Monday, 31 July 2017

கடைகளில் விற்கும் பலகாரங்களைசுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?

கடைகளில் விற்கும் பலகாரங்களைசுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?
‌சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது நம் சாஸ்திரங்களில். இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?
சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம்நைவேத்யம் செய்யலாமா?
அரிசியை ஒரு முறை வேக வைத்துவிட்டால் அதை உடனே நிவேதனம் செய்து விட வேண்டும். நெல்லை ஒரு முறை வேக வைத்து காய்ந்த பிறகு அரிசியாக்கிவிட்டால் பழைய சோறுக்குச் சமம் தானே? எனவே புழுங்கல் அரிசி நிவேதனத்திற்கு உகந்ததல்ல. பச்சரிசியே சிறந்தது. பிள்ளையார் சதுர்த்தியன்று இட்லி நிவேதனம் செய்வார்கள். இதற்குக் கூட புழுங்கல் அரிசியை உபயோகிக்காமல் பச்சை அரிசியிலேயே செய்வார்கள்.

1 comment: