நம்முடைய முன்னோர் காலத்தில் தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒரு சிறிய மாலையையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டினான். அதிலிருந்து தான் தாலி என்ற பெயர் உருவானது.
தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது பொருளாகும். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொருத்தே அந்த பகுதியின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
பிற்காலத்தில் நம்மிடம் ஏற்பட்ட பொருளாதார நிலைகளும் வாழ்க்கை முறைகளும் மாறியதால் தங்கத்தில் தாலி செய்து அணியப்படுகிறது.
திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டுப்படுகிற மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது நூல் இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு.
தாலியில் உள்ள ஒன்பது இழைகளுக்கும் உள்ள பொருள்கள் என்ன?
தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை குணம், தொண்டு குணம்,
தன்னடக்க குணம், ஆற்றல், விவேகம், உண்மை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.
கணவன் வாழும் வரை மனைவியின் மார்பில் எப்பொழுதும் அவன் கட்டிய தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அந்த பெண் எடுத்துக்காட்ட வேண்டும் என்று அர்த்தமாகும். ஆனால் இதுபோன்ற பழமைவாதங்கள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துவததில்லை.
பெண்ணின் மார்பில் உயிரோட்டம் உள்ள இதயத்தில் இந்த தாலி பட்டுக் கொண்டு இருக்க, அது ஒரு சீன மருத்துவ முறையில் அக்குபஞ்சர் முறை போன்று செயல்படுகின்றது என்று குறிப்பிடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்த போதெல்லாம் நிறைய சுகபிரசவங்கள் நடக்கக் காரணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கைக் கட்டி தாலியாக அணியும்போது. மஞசளில் உள்ள மருத்துவ குணங்களால் மார்பக புற்றுநோயின் பாதிப்புகளும் குறைகிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete