டாரின் மற்றொரு பெயர் யாது ?
    *சத்திய ஞானங்கண்டார்.*

    12) புறச்சந்தான குரவருள் முதலா மவர் யார் ?
    *மெய்கண்ட தேவ நாயனார்.*

    13) மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கும் 14 நூல்களில் மணிமுடியா கத் திகழ்வது எது ?
    *மெய்கண்ட சாத்திரங்கள்.*

    14) சிவஞான போதம் என்றால் என்ன ?
    *ஐயம் திரிபுகள் இன்றி சைவ ஆகமங்களின் பொருள் நிச்சயத்தை உணர்த்துவது. (சிவஞானம் என்பது...சிவாகாமத்தையும், போதம் என்பது... உணர்த்துதலையும் குறிக்கும்.) ஆகவே, சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை ஆன்மாக்களுக்கு உணர்த் துவதால்... சிவஞானபோதம் எனப் பெயர் பெற்றது.*

    15) மெய்கண்ட தேவன் எனப் பெயர் வரக் காரணம் என்ன ?
    *பொய் கண்டு அகன்ற மெய்கண்ட தேவன். அதாவது பொய்ச் சமயங்களின் பொருள் இது, இது என்று கண்டு கழிப்பித்து, மெய்ச்சமயப் பொருளைத் தெளிந்த காரணத்தால்...மெய்கண்ட தேவன் என்னும் பெயர் வரக் காரணமாயிற்று.*

    16) அக இருளை நீக்குதற்கு அருளிய சிவஞானபோதம் எத்தனை நூற்பாக் களை அல்லது சூத்திரங்களைக் கொண்டது ? *12 −நூற்பாக்கள்(சூத் திரங்கள்).*

    17) சிவஞானபோதம் எங்கு உள்ள நூல் ? *வடமொழி* நூல்.

    18) சிவஞான போதம் எத்தனை பாதங்களை உடையது அவை யாலை?
    *3−பாதங்களை உடையது." சரியை, கிரியை, யோகம்.

    19) சைவ சித்தாந்தம்... உள் பொருளாகக் கொள்ளும் மூன்று யாவை ?
    *பதி, பசு , பாசம்.*

    20) பதி, பசு, பாசம் என்பவற்றின் தமிழ் பெயர் யாவை ?
    *இறை , உயிர் , தளை.*

    21) பதி, பசு, பாசம்... ஆதியா, அநாதியா?
    *அநாதி.*

    22) அநாதி என்றால் என்ன ?
    அதாவது (ஆதி இல்லாதது) தொடக்க
    மில்லாதது.

    23) ஆதி என்றால் என்ன ?
    *தொடக்கமுள்ளது.*

    24) அநாதிப் பொருட்கள் எத்தனை ?
    *ஆறு.*

    25) அநாதிப் பொருளை ஆறு என்று கணக்கிட்டவர் யார் ?
    *உமாபதிசிவம்.*

    26) உமாபதிசிவம் குறித்த ஆறு அநாதிப் பொருட்கள் யாவை ?
    *இறை, உயிர், ஆணவம், மூலகன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை.

    27) சைவ சித்தாந்தக் கொள்கைகள் எதன் அடிப்படையில் நிறுவப் பட்டுள்ளன ?
    *சற்காரியவாத அடிப்படையில்.*

    28) இல்லது தோன்றாது, உள்ளது அழி யாது என்னும் கொள்கை என்ன பெயர் பெரும் ? *சற்காரிய வாதம்.*

    29) காரியம் உண்டாவதற்கு ஏதுவாக இருப்பது எது ? *காரணம்.*

    30) காரியத்துக்கு உரிய மூவகைக் காரணங்கள் யாவை ?
    *முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம்.*

    என்ன ?
    *பூதபரம்பரை.*

    49) திருக்கயிலாய பரம்பரையின் வேறு பெயர் என்ன?
    *சைலாதி மரபு.*

    50) தேவபரம்பரை என்பது என்ன சந்தானம் ?
    *அகச்சந்தானம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  45. 51) பூதபரம்பரை என்பது என்ன சந்தானம் ?
    *புறச்சந்தானம்.*

    52) மெய்கண்டார் அவதரித்த ஊர்
    எது ?
    *திருப்பெண்ணாகடம்.*

    53) அருணந்திசிவம் அவதரித்து வாழ்ந்த ஊர் எது ?
    *திருத்துறையூர்*

    54) அருணந்திசிவம் சித்தி பெற்ற ஊர் எது ?
    *திருத்துறையூர்.*

    55) அருணந்தி சிவம் செய்த நூல்கள் யாவை ?
    *சிவஞானசித்தியார் , இருபா இருபஃது.

    56) மறைஞானசம்பந்தர் அவதரித்த ஊர் எது ?
    *திருப்பெண்ணாகடம்.*

    57) மறைஞானசம்பந்தர் வாழ்ந்த ஊர்கள் யாவை ?
    *மருதூர் , சிதம்பரம்.*

    58) மறைஞானசம்பந்தர் சித்தி பெற்ற இடம் எது ?
    *சிதம்பரத்தின் மேல் எல்லையான "திருக்களாஞ்சேரி".*

    59) உமாபதி சிவம் பிறந்து வாழ்ந்த ஊர் எது ?
    *சிதம்பரம்.*

    60) உமாபதி சிவம், சித்தி பெற்ற இடம் யாது ?
    *சிதம்பரத்தின் கீழ் எல்லையான "கொற்றவன்குடி".*

    61) மெய்கண்டார் செய்த நூல் யாது ?
    *சிவஞானபோதம்.*

    62) திருவுந்தியாரை அருளியவர் யார்? *திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார்.*

    64) திருக்களிற்றுப்படியாரை அருளியவர் யார் ?
    *திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார்.*

    65) ஞானாமிர்தத்தை அருளியவர்
    யார் ?
    *வாகீசமுனிவர்*

    66) சிவஞான சித்தியாரை அருளியவர் யார் ?
    *அருணந்திசிவம்.*

    67) இருபா இருபஃதை அருளியவர் யார்?
    *அருணந்திசிவம்.*

    68) அருணந்திசிவத்தின் மாணாக்கர் யார் ?
    *மறைஞானசம்பந்தர்.*

    69) மறைஞானசம்பந்தரின் மாணாக்கர் யார் ?
    *உமாபதிசிவம்.*

    70) உமாபதிசாவத்தின் மாணாக்கர் யார் ?
    *அருள்நமச்சிவாயர்.*

    71) அருள்நமச்சிவாயரின் சீடர் யார் ?
    *சித்தர் சிவப்பிரகாசர்.*

    72) சித்தர் சிவபிரகாசரின் சீடர் யார் ?
    *ஶ்ரீ நமசிவாய மூர்த்திகள்.*

    73) திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்தாபகர் யார் ?
    *ஶ்ரீ நமசிவாய மூர்த்திகள்.*

    74) திருவாவடுதுறை ஆதீனத்தின் தோற்றம் எது ?
    *14−ஆம் நூற்றாண்டு.*

    75) திருவாவடுதுறை ஆதீனத்தில் தற்போது அருளாட்சி செய்து வரும் ஆதீனகர்த்தர் யார் ?
    *24−ஆம் பட்டம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.*

    76) சித்தாந்த நெறியில் ஒளி என்பதன் சிறப்பான பொருள் என்ன ?
    *திருவருள்.*

    77) அளவை என்பது யாது..?
    *பொருள் உண்மையை அளந்து அறியும் கருவி.*

    78) அளவைக் குறிக்கும் வட சொல் யாது ?
    *பிரமாணம்.*

    79) பிரமாணமாவது யாது ?
    *அளவை அளக்கும் கருவி.*

    80) பிரமேயமாவது..என்பது யாது ?
    *அளக்கப்படும் பொருள்.*

    81) பிரமாதா..என்பது எவை ?
    *அளப்பவன்.*

    82) ஞாதுரு என்பது யார் ?
    *அறிபவன்.*

    83) ஞானம் என்பது (அளவையில்) எதைக் குறிக்கும் ?
    *அறியும் கருவியை.*

    84) மூவகை அளவைகள் யாவை ?
    *காட்சி , கருதல் , உரை.*

    85) காட்சி அளவையின் வேறு பெயர்கள் யாவை ?
    *பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை.*

    86) இறைவன் சச்சிதானந்தமாய் இருத்தல் என்ன இயல்பு ?
    *சிறப்பு இயல்பு. அதாவது சொரூப இலக்கணம்.*

    87) பதி என்ற சொல்லின் பொருள் யாது ?
    *பசுவுக்கும், பாசத்துக்கும் தலைவன்.*

    88) இறைவன் உயிரோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் கலந்திருத்தல் என்ன இயல்பு ?
    *பொது இயல்பு. அதாவது தடத்த இலக்கணம்.*

    89) உயிர்களை இறைவன் படைக்கிறானா ?
    *இல்லை. (காரணம் உயிர்கள் அநாதி. அநாதி என்றால்...தொடக்கம் இல்லாதது.* அதாவது ஆதி இல்லாதது. (ஆதி−தொடக்கம் உள்ளது)).*

    90) காரியத்தை உண்டாக்கும் கர்த்தா என்ன காரணம் ?
    *நிமித்த காரணம்.*

    91) நிமித்த காரணத்தின் வேறு பெயர் என்ன ?
    *காரண கர்த்தா.*

    92) உலகைப் படைக்கிற நிமித்த காரணன் யார் ?
    *சிவபெருமான்.*

    93) இறைவன் உயிரோடு ஒன்றாய்க் கலந்த நிலையைக் குறிக்கும் சொல் யாது ?
    *அபேதம்.*

    94) இறைவன் உயிருக்கு வேறாய் நிற்கும் நிலையைக் குறிக்கும் சொல் யாது ?
    *பேதம்.*

    95) இறைவன் உயிரோடு உடனாய் நிற்கும் நிலையைக் குறிக்கும் சொல் யாது ?
    *பேதா பேதம்.*

    96) காண்டல் அளவையின் நான்கு வகைகள் யாவை ?
    *வாயிற் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி , யோக காட்சி.

    97) ஐயம் திரிபின்றி விடயத்தை நேரே அறிவது என்ன அளவை ?
    *காட்சி அளவை.*

    98) கருதல் அளவையின் வேறு பெயர் என்ன ?
    *அனுமானப் பிரமாணம்.*

    99) உரை அளவையின் வேறு பெயர் கள் யாவை ?
    *ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்.*

    100) உரை அளவை என்றால் என்ன ?
    *நூல் அளவை.*

    101) ஒரு பொருளை மற்றொரு பொருளாக மயங்கி அறியும் நிலை யாது ?
    *திரிபு நிலை.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  46. Wed. 17, Aug. 2022 at 8.16 am.

    சைவ சித்தாந்தப் பொதுச் செய்திகள் :

    பாகம் − 2.

    102) அறிவிக்க அறியும் சித்து எது ?
    *ஆன்மா.*

    103) தானே அறியும் சித்து எது ?
    *சிவம்.*

    104) ஆதி முத்தன் யார் ?
    *ஆன்மா.*

    105) அநாதி முத்தன் யார் ?
    *சிவன்.*

    106) இறைவனின் குணமாக உபநிடதம் கூறுவன யாவை ?
    *சத்து, சித்து, ஆனந்தம்.*

    107) இறைவனின் குணமாக ஆகமம் கூறுவது யாது ?
    *தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு , இயல்பாகப் பாசமின்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம்.*

    108) அருளலின் நோக்கம் என்ன ?
    *உயிர்களுக்குப் பேரின்பத்தை வணங்குதல்.*

    109) மறைத்தலின் நோக்கம் என்ன ?
    *உயிர்கள் தத்தம் வினைப்பயனை நுகர்தலில் ஆசை உண்டாக்கல்.*

    110) அழித்தலின் நோக்கம் என்ன ?
    *உயிர்களின் இளைப்பு ஒழித்தல்.*

    111) காத்தலின் நோக்கம் என்ன ?
    *உயிர்களை வினைப்போகம் நுகர வைத்தல்.*

    112) படைத்தலின் நோக்கம் என்ன ?
    *உயிர்களிடம் மலபரிபாகம் உண்டாக் கல்.*

    113) படைத்தல் முதலிய ஐந்தொழில் களும் யாருக்காகச் செய்யப்படுகின்
    றன ?
    *உயிர்களுக்காக.*

    114) காணும் உபகாரத்தின் பயன் என்ன ?
    *உயிரின் அறிவிச்சை செயல்கள் பொருளுடன் கலத்தல்.*

    115) காட்டும் உபகாரத்தின் பயன் என்ன ?
    *உயிரின் அறிவிச்சை செயல்கள் விளக்கம் பெறுதல்.*

    116) உயிருக்குத் தனு, கரண , புவன போகங்களை உண்டாக்குதல் என்பது என்ன தொழில் ?
    *படைத்தல் தொழில்.*

    117) தனு முதலியவற்றை ஒரு கால எல்லை வரை நிலை பெறுவித்தல் என்ன தொழில் ?
    *காத்தல் தொழில்.*

    118) தனு முதலியவற்றை மாயையில் ஒடுக்குதல் என்ன தொழில் ?
    *அழித்தல் தொழில்.*

    119) உலகத்தையே உயிர்கள் நோக்கி இருக்கச் செய்து, தன்னை மறைத்து நிற்றல் என்ன தொழில் ?
    *மறைத்தல் தொழில்.*

    120) உயிர்களின் மலப்பற்றைப் போக்கி, தனது பேரின்பத்தை நுகர வைத்தல் என்ன தொழில் ?
    *அருளல் தொழில்.*

    121) படைத்தல் முதலிய முத்தொழில்
    கள் எதனிடத்தே செய்யப்படுகின்றன ?
    *மாயை ஆகிய சடப் பொருளிடத்தில்.*
    *சடம் = அசத்து.*

    122) மறைத்தல் அருளலான இரு தொழில்கள் எதனிடத்தில் செய்யப் படுகின்றன ?
    *உயிராகிய சித்துப் பொருளிடத்தில்.*

    123) அநாதி பெத்த சித்துரு எது ?
    *ஆன்மா.*

    124) நவம் தரு பேதங்கள் யாவை ?
    *சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன்.*

    125) நவந்தரு பேதங்களுள் அருவத் திருமேனி யாவை ?
    *சிவம், சத்தி, நாதம், விந்து.*

    126) நவந்தரு பேதங்களுள் அருவுருவத் திருமேனி எது ?
    *சதாசிவம்.*

    127) நவந்தரு பேதங்களுள் உருவத் திருமேனி யாவை ?
    *மகேசுவரன்,உருத்திரன், மால், அயன்.*
    128) உருவத் திருமேனியின் வேறு பெயர்கள் யாவை ?
    *சகளத் திருமேனி, வியத்த லிங்கம்.*

    129) அருவத் திருமேனியின் வேறு பெயர்கள் யாவை ?
    *நிட்களத் திருமேனி, அவ்வியத்த லிங்கம்.*

    130) அருவுருவத் திருமேனியின் வேறு பெயர்கள் யாவை ?
    *சகளநிட்களத் திருமேனி, அவ்வியத்த லிங்கம்.*

    131) உருவத் திருமேனிகளில் மூன்று வகை யாவை ?
    *போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம்.*

    132) சிவனுக்கு ஈசான மந்திரம் எவ்வுறுப்பு )
    *சிரசு.*

    133) ஈசான மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன ?
    *அநுக்கிரகம் அதாவது அருளல்.*

    134) சிவனுக்கு தத்புரூட மந்திரம் எவ்வுறுப்பு ?
    *முகம்.*

    135) தத்புரூட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன ?
    *திரோபவம் அதாவது மறைத்தல்.*

    136) சிவனுக்கு அகோர மந்திரம் எவ்வுறுப்பு ?
    *இதயம்.*

    137) அகோர மந்திரத்தால் செய்யும் தொழில் யாது ?
    *சங்காரம். அதாவது அழித்தல்.*

    138) சிவனுக்கு வாமதேவ மந்திரம் எவ்வுறுப்பு ?
    *உந்தி.*

    139) வாமதேவ மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன ?
    *திதி அதாவது காத்தல்.*

    140) சிவனுக்கு சத்யோசாத மந்திரம் எவ்வுறுப்பு ?
    *முழந்தாள்.*

    141) சத்யோசாத மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன ?
    *சிருட்(ஷ்)டி அதாவது படைத்தல்.

    142) இறைவனுக்குரிய மூன்று அவத்தைகள் அதாவது நிலைகள் யாவை ?
    *இலயம், போகம், அதிகாரம்.*

    143) இறைவன் உயிருக்கு மானுடப் பிறப்பைத் தந்தது ஏன் ?
    *மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபட.*

    145) இறைவன் செய்த பொது நூல் எது ?
    *வேதம்.*

    146) இறைவன் செய்த சிறப்பு நூல் எது ?
    *ஆகமம்.*

    147) தட்சிணாமூர்த்தி போல உயிருக்கு ஞானத்தை வழங்கும் திருமேனி என்ன வகை ?
    *யோக வடிவம்.*

    148) கால சம்மாரர் போலக் கொடிய வரைத் தண்டிக்கும் திருமேனி என்ன வகை ?
    *வேக வடிவம்.*

    149) கல்யாண சுந்தரர் போல உயிருக்கு உலக இன்பத்தை வழங்கும்
    திருமேனி என்ன வகை ?
    *போக வடிவம்.*

    150) இறைவன் திருமேனி எதனால் ஆனது ?
    *திருவருட் சத்தியால்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete