Monday, 31 July 2017

கிருஷ்ணா ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை ?

கிருஷ்ணா ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை ?
கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!
வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள், புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.
"பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 
'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட 
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"
புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
அதுதான் பகவானின் மேன்மை

*எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?*

*எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?*
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
விபூதியை எடுக்க சில விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள வரிகளில் உள்ள முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.
கட்டை விரல்
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரல்
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
நடுவிரல்
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.
மோதிர விரல்
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டு விரல்
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம்எற்படும்.
மோதிர விரல் – கட்டை விரல்
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்...

கர்ப்பக்கிரகம்



மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க அவயங்களை செயல்பட வைக்கிறது. 
இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், #ஆலயங்கள்_எத்தனை_பெரிதாகஇருந்தாலும்_கருவறைசிறியதாகவே_இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன.வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.
பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும்.
கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை
1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி
எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது. அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.
தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங் கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம்.
5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 
5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.
இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது. பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன. அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்க பந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது.
சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.
அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். 
இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம்.
நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும்.கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம்.
குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவ சமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம். இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது. கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள்.
அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப் பக்கத்துக்கு எகிற செய்கிறது.தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும். கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கி நிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.
இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.
பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.
எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியம்

*கோவில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்????



*கோவில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்????
தமிழகத்தில் தெய்வ வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டுத் தெய்வ வழிபாடு நடைப்பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் கோயிலில் கந்தழி வழிபாடு செய்த சான்றுகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் கோயில் அமைப்பு, வழிபடும் முறை முதலியன ஆங்காங்கு உள்ளன.
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் என்ற புலவர் பாடும்போது ‘முனிவர்கள் வணங்கும் மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம் வரும்போது, உன்னுடைய கொற்றக்குடை பணிவதாக’ என்ற பொருளில்
“பணி இயர் அத்தை நின்குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”
எனப் புறநானூற்றில் பாடியுள்ளார்.
எனவே, சங்க காலத்தில் கோயில் வலம் வரும் முறையும், நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோயிலுள் குடைபிடித்துச் செல்லக்கூடாது என்பதும் தெரிய வருகின்றன.
புகார் நகரில் – கற்பகத்தரு, ஐராவதம் பலராமன், சூரியன், சம்பாதி, வேல், மாசாத்தன், அருகன், சந்திரன் முதலியோர்க்குக் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது.
பெருங்கோயில், கரக்கோயில், ஞாலக்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் ஆகிய கோயில்களைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க காலத்தில் மண், செங்கல், மரம் முதலியவற்றால் கோயில்கள் கட்டப்பெற்றன.
பல்லவர் காலம் முதல் கற்கோயில்கள் தோன்றின. கோயில் அமைப்பில் கோபுரம், பிரகாரங்கள், கொடிமரம், பலிபீடம், வாகனம், மண்டபங்கள், கருவறை முதலியன இடம்பெறுகின்றன. அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.
கோயில் அமைப்பு மனித உடலோடு ஒத்தது. கோபுரம் மனிதனின் பாதம் போன்றது. மல்லாந்து படுத்திருக்கும் மனிதனின் பாதம் மேல் நோக்கியிருப்பது போல் நுழைவாயிலில் உள்ள கோபுரம் உயர்ந்து காணப்படுகிறது. கொடிமரம் மனிதனின் முதுகுத் தண்டு போன்றது. துவார பாலகர் மனிதனின் தோள்கள் போன்றவர். மகாமண்டபம், அர்த்த மண்டபம் உடம்பு போன்றவை. அந்தராளம் கழுத்து போன்றது. கருவறை தலை போன்றது.
‘என்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்’ என்பதற்கு ஏற்பக் கருவறை, கோயில் அமைப்பில் மிக முக்கியமானது.
கருவறைக்கு மூலஸ்தானம், உண்ணாழி எனப் பலபெயர்கள் வழங்கப் பெறுகின்றன. “கருவொடு பெயரிய காண்பின் நல்லில்” என்று சங்க இலக்கியமான நெடுநல்வாடை கருவறையைக் குறிப்பிடுகின்றது. கருவறையில் கோயிலுக்குரிய மூலமூர்த்தி அமைந்திருக்கும். இயற்கையாக அமைந்த கோயில் அல்லாமல் கட்டுகின்ற கோயில்களில் அளவுக்குத்தக்கபடி பக்கத்திற்கு எட்டு எட்டாக 64 சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 9 × 9 = 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். சுற்றிலும் உள்ள சதுரங்களில் சுற்றுப்புற தெய்வங்கள், திருச்சுற்று இருக்க வேண்டும்.
சதுரங்கள் அமைப்பதற்குப் பதவின்யாசம் என்றும் சதுரங்களுக்கு மர்மத் தானங்கள் என்றும் வழங்கப்படும். கருவறை சதுரம், நீள்சதுரம், வட்டம், அறுகோணம், எண்கோணம் என்ற ஏதாவது ஓர் அமைப்பில் இருக்கும். கருவறையில் அமைந்திருக்கும்; ஏனைய உருவங்களுக்கேற்பப் பிற்பகுதியில் தள்ளி அமைக்கும் முறை உண்டு.
கருவறையில் பின்சுவர் முதல் மையம் வரையில் பத்துப் பாகம் செய்து நடுவில் 10-வது பாகத்தில் சிவலிங்கம் அமைக்கப்படும். 9-வது பாகத்தில் பிரம்மாவை வைக்க வேண்டும். 8-வது பாகத்தில் விஷ்ணுமூர்த்தி வைத்தல் வேண்டும். 7-வது பாகத்தில் சுப்பிரமணியர் வைத்தல் வேண்டும். 6-வது பாகத்தில் சங்கரி, சரஸ்வதி, இலக்குமி முதலிய உருவங்கள் அமைத்தல் வேண்டும். 5-வது பாகத்தில் ஏனைய பெண் தெய்வங்கள், 4-வது பாகத்தில் கணபதி, 3-வது பாகத்தில் பைரவர், 2-வது பாகத்தில் துர்க்கை, பிடாரி என்ற முறையில் உருவங்களை அமைத்தல் வேண்டும்.
வைணவக் கோயில்களில் கருவறையை மூன்று பாகம் செய்து, பின்சுவர் முதல் பாகத்தில் மூல மூர்த்தியையும், இரண்டாவது பாகத்தில் உற்சவமூர்த்தியையும் வைப்பது மரபாக உள்ளது. எல்லாக் கோவில்களிலும் கருவறை இருண்டேயிருக்கும்.
பண்டைய ஆலயங்களில் உள்ள கர்ப்பகிரகங்கள் மிகவும் இருண்டு தொழுவோர் மனதில் ஒரு வகை அச்சத்தையும், அதிசயத்தையும், வியப்பையும், திகைப்பையும் உண்டு பண்ணுமாறு அமைந்திருக்கும். அதற்குச் சூட்சுமான மறைபொருள் ஒன்று அறைக்குள் நிறைந்து மிதப்பாக வாக்குக் கெட்டாத உணர்ச்சியொன்று அடியார் மனத்துள் உண்டாகும். அஃது அவர்கள் பக்தியைப் பெருக்கும். அறிவின் சிறுமையை உணர்த்தும். தம்மை மறக்கச் செய்யும். உண்மை அன்பர்களைப் பரவசப்படுத்தும் என்று இலஞ்சி-சொக்கலிங்கம் அவர்கள் ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கர்ப்பக்கிருகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடமாகும். இதற்கு மூலஸ்தானம் என்றும் பெயர் உண்டு. இதன் உண்மை-எல்லாம் புத்தி தத்துவத்தில் ஒடுங்க. புத்திதத்துவமும் தனு, கரண, புவன, போகங்களும் மாயையில் ஒடுங்க, மாயை இறைவன் திருவடியில் ஒடுங்கும். இந்நிலை கேவலநிலை என வழங்கப்பெறும்.
அநாதி கேவல நிலையில் உயிர்களில் மீண்டும் பிறப்பதற்குப் பக்குவமானவையும் இருக்கும். கேவல நிலையில் உள்ள உயிர்கள் போதிய ஓய்வு எடுத்துக் கொண்டபின், மீண்டும் பிறந்து ஆன்ம யாத்திரையைத் தொடரும் நிலையில் உள்ளன. இவ்விரு வகை உயிர்களும் மீண்டும் பிறப்பதற்கு வர இறைவன் அருள்செய்ய வேண்டியுள்ளது.
பேரூழிக்கால இருளின் முடிவு நீங்கி மீண்டும் பிறக்கும்போது, பிறவியாகிய இருளின் தொடக்கம் உண்டாகின்றது. இப்பிறவி எடுத்து அறியாமையாகிய இருளில் துன்பப்படும் உயிர்களை இறைவன் திருவருள் சக்தியின் துணைகொண்டு ஈடேற்ற விரும்புகிறான்.
“இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கி குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே”
என்று திருமூலர் பாடியுள்ளார். இருட்டறை – கருவறை, மூலையிருந்த குமரி – மறைந்திருந்த திருவருட்சக்க்தி, குருட்டுக் கிழவன் – அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆன்மா, கூடல் குறித்து – ஆன்மாவோடு சேர்ந்து அருள் புரிய எண்ணி, குருட்டினை நீக்கி – ஆன்மாவின் அறியாமையைப் போக்கி, குணம் பலகாட்டி – இறைவன் ஆன்மாக்கள் பொருட்டு இரங்கி வந்து அருள்புரியும் பெருமையை உணர்த்தி, மருட்டி அவனை மணம் புரிந்தாளே – திருவருளிடத்தில் அன்பு கொள்ளுமாறு மயக்கிச் சிவ மணம் கமழுமாறு செய்தாள் என்பது பொருள்.
அநாதி காலந்த்தொட்டு அறியாமையில் மூழ்கியிருக்கும் உயிர்களைத் திருவருட்சக்தியால் அறியாமையில் நீக்கிச் சிவப்பேற்றைத் தருவதற்காகவே கருவறையை நம் முன்னோர் இருட்டறை ஆக்கித் திருவருள்புரியும் திருவுருவங்களைக் கருவறையினுள் வைத்தனர்.
கருவறை இருட்டறையாக இருப்பதற்குக் காரணம் புரிகிறதா? புரியாமை என்ற அறியாமையின் அடையாளமே அந்த இருட்டு!

கடைகளில் விற்கும் பலகாரங்களைசுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?

கடைகளில் விற்கும் பலகாரங்களைசுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?
‌சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது நம் சாஸ்திரங்களில். இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?
சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம்நைவேத்யம் செய்யலாமா?
அரிசியை ஒரு முறை வேக வைத்துவிட்டால் அதை உடனே நிவேதனம் செய்து விட வேண்டும். நெல்லை ஒரு முறை வேக வைத்து காய்ந்த பிறகு அரிசியாக்கிவிட்டால் பழைய சோறுக்குச் சமம் தானே? எனவே புழுங்கல் அரிசி நிவேதனத்திற்கு உகந்ததல்ல. பச்சரிசியே சிறந்தது. பிள்ளையார் சதுர்த்தியன்று இட்லி நிவேதனம் செய்வார்கள். இதற்குக் கூட புழுங்கல் அரிசியை உபயோகிக்காமல் பச்சை அரிசியிலேயே செய்வார்கள்.

ஆனைமுகனுக்கு ஏன் அறுகம்புல்?



ஆனைமுகனுக்கு ஏன் அறுகம்புல்?
சாதாரணமாக கிடைப்பதாலேயே மிகச் சிறந்தவைகளின் மதிப்புகளை நாம் உணரத் தவறி விடுகிறோம். அது புல்லில் தொடங்கி மனிதன் வரை பொருந்தும்.
நம் வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் அறுகம்புல் பற்றி நமக்குத் தெரியுமா? ‘விநாயகருக்கு மாலையா கட்டி அம்மா போடுவாங்க!’ என ஊகமாக ஒரு விடை மனதில் தோன்றும். ஏன் இது விநாயகருக்கு? அனலாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தான். அவனது கொட்டத்தை யாராலும் அடக்க முடியாத நிலையில் தேவர்கள் விநாயகரின் உதவியை நாடினார்கள். அனலாசுரனுடன் மோதினார் விநாயகர். ஆனால், அவனை ஒடுக்க முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே தூக்கி விழுங்கினார் விநாயகர்.
வயிற்றினுள் சென்ற அனலாசுரன் வெப்பத்தை அதிகப்படுத்த சூடு தாங்கமுடியாமல் தவித்தார் விநாயகர். குடம் குடமாக தண்ணீர் அருந்தியும் சூடு குறைந்த பாடில்லை. ஒறு முனிவர் அறுகம்புல்லை விநாயகர் தலைமீது வைக்க, உடனே சூடு தணிந்தது. அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்த விஷயமாகி இன்றும் நாம் அதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம். இதில் மறைவாய் சொல்லப்பட்ட விஷயம் உடல் சூட்டை அறுகம்புல் தணிக்கும், ஜீரண சக்தியை உண்டாக்கும் என்பதே! அறுகம்புல் சிறு செடி. புல் வகையைச் சேர்ந்தது.
பசுமையான அகலத்தில் குறைந்த, நீண்ட கூர்மையான இலைகளை கொண்ட தாவரம். தண்டு குட்டையாக இருக்கும். ஈரமான இடங்களில் வளரும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இது வளரும். இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon. சமஸ்கிருதத்தில் துர்வா என்றும் ஆந்திராவில் ஜெரிக்கி என்றும் கேரளத்தில் கருக்கா என்றும் கர்நாடகத்தில் காரிக ஹால்லு என்றும் அழைக்கிறார்கள். தமிழில் அறுகு, பதம், தூர்வை, மேகாரி என பல பெயர்கள் இதற்கு. சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற சரும நோய்கள் குணமாக அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் குளித்தால் போதும். உடனே குணமாகும்.
மூலநோய்க்கு காய்ச்சாத ஆட்டுப்பாலில், அரைத்த அறுகம்புல்லைக் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், அல்சருக்கும், வெள்ளைப்படுதல், வெட்டை நோய்க்கும் இது அருமருந்து. தினமும் அறுகம்புல் சாறு குடிக்க ரத்தம் சுத்தமாகும். ஆனால், மருத்துவத்திற்கு இதை பயன் படுத்தும்போது சுத்தமான இடத்தில் வளர்ந்த அறுகம்புல்லை பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள். ஆனால், ஆன்மிக அன்பர்களுக்கு விநாயகரின் ஸ்பரிசம் பட்டு அது பிரசாதமாக கிடைக்கும் போது மகத்துவமும் பல மடங்கு கூடிப் போகிறது. இந்து மதத்தில் ஆன்மிகத்தோடு அறிவியல் இழையோடி கிடப்பதற்கு மஞ்சள் பிள்ளையாரை அலங்கரிக்கும் அறுகம்புல்லே சாட்சி!

பிள்ளையார் சுழி!!!!

பிள்ளையார் சுழி!!!!
எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது Written proof எழுத்து மூல நிரூபணமாகவே பிள்ளையார் சுழியில் தெரிகிறது.
பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம். பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடு கிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே? சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வ ட்ட வடிவந்தானே?
இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன் யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸைஃபர் பண் ணிக்கொண்டு வருகிறவனை, ‘‘என்னடா சுழி!’’ என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.
வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இர ண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight forward என்கிறார்கள். குணம், குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான். ‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்‘காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம ஸம்ஹாரம்; ஈஸ்வரன்.
த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ, உ, ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உமஅ என்று இருக்கின்றன அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிரு ப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல் லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.
அ, உ, ம வில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன் றுகிறது. அதாவது, அவர் ‘’தாயைப் போலப் பிள்ளை’’ மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’இவற்றையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எ ல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்து கொண்டு ‘உ’ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.
ப்ரணவத்தில் ‘உ’விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப் பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ‘‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்’’ என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’என்பது சிவசக்தி புத்ரனை விஷ்ணுவோடும் ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ண வத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது! வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத் தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis ஆக) நேரான (straight ஆன) ஒன்று இருந்தாக வேண்டும்.
விஷ்ணு தன் விரலையே நேராக நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயு தத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப் பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் சரி (இது ஒளி) விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட் டியானாலும் சரி (இது ஒலி), இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியி ருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக் கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும்.
வட்டமாகச் சுற்றுகிற ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும் போடுகிறோம். எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட் ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்சாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார் சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவசக்தி ஸ்வரூபமான நாதபிந்துக்களாகக்கூடச் சொல் லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.
ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு, அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்து தான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.
கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘‘பெரும்பாரக்கோடும்’’, ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே’’ என்றெல்லாம் அவ்வைப் பாட்டி சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக் கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில் கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத் தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!’’
காஞ்சி பரமாச்சார்யார் என்ற ‘தெய்வத்தின் குரல்’
பிள்ளையார் சுழி!!!!
எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது Written proof எழுத்து மூல நிரூபணமாகவே பிள்ளையார் சுழியில் தெரிகிறது.
பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம். பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடு கிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே? சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வ ட்ட வடிவந்தானே?
இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன் யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸைஃபர் பண் ணிக்கொண்டு வருகிறவனை, ‘‘என்னடா சுழி!’’ என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.
வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இர ண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight forward என்கிறார்கள். குணம், குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான். ‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்‘காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம ஸம்ஹாரம்; ஈஸ்வரன்.
த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ, உ, ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உமஅ என்று இருக்கின்றன அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிரு ப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல் லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.
அ, உ, ம வில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன் றுகிறது. அதாவது, அவர் ‘’தாயைப் போலப் பிள்ளை’’ மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’இவற்றையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எ ல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்து கொண்டு ‘உ’ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.
ப்ரணவத்தில் ‘உ’விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப் பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ‘‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்’’ என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’என்பது சிவசக்தி புத்ரனை விஷ்ணுவோடும் ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ண வத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது! வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத் தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis ஆக) நேரான (straight ஆன) ஒன்று இருந்தாக வேண்டும்.
விஷ்ணு தன் விரலையே நேராக நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயு தத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப் பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் சரி (இது ஒளி) விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட் டியானாலும் சரி (இது ஒலி), இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியி ருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக் கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும்.
வட்டமாகச் சுற்றுகிற ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும் போடுகிறோம். எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட் ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்சாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார் சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவசக்தி ஸ்வரூபமான நாதபிந்துக்களாகக்கூடச் சொல் லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.
ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு, அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்து தான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.
கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘‘பெரும்பாரக்கோடும்’’, ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே’’ என்றெல்லாம் அவ்வைப் பாட்டி சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக் கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில் கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத் தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!’’
காஞ்சி பரமாச்சார்யார் என்ற ‘தெய்வத்தின் குரல்’

எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்”

அர்ஜுனன்ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....?
#தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?
இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...?
கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?”
சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன்.
இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.
யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள்.
மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார்.
ஆனால் அப்போது மழைக்காலம். கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.
அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.
இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள்.
கர்ணன் யோசித்தான். “அடாடா... இது மழைக்காலம். இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்” என்றான்.
கோடரியை எடுத்து வந்தான்.
மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை.
கர்ணன் அவற்றை வெட்டி எடுத்துக் கொடுத்தான்.
இருவரும் திரும்பி வரும்போது கிருஷ்ணர் கேட்டார்.
“இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம் கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும் உடனே தந்திருப்பார்தான்.
ஆனா் அவர் தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.
ஆனால் கர்ணன்...
நாம் கேட்கவே இல்லை. அவனாகவே யோசித்துச் செய்தான்.
யுதிஷ்டிரர் கொடுப்பது தர்மம் .......
கர்ணன் கொடுப்பது விருப்பம் ......
எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்”
இதிலிருந்து தெரிவது என்ன?
கடமைக்காகவோ, நிர்ப்பந்தமோ, தேவையோ, எதுவாக இருந்தாலும் செய்வதை விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்..

நீ நல்லவனாக இருந்தாலே போதுமானது

பிறருக்கு நீ தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள நினைக்காதே அது என்றுமே நடவாத காரியம் இது போலியானது உனக்கு நீ நல்லவனாக இருந்தாலே போதுமானது இது தான் உன்மையானது

!!""**ஸ்ரீ கிருஷ்ணா லீலை**""!!

!!""**ஸ்ரீ கிருஷ்ணா லீலை**""!!
ஆளுக்கொரு குரலெழுப்பிக் கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.
“என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்? அது மட்டுமில்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?”, முகவாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கும் அவர்கள் எல்லோரும் பிடித்திருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை.
“யசோதா! உன் பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணெய் திருடுகிறான் என்று சொன்ன போது நம்ப மாட்டேனென்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை! வெண்ணெய் அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாயல்லவா?”, லலிதையின் அம்மா, கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.
“ஆமாம்… பார், நாங்களும் உன் பிள்ளையைப் பிடித்து வந்திருக்கிறோம்”, என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.
ஒவ்வொருத்திக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கோ இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை!
இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட யசோதைக்குக் கோபம் வந்து விட்டது!
“என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறீர்களா?” என்றவள் உள் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!”, என்று உரக்கக் கூப்பிட்டாள்.
“என்னம்மா… கூப்பிட்டாயா?” என்றபடி ததியோன்னமும் கையுமாக கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்க வேண்டும்!
வந்திருந்த அத்தனை கோபிகளின் வாயும் அடைத்து விட்டது! “என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!” என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள்.
தயிர் வழியும் வாயோடு, உள்ளிருந்து வந்த கள்ளக் கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணெயுண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய… கோகுலம், ஒரு நொடியில் கோலாகலமானது!
“தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு”, தளர்நடை இட்டு வருவான்;
பொன்னேய் நெய்யொடு பாலமுது உண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்!
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே!
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் ; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே!
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

ஆண்டவனுக்கு ஆலயம் ஏன்?

ஆண்டவனுக்கு ஆலயம் ஏன்?
எவ்வளவு சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டு!
சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்...
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று....
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன்,
அவனிடம்
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா ? என்று....
அவன் ஓடிப் போய்
ஒரு சோம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்.
சுவாமி கேட்டார்
நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான்
அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே..
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல,
ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா?
அதுதான் ஆலயம்..!
ஆனாலும்
செம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது..!

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*
* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*
அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்
பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.
முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.
வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.
இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.
பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.
இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.
இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.
இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.
அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.
தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.
புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.
சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.
பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது
இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.
இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....
Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.டேட்டா இல்லை கமியா டேட்டா இருக்குனுட்டு பகிராமல் இருந்துவிடாதீர்கள்.
*நன்றி*